Thursday, October 11, 2018

பொக்ரான் ( பார்மனு ) - பாசகவின் இந்தி பிரச்சார படம்

பாசகவின் சாதனைகள் என்று பிரச்சாரம் செய்யும் விதமாக எடுக்கப்பட்ட படம் இந்த பொக்ரான் இந்திபடம்.

படம் துவங்கும் போது அமெரிக்கா அணு குண்டு வெடிச்சது வல்லரசு ஆனது, சீனா அணு குண்டு வெடிச்சது வல்லரசு ஆனது. அது போல நாமும் அணு குண்டு வெடித்தால் வல்லரசு ஆகலாம் என்று துவங்கும்.

வல்லரசு - இது பாசகவின் பிரச்சாரகளில் பிரதானமாக அடிக்கடி சொல்லப்படும் வார்த்தைகளில் ஒன்று.

1995ஆம் ஆண்டில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் இப்படி சொன்னவுடன் வரும் சமோசாவை சாப்பிட அலையும் கூட்டம் முன்னே பேசினோமே என்று வருத்தப்படும் காட்சி வைக்கப்பட்டு இருக்கிறது. அதாவது நாடும் நாட்டுப்பற்றும் பாசவிற்கு தான் சொந்தம் என்றும் மற்றவர்களுக்கு சமோசாவும் நாடும் ஒன்று என்று சொல்வதாக காட்சி இருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறையும் அந்த குறித்த நேரத்தில் வேலைகள் எல்லாம் முடித்த பின்பும் ஆபிரகாம் போ என்று சொல்லும் வரையில் இராணுவ வீரர்கள் நிற்பது போலவும், இவன் கையை காட்டும் போது தான் விளக்கை அனைப்பதாக காட்டுவதும் சிறுபிள்ளை தனமாக இருக்கிறது. அங்கு இருக்கும் அனைவருக்கும் அந்த குறித்த நேரத்தில் வேலைகள் முடிக்க வேண்டும் என்று தெரிந்தும் ஆபிரகாமை எல்லா நொடிக்கும் எதிர்பார்ப்பதை எப்படி பின் சொல்வது...

பஞ்சபாண்டவர்கள் என்றும் பாரதம் என்றும் பாசகவின் வசனங்கள் வியூகம் அமைக்கும் போதே வந்து போகின்றது.

இவ்வளவுக்கும் நடுவில் பாசவின் ஆட்சியிலும் பாக்கிட்தாணில் இருந்து  இராசதானில் வந்து சர்வ சாதாரணமாக உளவு பார்ப்பதாக காட்டி பாசகவை காட்டி கொடுத்துள்ளார்கள் ஆபிரகாம் குழுவினர்.....

அந்த அணு குண்டு எப்போது வெடிக்கும் என்ற எதிர்பார்ப்பு படம் முடியும் வரையில் இவைகள் அனைத்தும் தாண்டி படத்தில் எதிர்பார்க்க வைப்பது படத்தின் பலம்.

இன்னும் இது போல பணமதிப்பிழப்பு பற்றியும் ஆபிரகாம் குழுவினர் படம் எடுத்து வெளியிட்டால் நன்றாக இருக்கும்.........

0 comments: