Wednesday, April 26, 2017

ஆங்கிலம் கேட்கும் காதில் இனி ஈயத்தை காய்சி ஊத்தப்படும் -- இந்து பாரதம்

இனி இந்தியா முழுவதும் அங்கிகரிக்க்கப்பட்டவர்கள் மட்டும் ஆங்கிலம் பேசவும் எழுதவும் முடியும். இன்னாளில் படிப்பது போல் தி இந்து, தி முசிலிம், தி கிரிசுடியன் பத்திரிக்கை எல்லாம் எல்லோரும் படிக்க முடியாது.

அப்படி மீறி படித்தால் படித்த நாக்கை வெட்டி எரிய சட்டம் இயற்றுவார்கள், மீறி காதில் கேட்டால், காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றுவார்கள்.

அங்கிகரிக்கப்பட்டவர்களை தவிர மற்றவர்கள் ஆங்கிலம் பேசுவதும் எழுதுவதும் படிப்பதும் முதலில் பாவம் என்றும் பிறகு தண்டனைக்கு உரிய குற்றம் என்றும் அறிவிக்கப்படும்.

இன்று ஆங்கிலத்தினால் மக்கள் என்ன என்ன எல்லாம் செய்கிறார்களோ அவைகளை நாளை பூசாரிகளின் கையில் அதற்கு உண்டான தட்சணையை கொடுத்துவிட்டு தங்களது தாய்மொழிகளில் அந்த பூசாரிகளிடம் சொன்னால் அவர்கள் தான் அவைகளை கேட்க வேண்டியவர்களுக்கு புரியும் வண்ணம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொல்வார்கள் நமக.

தப்பி தவறி எவனாவது அந்த காலத்தில் எங்க மக்களும் ஆங்கிலம் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்தார்கள் என்று சொல்ல முற்பட்டால் குடும்பத்துடனும் வைத்து இருக்கும் ஏணைய ஆவணங்களுடனும் உயிருடன் கொளுத்தபடுவீர்கள்.

ஆங்கிலமே போன பின்பு ஆங்கிலேயன் கற்றுக்கொடுத்த சொக்காயும் குழாயும் எதற்கு, அவைகளை கழற்றி எறிந்துவிட்டு வேட்டியும் துண்டும் மட்டும் அணிந்தால் போதுமே என்று துவங்கி பின் மேலாடை அணிய வேண்டும் என்றால் அங்கிகரிப்படவேண்டும் இல்லை என்றால் ஆடை உடுத்தியதற்காக உயிருடன் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் கொளுத்தபடுவீர்கள்.

படிப்பவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்தால் தான், என்ன எழுதி இருக்கு என்ன வேற மாதிரியாக தப்பாக திரித்து சொல்கிறார்கள் என்று சொல்ல. எவனுக்கும் ஆங்கிலம் தெரியாது என்றால் அவன் சொல்வது தான் பொருள், அதன் பொருட்டு அவன் வைக்கும் வாதமே செல்லும் மற்றவை எல்லாம் பெரிய பாவம்.

பிறகு இந்தியாவில் உள்ள அனைத்து பொது இடங்களிலும் அவரவர் தாய் மொழிகளில் ஆங்கில வாசங்களை எழுதி வைப்பார்கள், உதாரணமாக "ரேல்வே டேசன்" என்று தமிகலத்தில் எழுதுவது போல் எழுதி வைப்பார்கள். அது என்னையா ரேல்வே டேசன் என்று கேட்டால் அட முட்டாளே அப்படி என்றால் தொடறி நிலையம் என்று சொல்லி சிரிப்பார்கள்.

மேலும் ஆங்கிலம் சரளமாக எழுதவும் படிக்கவும் மட்டுமே தெரிந்தால் தான் வேலை என்பார்கள்  நாமும் ஆமாம் இல்ல ஆங்கிலம் தெரியாமல் பிறகு எப்படி வேலை பார்ப்பதாம் என்று வியாக்கானம் பேசுவோம்.

வெளியில் கிடைக்கும் புத்தகம் முதல் வெளி நாடுகளில் இருந்து வரும் அனைத்து ஆங்கில வசுத்துகளை எல்லாம் இந்து பாரத்திற்கு வெளியிலேயே நிப்பாட்டி வைத்து விட்டு. உள் நாட்டில் அவைகளுக்கு என்ன வேலை என்றும் அவைகளை நாட்டின் உள்ளே விட்டால் பெரும் பாவம் பெருகி கங்கை அழிந்து நாட்டை பிறகு நரகாசுரன் பாயாக சுருட்டி கொண்டு அமெரிக்க எடுத்து போய் விடுவான் என்று நமக்கு சொல்வார்கள்.

அங்கிகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே நாளை விமானத்தில் சென்று இங்கிலாந்து, அமெரிக்கா என்று பாரீசுடர் பட்டம் பெற்று இந்தியாவில் அவர்களது அறிவை காட்டுவார்கள். இந்த பாரீசுடர்களுக்கு குடையை தூக்கிகொண்டு ஓட நான் நீ என்று வேலைக்கு நம்மாட்கள் அலைவார்கள். குடை பிடிப்பதிலே அங்கிகரிப்பட்டவர்களுக்கு குடை பிடித்தால் தான் நாம் நாளை சொர்கம் சென்று சேருவோம் இல்லையேல் நரகம் போவோம் என்று பழக்கப்படுத்துவார்கள்.

ஆக மொத்தத்தில் சுதந்திர இந்தியாவில் 60 ஆண்டு காலம் பழமையையும் அதன் பொருட்டு பரப்பபட்ட புரட்டுகளையும் புரம் தள்ள உதவிய ஆங்கிலத்திற்கு நிரந்தமாக சங்கு ஊத துவங்கி விட்டார்கள்.

புரட்சிகாரர்களே  C மற்றும் JAVA மொழிகள் தெரிந்தால் தான் எங்களுக்கு வேலை கிடைக்கின்றது ஆகவே நாளையில் இருந்து முதலாம் வகுப்பு முதல் இந்த C மற்றும் JAVA மொழிகளை நடத்துங்கள் என்று கொடிபிடிக்க நினைக்காதீர்கள். பாவம் மக்களே பாவம் மகா பாவம்.

தேச துரோக வழக்கில் நடு இரவில் விசாரணை நடத்தி காலையில் விடியும் முன் உங்களின் விட்டின் விட்டதிலேயே தூக்கில் தொங்கவிட படுவீர்கள்.

1 comments:

')) said...

போற போக்கப் பார்த்தல் நடந்தாலும் ஆச்சர்யப் பட ஒன்றுமில்லை