Thursday, June 2, 2016

இளையராசாவும் - கங்கை அமரனும் - தேசிய விருதும் - S.A.இராச்சுகுமாரும்

2016ஆம் ஆண்டுக்கான இசையமைபாளர் விருத்துக்கு பின்னணி இசைக்கு மட்டும் விருது வழங்கியதை ஏற்க மறுத்த இராசா அதற்கான விளக்கத்தையும் அளித்தார்.

அந்த விளக்கத்துக்கு பதில் அளித்த கங்கை அமரன் ஏன் பாடலுக்கு விருது இல்லை என்றதை மிகவும் விளக்கமாக பாமரனுக்கும் புரியும் படி பாடியும் பாலை போட சொல்லியும் விளக்கிய பிறகு அந்த நிருபரும் ஆமாம் இல்ல என்று சொன்னார் மற்றவர்களுக்கும் அப்படி தான்.

இந்த பாடல் பழைய பாடலின் மறுபதிவு என்ற குற்ற சாட்டிற்கு பிறகு வருவோம் அதற்கு முன் இராசா சொன்ன விளக்கதிற்கு வருவோம்.

புதுகவிதை என்ற ஒரு படம் இராசாவின் இசையில் வந்தது, அந்த படத்தில் 2 பாடல்கள் மிகவும் பிரபலம்.

1)    வெள்ளை புறா ஒன்று போனது கையில் வராமலே
2)    வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே

இதில் வெள்ளை புறா பாட்டு படத்தின் அடி நாதமாக படம் எங்கிலும் ஒலிக்கும் எத்தனை இடங்களில் தெரியுமா

1)    புதுகவிதை என்று தமிழில் எழுத்து வருவதில் இருந்து இயக்கம் முத்துராமன் என்று முடியும் வரை முற்றிலும் மாறுப்பட்ட கோர்வை இசையுடன் இந்த பாடல் 2 நிமிடங்களுக்கு மிகாமல் துவக்கத்திலே வருகின்றது

2)    என் நெஞ்சில நீங்க  நெருப்பு வச்சிட்டீங்க என்று சொல்லும் போது துவங்குது அந்த பாடல் பின்னணி

3)    இரவு வீட்டிற்கு வந்த பிறகு ஆனந்தை காப்பாற்றியதை நினைத்து பார்க்கும் போது மறுபடியும் அந்த பாடல் பின்னணியில் வருகிறது

4)    காலையில் எரிந்த வீட்டை திரும்ப கட்டிக்கொண்டு இருக்கையில் கோவிலுக்கு சொல்லும் வழியில் சென்று கடக்கும் போது மீண்டும் அதே பாடல் பின்னணியில்

5)    பாடல் வரும் இடம்

6)    பாடல் முடிந்ததும் ஒரு இடத்தில் தொடர்ச்சியாக

7)    அடுத்த 5 நிமிடத்தில் காத்து இருந்து சந்தித்ததில் இருவரும் உணர்ச்சி பொங்க பேசும் போது (மிகவும் அழுத்தமாகவும் சோக நடையில் ஒலிக்கும்)

8)    அதை அடுத்த தொடர்ச்சியில் அப்படியே துள்ளும் இசையாக நினைவில் அசை போடுவதாக தொடரும், அதன் தொடர்ச்சியாக அந்த மெட்டின் இன்னொரு வடிவமாக வரும்

9)    ஒருவரை ஒருவர் தேடி ஊட்டிக்கும் கோவைக்கும் அலைந்து இருவரும் சந்திக்கும் போது மகிழ்ச்சியின் வெளிப்பாடாக, அதன் தொடர்ச்சியாக இந்த மெட்டுக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு பாடலும் தொடரும்

10)    நீண்ட இடைவெளி விட்டு கல்யாண குழப்பம் வரும் அதில் என்ன முடிவு எடுப்பது என்று உமா தடுமாறும் இடத்தில் அழுத்தமாகவும் புதிராகவும் கொஞ்சம் வேகமகாகவும் பயணிக்கும்

11)    வேறு ஒருவருடன் திருமணம் நடக்கிறது, அந்த இடத்தில் வழக்கமாக வரும் திருமண இசை மட்டும் ஒலிக்கும் ஆனால் பார்ப்பவர்கள் மனதில் அப்படி ஒரு அமைதி மையான அமைதியாய் அதையே பின்னணியிலும் தொடர்ந்து ஒரு 3 நிமிட இடைவெளிக்கு பிறகு மிகவும் சோகமாக அதே பாடல் முழுமையாக

12)    பின்னர் ஒரு 15 நிமிட இடைவெளிக்கு பிறகு நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு ஆனந்தும் உமாவும் நேருக்கு நேர் சந்தித்துகொள்கிறார்கள், அப்போது குழந்தைகள் படிக்கும் அந்த பள்ளியில் குழந்தைகள் காட்சியில் இருக்கும் வரை ஒரு மையான அமைதியாய் விட்டுவிட்டு பிறகு அதே அசல் பாடலின் துவக்கத்தை அப்படியே பின்னணியாக

13)    பிறகு இருவரும் சந்தித்த பிறகு குழந்தையை பார்த்ததும் ஏதும் பேசாமல் உமா கிளம்பும் போது மிகவும் இதமாக அதே பாடல் பின்னணியாக

14)    பின்னர் மறுபடியும் உமாவை பார்க்க முடியுமா என்று யோசிக்கு போது மறுபடியும் இதமாக அதே பாடல் பின்னணியில்

15)    இருவரும் சந்தித்து ஒருவரை இருவர் விசாரித்துக்கொண்டு நான் போகலாமா என்று கேட்டுவிட்டு பிரியும் போது மீண்டும் அதே பாடல் பின்னணி

16)    உமாவிற்கு உண்மை தெரிந்ததும் பின்னணியில் மறுபடியும் அதே பாடல்

17)    ஏன் பொய் சொன்னீங்க என்று கேட்கும் போது மறுபடியும் அதே பாடல் பின்னணி

18)    அடுத்த முறை என்னை நீங்க பாக்கும் போது நீங்க உங்க மனைவியோடு தான் என்ன பார்க்கனும் சொல்லிட்டு கிளம்பும் போது மீண்டும் அதே பாடல்

19)    பின்னர் ஆனந்துக்கு உண்மை தெரிந்ததும் மிகவும் சோகமாக அதே பாடல் பின்னணியில்

20)    அதே காட்சியில் மீண்டும் ஒரு முறை அதே பாடல் அமைதியாக அழுத்தமாக

21)    உமா வேற யாரையாவது திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று கடிதத்தில் சொல்லும் போது மிகவும் வித்தியாசமாக அதே பாடல்

22)    கடைசியில் இருவரும் ஒன்றாக இணைந்த பிறகு மீண்டும் அதே புத்துணர்ச்சியில் அதேபாடலோடு படம் முடிகின்றது

இந்த 22 இடங்களில் முழுப்பாடலாக 2 முறையும், எழுத்து போடும் போது என்று முழுப்பாடலாக மொத்தம் 3  முறை ஒலிக்கின்றது. கிட்டதட்ட 15 நிமிடங்கள் மூன்று விதமாக

மீதம் இருக்கும் 19 இடங்களில் 1 நிமிடம் முதல் 2 1/2 நிமிடங்கள் வரை பின்னணியாக இந்த பாடல்கள் தோன்றுகிறது. கிட்டதட்ட ஒரு 20 நிமிடங்களுக்கு.

மொத்த படமும் 2 மணி 19 நிமிடங்கள் அதில் கிட்ட தட்ட 35 நிமிடங்கள் ஒரே பாடலை வித விதமாக பல கலவைகளாக ஒலிக்கவிட்டு இருப்பார்.

இதில் இன்னும் ஒரு விசேசமும் உண்டு இந்த பாடலோ அல்லது பின்னணியோ ஒலிக்கும் போது ஆனந்தும் உமாவும் அல்லது இவர்களில் ஒருவர் மட்டும் என்றும் இருக்கும் போது மட்டும் வரும் . அப்படியே மற்றவர்கள் இருந்தார்கள் என்றால் அவர்கள் காட்சியை விட்டு அகலும் வரை வேறு இசையை ஒலிக்க விட்டு விட்டு அகன்ற பின் இந்த பாடல் ஒலிக்கும். கிட்ட தட்ட அந்த இரண்டு பாத்திரங்களுக்கு மட்டும் தனியான ஒரு இசையாக இந்த பாடல் படம் முழுவதும் ஒலிக்கும் .

புதுகவிதையை பொருத்த அளவில் இந்த பாடலையும் அந்த படத்தை இரண்டாக பிரித்து பார்க்கவே முடியாததாக இருக்கும். பின்னணியும் பாடலும் இந்த படத்திற்கு ஒன்றே இராசா விளக்கம் கொடுத்தது போல்.

இது அனேகமான படங்களுக்கு அப்படியே பொருந்தும் இராசாவின் இசையமைப்பில். இந்த கலவையை பிரிக்கவே முடியாம தவிப்பார்கள் தொலைகாட்சியில் இவரது படங்களை ஒளிபரப்பும் போது.
அப்படியே வெட்டி ஒட்டி ஒளிபரப்பினாலும் எங்கே என்ன வெட்டினார்கள் என்று பார்க்கும் இரசிகர்கள் அழகாக சொல்வார்கள்.

இளையராசவின் விளக்கத்துக்கு மேல நாம் எதுவும் புதிதாக சொல்வதற்கு இல்லை, இருந்தாலும் ஒற்றை வரியில் அவர் கொடுத்த விளக்கத்திற்கு சாதாரண மக்களுக்கு புரியும் விதமாக சொன்னால் என்ன என்ற எண்ணத்தில் தோன்றியது இந்த பதிவு.

கரகாட்டகாரன் என்று ஒரு படம் வந்தது. அந்த படம் கங்கை அமரனின் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் என்று வந்தது.

படங்களை அலசுவோர் என்று இல்லை சாதாரண மக்களே சொல்வார்கள் படம் பார்க்க கிட்ட தட்ட தில்லாணா மோகனாம்பாள் மாதிரியே இருகுதே என்று.

இத்தனை படங்களை பார்த்து இசையமைக்கிற இளையராசாவுக்கு தெரியாது இது அந்த படத்தின் தழுவல் மறுபதிவு என்று.

அட அந்த படத்தை இப்படியும் கூட அழகாக கொடுக்கலாமா என்று வியந்ததின் பலன் தான் படத்தின் அத்தனை பாடல்களும் முத்தான பாடல்களாக அமைத்து தன் பங்கிற்கு மெருகேற்றி கொடுத்தார்.

அன்றைக்கு என்று இல்லை இன்றைக்கு வரை இளையராசா தவறாக வெளியில் அமரனின் திறமையை பற்றி பேசியது இல்லை. அன்றைக்கு காட்சிக்கு காட்சி விளக்கி சொல்லி இருக்கலாமே இராசா அமரன் பாடிக்காட்டியது போல் . ஏன் செய்யவில்லை

அது தான் இராசா, கொடுக்கும் இடத்தில் இருப்பவர், மற்றவர்கள் மற்றவர் தான் என்றைக்கும் இராசா ஆகிவிடமுடியாது............

அது சரி S.A.இராச்சுகுமாருக்கும் இதுக்கும் என்ன  சம்பந்தம், இருக்கே ஒரே பாடலை ஒரு படத்தில் 22 முறை இராசா வாசிச்சு காட்டும் போது ஒன்றுமே சொல்லாமல் இருந்துவிட்டு S.A.இராச்சுகுமார்  போட்ட மட்டும் லாலாலான்னு கிண்டல் பண்ணா எப்படி

0 comments: