Monday, June 13, 2016

இறைவி - திரைவிமர்சனம்

இந்த படத்தின் விமர்சனங்களை பார்த்ததில் இருந்த்து ஏன் இந்த படத்திற்கு இவ்வளவு திட்டு என்று பார்க்க வேண்டும் என்று இருந்தது.

அஞ்சலி தனது காணொலிகளில் சொல்வதை போல் அவருக்கு அழகாக அமைந்த்து இருக்கிறது. கண்களில் மீண்டும் அதே நடிப்பு, கண்களோடு சேர்ந்து குரலும் போட்டி போடுகிறது. என்ன உச்சரிப்பு தான் பல இடங்களில் எகிறுகிறது.

இசை என்று ஒரு படம் சூரியா எழுதியதாக சொல்லிக்கொள்ளும் படம், அந்த படத்தில் விழுந்த அடிக்கு பிறகு அவரது வாழ்க்கை என்னவாகிறது என்று உண்மையை சொல்லும் படியாக கதை திரைக்கதை அமைந்து இருப்பது அவரது கொட்ட நேரம் போலும்.

காலம் காலமாக விசுவாசம் என்ற பெயரில் கொடுக்கப்படும் பலிகடா பாத்திரம் சேதுபதிக்கு. கோபம், காமம், இளைஞருக்கே உள்ள குருட்டு தைரியம், பிறகு வாழ்க்கையை தேடும் சாதாரண மனிதனின் மனது என்று அருமையான பாத்திரம்.

இளம் வயதில் தவறான உந்துதல்களை கொண்டு வாழ்க்கையை அழித்துக்கொள்ளும் இளைஞனின் கதை பாபி சிம்காவுக்கு. ஒரு பக்கம் ஞாயம் பேசிக்கொண்டே அடுத்தப்பக்கம் திருட்டு கொலை கொள்ளை என்று ஒன்றையும் விட்டு வைக்கா இளைஞனாக. அருமையான பாத்திர படைப்பு.

மத்த இரண்டு பெண் பாத்திரங்கள் அப்படி ஒன்றும் மனதில் நிற்கவில்லை காரணம், காரணம் வலுவாக இல்லை என்றது மட்டும் தான்.

மலர்விழி பாத்திரத்தை பார்த்து உமிழாத விமர்சகர்கள் இல்லை என்றே சொல்லலாம். ஆனால் அவர்கள் உமிழ வேண்டியது படத்தையோ இயக்குனர்களையோ அல்ல இந்த போக்கை துவக்கி தூக்கி பிடிக்கும் ஆண்வர்க சிந்தனையை அல்லவா. உண்மையில் பெண்களின் நிலை என்ன.......

water என்ற ஒரு படம் அதில் ஒரு வசனம் வரும் ஏன் இப்படி பெண்களை கொண்டுவந்து இந்த விதவை காப்பகத்தில் விடுகிறார்கள் தெரியுமா, வெறும் காசு. இன்னும் கொஞ்சம் காசு செலவாகும் அவ்வளவு தான் அதற்கு பயந்து இப்படி செய்கிறார்கள் என்று வரும் அந்த வசனம்.

அது போல பெண்களின் சுதந்திரம் அவளுக்கு மணமாகும் வரை தான் என்று தெளிவாக காட்டியுள்ளார்கள். அது ஆணுக்கும் பொருந்தும் எந்த வித்தியாசமும் இல்லை.தனது ஆசை கனவுகள், கொள்கைகள் என்று இருக்கும்  ஆணுக்கு மணமானதும் அவளின் ஆசையே தனது என்று இருக்கும் ஆண்களே அதிகம் அதில் அவன் தொலைக்கும் முதல் இழப்பு அவனுடைய தாய். அதில் தொடங்கும் இழப்பு ஒரு நல்ல வாழ்கையாக அமையலாம் இல்லை கடைசியில் பைத்தியம் பிடித்தும் அலையலாம்.....

இது தான் பெரும்பாலான ஆண்களின் நிலை இருந்தாலும் அவைகள் எல்லாம் வெளிச்சத்திற்கு வருவதில்லை இந்த 3 பெண்களின் கதையை போல். இருப்பினும் கதையும் திரைகதையும் அருமையாக அமைந்துள்ளது கார்த்திக்கு வாழ்த்துக்கள்.

BOWFINGER பார்த்து ஜிகிர்தண்டா என்று எடுத்தது போல் தான் இனி இருக்கும் என்று நினைத்தேன் இல்லை நிறைய கதைகள் இருக்கிறது என்று காட்டியுள்ளார்.

இசை படத்திற்கு நன்றாக அமைத்துள்ளது. என்ன அந்த கடற்கறை பாடல் அப்படியே அந்தியிலே வானம் பாடல் சாயலில் வருகிறது ஒரு வேளை மக்கள் மறந்து இருப்பார்கள் என்று நினைத்து இருப்பார்கள் போலும்.

இப்படி அழுத்தமான கதா பாத்திரபடைப்புகளை பார்த்து வெகு நாட்கள் ஆகுகின்றது. கார்த்திக் ஒரு நல்ல எழுத்திலும் ஒரு நல்ல இடத்தை கட்டாயம் பிடிப்பார் என்று எதிர்ப்பார்ப்போமாக.

படத்தின் ஒரே நெருடல் பெண்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றால் அவளுக்கு பெண்மையோ தாய்மையோ இருக்ககூடாது என்று காட்டுவது தான் வேதணையாக் இருக்கிறது. அமெரிக்காவில் துவங்கி இன்றைக்கு உலகு எங்கிலும் தாக்கம் ஏற்படுத்திவரும் இந்த கலாச்சாரத்தை தூக்கிபிடிப்பது தான் கொஞ்சம் நெருடலாக உள்ளது மற்றபடு படம் நன்றாக வந்துளது வாழ்த்துகள் கார்த்திக் சுப்பு.

0 comments: