Saturday, June 18, 2016

துப்பு கெட்ட இந்தியும் அதை கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமும்

இந்த இந்தியின் வீச்சு தமிழர்கள் மட்டும் இல்லை உலகில் உள்ள அனைவரும் தானாக முன் வந்து இந்தி கற்றுக்கொண்டால் தான் தனது வாழ் நாளின் பலனை அடைந்தாக நினைக்கும் அளவிற்கு வந்துவிட்டதாக மோடியின் அரசு பரப்பிக்கொண்டு இருக்கும் இந்த நாளில் இந்தியின் துப்பு என்ன என்று பார்த்துவிடுவோம்.

சமீப காலமாக தொகா முதல் நாள் இதழ்கள் வரை சொத்த பரத்து என்றும் மூத்திர திட்டம் என்றும் அடிக்கடி வருவதை பார்த்து இருப்போம்.

என்ன தான் இந்தியில் சொத்த என்றால் தூய்மை என்ற பொருள் இருந்தாலும், மூத்திர என்ற சொல் சிறு முதலீடுக்கான வங்கியாக இருந்தாலும் தமிழில் அந்த சொற்கள் இழி சொற்களாக பயன்படுவது இந்தியை மார்தட்டும் மதவாதிகளுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் தமிழகத்தை சேர்ந்த மக்களுக்கு கூடவா தெரியாது.

இந்த திட்டங்களின் பெயர்களை தமிழ்படுத்தி சவகர் வேலை வாய்ப்பு திட்டம் போல் கொடுத்தால் சொல்லவும் நினைவில் கொள்ளவும் எளிதாகவும் அறுவறுப்பின்மையாகவும் இருக்கும். ஆனால் இவர்களோ என்ன ஆனா;லும் மூத்திர திட்டம் சொத்த பரத்திட்டம் என்று தான் சொல்வோம் என்று அடம் பிடிக்கிறார்கள்.

இந்த ஆணவ செயல்களை பார்க்கும் போது அடடே இந்த மதவாதிகளின் இந்திப்பற்று அசைக்க முடியாததாக உள்ளதே நம்மை போல் என்று எண்ணும் வேளையில் டிசிடல் இந்தியா என்று இந்தியில் எழுதி பெருமை படுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் அந்த டிசிடல் இந்தியாவை எப்படி எல்லாம் பயன் படுத்தலாம் என்றும் அதை நடத்துவது கிருட்ணா என்றும் விளம்பரபடுத்துகிறார்கள் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை.

ஒரு டிசிடல் என்ற ஆங்கில வார்த்தைக்கு இந்தி வார்த்தையை கொடுத்து சொல்ல துப்பு இல்லாத இவர்கள் மங்கி பாத்து (குரங்கு குளியல்) என்றும், சொத்த பரத்து என்றும், மூத்திர திட்டம் என்றும் ஆட்டம் போடுகிறது. எங்களை கேட்டால் என் இந்தியா அது எண் இந்தியா என்று அழகு தமிழில் சொல்வோம் சொல்லுங்கள் பார்ப்போம் இந்தியில்.

ஆமாம் அது தான் சொத்த பரத்தாச்சே அப்புரம் எப்படி விளையும் புதிய சொற்கள். இப்படியே ஆங்கிலத்தில் உள்ள அத்தனை வார்த்தைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். எங்களுக்கு இந்தியில் பேச வசதியாக இருக்கும்.

0 comments: