Tuesday, June 30, 2015

இன்று நேற்று நாளை படமும் - Frequency படமும்

Frequency
முதலில் இந்த ஆங்கிலப்படத்தை பார்க்கும் போதே ஏதோ ஒரு தமிழ்படம் பார்ப்பது போல் ஒரு உணர்வு வரும்.

காரணம் கதை, பாசமான அப்பா. பிள்ளைகாகவும் மனைவிக்காகவும் உயிரையும் கொடுக்கும் அப்பா.

கணவனின் மறைவுக்கு பிறகு மனகே உலகம் என்று வாழும் ஒரு தாய், காதலின் முறிவில் என்ன செய்வது என்று தெரியாமல் அம்மாவின் வீட்டிற்கு சென்று தங்கும் மகன். அவளோ பிரிந்து சென்ற காதிலியை பாராட்டுவதும் மகனை ஆற்றுவதும் என்ற ஒரு அன்பு.

அப்பா தீயணைப்பு வீரர் மகனோ துப்பரிவாளனாக காவல் துறையில், அவனுக்கு வேட்டையாடு விளையாடு இராகவன் போல் எப்பவும் அவனது யூகம் சரியாக அமைதல்.

கருணாவை போல் ஒரு உயிர் நண்பன் என்று கதை இருக்க.

எப்படி பொழுது போக்குவது என்று இருக்க அப்பாவின் பழைய ரேடியோவில் யாரோ அழைக்க யார் என்ற ஆர்வத்தில் பேச அது கடைசியில் அவனது அப்பாவிடம் தான் பேசுகின்றோம் என்று தெரிய, தந்தையோ யாரோ தனது குடும்பத்தை கலைக்க இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்று கோபம் கொண்டு பிறகு புரிந்துக்கொண்டு இவனோடு சேர்ந்து செயல்படும் போது கதையில் ஒரு வேகம் பிறக்கும்.

அப்பா இளம் வயது மகனிடம் வளர்ந்த மகனை பேச வைப்பதும் அவனது உயிர் தோழனிடமும் பேசுவதையும் தமிழில் நாயகியின் பாத்திரமாக மாற்றிவிட்டார்கள்.

கிட்டதட்ட தான் துப்பரியும் ஒரு கொலையை பற்றிய துப்பை துலக்க அப்பாவின் உதவியை அந்த காலத்தில் செய்ய சொல்ல, அது கடைசியில் அவனது அம்மாவின் கொலையில் வந்து முடிகின்றது.

அதை அப்படியே தமிழில் நாயகி சாவதாக காட்டுகிறார்கள். அந்த ஆங்கில பாசக்கார அப்பாவை காட்ட நாயகியின் அப்பா பாத்திரம் ஆனால் அந்த ஆங்கில அப்பா காட்டும் வீர சாகசங்கள் தமிழில் இல்லை.

வழியில் ஏதோ மாற்றிவிட்டோம் என்று பழையபடியே அமைத்து வைக்க யார் அந்த கொலைகாரன் என்று கண்டு பிடிக்க மகனும் அப்பாவும் சேர்ந்து படும் பாடு ஆங்கிலத்தில் அவ்வளவு அழகாக வந்து இருக்கும்.

என்ன எந்த படத்தில் இருந்து உருவி இருக்கிறார்கள் என்று எளிதில் கண்டு பிடித்துவிடுவார்கள் என்ற பயத்தில் BACK TO THE FUTURE படத்தில் வரும் காட்சிகளை எல்லாம் வெட்டி ஒட்டியுள்ளார்கள். கதையோடு அந்த காட்சிகள் ஒட்டாமல் இருக்க இது தான் காரணம்.

தமிழில் இன்னமும் முயன்று இருக்கலாம். பாதி சமையலாக போச்சு. ஆங்கிலத்தில் மனதை தொடும் அந்த உணர்வு தமிழில் இல்லை.............

ஒரு சமயத்தில் ஒரு தடயத்தை அப்பா அதே வீட்டில் ஒரு பெட்டியில் மறைத்து வைக்க அதை உடனடியாக இந்த காலகட்டதில் எடுப்பதை ஒரு நாணயத்தை புதைத்து வைத்து எடுப்பதாக தமிழில் காட்டி இருப்பதை பார்க்கமுடியும்.


ஓ இது தானா ஈ அடிச்சான் காப்பி என்றது, நடத்துங்க மக்காள் நடத்துங்கள்......

கிட்டத்தட்ட போன ஆண்டு அமெரிக்காவில் நடந்த நிகழ்வை அப்படியே மோடியின் கருத்தில் உதித்த கருத்தாக காட்டுகிறார்கள்........

டைம்பத்திரிக்கையின் செய்தி

இதோ ஈ அடிச்சாங் காப்பி அப்படியே

இந்த ஒரு செய்கையை கூட தனியா செய்ய முடியாதா உங்களால் இதற்கும் கூடவா காப்பி. தாங்க முடியலப்பா உங்க கூத்து ......

Friday, June 26, 2015

பசுக்கறி சாப்பிடும் கையோடு கைகுலுக்கியதில் பாசகவிற்கு என்ன மகிழ்ச்சி பாருங்கள்

பசுக்கறி சாப்பிடும் கையோடு கைகுலுக்கியதில் பாசகவிற்கு என்ன மகிழ்ச்சி பாருங்கள்

பசுக்கறி எதிர்ப்பாளர்கள் எல்லாம் இவரை இனி இந்தியாவுக்குள் வரக்கூடாது அப்படியே பாக்கிட்தானதிற்கு போங்கள் என்று அனுப்பிவிடுவார்கள் போலும்.

Thursday, June 18, 2015

அடுத்தாக தினமணியில் வர இருக்கும் தலையங்கம் - வெறும் வாய்; மெல்ல அவல்!

வெறும் வாய்; மெல்ல அவல்!
எந்த வித கலங்கமும் குற்றமும் புரியாத மோடியை என்ன சொல்லாம் என்று காத்துக்கொண்டு இருந்தார்கள் எதிர்கட்சிகள் போலும்.

நேற்றைக்கு இருந்து இன்று மதியம் வரை எந்த தப்பும் தவறும் செய்யாமல் இருக்கும் மோடியை என்ன சொல்லி குறை சொல்லாம் என்று தேடிக்கொண்டு இருந்த எதிர்கட்சிகளுக்கு வாய்க்கு அவல் கிடைத்த கதையாக அல்லவா இருக்கிறது இந்த விமர்சனம்.

எப்பவோ கொஞ்ச காலத்திற்கு முன்பு குசராத்து முதல்வராக இருந்த போது கொஞ்சமா மக்களை பயமுடுத்தி அடக்கி வைப்பதற்காக ஒரு 160000 மக்களை மட்டுமே தான் கொன்றார்.

அதுவும் எப்படி பட்ட சூழலில் அப்படி 160000 கொலைகள் செய்ய அவருக்கு அவசியம் வந்தது. தான் ஆளும் மாநிலத்தில் நான் நினைத்தால் என்னால் என்ன வேண்டும் என்றாலும் செய்ய முடியும் என்று காண்பிக்க வேண்டிய சூழலில் தள்ளப்பட்ட மோடி அப்படி கால நெருக்கதலின் கட்டாயத்தில் அப்படி செய்ய வேண்டி வந்தது.

அப்படி 160000 கொலைகளை மோடி செய்திருக்கவிட்டால் ஒரு காலத்தில் தேனீர் கடையில் தேனீர் விற்றுக்கொண்டு பிழைப்பு நடத்திய மனிதரை இன்று இப்படி உலகம் சுற்றும் வாலிபராக நம்மால் பார்த்து இருக்க முடியுமா.

ஒருவர் ஆளும் ஆட்சியில் ஆட்சியரால் எதுவும் செய்யமுடியாது என்று தெரிந்தால் எதிரிகளான அந்த கொல்லப்பட்ட பெண்களும் அவர்களின் வயிற்றில் இருந்த சிசுகளுக்கும் எப்படி நம் மோடியை பார்த்து பயந்து நடுங்கி இருப்பார்கள் என்று இந்த வயிற்று எரிச்சல் பிடித்த எதிர்கட்சிக்கு தெரியாமல் போனது எப்படியோ...

பிரதமர் மோடி என்ன லலித்து மோடி போல் கஞ்சா வைத்து இருந்தற்கால நீதிமன்றத்தால் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையா விதிக்கப்பட்டு இருந்தார். வெறும் 160000 மக்களை மட்டும் தான் கொன்றார், அதுவும் பெண்களையும் அவர்களது வயிற்றில் பிறக்க இருந்த சிசுகளையும் தான் அதனால் யாருக்கு என்ன  நட்டம். வேண்டும் என்றால் அம்பானி மற்றும் அதானியிடம் வேண்டும் என்றாலும் கேட்டு சொலுங்கள்..

அப்படி எரிக்கப்பட்ட அந்த இடங்களை இன்றைக்கு சென்று பாருங்கள், அவர்களிடம் இந்த இடத்தை பிடுங்கி என்ன அழக்கா பயனுள்ள இடமாக மோடி மாற்றி இருக்கிறார் என்று தெரியும் உங்களுக்கு.

இப்படி எல்லாம் செய்யாமல் மட்டும் மோடி இருந்து இருந்தால் இப்படி ஒரு முன்னால் டீக்கடைகாரர் ஆன மோடி வெறும் வெறிபிடித்த முதல்வர் என்று மட்டும் அல்லவா நாடு இழந்து இருக்கும். இப்போது பாருங்கள் எப்படி நமது செயலலிதா பார்க்கும் எல்லா இடங்களையும் பொருட்களையும் தனது தோழிக்கு பிடுங்கி கொடுத்து அழகு பார்த்தது போல் மோடி அவரது உடன்பிறவா தோழர்களுக்கு அள்ளி கொடுக்கிறார், அதை போய் தவறு என்று சொல்கிறார்கள் இந்த வயிற்று எரிச்சல்காரர்கள் பாவிகள்.

இந்த பாணியில் காந்தியை கொன்றதும் சரிதான் என்று எழுதினாலும் எழுதுவார்கள் போலும்.............. தாங்க முடியல்ப்பா இவங்க அட்டகாசம்.......

Tuesday, June 16, 2015

அப்போ மேடைக்கு மேடை YG மகேந்திரன் திட்டுவது K பாலசந்தரை தானா

பொதுவாக இவரது நாடகங்களில் எங்காயாவது ஒரு இடத்திலாவது சினிமாவுக்கு கதை எழுதுவேன்/கிறேன் வசனம் வரும். அப்படி வரும் சந்தர்பங்களில் கதை சொல்வதாக/எழுதுவதாக சொன்னவர் ஒரு கதையை சொல்வார். கதையின் முன் பாதியை சொன்னதும் பின் பாதியை என்ன என்று நான் சொல்கிறேன் என்று மகேந்திரன் கழுவி கழுவி ஊற்றுவார்.

அது மட்டும் இல்லாமல் கொஞ்சமும் சபை நாகரீகம் இல்லாமல் ஒருமையிலும் அவனே இவனே என்றும் ஏகத்துக்கும் விளாசுவார். என்னடா மனிதன் யாரை இப்படி எல்லாம் போட்டு தாக்குகிறார் என்று தோன்றும்.

அதிகம் யோசிக்காமல் யாராவது திக/திமுக வாகத்தான் இருக்கும் என்று இவ்வளவு நாள் நம்பி இருந்தேன் அரங்கேற்றம் படம் பார்க்கும் வரை.

பிறகு இவர் கழுவி கழுவி ஊற்றியது பாலச்சந்தரை என்று தெளிவாக புரிகின்றது. இப்போ ஏன் சார் அப்படியா என்று கேட்டால் வடிவேல் பாணியில் நான் சொன்னது எல்லாம் உண்மைன்னு அப்படியே நப்பிட்டீங்க ஐயோ ஐயோ என்று சொல்லி சிரிப்பார் பாருங்கள்..........

Thursday, June 11, 2015

"குடிமகன்'கள் கார் ஓட்டுவதைத் தடுக்க அமெரிக்காவில் புதிய தொழில்நுட்பம் - ஒரு வேளை இந்த நுட்பம் இந்தியாவிற்கு வந்தால்

அம்பானி அல்லது அதானிக்கு இந்த பூட்டு  தயாரிக்கும் வேலையை ஒட்டு மொத்தமாக கொடுப்பார்கள்.

முதலில் சோதனை முறை என்று சொல்லி சைகிளில் மாட்டி பரிசோதிப்போம் என்று சொல்வார்கள். தினமலரில் அன்றாடம் இந்த ஊரில் காவலர்கள் வெற்றிகரமாக இத்தனை குடிகாரர்களை பிடித்தார்கள் என்று செய்தியும் படமும் வெளியிடும்.

பிறகு உயர்தரம் அல்லாத இருசக்கர வாகனங்களுக்கு மாட்டி ஆண்கள் பெண்கள் என்று வேலைக்கு செல்லும் மக்களை துன்புருத்து காவலர்கள் கல்லா கட்டுவார்கள். அதிலே ஒழுங்கா கேக்கிறத கொடுத்தா வீடு போவ இல்ல பணத்தோட நிக்காம செய்தி சிறைன்னு நார அடிச்சிடுவோன் என்று மிரட்டுவார்கள்.

இந்த வரையிலே இந்த முதலாளிகள் போட்ட முதலை விட பெருமடங்கு இலாபம் வந்துவிடும் அதனால் ஆட்சியாளருக்கு எப்போது வேலை கம்மியாக இருக்கிறதோ அன்று மக்களின் நலன் கருதி வரும் மாத முதல் தேதியில் இருந்து இந்த சாதணத்தை சைக்கிள் மற்றும் உயர் தரம் அல்லாத இருசக்கிர வாகனங்களில் பொருத்துதல் கட்டாயம் என்று அறிக்கை விடுவார்கள்.

சரி எங்களை எல்லாம் வாங்கி பொருத்தனும் சொன்னீங்களே உயர் தர இரு சக்கர வாகனம் மற்றும் கார் வகையராக்களுக்கு என்று கேட்டால் அவைகள் எல்லாம் பாதுகாப்பு மிக்கவை இந்த பாதுகாப்பு அவைகளுக்கு தேவை எல்லை என்று சொல்வார்கள்.

இல்ல வேண்டும் என்று யாராவது போராடி ஆணை வாங்கினால், குமாரசாமி கால்குலேட்டர் மாதிரி டன் கணக்கில் அந்த சாதணம் மீதே கொட்டினாலும் அழக்காக திறக்கும். அது மட்டும் இல்லாது அந்த சாதணத்தை நீதிமன்றம் கொண்டு சென்றால் 20%க்கும் கீழாகவே எப்பவும் கணக்கு காட்டும் அவர்களுக்கு மட்டும்.

மற்றபடி சைக்கிளில் சென்றவர்கள் எல்லாம் வருட கணக்கில் சிறையில் இருப்பார்கள். அப்படி இருப்பது தான் ஞாயம் என்று பிபிசி நிறுவனம் ஒரு செய்தி ஆவணப்படம் தயாரித்து வெளியிடும். அதில் எங்காவது கார்களை பற்றியோ அல்லது உயர் தர இரு சக்கர வாகனங்களுக்கு எதிராக வாக்கு மூலங்கள் வந்தால் இந்தியாவில் இந்த படத்தை வெளியிட கூடாது என்று ஆணை பிறப்பிக்கும் இந்திய அரசு.

Wednesday, June 10, 2015

தைரியம் இருக்குதா பாசக அரசுக்கு, முதுகு எலும்பு இருந்தால் செய்யட்டும் பார்க்கலாம்.

எப்ப செய்திகளை படித்தாலும் முகம் சுளிக்காமல் இருக்க முடிவதில்லை இந்த இந்துமயம் செய்திகள் உணவில் விழுந்த கல் போல் இடறிக்கொண்டே இருக்கிறது.

இதிலே பாக்கிட்தானத்துக்கு போ, கடல்ல விழுந்து சாகு அப்படி இப்படி எல்லாம் அல்ல கைகளின் அன்றாட அறிக்கையும், தமிழக்கா அதற்கும் பாசகவுக்கும் அறிக்கைக்கும் சம்பந்தம் இல்லை என்ற புலம்பலும் தாங்க முடியவில்லை.

வாயிக்கிழிய இவ்வளவும் பேசும் அந்த மக்களின் வீட்டில் சென்று பாருங்கள் துவைப்பது முதல் கைகளை சுத்தம் செய்யும் சோப்பு வகைகள் யாவும் அமெரிக்காவோ அல்லது வெளிநாட்டின் தயாரிப்பாக இருக்கும்.

அமெரிக்காவிலும் ஐரோபாவிலும் விற்கும் இந்த வகை சோப்புகள் மிகவும் மலிவாக கிடைக்க காரணம் அதன் மூலப்பொருள் மலிவாக கிடைப்பது தான்.

அதே தாயாரிப்புகளை இந்தியாவில் கொண்டு வந்து கூவி கூவி வித்து இன்றைக்கு உள் நாட்டு தயாரிப்பை ஒருவரும் உபயோகிப்பதில்லை. மாற்றாக அமெரிக்க ஐரோப்பாவின் தயாரிப்புகளையே பெரிதும் விரும்பி பயன்படுத்துகிறார்கள்.

சரி இதுக்கும் தலைபுக்கும் என்ன சம்பந்தம், எங்களை பொருத்தவரை யார் தயாரித்தாலும் ஒன்று தான். வெளுத்தால் மட்டுமே போதும் அது கோமயத்தில் தயாரித்தா என்ற ஆறாய்ச்சி எல்லாம் நமக்கு தேவை இல்லாத ஒன்று.

ஆனால் பாசகவிற்கு பொருள் தயாரிப்பு என்று வந்தால் அதில் உள்ள சாங்கியங்களை மறுபடியும் பட்டியல் இட்டால் நீளும் என்று விட்டு விடுகிறேன். அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில் மலிவாக இந்த சோப்புகள் கிடைப்பதற்கு காரணம் அங்கே அவர்கள் உண்ணும் பசுமாடும் பன்றியும் கொண்டுள்ள கொழுப்பை குப்பையில் கொட்டுவதற்கு பதில் சோப்பு தயாரிக்கும் மூலப்பொருளாக பயன்படுத்துவது தான்.

அந்த பசுமாட்டு மற்றும் பன்றிக்கொழுப்பை கொஞ்சம் வாசனையாக கொடுத்ததில் இந்த பாசக அல்லகைகள் பெருமை பொங்க நாங்க எல்லாம் எப்பவும் அமெரிக்க ஐரோப்பாவின் தயாரிப்புகளை தான் தருவிப்போம் அவர்களை போல் பொன்வண்டு சோப்பு எல்லாம் மலிவாக  வாங்க மாட்டோம் என்று பெருமை பேசுதுக.

அட இதுவாது பரவாயில்லை ஏதோ முகத்துல துணிக்கு போடுதுக என்று விட்டாலும், சாப்பிடம் முன்னு அப்படி கொஞ்ச தொட்டு தேச்சா போதும் பிசுபிசுப்பே இருக்காதுன்னு தட்டிலும் இன்ன பிற சமையல் பாத்திரங்களை கழுவுகிறார்களே அந்த தட்டுகழுவும் அமெரிக்க மற்றும் ஐரோப்பாவின் தட்டுகழுவும் சோப்பும் இப்படி பட்ட தயாரிப்புகள் தான்.

இப்படி பசுமாட்டு மற்றும் பன்றி கொழுப்பில் குளித்து சாப்பிட்டு உழன்று வரும் பரதேசிகங்க தான் தினமும் ஒரு செய்தித்தாளுக்கு கூபிட்டு சொல்லி  பாக்கிட்தானத்துக்கு போ, கடல்ல விழுந்து சா என்று எல்லாம் பிதற்றிக்கொண்டு அலையுதுக.

எங்க முடிஞ்சா முதுகு எலும்பு இருந்தால் இந்த பொருட்களை எல்லாம் இந்தியாவில் எங்கள் ஆட்சி இருக்கும் வரை விற்க விடமாட்டோம் என்று  தடைவிதியுங்கள் பார்கலாம் உண்மையில் உங்களுக்கு தைரியம் இருக்கிறது என்றால்.

இனி இந்த மாதிரி செய்திகளை அவர்கள் சொன்னால் இந்த கேள்விகளை அவரிடம் செய்தியாளர்கள் கேட்க வேண்டும், உங்க பேசுடுல உப்பு  இருக்கான்னு கேட்கிற மாதிரி அங்கேயே கேட்கனும் அப்ப என்ன அசடு வழியுதுகன்னு பார்க்கனும்...........


Tuesday, June 9, 2015

அழியாத கோலங்களும் ஆங்கிலப்படம் Summer of '42 மும்

Summer of '42

இந்த கட்டுரை தமிழ் இந்துவில் வந்த இந்த கட்டுரையில் உள்ள குறைபாடுகளை களைவதே.

அனேகமானோருக்கு பிடித்த படம் இந்த அழியாத கோலங்கள். காரணம் பதின்ம வயது படம், விடலைகளின் விளையாடல்களும் சீண்டல்களும் தளமாக கொண்ட படம்.

இந்த கட்டுரையின் ஆசிரியர் ஆங்கிலப்படத்தை பார்த்தாரா என்று தெரியவில்லை, அப்படி பார்த்து இருந்தால் இவ்வாறு சொல்லி இருக்கமாட்டார்.

பாலுமகேந்திராவின் அனேக படங்கள் ஆங்கிலப்படத்தின் தமிழாக்கம் தான். என்ன கதையையும் திரைகதையையும் தமிழுக்கு உகந்தாற் போல் மாற்றிகொண்டு எடுப்பார். அப்படி அவர் கொடுக்கும் படைப்புகளில், ஆங்கிலபடத்தில் என்ன உணர்வுகள் மனதுக்கு கொண்டு வந்ததோ அதே உணர்வுகளை இவரது படைப்புகளிலும் பார்க்கலாம்.

அதனால் தான் பாலுமகேந்திராவை ஒருவரும் ஈ அடிச்ச்சாங் காப்பி என்று வசைபாடுவது இல்லை.

உதாரணத்திற்கு இந்த அழியாத கோலங்களையே எடுத்துக்கொள்வோம், இந்துவின் விரல் தன்மீது படாதா என்று ஏங்கும் அந்த விடலை, கடைசியில் சோகம் தாளாமல் இவனை இந்து பிடித்து அணைத்து அழும் அந்த கடைசி காட்சியில் அவனுக்கு அந்த பாலுணர்வே தோன்றவில்லையே அதையும் விட நண்பனின் மரணம் அவனையும் இந்துவையும் பாதித்து இருக்கிறது என்று காட்டும் காட்சி. இதையே ஆங்கிலத்தில் ஒரு பாட்டு சூழலில் செய்வதறியாது அவனுடன் உடலுறவு கொள்வாள் அந்த நாயகி. என்னா ஆங்கிலத்தில் நாயகியின் கணவன் அல்லவா இறந்து இருப்பான்.

மற்ற படி கடைக்கு போய் ஆணுறை வாங்க இவர்கள் படும் பாட்டை பார்த்தால் வரும் சிரிப்புக்கு நிகராக இருக்கும் அக்கா தண்ணி வேண்டும் என்று தமிழில் கேட்ப்பது. கோடைகால விடுமுறைக்கு வரும் நண்பிகளை காட்டும் காட்சிகளை அப்படியே அத்தை பெண்ணாக எழுதி எடுத்து இருப்பார் பாலு .

அந்த ஆங்கிலப்படம் மட்டும் அல்ல இப்போது வெளியாக ஓகோவென ஓடிய ஓ கே கண்மணியின் அசல் The Notebookம் கூட அழகாக விடலைகளின் வாழ்கையை படம் பிடித்து காட்டும் படங்கள்.

சொல்லப்போனால் ஆங்கிலத்தில் இந்த வகை படங்கள் அதிகம், என்ன முன்பு எல்லாம் ஆங்கிலத்தில் சொல்லும் கதையையோ சம்பவத்தையோ அப்படியே தமிழில் சொல்ல திணறுவார்கள். இப்போது தான் ஆங்கிலபடத்திற்கும் மேலாக அல்லவா நாட்டில் நடந்து கொண்டும் இருக்கிறது.

பார்க்கலாம் இன்னமும் எத்தனை படங்கள் இதுபோல் தமிழில் மாற்றம் கொண்டு வருகின்றது என்று.

Thursday, June 4, 2015

Moms' Night Out - திரைவிமர்சனம் - வெங்கட்பிரபு பாணியில் ஒரு படம்

பொதுவாக அமெரிகாவுல எல்லாம் அப்படி தான் என்று எந்த ஒரு விவாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பார்கள். இந்த வாசகத்திற்கு பிறகு விவாதப்பதையே நிறுத்தியும் கொள்வார்கள்.

உதாரணமாக சொன்னால் அமெரிகாவுல எல்லாம் ஆண் பெண் பேதம் இல்லாமல் குடிப்பார்கள், புகைபிடிப்பார்களில் தொடங்கி இன்ன பல புது பழக்கங்களையும் ஞாயப்படுத்துவார்கள்.

அதே போல் தான் குடும்ப விவகாரங்களிலும் ஒரு முன்முடிவை வைத்துக்கொள்வார்கள் இப்போ எல்லாம் அப்படி இல்லை அமெரிக்காவில் உள்ளது போல் என்றும் சேர்த்துக்கொள்வார்கள்.

இந்தியாவில் அதிகரித்து வரும் மணவிலக்குகளுக்கு இதுவே அடிப்படையும் கூட.....

இப்படியான சூழலில் 2014ல் வெளிவந்த படம் இது, மொத்தமாக 3 நாட்க்களில் நடக்கும் நிகழ்வுகளை மட்டும் கொண்டு படமாக்கப்பட்ட படம் இது.

பல்வேறு விதமான குடும்ப வாழ்கையை கொண்ட அம்மாக்களை காட்டி படம் துவங்கும்.

குழந்தைகள் குரும்பைக்கூட குறை சொல்லாத ஒரு அமெரிக்க அம்மாவாக ஒரு பாத்திரம்.

கண்ணுக்கு மைக்கார இட்டுக்கொள்ள நினைக்கும் தருணத்தில் அம்மா நான் போடுகிறேன் என்று வாங்கி இலிப்பிவிட்டு விடும் குழைந்தைக்கூட கோவிக்காது விட்டு விட்டு முகம் கழுவப்போகும் படியான ஒரு பாத்திரம்.

சின்ன வயதில் நான் கண்ட கனவு மனதுக்கு நிறைந்தவனை மண ந்துக்கொண்டு, நல்ல பிள்ளைகளை பெற்று நல்ல தாயாக வாழ்வது தான். அத்தனையும் கிடைத்தும் மனதில் மகிழ்ச்சி இல்லையே என்று புலம்புவளுக்கு என்ன சொல்லி ஆற்றுவது என்று அறியாமல் தவிக்கும் கணவனாக ஒரு பாத்திரம்.

பாதரியின் மனைவியாக ஒரு பாத்திரம் எல்லா இடத்திலும் மிகுந்த கவனமாகவும் கண்ணியமாகவும் நடந்துகொளும் இன்னும் ஒரு அம்மா பாத்திரம், அவளுக்கு ஒரு விடலை வயது மகள்.

இன்னும் ஒரு அம்மா அவளது கணவனுக்கு ஒன்றும் தெரியாத அப்பாவியாக ஒரு பாத்திரம்.

இந்த 3 அம்மாக்களும் சேர்ந்து ஒரு நாள் இரவு வெளியில் சென்று பொழுது கழித்துவிட்டு வருவதாக ஒரு திட்டம். அப்படி சென்றால் தான் தனது இடையராத வீட்டு வேலையில் இருந்து விடுதலையானால் போல் இருக்கும் மனதில் இறுக்கம் விட்டு மகிழ்ச்சி பிறக்கும் என்று சொல்கிறார்கள் அங்கு துவங்குகிறது திருப்பம், ஒவ்வொன்றாக திருப்பத்திற்கு மேலாக திருப்பம் அமைத்து இருக்கிறார்கள் கதையில்.

கடைசியில் ஒரு கட்டத்தில் எவ்வளவு செஞ்சாலும் போத மடேன் என்று இருக்கிறது என்று புலம்பும் போது அங்கு ஒரு நண்பர் பாத்திரம் விடை தரும்.

கடவுளின் படைப்பு திறனில் ஒருவனும் குறை சொல்வதற்கு இல்லை, ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு செயல் திட்டத்தை வைத்து தான் அவர்கள் படைக்க படுகிறார்கள். ஆகவே உனக்கு என்று என்ன கடமை இருக்கிறதோ அதை நன்றாக செய்தாலே போதும் என்று சொல்லி அதனுடன் அன்று கண்ட அந்த கழுகு தனது கூட்டில் குஞ்சுகளை கவணிக்கும் செயல்களை பார்க்கும் போது அந்த அழகை இரசிக்காமல் இருக்க முடியவில்லை அந்த இறைவனின் படைப்பை என்று சொல்லும் இடத்தின் வசங்கள் நெஞ்சை தொட்டு செல்கிறது.

2014ல் இப்படி ஒரு படமா என்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அதுவும் படம் முடிந்தும் அவர்கள் அடிக்கும் கூத்தை பார்க்க பெயரோட்டம் கடைசிவரை பார்த்துவிட வைக்கிறார்கள்.

இந்தியாவில் 36 வயதினிலே வெளியிட்டு இருக்கிறார்கள், அதை பொதுவாக நன்றாக இருக்கிறது என்றும் எழுதுகிறார்கள். பார்க்கலாம் இந்த படத்தை எப்படி எழுதுகிறார்கள் என்று. நல்ல படம் அனேகமாக அடுத்து தமிழில் வர வாய்புள்ள படமும் கூட.

Wednesday, June 3, 2015

இளையராசாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

எப்படி பட்ட காலத்தை கடந்து வந்து இருக்கிறது திரை இசை பாடல்கள். சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் இலங்கை என்று கைவிரல் எண்ணிகைகளுக்குள் அடங்கிவிடும் நிலைய அலைபரப்புகள் மட்டுமே.

இதில் சென்னையின் விவதபாரதி என்று ஒன்று சென்னையில் இருந்து கொஞ்ச தொலைவு வரை மட்டுமே கேட்கும் அலைவரிசை.

இரண்டே இரண்டு நிகழ்சிகளுக்கு மட்டும் மக்களின் கவனம் அப்போது இருக்கும், ஒன்று செய்திகள் மற்றொன்று திரைஇசை பாடல்கள். ஞாயிற்றுகிழமைகளில் ஒரு மணி நேர நாடகம் மதியத்தில் மட்டும் என்று இருந்தது.

இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு அலைவரிசையும் போட்டி இல்லாமல் ஒருவர் முடிக்கும் பொழுது மற்றவர்கள் என்று பாடல்களை அட்டவணைக் கொண்டு அலைபரப்பினார்கள்.

இவர்கள் எல்லோரையும் தூக்கி சாப்பிடும் விதமாக இலங்கை வானொலி செயல்பட துவங்கியது. காலை 6:00 முதல் 6:30 வரை பக்தி பாடலுக்கு பிறகு துவங்கும் புத்தம் புதிய இசையில் துவங்கி இரவு தூங்க செல்லும் வரை பாடல்கள், பாடல்கள்.....

மற்ற அலைவரிசைகள் எல்லாம் ஒரு நாளுக்கு 2 மணி நேரம் பாடல்கள் என்று வைத்துக்கொண்டால், இலங்கை வானொலி 2 மணிக்கு மட்டும் மற்ற நிகழ்சிகளுக்கு என்று கொண்டு செயல்பட்டுக்கொண்டு இருந்த காலம்.

பள்ளிக்கு ஓடும் நாட்களில் விவதபாரதியின் அந்த முடிவு இசை வந்துவிட கூடாது என்று அக்கம் பக்கம் என்று கேட்டுக்கொண்டே ஓடிய நாட்கள் அவைகள்.

ஆனால் இன்று எண்ணிக்கையில் அடங்காத அலைவரிசைகள். அது மட்டுமா, இணையத்தில் தமிழ் என்றோ, திரைபாடல்கள் என்றோ தேடினால் எண்ணிகையில் அடங்கா தரவுகள் கொட்டிக்கிடக்கின்றன.

தொழில் நுட்ப்பத்தில் இவ்வளவு மாற்றம் கண்டும், இத்தனை ஆண்டுகள் கடந்தும் இன்றும் அதே இடத்தில் எங்கள் இராச இளையராசா என்றும் இராசாவாக..........வாழ்த்து சொல்வோம் அந்த 72 வயது இளைஞருக்கு.............