Wednesday, December 3, 2014

காவியத்தலைவன் - Amadeus Mozart - பாலசந்தர் - அனந்து - மற்றும் வசந்த பாலன்

அதிகம் பீடிகை இல்லாமல் சொல்வதென்றால் காவியத்தலைவன் அமென்டுயுசு மொசார்டு (Amadeus Mozart)  http://www.imdb.com/title/tt0086879/ படத்தின் தமிழாக்கம் என்று சொல்வதை விட கம்பனாக்கம் என்று சொல்லாம்.

இந்த ஆங்கிலபடத்தின் கதையும் திரைக்கதையும் அப்படி ஒரு அருமையாக பொருத்தமாக அமைத்து இருக்கும் மூலத்தில்.

ஆங்கிலபடத்திற்கு இசை மொசார்டு தான், அவ்வளவு அருமையாக எடுத்து கையாண்டு இருப்பார்கள் காட்சிகளுக்கு ஏற்ப.

மொசார்டின் வாழ்க்கை வரலாறை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் படம் இந்த ஆங்கிலப்படம்.

இந்த ஆங்கிலபடத்தின் பாதிப்பில் இருந்து மீளாது இருந்த பாலசந்தரும் அனந்தும் இணைந்து சிந்து பைரவி என்று தமிழில் முதலாவதாக எடுத்தார்கள் அதே கதை, திரைகதை என்ன கர்னாடக சங்கீத பாடகன் என்று மட்டும் மாற்றினார்கள்.

மேலும் மொசார்டின் ஏழ்மைக்கு காரணம் அவரது கர்வம் என்று ஆங்கிலபடத்தில் சொன்னாலும் மற்றவர்களின் பொறாமை தான் உண்மையான காரணம். அரசனின் சொந்தகாரிக்கு இசை சொல்லிக்கொடுக்கும் வாய்பை பொய் சொல்லி கிடைக்க விடாமல் செய்ததும்.

ஒரு மிக கொடிய நய வஞ்சகனை நல்லவன் என்று நம்பி அவனிடமே தனது பலவீனங்களையும் மற்றும் எதிர்கால திட்டங்களையும் சொல்லி ஏமாற்றம் கண்டதும் தான் உண்மையான காரணம்.

இந்த காரணங்களை எல்லாம் சொன்னால் தமிழில் இரசிக்க மாட்டார்கள் என்று தெரிந்து மொசார்டின் பலவீனங்களில் ஒன்றான பெண்களை மட்டும் எடுத்துக்கொண்டு கையாண்டு திரைகதையை அமைத்து சிந்து பைரவி என்று எடுத்து இருப்பார்கள்.

 மொசார்டு தனது பொருளாதார நிலையை சரி செய்ய மாணவர்களை தேடும் காலங்களில் ஒரு பெரும் பணக்காரன் தனது நாயிக்கு பிடிக்கிறது உனது இசை எங்கே இன்னும் கொஞ்சம் வாசி/பாடு என்று கேட்கும் சமயம் கோபித்துக்கொண்டு சொன்றுவிட்டு பிறகு அங்கேயே போய் உங்கள் நாய்களுக்காக பாடுகிறேன் பணம் தர முடியுமா என்று கேட்பார் மொசார்டு. இதை தான் சிந்து பைரவியில் யாருடன் பழகமாட்டேன் என்று மறுத்து செல்லும் அந்த பாடகன் கடைசியில் தண்ணி தொட்டி தேடி வந்த கன்றுகுட்டி நான் என்று பாடி சாராயம் வாங்கி குடிப்பதாத படம் எடுத்து இருப்பார்கள்.

இப்படி எல்லாம் எழுதி படம் எடுத்தும் ஆறாத அனந்து இன்னும் ஒரு கோணமாக சிகரம் என்று அதே மொசார்டு படத்தை எடுத்தும் இருந்தார். என்ன சிகரத்தில் மொசார்ட்டின் தனிபட்ட வாழ்கை சரியாக அமையவில்லை என்றதையும் நம்பியவன் ஏமாற்றிவிட்டான் என்றதையும் மட்டும் கொண்டு கதையமைத்து எடுத்து இருந்தார் அனந்து.

இதோ இப்போது வபாலன் செமோ கூட்டணி.

இந்த கூட்டணி இதற்கு முன்னே அங்காடி தெரு - The Perfect Crimeஎன்ற படத்தை அங்காடி தெருவாக எடுத்ததை புகழ்ந்து எழுதி இருந்தேன். ஆனால் இந்த படத்தை அப்படி புகழ முடியவில்லை.

காரணம், கதையிலும் திரைகதையிலும் அவ்வளவு தோய்வுகள்.

மொசார்ட்டு படத்தில் வில்லன் தான் நடந்தது என்ன என்று கதையை ஆரம்பத்தில் இருந்து சொல்வான். அது போலே இதிலும் பிருத்திவி சொல்வதாக அமைத்துக்கொண்டார்கள் சரி. எப்படி போகிறது என்று பார்ப்போம் என்று பார்த்தால் எல்லா இடத்திலும் தொக்கி தொக்கி நிற்கிறது.

இது வரையில் காலம் காலமாக கூத்து நடத்தும் சாமி எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே நடத்திவரும் அவருக்கு புதிதாக செய்த்த சில மாற்றங்கள் வந்ததும் அது தான் சரி என்று சொன்னாராம். 

இது ஆங்கிலத்தில் வில்லனை மன நலமருத்துவ மனையில் பார்பதற்காக வந்து இருக்கும் பாதரியிடம் வில்லன் தான் எழுதிய இசையை வாசித்து காட்டி இது எப்படி இருக்கு என்று கேட்பான், அதற்கு பாதரியார் எப்பவும் கேட்டது போல் இல்லையே என்று சொல்லும் போது மொசார்டின் ஒரு துள்ளல் இசையை வாசித்து இது எப்படி இருக்கிறது என்பார். உடனே அந்த பாதரியார் அட இது உன்னுடைய இசையா என்ன அற்புதமாகவும் குதுகலமாகவும் இருக்கிறது என்பார். அதை பார்த்ததும் இறுகி போன முகத்துடன் அது மொசார்ட்டின் இசை என்று சொல்வதை தான் சாமி இப்படி சொல்லிடிச்சு என்று மாற்றிக்கொடுத்துள்ளார்கள்.

இசையை ஏன் இரகுமானிடம் கொடுத்துள்ளார்கள் என்று உங்களுக்கு இப்போது புரிந்து இருக்கும். மொசார்டில் வருவது போல் நல்ல இசையை கூத்திசையாக கொடுக்கும் கட்டாயத்தில் இரகுமான்.

அடிக்கடி இருவர் படத்தில் வரும் பூங்கொடியின் புன்னகை பாடலின் வாசம் பாடல் மற்றும் பின்னணியிலும் வருகிறது தவிர்த்து இருக்கலாம்.

இரண்டு பாடல்கள் நன்றாக இருக்கிறது ஆனால் இருவர் படத்தில் பாடலை திரும்ப திரும்ப கேட்க வைத்ததை போல் அமையவில்லை.

மொசார்டை அவரது அப்பாவின் முகமுடியிடன் வந்து பயம் கொள்ள செய்வதையும், அப்பா இறந்த பிறகும் இறப்பின் சோகத்தை சொல்லும் இசை வடிவத்தில் சோகத்தை சொல்லி பிழியும் காட்சி களையும் சுதந்திர போராட்ட காட்சிகளாக மாற்றிவிட்டார்கள்.

மன்னர் தடை செய்த ஆட்டங்களை கொண்டு நாடகம் அமைப்பதும், பின்னர் மன்னரே அவைகள் இருக்கட்டுமே என்று சொல்லும் நிகழ்வுகளை மொத்தமாக சுதந்திர போராட்டமாக மாற்றி எழுதியுள்ளார்கள் இதிலே.

வடிவு கதாபாத்திரத்தை ஆங்கிலத்தில் வில்லன் மொசார்டின் மனைவியுடன் செய்யும் வில்ல தனத்தை அப்படியே தமிழுக்கு காதல் என்று மாற்றி விட்டார்கள். காதலுக்கு அந்த பாத்திரம் சொல்லும் காரணங்கள் அவ்வளவு அழுத்தமாக இல்லாமல் போனதற்கு புகுத்த வேண்டும் என்று புகுத்தியது தான் காரணம்.

நான் தான் மொசார்டை கொன்றேன் என்று புலம்பும் வில்லனை நிகழ்வில் செய்யவைத்து இருக்கிறார்கள் தமிழில்.

வபாலனும் செமோ இன்னமும் அழுத்தமாக கதையை அமைத்து இருக்கலாம், கதை அமைத்து இருத்தால் திரைகதையும் அமைந்து இருக்கும் அங்காடி தெரு போல். அடுத்த படைபில் கவனம் அதிகம் தேவை. இவ்வளவு இருந்தும் படம் ஒரு நிறைவு இல்லாமல் இருக்கிறது.

0 comments: