Sunday, February 16, 2014

இளையராசாவுக்கு இசை கற்றுக்கொடுக்க வரும் அமுதவன்

இவரின் இளையராசா பற்றிய விமர்சனங்களை படித்தோமானால் அதில் தெரித்து வழியும் வயிற்றெறிச்சல் நன்றாக தெரியும்.

உதாரணமாக கீழே உள்ளவைகளை காணலாம்.

"
அடுத்து வருபவர்களும், புதிதாக வருபவர்களும் - தங்களுக்கென்று ஏதாவது வித்தியாசம் செய்து காட்டவேண்டாமா? இளையராஜா என்ன செய்கிறார் இந்த இடையிசையில் ‘முழுமை பெற்ற ஒரு இசைத்துணுக்கு’ ஒலிப்பதை மாற்ற எண்ணி சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஒரு வயலின் கீற்று, ஒரு கிடாரின் சிறு இசை…இன்னமும் வெவ்வேறு வாத்தியங்களில் சின்னச்சின்ன இசை இழைகள் என்று கோர்த்து வாசிக்கவைத்து ‘எப்படியோ ஒரு வழியாக’ சரணத்துக்குக் கூட்டி வருகிறார். மறுபடி அடுத்த சரணத்தில் இதையே இன்னும் அங்கே கொஞ்சம் மாற்றி இங்கே கொஞ்சம் மாற்றி என்று வித்தைகள் செய்து பாடலை முடிக்கிறார்.
ரிசல்ட் என்னவென்றால் கேட்பதற்கு பழைய வழக்கமான பாடல்களிலிருந்து கொஞ்சம் வேறுபட்ட பாடல்போல் ஒலிக்கிறது. தோன்றுகிறது.
பின்னர் இதே பாணியைத் தம்முடைய பாணியாகவும் அவர் ஆக்கிக்கொண்டுவிட்டார்.
பாடல் வித்தியாசமாக ஒலிக்கிறது சரி; பிரச்சினை என்னவென்றால், இந்த இசைத்துணுக்குகள் கோர்வையாக இல்லாத காரணத்தினால் எந்த வாத்தியக்காரர்களாலும் தனித்தனி இழைகளாக வாசிக்கப்பட்ட இந்த இசைத்துணுக்குகளை நினைவில் வைத்துக்கொண்டு வாசிக்கமுடியாது.
ஏன் இளையராஜாவுக்கே அந்த இசைத் துணுக்குகள் ஞாபகமிருக்க வாய்ப்புகள் இல்லை. அவர் ‘எழுதிக்கொடுத்துவிடுகிறார்’ என்கிறார்களே அது இதைத்தான்.
இதனை ‘எழுதிக்கொடுக்காமல்’ அந்தக் கடவுளே வந்தாலும் வாசிக்கமுடியாது. அதனால்தான் இளையராஜாவின் ஆர்க்கெஸ்ட்ரா நடைபெற வேண்டுமென்றால் மிக அதிகமான பயிற்சிகள் நடைபெற வேண்டியுள்ளது. நிறைய ஒத்திகை திரும்பத் திரும்ப பார்க்கவேண்டியுள்ளது.
ரிகர்சல்……………மீண்டும் மீண்டும் ரிகர்சல் என்பார்கள்!"
 

மொத்தத்தில் என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள், இராசாவின் பாடலில் ஒரு ஓட்டம் இல்லாமல் அங்கே இங்கே என்று தட்டு தடுமாறி அடுத்த சரணத்திற்கு வருகிறது என்று மனதார பொய் சொல்கிறார்.

இராசாவின் இரசிகர்களுக்கு தெரியும் அவரது இசையில் படத்தின் பின்னணி இசையை கூட மனப்பாடமாக அறிய படுத்தியவர் இராசா.

உதாரணத்திற்கு சொல்வதென்றால் நகுருதனா திரனன என்று எத்தனை படங்களில் இலவகமாக அமைத்துவைத்துள்ளார் இராசா. எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் கொடுத்த இசை தலைமுறைகளையும் தாண்டி இந்த தலைமுறைகளும் இந்த துணுக்கு இசையை கேட்டதும் அதன் சாரம் என்ன என்று நொடியில் சிரிக்கும் வண்ணமாக இருப்பதை இவர் பார்த்திருக்க மாட்டார் போலும்.

எதோ கங்கை அமரன் சொன்னார் என்று அவரது வார்த்தைகளால் இராசாவை குறைசொல்வதில் இவருக்கு ஒரு பெருமை பாவம்.

எந்த எந்த பாடல்களை எப்படி தழுவினார்கள் என்று கங்கை அமரன் இல்லை இராசாவே பெரிய பட்டியலை கொடுத்து இருக்கிறார். அது மட்டும் இல்லாது அவருடைய மிகவும் பிரபலமான பாடலை எப்படி எல்லாம் மாற்றி பாடலாம் என்று சமீபத்திய வெளி நாட்டு கச்சேரிகளில் விளக்கியும் காட்டியுள்ளார். வாய்பு கிடைச்சாசு இனி முடிந்த அளவுக்கு குத்தி கிழி என்று கொலைவெறியுடன் அவர் தாக்கிய பதிவு தான் இந்த பதிவு.

அமுதவனுக்கு மட்டும் அல்ல அவை போல நினைக்கும் மற்றவர்களுக்கும் சொல்லுவோம். நீங்கள் என்ன தான் சேற்றை வாரி இறைத்தாலும், இராசாவின் புகழ் மறைக்க முடியாக ஒன்று. அவர்களு நீங்களும் நாங்களும் விளம்பரம் ஓட்ட வேண்டியது இல்லை. அவரது படைபுகள் அவரை என்றைக்கும் அடையாளம் காட்டும்.

எங்களுக்கு இராசாவையும் தெரியும், மெல்லிசை மன்னரையும் தெரியும், கருப்பு வெள்ளை காலத்து பாடல்களில் இருந்து சமீபத்திய பாடல்கள் வரை தேடித்தேடி இரசிகின்றோம்.

இனிமேலாவது மெல்லிசை மன்னருக்கு இசைகற்றுக்கொடுப்பதை நிறுத்திவிட்டு வேறு எதாவது வேலை இருந்தால் பாருங்கள். வயிறு எரிந்து தீஞ்ச வாசனை தாங்கவில்லை ஆளைவிடுங்கப்பா................

17 comments:

')) said...

நீண்ட நெடிய அனுபவம் உள்ள, அறிவு நுட்பம் உள்ள பலர் சொந்த வாழ்க்கையிலும், பொருள் ஈட்டும் வழிகளிலும் தோற்றுப் போவதுண்டு...

அல்லது ஓரளவு பொருள் ஈட்டினாலும் தன தகுதிக்கு தற்போதைய வாழ்க்கை குறைச்சல் என்கிற வருத்தமும்சிலருக்கு உண்டு..

ஆனால் இவர்களுக்குப் புரிவதில்லை திமிரும்,வறட்டு அறிவு ஜீவித்தனமுமே தகுதி இருந்தும், ஒன்றும் சாதிக்க முடியாத, வெற்றியில்லாத தன் நிலைமைக்குக் காரணம் என்று...

அது போன்ற தகுதியிருந்தும் அகங்காரத்தில் செத்த ஆத்மாவின் சுடுகாட்டுப் புலம்பல்களே அமுதவன் எழுதுவது...

இளையராஜாவை விட கங்கை அமரன் தகுதி வாய்ந்தவர் என்று நிறுவ முயலும் அவர் கட்டுரைகளே இந்த செத்த அறிவுஜீவியின் கர்வத்துக்கு சாட்சி...

')) said...

ஹி...ஹி" இப்படி எழுத" எப்படி உங்களுக்கு தகுதி இருக்கோ அதே போல "அப்படி எழுத" அமுதவன் அவர்களுக்கும் தகுதி இருக்கு!

அமுதவன் அவர்களுக்கு "அப்படி எழுத"தகுதி இல்லை என நீங்கள் கூறுவீர்களானால், இந்த பதிவை "இப்படி எழுத" உங்களுக்கு தகுதி இல்லைனு நீங்களே சொல்லிக்கிட்டாப்போல :-))

யாரு,யாரை பத்தி என்ன எழுதலாம்னு "தரம் மற்றும் தகுதி நிர்ணயம்" செய்ய நீங்க விருப்பப்பட்டால் "உங்களுக்கான தரம் மற்றும் தகுதி நிர்ணயத்தை" யாரோ இன்னொருவர் செய்ய தயாரா இருப்பாங்க :-))

இதான் உலகம் :-))

# //. வயிறு எரிந்து தீஞ்ச வாசனை தாங்கவில்லை ஆளைவிடுங்கப்பா...............//

ஹி...ஹி எனக்கும் கூட தீஞ்ச வாசனை தாங்கலை "பனிமலர்" எரிமலர் ஆகி தீஞ்சிடுச்சோ அவ்வ்!

')) said...

என்னக்கு என்ன வயிற்றெறிச்சல், அமுதவனின் வார்தைகளை பாருங்கள் உங்களுக்கு புரியும். இராசாவுக்கு இசைக்கவே தெரியவில்லை தாறுமாறாக அபசுரங்களாக எழுப்புகிறார் என்று எல்லாம் நானா எழுதினேன், அது அமுதவனின் வார்த்தைகள். விமர்சனங்கள் இல்லா மனிதர் இல்லை, ஆனால் இப்படி அனியாத்தித்திற்கா வயிற்றெறிச்சலை கொட்டுவது.................... வயிற்றெறிச்சல் பட அமுதவனுக்கு எல்லா தகுதியும் அவசியமும் இருக்கிறது. நன்றாக படட்டும் யார் வேண்டாம் என்று சொன்னார்கள்..........

')) said...

பார்வைகள் பலவிதம்.எனக்கு மசால் தோசை பிடிக்காது. நீங்களும் அப்படியே இருக்கணும் என்று நான் நினைக்கலாமா? அதுமாதிரித்தான். யாரும் யாரையும் விமர்சிக்கலாம் என்கிறபோது ராஜாவாவது ரகுமானாவது? உங்களுக்கு ராஜா பிடிக்கும் என்பதால அமுதவன் எழுதியதை குற்றம் சொல்றீங்களோ என தோணுது.

')) said...

அமுதவனுக்காக வவ்வால் வந்துட்டாறா :) அமுதவனுக்கு இளையராசா மீது வெறுப்பு என்பது தெரிந்தது தானே. அதற்கான காரணங்கள் நமக்கு தெரியக்கூடாததாக இருக்கலாம்.

')) said...

இளையராஜாவைப் போலவே திறமையுள்ளவர்தான் கங்கை அமரன் என்பது உலகம் அறிந்ததே. ஆனால் அண்ணனுக்குக் கிடைத்த வாய்ப்பு, தம்பிக்குக் கிடைக்கவில்லை. இளையராஜா குடும்பத்திலேயே யுவனுக்குக் கிடைத்த வாய்ப்பு கார்த்திக் ராஜாவுக்குக் கிடைத்ததா? ஏ.ஆர்.ரகுமானுக்குக் கிடைத்த வாய்ப்பு அவர் தந்தைக்கு ஏன் கிடைக்கவில்லை? வாழ்க்கையில் முன்னேற - அதிலும் திரைத்துறையில் முன்னேற- திறமையை விட,அதிர்ஷ்டம் எனற ஒன்று தேவைப்படுவதை அறியாதவர்களா நாம்?

Anonymous said...

அமுதவன் ஒரு மனநோயாளி அதன் கருத்தையெல்லாம் பெரிசாக எடுக்க கூடாது. லூசில் விட்டுத்தள்ளுங்க .

இப்போ பாலுமகேந்திரா பற்றி கிசு கிசு எழுதி பிழைச்சுக்க பாக்குது. (பாலு உயிருடன் இருக்கும் போது எழுதாம இப்போது கிசு கிசுவாக எழுதுது )

மானம் கெட்ட ஈனப்பிறவி

Anonymous said...

Sunaa is 100% correct.

Anonymous said...

இந்த அமுதவனை பற்றி கமெண்ட் போடும் போது சென்சார் பண்ணாதீங்க

')) said...

தமிழ் மணம் +1
(முதல் வாக்கு )

babu siva said...

அமுதவனின் பதிவுகளை படிக்கும் போது அதில் தெரியும் அதீத காழ்ப்புணர்ச்சிக்கு காரணம் அமுதவனின் குடும்பத்தை இளையராஜா சீரழித்திருக்க வேண்டும் . (ராஜா அப்படிப்பவர் இல்லை என்று நமக்கு தெரியும் )

நாடி நரம்பெல்லாம் இளையராஜா மீது காழ்ப்பு வெறி பிடித்த ஒருவரால் தான் அமுதவன் போல் எழுத முடியும்.

')) said...

பனிமலர்,

//என்னக்கு என்ன வயிற்றெறிச்சல், //

ரொம்ப நல்லது!

அப்போ அமுதவன் அவர்களூக்கு மட்டும் எப்படி வயிறு எரியுமாம்? அவர் என்ன இசைத்துறையிலா இருக்கார்,போட்டினு சொல்ல?

#//தாறுமாறாக அபசுரங்களாக எழுப்புகிறார் என்று எல்லாம் நானா எழுதினேன், அது அமுதவனின் வார்த்தைகள்.//

ஏங்க இப்படிலாம் கேட்கிறிங்களே, செழியனு ஒருத்தர் "அபஸ்வரமா இசை அமைச்சாலும் இனிமையா இருக்கும்னு சொல்லி இருக்காரே" அதை எல்லாம் கண்டுக்கறது அவ்வ்!

ஆக மொத்தம் அபஸ்வரமா ராசா இசைப்போடுவார்னு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு ,அதை நல்லா ரசிச்சா வயிறு குளு குளுனு இருக்குனு சொல்வீங்க, என்ன இது அபஸ்வரம்னு சொன்னா வயிறெரிச்சலா அவ்வ்!

')) said...

வவ்வாலுக்கு வயிற்றெறிச்சல் என்று எழுதவில்லையே, அது முழுதும் அமுதவனுக்கு தான். செழியனின் பதிவுகளையும் வாசித்தோம் அவர் என்ன சொன்னார் என்று அனைவருக்கும் தெரியும் அதில் புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை. அதோ போகிறானே அவன் ரொம்ப கெட்டவன் என்பார்கள், உனக்கு எப்படி தெரியும் என்று கேட்ட என்னக்கு ரொம்ப தெரிஞ்சவர் ஒருத்தர் சொன்னார் என்று சொல்வார்கள் அது போல கருத்துகளுக்கு எல்லாம் பதில்கள் தரப்போவது இல்லை.....................

')) said...

கங்கை அமரனுடன் கண்ட இளையராசாவின் கச்சேரிகளின் இனிமை அவர் இல்லாது நடக்கும் தற்பொழுதைய கட்சேரிகள் காட்டிக்கொண்டு இருக்கிறது. மிகவும் திறமையானவர். என்ன வெங்கட்பிரபுவிக்கு அமைந்தது போல் அவருக்கும் நிறைய படங்கள் அமைந்து இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

')) said...

பொதுவாக அமுதவனின் வார்த்தைகளை பெரிதாக எடுத்துகொள்வது கிடையாது. இருப்பினும் இந்த தீஞ்சவாடை தாங்கமல் எழுதிவிட்டேன்...........

')) said...

பாபு உங்கள் கருத்தில் முரண்படுகிறேன், இராசாவை பிடிக்காமல் போக ஒரே ஒரு காரணம் தான் இருக்கலாம், அது இவ்வளவு நல்ல இசையை இவர் ஏன் கொடுக்கவேண்டும் என்ற பொறாமை மட்டுமாகவே இருக்கும். திரையிசை பாடலில் என்ன இரகம் உண்டோ அவ்வளவு இரகங்களிலும் இனிமையாக கொடுத்தாலும் சிலருக்கு பிடிக்காது. அவர்களுக்கு இராசாவின் இசைபிடிக்காமல் இல்லை, ஆனால் அவர்களுக்கு இராசாவைதான் பிடிக்காது என்று ஒத்துகொள்ள மாட்டார்கள்.

')) said...

பழுத்த மரம்தானே கல்லடி படும் ?அமுதவன் இப்படி கூறியிருப்பது ஆச்சரியமாய் இருக்கிறதே !