அங்காடிதெரு படத்தை பார்க்க ஆரம்பிக்கும் போதே இந்த படத்தை போல் எதோ பார்த்த நினைவாகவே இருந்தது. இசுபானிசு(Spanish) மொழியில் The Perfect Crime என்று நினைவுக்கு வந்தது.
இந்த படத்தை வசந்த பாலன் அப்படியே ஒன்றும் ஈ அடிச்சான் பிரத்தி எல்லாம் எடுக்கவில்லை. கதைகளம், மற்றும் மூன்றாம் தர நாடுகளில் வாழும் அடிமட்ட தெழிலாளிகள் எல்லா எந்த அளவிற்கு முதலாளிகளால் அடிமை படுத்தப்பட்டு அலைகழிக்கப்படுகிறார்கள் என்ற கருவை மட்டும் வைத்துக்கொண்டார்.
இன்னமும் துள்ளியமாக சொல்லவேண்டும் என்றால், துணிக்கடை, அதிலே ஒரு கொலை, கொலைக்கு பிறகு மன உளைச்சளால் பைத்தியமாக பிதற்றி திரியுதல், துணிக்கடைக்குள் உல்லாசமாக ஆடைகளை உடுத்திக்கொண்டு பாடல் பாடுதல், மற்றும் அதே அங்காடிதெருவில் ஒரு சிறு வியாபாரம் துவங்குதல் என்ற அடிப்படை கருவை மட்டும் வைத்துக்கொண்டார்.
இந்த சம்பவங்களை கதையில் வைத்துக்கொண்டு தமிழகத்து பாத்திரங்களும் இடங்களையும் புகுத்தி திரைக்கதை அமைத்துள்ளார். நாயகியின் தங்கை பாத்திரங்கள் வரை எதையுமே விட்டு வைக்கவில்லை. நல்ல கற்பனை மனிதருக்கு.
முதல் காட்சியில் அங்கே 25 ஆயிரம் அமெரிக்கன் டாலருக்கு விற்று காட்டுவான் நாயகன், தமிழில் 12 ஆயிரம் உரூபாய்க்கு விற்றுக்கொடுப்பான்.
தமிழில் காட்சிகளுக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு குள்ள உருவ பிச்சைகாரர் பாத்திரத்தை வைத்திருப்பார் பாலன். அது இந்த படத்தில் நாயகனை மிரட்டும் பெண்ணின் உருவ அமைப்பையும் விட்டு விடக்கூடாது என்று வைத்துக்கொண்டார் போலும்.
நாயகியின் தந்தை ஒன்றுக்கும் உதவாதவர் என்று மூல படத்தில் காட்டியதை போலே காட்டியும் உள்ளார். மூல படத்தில் நாயகியின் தந்தையை நாயகன் விளையாட்டு மைதானம் அழைத்து சென்றாலும் அங்கேயும் நடப்பது அறியா தூக்கம் தூங்குவார்.
நாயகியின் தங்கை நாயகனை பார்க்கும்போது 13 வயதான அவள் தான் கர்பமாக இருப்பதாக சொல்லும் வசனங்களுக்கு இங்கே பூப்பெய்தியதாக சொல்லியுள்ளார் பாலன்.
விற்பனையிலும் மட்டும் அல்ல பெண்களை கவரும் செயலும் தான் ஒரு வல்லவன் என்று நிரூபிக்கிம் நாயகன் கடையில் தான் அகப்பட்ட பெண்ணிடம் இருந்து தப்பிக்க படும் பாடுகளை பார்க்கும் போது மிகவும் பாவமாக இருக்கும். அந்த மூல படம் ஒரு நகைச்சுவை படம். ஆனால் தமிழிலோ உணர்கள் கொட்டும் படமாக ஆக்கியுள்ளார் வசந்த பாலன்.
இப்படி எத்தனையோ ஒற்றுமைகள் இருந்தாலும் இரண்டும் வெவ்வேறு படங்கள். அருமையாக அவரது கற்பனையை புகுத்தி உள்ளார்.
The Perfect Crimeமும் நல்ல படம் தான் ஆனால் வயத்து வந்தோருக்கான படம், நல்ல நகச்சுவை அந்த படத்தில். பார்த்து கருத்து சொல்லுங்கள்.
Tuesday, May 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
eppadi paarpathu.. enge cd kidaikum allathu netlaya...?
அவசியம் பார்க்க வேண்டும்.
குறித்து கொண்டேன்
தொடர்ந்து எழுதுங்கள்..
சூர்யா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, ஊக்கத்திற்கு மிக்க நன்றி.
அன்பின் நண்பர் அனானிக்கு இது இசுபானிசு மொழி படம் என்றதால் இணையத்தில் கிடைப்பது அரிது தான். எனக்கு ஒரு குறுந்தகடு கிடைத்தது பார்த்தேன், இந்த வரிசையில் அப்பாவி அம்மாவின் கதை ஒன்று அதே மொழியில் வந்தது Under the same moon என்று பெயர் அதுவும் அனேகமாக தமிழி வர வாய்ப்புகள் உண்டு. இந்தியர்களுக்கு பிடிக்கும் விதமாக மிகவும் அழகாகவும் அருமையாகவும் வந்திருக்கும் படத்தை யார் எப்படி எடுக்கிறார்கள் என்று பார்ப்போம்.
'Crimen ferpecto' என்பது தான் நீங்கள் சொல்லும் இச்பாநியோல் படம். அதனை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். டி வி டி யும் என்னிடம் உண்டு. அந்தப் படத்திற்கும் அங்காடித் தெருவுக்கும் எந்த ஒரு ஸ்நானப்ராப்தியும் கிடையாது.இரு கதைகளும் ஒரு வணிக ஸ்தாபனத்தில் நடப்பதை தவிர எந்த ஒரு தொடர்பும் கிடையாது. அது ஒரு கொலையை பற்றிய படம். இது மனித உறவுகளைப் பற்றிய படம். போகிற போக்கில் இப்படி கோப்பி அடிக்கப்பட்டது என்று எழுதி ஒரு உண்மையான படைப்பாளியை காயப்படுத்தும் வேலையே செய்யாதீர்கள். காபி என்றால், நந்தலாலாவை சொல்லலாம், ஜக்குபாயை சொல்லலாம். வசந்தபாலனே கூட சினிமா பரடிசோ கதையை எனக்கு பிடிக்காத 'வெய்யில்' திரைப்படத்தில் கொஞ்சம் சொருகி இருப்பார். எனினும், என்னைப் பொறுத்தவரை அங்காடி தெரு ஒரு சிறந்த படைப்பு.
நிலா முகிலன் எனது விமர்சனத்தில் தான் தெளிவாக சொன்னேனெ எப்படி கதையை அழகாக மாற்றி அமைத்துக்கொண்டுள்ளார் என்று. கதையை மாற்றி அமைத்தாலும் வசந்த பாலன் திரைகதையை அப்படியே பயன்படுத்தியுள்ளார். என்ன கதைகளம் வித்தியாசமாக இருப்பதால் நமக்கு பார்த்த உடன் தெரிவதில்லை. முன்னமே சொன்னது போல் இப்படி 1000 ஒற்றுமைகள் இருந்தாலும் இரண்டு வேறு படங்களே. அருமையாக மாற்றி அமைத்துள்ளார் அதுவும் அனைவரையும் கவரும்விதமாக. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
உங்கள் கருத்துக்கு நன்றி பனிமலர். இருந்தாலும், ஒரு ஐரோப்பிய படத்தில் ஒரு கதாநாயகி மழையில் நனைந்தபடி பாட்டு பாடுகிறாள் என்பதற்காக, இதயத்தை திருடாதே அந்த படத்தை பார்த்து சுட்டு எடுக்கப்பட்டது, 'ஆத்தாடி அம்மாடி' பாடல் போல ஒரு ஐரோப்பிய படத்தில் ஒரு கதாநாயகி மழையில் நனைந்தபடி பாடு பாடுகிறாள்' எனினும் மணிரத்னம் திறமையாக கதையை மாற்றி அமைத்துள்ளார் என்று எழுதுவது சரியா? அந்த குள்ள மனிதரின் பாத்திரபடைப்பு, அந்த விலைமகளின் மனதை கூறுவதற்காக அமைக்கப்பட்டது. அது போன்ற மனிதர்களை நாம் அன்றாடம் சென்னை ரங்கநாதன் தெருவில் பார்ப்பது தானே? அதை எப்படி நீங்கள் பெர்பெக்ட் கிரைம் படத்தின் கதாநாயகியுடன் தொடர்பு படுத்த முடியும்? வசந்தபாலன், அந்த படத்தை பார்த்து எல்லாம் திரைக்கதை எழுதவில்லை. மாற்றியும் எழுதவில்லை. சென்னை சரவணா ஸ்டோர்ஸ் கடையில் நடக்கும் அன்றாட அலுவல்களைத்தான் காட்சியாகவும் கதையாகவும் வைத்தார் என்பதே நான் சொல்ல விரும்புவது.
பெர்பெக்ட் கிரைம் படத்தின் கதை,
அந்த கடையில் இருக்கும் பிகர்களுடன் கூத்தடிக்கும் ஒருவன், ஜாலியாக இருக்கும் ஒருவன் ஒரே ஒரு அவலட்சணமான பெண்ணை மட்டும் கண்டுகொள்வதில்லை. அப்போது அவன் தெரியாத்தனமாய் செய்யும் ஒரு கொலையை அவள் பார்த்துவிட அவனை ப்ளாக்மெயில் செய்ய ஆரம்பிக்கிறாள்.
அங்காடி தெருவின் கதை.
கடையில் வேலை செய்ய வரும் ஒரு பெண்ணுக்கும் ஒரு ஆணுக்கும் வரும் காதல், கடையில் வேலை செய்பவர்களின் கஷ்டங்கள்.
இந்த இரண்டு கதைகளுக்குமே தொடர்பில்லாத பொது, எப்படி இரண்டு திரைகதைகளும் ஒன்றாக இருக்க முடியும்?
neenga enna adhi medhavi nu ninaippa.ellam padathulaiyum yaedhavadhu sayal irukkathan seiyum adhukkaga padaipalana kochai paduthathinga, ippadi vimarsanam enra peyarla.mudincha endha sayalum illma neenga padam edunga, adha nanga vimarsanam panra appo ungalukku puriyum.
neenga enna adhi medhavi nu ninaippa.ellam padathulaiyum yaedhavadhu sayal irukkathan seiyum adhukkaga padaipalana kochai paduthathinga, ippadi vimarsanam enra peyarla.mudincha endha sayalum illma neenga padam edunga, adha nanga vimarsanam panra appo ungalukku puriyum.
Post a Comment