Tuesday, November 27, 2012

இந்திய சுதந்திர போராட்டத்தை நாம் ஏன் எதிர்க்கிறோம் வெறுக்கிறோம்

இந்திய சுதந்திர போராட்டம் நடந்த அத்தனை காலமும் எந்த வகை போராட்டமாக இருந்தாலும் எக்கச்சக்கமான உயிர்களை பலி வாங்கிய பின்பு கிடைத்தது தான் இந்த இந்திய சுதந்திரம். குழந்தைகள் பெண்கள் என்றும் பாராமல் செனரல் இடைலெர் சுட்டுக்கொன்றதில் இருந்து, பாக்கிட்த்தானம் பிரிவினை வரை கணக்கில் அடங்கா உயிர்களை பலி வாங்கிய அந்த போராட்டத்தை ஏன் மக்கள் வருடம் தோரும் கொண்டாட வேண்டும்.

இத்தனை உயிர்களை கொன்ற களிப்பை கொண்டா தான் இனிப்பு வழங்குகிறார்களா.

இந்த தேசிய கொடியையும் இராணுவத்தையும் மட்டும் கொண்டு வருவதற்காக எத்தனை ஆயிரம் உயிர்களை பலியிடுவது.

ஆங்கிலேயன் ஆண்டபோது மட்டும் யார் இரணுவத்தில் இருந்தது. இப்போது இருக்கும் இதே மக்கள் தான். என்ன கட்டளை மட்டும் அவன் இட்டான், கடைசியில் மக்களை நசுக்குவது எப்பவும் நம்மவர்கள் தானே.

எத்தனை குறைகள் ஆங்கிலரின் ஆட்சியில் இருந்தாலும் எந்த ஒரு உயிருக்கும் பாதகம் இல்லாமல் அல்லவா இந்திய சுதந்திர போராட்டம் நடத்தி இருக்க வேண்டும். அதை விடுத்து, சும்மா வீட்டில் இருந்தவர்களை எல்லாம் தனது மயக்கும் பேச்சுக்கு மயங்க செய்து, வீதிக்கு வரவழைத்து போராட்டம் நடத்த வைத்த இந்த அரசியல் தலைவர்கள் எத்தனை கொடூர மனம் படைத்தவர்களாக இருந்து இருப்பார்கள்.

சாலியன் வாலாபாத்து படுகொலையில் தேசிய தலைவர்கள் ஒருவரும் சாகவில்லை. திருப்பூர் குமரன் இறந்த கூட்டத்தில் அவரை தவிர வேறு பெரிய தலைவர்கள் ஒருவரும் சாகவில்லை.

கப்பலோட்டிய தமிழர் சிதம்பரம் செக்கு இழுத்தார், சிறை அதிகாரிகளால் அடித்து துன்புறுத்தப்பட்டார். அவருடைய சொத்துகள் சூரையாடபட்டது. ஆனால் சுதந்திர போராட்டம் நடத்திய தேசிய தலைவர்கள் ஒருவரும் தங்கள் சொத்துகளை இழக்கவில்லை, செக்கும் இழுக்கவில்லை. மாறாக சிறையில் இருந்தபடி அடுத்தகட்ட போராட்டங்களை வகுத்தார்கள், தன் இந்தியாவின் கண்டுபிடிப்பு என்று புத்தகம் எழுதினார்கள். இப்படி இவர்களின் துன்பத்தில் ஏன் சுதந்திரம் வாங்கி இருக்க வேண்டும்.

இப்படி கொல்லபட்ட மக்களின் சார்பாக எத்தனையோ காரணங்களில் இந்திய சுதந்திரத்தையும், அதன் போராட்டங்களையும் வெறுப்பதாகவும், மறுப்பதாகவும் முதலில் எழுதட்டும், பதிவு செய்யட்டும், பிறகு ஈழ போராட்டத்தை பற்றிய உங்களது விமர்சனங்களை எழுதலாம்.

ஈழத்தையும், அதன் சுதந்திர போராட்டத்தையும் விமர்சிக்க நீங்கள் சொல்லும் அத்தனை காரணமும் எந்த ஒரு சுதந்திர போராட்டத்திற்கும் பொருந்தும்.