Monday, November 5, 2012

சாட்டை படமும் A Ron clark story படமும் திரைவிமர்சனம்

விச்சை தொலைக்காட்சியில் வரும் 7சி தொடரில் நாம் பார்த்து பழகிப்போன ஆசிரியரின் கண்ணியமான கண்டிப்பு.

ஒரு ஆசிரியரின் முயற்சி எந்த அளவிற்கு வீரியம் வாய்ந்தது என்று காட்டும் படம் தான் ஆங்கில படம் A Ron clark story.

முதலில் ஆங்கிலத்தின் கதையை பார்த்துவிடுவோம்.

கதை துவங்கும் போது ஆசிரியர் தான் வேலை பார்க்கும் பள்ளியில் இருந்து விலகுவதாக சொல்லி வெளியேறுவார். என்ன காரணம் என்று கேட்டதற்கு எனக்கு இன்னமும் சவாலாக இருக்கும் ஒரு பள்ளியை தேடி செல்ல போகிறேன் என்று சொல்வார்.

பிறகு நியூயார் நகரில் மிகவும் பின் தங்கிய பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் சென்று வேலை கேட்பார். தலைமை ஆசிரியரோ வேலை இல்லை என்று சொல்ல வீதிதளில் அலைந்து திரிந்து கடைசியாக ஒரு ஆசிரியர் உயிருக்கு பயந்து ஓடிய இடத்தை தனக்கு கொடுக்கும் படி கேட்பார்.

அந்த வகுப்பில் இருக்கும் பிள்ளைகளோ 7சியில் வரும் வால் பிள்ளைகளை போல் வால்தனம் செய்வார்கள். அந்த சின்னஞ் சிறு பிள்ளைகளை கவர்ந்து அவர்களை படிக்க வைத்துவிடவேண்டும் என்று ஆசிரியர் எடுக்கும் முயற்சிகளை எல்லாம் அந்த பிள்ளைகள் தவிடு பொடியாக்கும் இடங்களை மிகவும் அழகாகவும் அற்புதமாகவும் படமாக்கி இருப்பார்கள்.

அப்படி ஒரு நாள் ஒரு நிமிடம் மாணவர்களை கவர்ந்த அந்த ஆசிரியர், மாணவர்களை மகுடிக்கு மயங்கிய பாம்புகள் போல் இப்படி படியுங்கள் அப்படி படியுங்கள் என்று சொல்லும் எல்லாம் செய்யும் நல்ல பிள்ளைகளாக மாற்றம் கொள்ள வைப்பர்.

அவரது வகுப்பில் பிள்ளை பெற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கும் ஒரு பெண்ணின் படிப்பை பாதியில் நிறுத்த அவரது தாயார் நினைக்கையில் வீடு வரை சென்று வாதாடும் இடமாகட்டும், சமைக்க என்ற சிறுமி செய்யும் அலும்பு தாங்க முடியாமல் பள்ளியை விட்டு வெளியேறி ஊர் சுற்றி மனதை ஆற்றும் காட்சியாகட்டும், இப்படி எல்லா இடங்களிலும் அந்த ஆசிரியரின் பாத்திரம் மனதை அள்ளிக்கொண்டு செல்லும்.

கடைசியில் ஒன்றும் உருப்படாத வகுப்பு என்று இருந்த அந்த வகுப்பு அந்த வட்டாரத்திலே முதல் இடத்தில் அந்த வருடமே வரும்.

ஆங்கில படத்தில் உச்சம் ஆசிரியருக்கு தொற்று காய்ச்சல் வந்து பள்ளிக்கு வரக்கூடாது என்றாகிவிடும். அந்த வேளை பார்த்து தான் தேர்வும் பக்கத்தில் வர. மாணவர்களுக்கு எடுக்க வேண்டிய பாடங்களை படப்பதிவு செய்த்து வகுப்பு நடக்கும் நேரத்தில் மாணவர்களுகு படமாக ஓட்ட, ஆசிரியரே இல்லாத வகுப்பில் ஆசிரியர் நேரில் பாடம் நடத்தும் போது கவனிப்பதை போல் மாணவர்கள் கவனிப்பதையும் கேள்விகளு பதில் சொல்வதையும் தலைமை ஆசிரியர் பார்ப்பது போல் ஒரு காட்சி அமைத்து இருப்பார்கள் அருமையோ அருமை.

இப்படி எல்லாம் ஆங்கிலத்தில் வந்த படத்தை தான் மிகவும் அழக்காக இந்திய அதுவும் தமிழ் மசால பூசி அருமையாக தயாரித்து இருக்கிறார்கள்.

திரைக்கதையில் காட்டிய கவனத்தை இன்னமும் கதையிலும் காட்டி இருக்கலாம். காட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் சம்பவங்கள் இல்லை என்றது குறையே.

உதாரணத்திற்கு பழனி அறிவிடம் காதல் வேண்டாம் என்று சொல்லும் காட்சி மிகவும் செயற்கையாகவும் நாடகம் பார்க்கும் ஒரு உணர்வையும் கொண்டு வருகிறது. தம்பி இராமையா சண்டை போடும் இடங்கள் தவிர மற்ற காட்சிகள் அனேகமாக செயற்கையாக இருக்கிறது.

தலைமை ஆசிரியரை துணை தலைமை ஆசிரியர் வீடு புகுந்து தாக்கும் இடத்தில் என்ன தான் ஏழை ஆசிரியராக இருந்தாலும் வீடு புகுந்து அடிக்க ஒன்று நெருங்கிய சொந்தமாக இருக்க வேண்டும் இல்லை துணை தலைமை ஆசிரியர் சுத்த பொறுக்கியாக இருக்க வேண்டும். காலில் போடும் காலுறையின் மணம் வீச்சை கூட பொறுட்படுத்தாத அப்பாவி மனிதனாக காட்டிவிட்டு வீடு புகுந்து அடிப்பவராக காட்டும் காட்சி பயங்கர செயற்கை தனமாக இருக்கிறது.

அறிவழகி தமிழுக்கு கிடைத்து இருக்கும் அடுத்த அஞ்சலி. குரலிலும் சரி முகபாவங்களிலும் சரி அஞ்சலியை முதல் படத்தில் பார்த்ததை போல் இருக்கிறது. நான்றாக வருவார் என்று நம்புவோமாக.

இயற்பியல் ஆசிரியர் என்று பெயருக்கு மட்டும் சொல்கிறார்கள், இயற்பியலில் கொஞ்சம் சொல்லித்தருவது போல் காட்சிகள் அமைத்து இருந்தால் இன்னமும் பலமாக இருந்து இருக்கும்.

இப்படி ஆயிரம் குறைகள் சொன்னாலும் சாட்டை அழகாகவும் அருமையாகவும் அமைந்து இருக்கிறது. இன்னமும் இதை போல் மக்களுக்கு தேவையான படங்களை எடுக்கும் இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நமது நன்றியை தெரிவித்துக்கொள்வோம்.

0 comments: