Monday, November 19, 2012

இங்குலீசு விங்குலீசு - திரைவிமர்சனம்

ஆங்கிலம் எழுத பேச தெரியாதது என்னவோ ஒரு தேவகுத்தம் என்று ஆளாக்ளுக்கு இடித்துரைப்பதை இடித்து உரைத்து இருக்கிறது இந்த படம்.

படத்திற்கு கதை ஒற்றை வரிதான் என்றாலும் அதை மிகவும் அழகாக இந்திய பள்ளி, கடைதெரு, அமெரிக்க தூதகம், அமெரிக்கா, அமெரிக்க உணவு விடுதி, பேச்சு மொழி வகுப்பு என்று சுற்றி சுற்றி வளைய வருகிறது திரைக்கதை.

எவ்வளவு செய்தாலும் தனது குறையையே குத்திக்காட்ட வேண்டுமா என்று நாயகி மனதில் கொள்ளும் வசனங்கள் அருமை.

தனது பிள்ளைகள் முதல் அப்போது தான் பார்க்கும் வெளியாட்கள் வரை அனைவரும் ஒரே அடியாக இப்படி நடந்துகொள்வதை நினைத்து நோகும் காட்சிகள் அருமை. இதன் தாக்கத்தில் மகளின் ஆசிரியரிடம் மகளை பற்றி விசாரிக்கும் போது அவர் மத்த பாடங்களை பற்றி எல்லாம் சொல்லும் போது வெறுமனே கேட்டுவிட்டு ஆங்கிலம் என்று எதிர்பார்புடன் கேட்பதும் அவர் நல்லா படிக்கிறாள் என்று சொல்லும் பதிலுக்கு முகம் மலருவதும் அருமையான காட்சி அமைப்புகள்.

பெண் என்று வந்துவிட்டால் சமுதாயத்தில் ஆண்களின் அணுகுமுறைகளில் எவ்வளவு முரண்பாடுகள் உள்ளது என்று அருமையாக காட்டியுள்ளார்கள்.

அதே சமயத்தில் ஆங்கில ஆசிரியரை சீண்டிப்பார்க்க சந்தர்பம் கிடைத்த போதும், அதை தவிர்க்கும் படி நாயகி கூறும் காரணங்கள் அந்த பாத்திரத்திற்கு ஆண்கள் மேல் வெறுப்பு இல்லை என்று தெளிவாக காட்டுவதற்கா அனைத்து இருப்பது அருமை. பெண்களை பற்றிய செய்கைகள் வந்தாலே, அவர்களுக்கு ஆண்கள் என்றாலே பிட்டிக்காது என்று காட்டமுயலும் கூட்டத்தின் வாயை அடைக்க இந்த காட்சி போலும்.

இந்திய வகை கதைகள் படங்கள் அதுவும் பெண்கள் சம்பந்தபட்ட செய்கைகளாக இருந்தால் விதியை துணைக்கு அழைத்து நொந்துகொள்வது வழக்கம், இந்த அம்சம் படம் நெடுக்க அமைத்து இருப்பதை தவிர்த்து இருக்கலாம், குறிப்பாக கடைசி நிமிடத்தில் இலட்டு சிதறும் படி அமைத்து இருக்கும் காட்சிகள்.

இவ்வளவு நேரம் படம் சென்றதே தெரியாத அளவிற்கு திரைகதை அமைத்தற்கும், ஆண்களை சீண்டாமல் பெண்களின் மனப்போராட்டங்களை நினைத்தால் வெற்றிகொள்ளலாம் என்ன வயதாக ஆனாலும் சரி எந்த இடமாக இருந்தாலும் சரி என்று அருமையாக சொன்ன இயக்குனருக்கு பாராட்டுகளை சொல்வோம்.

இந்த படத்தின் கதையில் வாழ்ந்துகாட்டிய சிறீதேவிக்கு வாழ்த்துகள் என்ன அருமையான நடிப்பு. மகனின் காலில் அடிப்பட்ட நிலையில் கூட இல்லையே என்ற காட்சியில், கதையும், வசனமும், இயக்குனரும் சிறீதேவியும் போட்டி போடும் காட்சியில் மிஞ்சி நிற்பது சிறீதேவியே, வாழ்த்துகள். இந்த இயக்குனரிடம் இன்னும் அதிகம் எதிர்பாக்க வைத்துள்ளார்.

0 comments: