Thursday, November 15, 2012

இந்தியா தலையில் இன்னும் ஒரு குட்டு கொட்டியது இலங்கை - இந்தியா ஒரு துப்பு கெட்ட தேசம்

அமெரிக்க அதிபர் ஒபாமா தேர்தல் முடிந்து தனது முதல் சுற்றுப்பயணத்தில் பர்மா வருகிறார் என்ற செய்தி கசிந்ததும். மக்களாட்சியை மலர செய்வோம் என்று இலங்கையில் அமெரிக்கா கால்பதித்து விடுமோ என்ற பீதியில் சீனா அவசர அவசரமாக இலங்கையில் மிகவும் பாதுகாப்பாக உள்ள சிறையில் தமிழர்கள் புரட்சியில் இறங்கினார்கள் என்ற நாடகத்தை நடத்திமுடித்து இருக்கிறது.

இந்த கலவரத்தை பயன்படுத்தி அந்த சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து இந்தியர்களும் கொல்லப்பட்டார்கள் என்ற கசப்பான உண்மை வெளியே தெரியாது மறைத்துவிட்டார்கள் இலங்கையர்.

இலங்கை சிறையில் ஏன் இந்தியர்கள், கடலோரங்களில் மாட்டும் தமிழர்களை இந்த சிறையில் தானே வைத்து கொடுமைபடுத்தி கொல்கிறார்கள். அப்படி பிடித்து சென்றவர்கள் தான் இந்த கலவரத்தில் பலிகொடுக்கப்பட்டவர்கள்.

எப்படி இந்த கொடூரம் நிகழ்த்தப்பட்டது, சிங்களத்து மொழியிலே சொல்வதென்றால். "அங்கே இருந்த கலககாரர்களுக்கு துப்பாக்கி சுடத்தெரியாது. அப்படி சுடத்தெரியாத காரணத்தினால் இறந்தவர்களது எண்ணிக்கை 100ஐ மட்டும் தொட்டது. இல்லை என்றால் இழப்பு அதிகமாக இருக்கும்"

அப்போ புலிகள் என்று சொல்லிக்கொண்டு அப்பாவி மக்களை சிறை அடைத்து வைத்து கொடுமை படுத்துவதை சிங்களம் இந்த வாக்கியங்களில் உறுதி கூறுகிறது.

துப்பாக்கியை பயன்படுத்தக்கூட தெரியாத மக்கள் எப்படி ஆயுத கிடங்கை கைப்பற்றினார்கள். அது என்ன குரங்கு கையில் இருக்கும் தேங்காய மற்றவர் வந்து பறித்து செல்ல. இல்லை சின்ன பிள்ளையின் கையில் கொடுக்கப்பட்ட வடையா காக்கா வந்து கொத்திக்கொண்டு போக.

பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும். 3 ஆண்டுகள் உணவில்லாமல் துயிலில்லாமல் நலிந்து இருக்கும் மக்கள் சிறை அரண்கள் மீது ஏறி வீர வசனம் பேசியதாக படங்கள் வேறு. என்னே உங்கள் அறிவு.

ஐ நாவை ஏமாற்ற இந்த நாடகமா, அல்லது மியான்மர் வரும் அமெரிக்காவை ஏமாற்ற இந்த நாடகமா. கொஞ்சம் விட்டால் மிஞ்சி இருக்கும் பலகீனமாக கிடக்கும் முதியவர்கள் முதுகு நிறைய வெடிமருந்துகளை சுமந்து வந்து அதிபரை கொலை செய்ய வந்தார்கள் என்றும். அவர்கள் திட்டம் இட்டதை நேரில் பார்த்ததாக கருணாவும், அரசுக்கு துப்பு கிடைத்தது என்று இடக்குலசு தேவாவும் சொல்ல வைப்பார்கள் போலும்.

இத்தனை இந்தியர்கள் கொத்தாக கொன்று குவித்த செய்திகள் வந்தூம் கூட இந்தியா மியான்மரில் அமெரிக்கா வரும் போது எந்த இந்திய 5 நட்சத்திர உணவத்தில் இருந்து உணவு கொடுக்கும் ஒப்பந்தத்தை கொடுக்க வேண்டும் என்றும். இந்திய முதலாளிகளின் பர்மா முதலீடுகளை எப்படி பாதுக்காக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து பேசிக்கொண்டு இருக்கிறதே!!!!!!!!!!

இந்தியா எங்கே அமெரிக்கவுடன் இணைந்து இலங்கையில் மறுபடியும் கால்பதித்து விடுமோ என்று மியான்மரில் வியாபாரம் செய்வதோடு நிறுத்திக்கொள் இல்லை என்றால் இப்போது சிறையில் உள்ள இந்தியர்களை கொன்றது போல் நாளை எல்லையில் வந்து பாக்கிட்த்தானம் நாள்தோறும் பீரங்கி குண்டுகளை வீசுவதை போல் நாங்களும் வீசுவோம் என்று சொல்லாமல் சொல்லி முடித்து இருக்கிறது.

என்ன ஒரு அரை மணி நேரம் ஆகுமா இந்த சிங்களத்தின் வான் படையையும் , இராணுவத்தையும், கடற்படையையும் அழிக்க இந்தியாவிற்கு. அடுத்த அரை மணிக்கு எல்லாம் இலங்கையில் உள் இருக்கும் காவலர் படை நடவடிக்கையின்றி சரணடைய செய்துவிட்டு தனது கடற்படையை அங்கே நிறுத்திவிட்டு பிறகு பேச வேண்டும் தன்மானம் உள்ள நாடாக இருந்தால்.

ஆனால் இந்தியாவிற்கோ இந்திய முதலாளிகள் இலங்கையில் கட்டியுள்ள கட்டுமானங்களையும், மியான்மரில் அமெரிக்க அதிபரின் வருகையின் போது வங்கும் விருந்துகளை கவனிக்கும் ஒப்பந்தங்களும், மேலும் பர்மாவில் இது வரை போட்ட முதலீடுகளும் தான் முக்கியமாக தெரிகிறதே அன்றி தனது சாதாரண மக்களை பற்றி எந்த கவலையும் இந்தியாவிற்கு இல்லை.

இந்தை நன்கு உணர்ந்த சீனம், இலங்கையின் விரலால் இந்தியாவின் தலையில் குட்டுகிறது. இந்தியாவும் தலை குணிந்து குட்டு வாங்க்கொண்டு சிரிக்கிறது. என்ன தேசம், இந்த தேசத்திற்கு இராணுவம், வான்படை, கடற்படை. பேசாமல் எல்லோரையும் அரபு நாடுக்கு கூலி வேலைக்கு அனுப்புவோம் நாட்டிற்கு காசாவது வரும்.

இதில் அப்துல் கலாம் கனவு கண்டதை போல் 2020ல் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்று இளைஞர்களுகு கனவு வேறு. முதலில் நல்லரசு ஆக சொல்லுங்கள் பிறகு வல்லரசு ஆகுவோம்.

நேருவின் தலைமையிலும் இந்திராவின் தலைமையிலும் பாக்கிட்தானத்தை பந்தாடிய இந்திய முப்படையா இப்படி இலங்கையிடம் தொடை நடுங்கி நிற்கிறது, என்ன அவமானம்...................................

2 comments:

')) said...

இந்தியாவின் தலையில் இலங்கையும் கொட்டவில்லை இலங்கையின் தலையில் இந்தியாவும் கொட்டவில்லை. இரண்டும் சேர்ந்து தமிழர்கள் தலையில் தான் கொட்டுகிறார்கள். ஒரு பக்கம் ஈழத்தமிழர்கள் இன்னொரு பக்கம் மீனவ தமிழர்கள். சிங்களர்கள் இந்தோ ஆரியர்கள் அவர்கள் பெசும் மொழி இந்தோ ஆரிய மொழி குடும்பத்தை சார்ந்தது என்று தெறியாத்ததால் இந்தியாவை நம்பிக்கொண்டு இருகிறீர்கள் முடிந்தால் தனிந்து நின்று தமிழர்களாய் போரடுங்கள். தமிழர்களை சுடுவதர்கு இந்தியாவே பயிற்சி அளிக்கிறதே இன்னுமா விளங்கவில்லை உங்களுக்கு

')) said...

ஒரு சின்ன நாடு, சீனாவின் உதவியிலும் பாக்கிட்த்தானத்தின் உதவியிலும் இந்தியாவை இந்த பாடுபடுத்துகிறது. கிட்டத்தட்ட என்னடா செய்யமுடியும் என்று காவலர்களை சவாலுக்கு அழைக்கும் தெருபொறுக்கி போல் அல்லவா நடந்துகொள்கிறது. இந்தியாவும் படங்களில் தாதாக்களின் கால்களில் விழுந்து வணங்கும் காவல் துறை அதிகாரிகள் போல் தான் நடந்து காட்டுகிறது. எங்கேயோ இருக்கு ஐ நாவும் அதன் தலைமையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு மட்டும் இருந்தது என்று சொல்லும் அனைவரும் ஏன் இந்தியா அதைவிட மோசமாக நடந்துக்கொண்டது என்று சொல்வதில்லை.