Wednesday, August 26, 2009

தப்பினார் பிரபாகரன் பகுதி- 82 தினமணியில் இருந்து நீக்கப்பட்டது ஏன்?

இந்த வரலாற்று தொடரை தொடர்ந்து படித்து வருபவர்களின் ஆர்வத்தை அதிகம் தூண்டும் தலைப்பாக இத்த பகுதி கொண்டு இருந்ததாலும், தவிர தொடரின் தொடர்சியை அறியும் ஆவலும் உள்ளவர்கள் இந்த பகுதி தினமணியில் இல்லாதது பற்றிய ஒரு வித குழப்பத்தில் ஆழ்ந்திருக்க வேண்டும். எனக்கும் அப்படி தான் இருந்தது.

பிறகு அந்த பகுதியை கண்டுபிடித்து படிக்கையில், அப்படி என்ன தான் இந்த பகுதியில் இருக்கிறது என்று பார்க்கும் போது மேலோடமாய் எதுவும் தெரியவில்லை தான்.

பிறகு ஓர்ந்து பார்த்ததில் இரண்டு செய்திகள் மனதில் தோன்றியது.

1) பிரபாகரனை அழிக்க எண்ணி அவரது இல்லத்தை குறிபார்த்து குண்டு வீசி இராணுவம் அழித்தது என்ற செய்தியும்.


2) தனி நாடாக அமைக்கும் பணியாக தனி நாணயம் மற்றும் அரசு துறைகளை ஏற்படுத்தியதுமாக தகவல்களும் இந்த பகுதியில் இருந்து தான் காரணமாக இருக்கும் என்று மனதுக்கு படுகிறது.

3) இதையும் தவிர விபு அமைபினர், மற்ற சகோதரத்துவ அமைபினர் தடைசெய்தார்கள் என்றும் அதனை ஒட்டி சிங்கள இராணுவம் இனி தமிழர்களின் போராட்டத்தை இராணுவ முறையில் வெற்றிகொள்வது எளிது என்று எழுதியதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இந்த மூன்று செய்திகளில் முக்கியமான செய்தி, பிரபாகரனை அழிக்க எண்ணிய இராணுவம், அவரின் இல்லத்தை குறிவைத்து குண்டு வீசியது என்ற செய்திதான் முக்கியமாக குறிப்பாக எனக்கு படுகிறது. காரணம், இன்றைக்கு இந்தியாவில் புலிகளுக்கு எதிராக சொல்லப்படும் முக்கிய காரணம்(மற்றும் ஒரே காரணும் இது தான்), புலிகள் இராசீவின் கொலையை செய்தவர்கள் என்றதாகும். அப்படி பட்ட செய்தியை பலவீனப்படுத்தும் செய்தியாக் இந்த செய்தி அமைந்து இருப்பத்தால், இந்த பகுதியை தினமணி நீக்கி இருக்கவேண்டும்.

இரண்டாவது செய்தி, விபு தாக்குதல் அமைப்பு மட்டும் அல்ல ஆக்க பூர்வமாக அரசியலமைப்பு செய்கைகளும் மேற்கொண்டு வந்தார்கள் என்று இந்த தொடரில் முதல் முதலாக கிட்ட தட்ட 80 பகுதிகளுக்கு பிறகு தொடரின் ஆசிரியர் ஒப்புமை கொடுத்தது போல் அமைந்து இருந்தமைக்காக நீக்கப்பட்டிருக்கலாம்.

இந்த இரண்டாவது செய்தி, புலிகள் வெறும் பயங்கரவாதிகள் தான் என்று வாதாடும் அனைத்தையும் எதிர்க்கும் விதமாக உள்ளதாகும். அப்படி ஒரு செய்தி இந்திய செய்தி இதழில் வருவதை இந்திய அரசு தவிர்க நினைத்து இருக்கும் போலும். அதனால் தந்த நெருக்கடியில் தினமணி இந்த பகுதியை நீக்கி இருக்கவேண்டும்.

தமிழகத்தில் ஒரு வழக்கு உண்டு, ஒரு பொய்யை மறைக்க பிறகு 100 பொய்களை சொல்ல வேண்டி இருக்கும் என்று. அப்படி இந்திய அரசு இன்னமும் எத்தணை ஆயிரம் பொய்களை அள்ளிவைக்க போகின்றதோ.......

1 comments:

')) said...

//தமிழகத்தில் ஒரு வழக்கு உண்டு, ஒரு பொய்யை மறைக்க பிறகு 100 பொய்களை சொல்ல வேண்டி இருக்கும் என்று. அப்படி இந்திய அரசு இன்னமும் எத்தணை ஆயிரம் பொய்களை அள்ளிவைக்க போகின்றதோ.......//

பொய்சொல்லக்கூடாது பாப்பாவென பாடிய பாரதி பிறந்த மண் எங்களைக் கொல்ல எத்தனை பொய் சொன்னது....

சாந்தி