Tuesday, June 3, 2008

இனி கர்னாடகத்தில் என்ன நடக்கும். ( உண்மை இந்தியர்கள் சொல்கிறார்கள் )




முதலில் தேர்தலில் வெற்றி பெற்ற எடியூரப்பா அவர்களுக்கும் அவரது கட்சிக்கும் நமது பாராட்டுகளை தெரிவித்து கொள்வோம்.

பொதுவாக ஒரு புதிய கட்சி ஆட்சியேரும் போது இன்ன இன்ன நடக்கும் என்று அந்த கட்சியின் சார்பிலும், இன்ன இன்ன நடக்கும் என்று மற்றவர்களும் அவர்களை பற்றி செல்வது வழமை. அப்படி இன்ன இன்ன நடக்கும் என்று எடியூரப்பாவின் கட்சியும் மற்ற கட்சிகளும் இன்னமும் கருத்துகள் சொல்லாமல் இருப்பது ஒரு மர்மகவே இருக்கும் சூழலில். தமிழக பதிவர்கள் சிலர் இனிமேல் தமிழகத்திலே பாலாரும் தேனாரும் ஓடும் என்றும். தென்னகத்துகே இனிமேல் நாட்டின் ஒற்றுமையையும் ஒருமை பாட்டையும் கற்பிக்கும் விதமாக அவர்களது ஆட்சி அமையும் என்றும் கூட அவர்கள் சொல்ல தவறவில்லை.

இவர்களது நம்பிக்கை சரிதானதா, இல்லை இப்படி ஒன்று நடக்கவேண்டும் என்று தான் அவர்கள ஆசை படுகிறார்களா என்றாலும் இல்லை என்ற முடிவுக்குத்தான் நாம் வரவேண்டி இருக்கும். காரணம் இந்த கட்சி எப்போதும் எங்கும் தேர்தலில் குதிக்கும் முன்பும் சரி, தனது இடத்தை தக்கவைத்து கொள்ளவும் தனது பக்கம் இருக்கும் ஆதரவு எண்ணம் விலகி போகாமல் இருக்கவேண்டி இவர்கள் நிகழ்தும் செயல்களை கொஞ்சம் திரும்பி பார்த்தால் தெரியும்.

பாசகா துவங்கிய நாள் தொட்டு அவர்களது நடவடிக்கை இப்படி தான் இருக்கிறது. முதலில் ஒரு தீயை கொளுத்துவது பிறகு அந்த வெப்பத்தில் ஆதரவு திரட்டுவது அவர்களது வழமை. முதலில் கட்சி துவங்கிய நாட்களில், நாடு முழுவதும் அவர்களுக்கு ஆதரவு திரட்டும் எண்ணத்தில் தேரோட்டம் ஒன்றை இந்தியா முழுவது நடத்தினார்கள். அந்த தேரோட்டத்தில் முழங்கிய முழக்கங்களை கவனிக்க வேண்டும். இந்தியாவில் மறுபடியும் இராம ஆட்சியை குடிகொள்ள செய்வோம் என்று துவங்கிய பயணம் பின்னர் பாபரின் மசூதியை தூசியாக்கியதில் சென்று முடிந்தது.
அப்படி இடிக்கப்பட்ட செயலுக்கு இது வரையில் ஒரு நீதியைதான் கற்பித்தார்களே தவிர அது தவறு என்று இதுவரையில் ஒருவரும் அந்த கட்சியை சேர்ந்தவர்களோ அல்லது அவர்களது அபிமானிகளோ சொன்னதாக தெரியவில்லை. மாறாக, நந்தி கிராமம் கலவரத்தில் பாதிக்கபட்டமக்களுக்காக கண்ணீர் விட்டு அழும் அந்த தமிழக பெண்மணியை குமுதம் இணைய தளத்தில் பார்க்க நேர்ந்தது. பிருந்தா கரத்து அவர்களின் கேள்விகள் ஒன்றுக்கு கூட பதில அளிக்க இல்லை, மாறாக அவரிடம் வாதாடி கண்ணீர் விட்டார். அப்போது கடைசி விவாதமாக கேட்டார் ஆயிரகணக்கில் மக்களை கொன்று குவித்துவிட்டு இப்படி 20 பேருக்காக இப்படி ஒரு நீலி கண்ணீர் வடிக்கலாமா என்ற கேள்விக்கு, இந்த 20 பேரை மட்டும் பேசுங்கள் என்று பேசிச்சென்றார் அந்த பாசகா கட்சி நிர்வாகி பெண்.
இப்படி அவர்களின் பாசிச கொள்கைகளையும் கொலைகளையும், தந்திர , பிரித்தாளும் உத்திகளையும் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். எண்ணிலா உதாரணங்களும் சம்பவங்களும் தான் மிஞ்சுமே தவிர அவர்களை பற்றி ஒரு நல்ல செய்தியும் கிடைக்கப்போவதில்லை.
இப்படி எல்லாம் அவர்கள் நடந்துகொள்ள காரணம் என்ன, அவர்களது நோக்கம் தான் என்ன. அவர்களது அபிமானிகள் எழுதுவது போல் அவர்கள் நாட்டுப்பற்றும் நாட்டின் முன்னேற்றதிலும் அக்கறை கொண்டவர்களா என்றால் இல்லவே இல்லை. இதை 100% நிரூபிக்கமுடியும். இதற்காக கடவுளையோ அல்லது அடுத்த உலக மனிதனையோ நாடவேண்டியதில்லை. அவர்களது சித்தாந்தகளை பார்த்தாலே தெளிவாக தெரியும்.

ஒரு நாட்டை ஒரு குடும்பத்துடன் ஒப்பிட்டு பார்க்கலாம். அப்படி பார்க்கையில் குடும்ப்பத்தில் வளர்ந்தவர்களுக்கு கொடுக்கும் முன்னுரிமையை விட வயதில் குறைந்தவருக்கும். இன்னமும் கவனிப்பு தேவை படும் என்று இருப்பருக்கும் முன்னுரிமை அளித்து பெற்றோர் கவனிப்பதையும். பெற்றோர் அளவுக்கு வளர்ந்துவிட்ட பிள்ளைகளும் அவர்களுக்கு நிகராக் இவர்களை கவனிப்பதையும் எல்லோர் குடும்பத்திலும் பார்க்க முடியும். அனைத்து குடும்பங்களிலும் இப்படி தான் நடக்கின்றது எந்த நாடாக இருந்தாலும் இப்படி தான் குடும்பங்கள் வாழ்கின்றது. இதற்கு மனித குலத்தில் விதி விலக்கு இல்லை, காட்டவும் முடியாது.

குடும்பத்தில் இளையவர்களுக்கு கொடுக்கும் முன்னுரிமையால், வளர்ந்விட்ட பெரியவர்களுக்கு அதுவும் திருமணம் ஆன பெரியவர்களுக்கு என்ன பாதிப்பு வந்துவிட போகிறது. இங்கே இளைவர்களுக்கு பாகம் பிரித்து கொடுப்படவில்லை. மாறாக அவர்களுக்கு என்று முன்னுரிமை கொடுத்து அன்றாட வாழ்க்கையில் தேவைபடும் உணவு, உடை, கல்விக்கு தேவைபடுவன என்று அவர்களது தேவைகளை நேரத்திற்கு தகுந்தார் போல் பெற்றோர் கொடுப்பது வழமை. அப்படி ஒரு நெருக்கடி கால கட்டங்கள் வரும் போதெல்லாம் வளர்ந்துவிட்டவர்கள், தனது தேவைகளை தானே முன்வந்து விட்டுக்கொடுப்பதை பெருமையாகவும், அது அவர்களது கடமையாகவும் கருதுவார்கள். எல்லோர் வீட்டிலும் இப்படி தான், அது ஏழையாக இருந்தாலும் சரி, பெரும் பொருளாராக இருந்தாலும் சரி.

இப்படி தான் காலம் காலமாக குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றது. கணவனுக்காக மனைவியும், மனைவிக்காக கணவனும் விட்டுக்கொடுத்து வாழ்வது தான் வாழ்க்கை. பிறகு குழந்தை என்று ஆன பிறகு பெற்றோர்களது அனைத்தும் பிள்ளைகளுக்கு என்று விட்டுக்கொடுத்து வாழ்வை எடுத்து சொல்ல தனியாக வார்த்தைகள் தேவை இல்லை.

இப்படி வளர்ந்த பிள்ளை ஒன்று வீட்டின் தேவைகளை பற்றி எல்லாம் எனக்கு கவலைகளும் இல்லை அக்கறையும் இல்லை. எனது சொகுசும் வாழ்க்கையும் தான் முக்கியம். இதனால் பெற்றோரோ உடன் பிறந்தவர்களோ பாதிப்புக்குள்ளானாலும் சரி அழிந்தாலும் சரி என்று அக்கிரமம் செய்கின்றான் என்று சொன்னால் அவனை பற்றி பார்க்கும் மக்கள் என்ன நினைப்பார்கள். ஆகா அவனது தேவையை நிறவேற்றி கொண்டான் என்றா பாராட்டுவோம், இல்லை அட பாவி பெற்றவர்கள் என்று பாராமல் உடன் பிறந்தவர்கள் என்றும் பாராமல் இப்படி கொடூரம் விளைவிக்கிறானே இவனெல்லாம் மனித பிறவிதானா என்றல்லவா சொல்வோம்.

அல்லது இளையவர்களுக்கு கொடுக்கும் இந்த முன்னுரிமைகளில் ஒருவன் பொறாமை குணம் கொண்டு இளையவர்களுக்கு அந்த முன்னுரிமைகளை கிடைக்காமல் செய்ய மறைமுகமாக என்ன என்ன சதி வேலைகளை செய்யமுடியுமோ அத்தனை சதிவேலைகளையும் திரைமறைவில் என்ன செய்யமுடியுமோ அவ்வளவை செய்துமுடித்து. பெற்றோரிடமும் உடன் பிறந்தோரிடமும் ஒன்றும் அறியாதது போல் நாடகமாடுபவனை என்ன என்று சொல்வோம் நயவஞ்சகம் புரிகிறானே என்று தான் சொல்வோமே தவிர அவனை இந்த செயலுக்காக அறிவாளி என்று யாரும் சொல்லப்போவது இல்லை.

இந்த குடும்பத்தை நாடாகவும், இளையவர்கள் ,வறியவர், வசதியற்றோர் மற்றும் சிறுபான்மையினர். வளர்ந்தவர்கள் இவர்களை தவிர மற்றவர்கள். இந்தியாவின் எந்த பகுதி எடுத்தாலும் இந்த சதவிகிதம் ஒரே அமைபில் இருப்பதை காணமுடியும்.

சிறுபான்மையினர்கள் தங்களுக்கு என்று ஒரு அமைபினை அமைத்து தங்களது தேவைகளை பெற்றுக்கொள்ள நினைப்பது சரி. ஏன் என்றால் இங்கு குடும்பம் என்ற நாட்டில் தாயும் தந்தையும் இல்லை, சிறியவர்களின் தேவைகளை பார்த்து எடுத்துகொடுக்க. அதனால் அவர்களுக்கு ஒரு அமைப்பு தேவைபடுகின்றது சரி.

ஆனால் இதே இந்த வளர்த பெரியவர்கள் தங்களுக்கு என்று இருப்பது போக, எளியவர்களுக்கும் வறியவர்களுக்கும் கொடுத்துகொண்டு இருப்பதை பிடுங்கி எங்களுக்கே கொடுங்கள் என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தி அது நாட்டையும், நாட்டின் ஒருமைபாட்டையும் கட்டிக்காக்க வந்த ஒரு அமைப்பு என்று சொன்னால் எப்படி இருக்கும். அப்படி இருக்கிறது இந்த பாசகாவின் சித்தாந்தம். இதிலே அந்த மாநிலத்தில் மட்டும் இல்லை அண்டை மாநிலங்களிலும் பாலாறும் தேனாறும் ஓடும் என்று சொன்னால் எப்படி இருக்கும்.

ஒரு தாய் வயிற்று பிள்ளைகளுக்குள் பிரிவினை விளைவிப்பவன் நல்லவனாக இருக்க முடியாது. அதேபோல் ஒரு நாட்டின் மக்களுக்குள் பிரிவினை உண்டாக்குவோன் மட்டும் எப்படி நல்லவனாக இருக்கமுடியும். அப்படி உருவாக்கும் கட்சிமட்டும் எப்படி நல்ல கட்சியாக இருக்கமுடியும். இப்படி ஒற்றுமை என்ற வார்த்தைக்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லாத ஒரு கட்சியின் தலைவர்கள் எப்படி நாட்டின் ஒற்றுமையை வளர்த்தெடுக்க முடியும். இதை இவர்கள் தேன் தடவிய வார்த்தைகளில் சென்னாலும் பின்னால் இருக்கும் உண்மைகள் தெரியாமல் இல்லை. இதிலே தேனாறும் பாலாறும் எங்கே வரும். வேண்டுமென்றால் பிரிவினை ஆறு வேண்டுமானால் ஓட வாய்பு இருக்கிறது. சட்டியில் இருப்பது தான் அகப்பையில் வரும்.

பாசகாவின் தோற்றத்தையும் அதன் இயல்பையையும் பார்த்தோம், இபோது கர்னாடகாவின் வருங்காலத்தை பார்ப்போம்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைபடுத்த மறுப்பது. கன்னடத்தில் இருந்துதான் தமிழ் பிறந்தது என்று கதை திரிப்பது. தமிழகத்தில் மனிதன் குடிக்ககூட தண்ணீர் இல்லை என்று சொன்னால் குடகு மலையில் பல அரிய மிருகங்கள் குடிக்க தண்ணீர் இல்லாத காரணத்தால் தண்ணீர் கொடுக்க இயலாது என்று உச்ச நீதிமன்றத்திடமே சொல்வது. என்று கடந்த 15 ஆண்டு காலமாக ஒரு பிரிவினைவாத மா நிலமாக திகழ்ந்து வருவது அனைவரும் அறிவதே.

இப்படி சமீபத்தில் ஒக்கேனக்கல் நீரை குடி நீராக பயன் பெற வேண்டி திட்டங்களை தீட்டி அமல் படுத்தும் வேளையில் இதே எடியூரப்பா தலைமையில் ஒரு பிரிவினை கூட்டம் அரக்த்தணம் புரிந்ததை நாடே அறியும் அதில் எந்த கேள்வியும் இல்லை. ஆனால் இன்றைக்கு பெருன்பான்மை பெற்ற கட்சியாக வந்ததினால் இவர் இனி தமிழகத்துக்கு தேனாறும் பாலாறும் ஓடவிடப்போகிறார் என்று பரப்புரை வேறு. பொய் சொன்னால் மக்கள் கேட்ப்பார்கள் என்பதற்காக இப்படியா பொய் சொல்வது. எப்படி ஒரு அரக்க்க கூட்டத்தை கூட்டிவந்து ஒக்கேணக்கலில் புரிந்த காளித்தனத்தை இந்தியம் என்று சொல்கிறார்களா, அல்லது தமிழ் படமும், தமிழர்களும் வாழும் இடங்களுக்கு மிரட்டல் விட்ட காளித்தனத்தை இந்தியம் என்று சொல்கிறார்களா, அல்லது காவிரியில் இவ்வளவு தண்ணீர் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொன்ன பிறகும் முடியாது, முடிந்ததை பார் என்ற சொன்ன காளித்தனத்தை சொல்வதா.

இனி என்ன மேலும் நடக்கும் அங்கே, எப்போது சமயம் கிடைக்கும் இங்கே இருக்கும் தமிழர்களை அழித்தொழிக்கலாம் என்று இருந்க்கிற கூட்டதிற்கு எடியூரப்பபா ஒரு கூட்டம் கூட்டுவார். பிறகு ஒரு இரயிலையோ அல்லது ஒரு பேருந்தையோ கொளுத்துவார். பிறகு தமிழர்கள் இருக்கும் அனைத்து இடங்களுக்கும் கொய்சாலா படையுடன் ஆட்கள் குவிக்கப்படுவர். பின் வயிற்றில் இருக்கும் குழந்தை முதல் வயதான திருப்பி அடிக்க வலுவில்லாத தமிழர்களை கொளுத்திவிட்டு அவர்களது உடமைகளை சூரையாடிவிட்டு. ஆங்காங்கே இருக்கும் ரொட்டி சுடும் காளவாயில் மனிதர்களை சுட்டெடுத்து உச்ச நீதிமன்றம் வரை சென்று காவலர்களை அழைத்து சென்று சாட்சி சொல்ல வைப்பார்.

இந்த சம்பவத்திற்கு விபத்து என்று பெயர் சூட்டுவார், குடியரசு தலைவரும், பிரதமரும் அழைத்தால் அவரது அலைபேசி வேலை செய்யாதிருந்ததாகவும். கலவரத்தில் தொலை பேசியை தமிழர்கள் தாக்கி அழித்துவிட்டதாகவும் காரணம் சொல்வார். அத்துடன் நிற்பாரா, இவர்களின் அடி உதைக்கு பயந்து கோசூர் வரை தப்பியோடியர்வர்களை எல்லையில் தடுத்து நிறுத்தி வண்டியுடன் கொளுத்தி வன்முறை என்று ஒரு மாதகாலம் கலவரம் பாதிக்கும். அந்த ஒரு மாதகாலத்தில் மிச்சம் மீதி இருக்கும் தமிழர்களை எல்லாம் கொளுத்திவிட்டு. இனி எரிக்க யாரும் இல்லை என்று ஆன பிறகு, கலவரம் கட்டுகுள் அடங்க ஒரு மாதகாலம் ஆகிவிட்டது என்று எழுத்துமூலம் உச்ச நீதிமன்றத்திற்கு தெரியபடுத்துவார்.

வழக்கு நடத்தும் வழக்குரைஞர் 3 நாட்க்கள் ஆனது என்று சொல்லும் போது நம்பிய நீங்க 30 நாள் ஆனது என்று சொன்னாலும் நம்பித்தான் ஆக வேண்டும் அப்படி இல்லை என்றால் உங்களை தேச துரோகி என்று தான் நாங்கள் சொல்ல வேண்டி வரும் என்று சொல்வார்கள். அப்படி ஒரு கருத்தாக்கத்தை மா நில தாளிக்கையிலும் இன்னமும் என்ன என்ன பரப்பு சாதனங்கள் இருக்கின்றதோ அத்தனையும் செய்வார். தனது மா நிலத்துக்கு என்று ஒரு தனிகொடி கொண்டுள்ளதை போல் ஒரு தனி இராணுவத்தையும் தோற்றுவிப்பார்

இப்படி நடந்ததை மக்களிடன் சென்று, உங்களின் சொத்துக்களை இத்தனை காலம் சம்பளம் என்ற பெயரில் கொண்டு சென்ற தமிழர்களை தண்டித்தது தவறா?? இத்தனை காலம் உங்கள் திரையருங்குகளில் கன்னட படம் பார்க்க மாட்டோம் என்று அவர்களது படங்களை பார்த்து நமது மொழியை மதிக்காத தமிழர்களை கொளுத்தியது தவறா?? இப்படி மக்களின் முன் இன்னமும் ஒரு 5 ஆண்டு காலம் கழித்து போட்டியிட்டு வெற்றியும் பெறுவார். அப்போது வேறு யாரும் ஒரு முதியவரை பிரதம வேட்பாளராக அறிவித்து கட்சியின் தெற்கு சோதனை மையம் கர்னாடகம் என்றும். சோதனை வித்தகர் எடியூரப்பா என்று துக்களக் தாளிக்கை இன்னமும் வந்து கொண்டிருப்பதை கொண்டாட தமிழகம் அழைக்க பெறுவார். அப்போது அவர் வந்து பேசி செல்ல இந்த அனைத்து இந்தியர்களும் சென்று கேட்டு வந்து பதிவிடுவார்கள்.

பாலாறும் தேனாறும் தான் ஓடும் பாருங்கள், இன்றைக்கு சிறுபான்மையினரை பிடிக்கவில்லை கொளுத்துகிறார்கள். நாளை கொளுத்த ஆள் இல்லை என்றால் பிறகு உங்களையும் கொளுத்துவார்கள் அந்த தீவெட்டி கட்சியினர் பார்த்து கவனமாக இருங்கள் தேனாறும் பாலாறும் நண்பரே.

23 comments:

Anonymous said...

கீ.வீரமணி வயிதெரிச்சலில் பேசுவது போல் இருக்கிறது இந்த கட்டுரை.. நீங்கள் சொல்வது பா.ஜ.க விற்கு மட்டுமல்லாமல் ஏனய அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும்..

//பெண்மணியை குமுதம் இணைய தளத்தில் பார்க்க நேர்ந்தது. பிருந்தா கரத்து அவர்களின் கேள்விகள் ஒன்றுக்கு கூட பதில அளிக்க இல்லை, மாறாக அவரிடம் வாதாடி கண்ணீர் விட்டார். //

20 என்றாலும் 2000 என்றாலும் பாசிச அனுகுமுறைதான் பிரச்சனை.. என்னை பொருத்தமட்டில் இரு கட்சிகளின் நிலையும் கண்டிக்கதக்கது.

// இன்றைக்கு சிறுபான்மையினரை பிடிக்கவில்லை கொளுத்துகிறார்கள். நாளை கொளுத்த ஆள் இல்லை என்றால் பிறகு உங்களையும் கொளுத்துவார்கள் அந்த தீவெட்டி கட்சியினர் பார்த்து கவனமாக இருங்கள் தேனாறும் பாலாறும் நண்பரே.//

இந்த வரிகள் 1984 சீக்கிய கலவரத்துக்கும், 2007 நந்திகிராமிற்கும் மிகவும் பொருந்தும்..

')) said...

உண்மை இந்தியர்கள் எல்லோரும் சொல்வார்கள் 'இதுதான் உண்மை' என்று.

')) said...

வாங்க பரத், நந்தி கிராம மக்களுக்காக அழும் பாசகா குசராத்து மக்களுக்கு வருத்தம் கூட தெரிவிக்க மறுப்பது ஏன் என்று விளக்கம் சொல்ல முடியுமா. அப்போ குசராத்தில் குலையுண்ட மக்கள் எல்லாம் மக்கள் இல்லையா. மக்களுக்குள் பிரிவினையை வளர்த்து எடுக்க ஒரு இயக்கம் தேவையா என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள் பரத். அறிந்து கொள்ள ஆவலாக உள்ளோம்.

')) said...

வாங்க சிபி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

')) said...

// ஆயிரகணக்கில் மக்களை கொன்று குவித்துவிட்டு இப்படி 20 பேருக்காக இப்படி ஒரு நீலி கண்ணீர் வடிக்கலாமா என்ற கேள்விக்கு, இந்த 20 பேரை மட்டும் பேசுங்கள் என்று பேசிச்சென்றார்///

பதில் சொல்ல முடியாது அவுங்களால், மனசாட்சி என்பதும் கிடையாது!

Anonymous said...

நண்பரே உங்கள் உணர்ச்சி மதிக்கத்தக்கது. அதற்காக பாலாறு தேனாறை ஏன் இப்படி காய்ச்சி எடுக்கிறீர்கள்.

http://uraiyurkaran.blogspot.com/2008/05/blog-post_27.html

இதையும் பாருங்கள். பாசகா-வின் பாசத்தில் தமிழக மக்கள வறுத்தெடுக்கப்போவதைதான் இவர் இப்படிக் கூறுகிறார்.

வெத்தலையுடன் காத்திருங்கள் என்று.

உங்கள் துணிச்சலான இந்தப்பதிவை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. தேசம் தேசம் என்று இந்திய மக்களிடம் காவித் திரியும் காவிக் கூட்டம் அங்கன மட்டும் கன்னட வெறியூட்டி பெற்ற ஓட்டுக்கள் எத்தனை நாளைக்குத் தாங்கும் பார்க்கலாம்.

-வெற்றலையுடன் காத்திருக்கும் சுண்ணாம்பு தமிழன்.

')) said...

வாங்க அனானி, என் மேல் ஏன் இந்த காழ்ப்பு. நான் என்ன 3000 கொலைகளை நிகழ்த்திவிட்டு அது பற்றி எல்லாம் பேசக்கூடாது. அப்படி கேட்டால் நீ நாட்டு துரோகி என்றா சொன்னேன்.

')) said...

குசும்பன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

')) said...

வாங்க சுண்ணாம்பு தமிழன், கையில் சுண்ணாம்புடன் இலவு காத்த கிளியாய் காத்துகிடக்கவேண்டியது தான் போங்கள்.

Anonymous said...

//வாங்க பரத், நந்தி கிராம மக்களுக்காக அழும் பாசகா குசராத்து மக்களுக்கு வருத்தம் கூட தெரிவிக்க மறுப்பது ஏன் என்று விளக்கம் சொல்ல முடியுமா. அப்போ குசராத்தில் குலையுண்ட மக்கள் எல்லாம் மக்கள் இல்லையா. மக்களுக்குள் பிரிவினையை வளர்த்து எடுக்க ஒரு இயக்கம் தேவையா என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள் பரத். அறிந்து கொள்ள ஆவலாக உள்ளோம்.//

தயவுசெய்து என்னுடய பின்னுட்டத்தை ஒழுங்காக படிக்கவும்.. நான் பா.ஜ.கவிற்காக வாதாடவில்லை.. எல்லா கட்சியினரும் ஒரே குட்டயில் ஊரிய மட்டை என்பது என் கருத்து.. அந்தந்த காலகட்டத்தில் வில்லன்களாக இருந்திருக்கிறார்கள். இதை படித்துப்பார்த்துவிட்டு சொல்லுங்கள்..

http://www.charuonline.com/oldarticls/thi1.html

')) said...

பரத்,
நீங்கள் சொல்வதை தான் நானும் சொல்கிறேன் ஓர்ந்து பாருங்கள். உங்களது கருத்தை இல்லை என்று நான் சொல்லவே இல்லையே. அதே வேளையில் இவர்கள் இப்படி எல்லாம் நடக்க மாட்டார்கள் என்று உறுதிபட சொல்ல முடியாது. பாசகா நடுவண்னரசாக இருந்த போது கார்கில் சமர் இருந்தது, அப்போது தடா சட்டம் இருந்தது . இருந்தும் அவர்கள் தீவிரவாதம் கட்டுகுள் வரவில்லை என்று தான் சொன்னார்கள்.
குசராத்து மா நிலத்தில் ஒரு கலவரம் தேவைபட்டது அப்படி நடந்ததற்கு ஒரு நீதியும் தேவைப்படது. தெரியாமல் தான் கேட்கிறேன், ஒரு மா நிலத்திம் முதல்வர் 3 நாட்க்கள் வரை ஒரு கலவரத்தை அடக்க முடியவில்லை. 3000 கொலைகள் கட்டுகுள் அடங்குவதற்குள் நடந்து என்று நீலிக்கண்ணீருடன் நடுவண்னரசுக்கு விளக்கம் கொடுத்த சில ஆண்டுகளில் அவர்கள் எப்படி எல்லாம் திட்டமிட்டார்கள் என்று வெளியான காணொலியை பற்றி கரண் தப்பார் கேட்டதற்கு ஏன் எழுந்து ஓடினார். அப்படி என்ன கேட்டார், அந்த சம்பவம் நடந்தற்கு ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லையே என்று கேட்டதற்கு ஓட வேண்டிய அவசியன் என்ன என்று புரியாமல் இல்லை.
முதலில் கட்சியை அறிமுகம் ஆன போது மக்களை சென்றடைய ஒரு தேரோட்டம். இப்படி ஒரு பிரிவினை வாதத்தையே கொள்கையாகவும் செயலாகவும் கொண்ட இரு கட்சியின் ஆட்சியில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். அதுவும் எப்போது சாக்கு கிடைக்கும் கொளுத்தலாம் என்று மண்ணென்னையும் கையுமாக அலையும் மா நிலத்தில். பற்றி எரியும் கர்னாடக தீயில் மேலும் எண்ணையை ஊற்றி அதில் தமிழர்களை கொளுத்துவதும், பின் இனி வெளிமா நிலத்தவர்கள் யாரும் அண்டமுடியாத ஒரு அன்னிய பூமியாக மாற்றுவார் என்பதில் எனக்கு எள்ளவும் சந்தேகம் இல்லை பரத். நீங்களும் இதை தான் சொல்கிறீர்கள். என்ன பேராய கட்சி வந்திருந்தாலும் என்றும் சொல்கிறீர்கள். அவர்கள் இப்படி எல்லாம் செய்வார்கள் என்று சொல்ல ஒரு முன்னுதாரணம் இல்லை. ஆனால் இவர்களுக்கு கட்சியின் தோறமே பிரிவினைவாதம் தானே.

')) said...

என்ன செயசராம@பால கொஞ்ச நாளாக ஆளை காணோம், என்ன தாடிகாரர் கட்சியில் உங்கள் பணிகள் எல்லாம் எப்படி இருக்கிறது.

Anonymous said...

//பரத். நீங்களும் இதை தான் சொல்கிறீர்கள். என்ன பேராய கட்சி வந்திருந்தாலும் என்றும் சொல்கிறீர்கள். அவர்கள் இப்படி எல்லாம் செய்வார்கள் என்று சொல்ல ஒரு முன்னுதாரணம் இல்லை. ஆனால் இவர்களுக்கு கட்சியின் தோறமே பிரிவினைவாதம் தானே.
//
புரிந்துகொண்டதிற்கு நன்றி.. ஆனால் நான் சொல்வது எல்லா கட்சிகளுக்கும் முன்னுதாரணம் இருக்கிறது.. அதற்க்கு தான் அந்த சுட்டி கொடுத்தேன்.. மேலும் முன்பு கர்னாடகா கலவரத்தின் போது ஆட்சியிலுருந்தது காங்கிரஸ்(பங்காரப்பா) என்பதை மறக்க வேண்டாம்..

')) said...

கர்னாடகத்தை பொருத்த வரையில், கட்சி பேதம் எல்லாம் இல்லை. கலவரம் என்றால் எவர் எப்படி அடிப்பார், எவர் எப்படி திட்டம் போட்டு எரிப்பார்கள் என்று தான் பார்க்க வேண்டும். பாசகாவிற்கு இங்கு கொளுத்துவதற்கு என்று எந்த ஒரு தனி காரணமும் தேவை இல்லை என்று தான் சொல்ல வருகிறேன்.

Anonymous said...

ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருந்தால் இந்த் பதிவு வந்திருக்குமா?? இருமுறை வெறியாட்டம்(1984 டில்லி, 1992 கர்நாடகா) நடத்திய போதிலும்..
(1984 கலவரம் குஜராத்தைவிட பன் மடங்கு மோசமானது..) அவர்கள் மீது உங்களுக்கு ஒரு சாஃப்ட் கார்னர்.. அதைத்தான் சுட்டிக்காட்ட விரும்பினேன். சார்பு/எதிர்ப்பு என்று வந்துவிட்டால் சில விஷயங்கள் கண்ணுக்கு தெரிவதில்லை..

')) said...

நிச்சயமாக வந்திருக்காது பரத், காரணம் நீங்கள் சொல்வது போல் இந்திரா காந்தியின் மறைவில் தோன்றிய கலவரம், அதைவிட அதிக கோரமாக நடந்த இராசீவ் காந்தியின் மறைவில் தோன்றாமல் பார்த்துக்கொண்டவர்கள் அவர்கள். மேலும் அவர்களது இயக்கம் பிரிவினையை அடிப்படையாக கொண்ட இயக்கம் இல்லை.

நடுவண்னாட்சியை பொருத்த வரை, குசராத்து சூழ்ச்சிகள் வெளியானது முதல் இது வரை சம்பத்த பட்டவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்காமல் இருக்கும் இந்த பேராய கட்சியின் அரசெல்லாம் ஒரு அரசா என்றும்.

இதுவே ஒரு இயக்கத்தின் பின்னனியில் இல்லாமல் தன்னிச்சையாக கோபத்தின் பேரில் ஒரு கொலையை நடத்தி இருப்பானாயின். அவனது தலைமுடியும், கை ரேகைகளும் கூட கொண்டு அவனையே கொலையாளி என்று கூறி தூக்கில் ஏற்ற துடிக்கும் துப்பறியும் இயக்கங்கள் எல்லாம் மௌனித்து போய் நிற்பது கண்டு ஒரு இந்தியர் என்று சொல்லிக்கொள்ள வெட்க்கப்படுகின்றேன் நண்பரே.

Anonymous said...

என்ன ஓரு சப்பகட்டு... ஜகதீஷ் டைட்லர் தெரியுமா?? எத்தனை சாட்சிகள் எதிராக இருந்தும் இன்றும் சுதந்திரமாய் திரிகிரார்.. மேலும் ராஜீவ் சொன்ன “ஒரு பெரிய மரம் விழுந்தால், பூமி அதிரத்தான் செய்யும்” என்பதற்கு இன்றுவரை மன்னிப்பு கோரப்படவில்லை..

//இந்திரா காந்தியின் மறைவில் தோன்றிய கலவரம், அதைவிட அதிக கோரமாக நடந்த இராசீவ் காந்தியின் மறைவில் தோன்றாமல் பார்த்துக்கொண்டவர்கள் அவர்கள்.//

இதுவும் பைத்தியக்காரதனமான வாதம்.. ராஜீவ் மறைந்த பொழுது காங் ஆட்சியில் இல்லை.. தேர்தல் சமயத்தில் கலவரம் செய்தால் அனுதாபம் கிடைக்காது. ராஜீவ் மறைவதிற்கு முன்னர் தேர்தல் நடந்த தொகுதிகளில் பி.ஜே.பியே முன்னிலை பெற்றுரிந்தது என்பதை மறக்க வேண்டாம்..

ஒரு பேச்சுக்காக, ஒரு 5 வருடம் கழித்து கலவர சூழ்நிலையில் பி.ஜே.பி அதை தடுத்தால் தாங்கள் சொன்ன எல்லாவற்றையும் வாபஸ் வாங்கி பதிவு எழுதுவீர்களா??

கர்னாடகத்தில் நடந்தால் அது கன்னட வெறி.. மத்திய மற்றும் மாநிலத்தில் ஆட்சி செய்த காங் கட்சிக்கு எந்த சம்பந்தமும் கிடயாது..(இது நடந்தது 1992ல், ராஜீவ் மறைவிற்கு பிறகு) குஜராத்தில் நடந்ததிற்க்கும் இதற்க்கும் என்ன வித்தியாசம்? இன்றளவு யாராவது தண்டிக்கபட்டார்களா??

')) said...

இந்திரா காந்தியின் மறைவில் தோன்றிய கலவரம், அதைவிட அதிக கோரமாக நடந்த இராசீவ் காந்தியின் மறைவில் தோன்றாமல் பார்த்துக்கொண்டவர்கள் அவர்கள்.//

இது பைத்தியகாரதனமான வாதம் என்றால், பிறிவினையே குறிக்கோள் என்று உதித்த கட்சியை நல்லவர்கள் கொண்டது என்று சொல்வதை என்ன என்று செல்ல நண்பரே. எனக்கு சகதீசு டைட்டுலரையும் தெரியும், இந்தியா முழுவதும் இனவெறியை ஊற்றி ஒரு கொலை வெறி கூட்டத்தை கூட்டிக்கொண்டு போய் பாபர் மசூதியை தூசியாக்கிய அத்வானியையும் தெரியும். அந்த திசம்பர் 6 உலகம் இந்தியாவை பார்த்து எப்படி எள்ளி நகையாடியது தெரியுமா. இன்னமும் இந்த கேள்விகள் வந்தால் மௌனம் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

இவ்வளவு விவாதகளில் நீங்களாவது பாசகா செய்தது தவறு என்று சொல்ல முடிந்ததா நண்பரே, இராசீவ் காந்தியை குறை கூறுகிறீர்கள். நீங்கள் செய்த கொலைகள் புனிதன் என்று நினைக்கிறீர்கள் போலும் இல்லை என்றால் தவறு தான் என்று ஒரு வார்த்தையாவது சொல்லி இருப்பீர்களே. பாசகாவில் தலைவர்களில் இருந்து அடி மட்ட தொண்டன் வரை இரத்ததில் தொவைந்து இருக்கிறது போலும் அந்த பிரிவினையும் அதன் பால் ஏற்பட்ட கொலை வெறியும். ஆறுவது சினம் என்று ஔவை சொன்னார். அதன் பொருள் ஆறினால் தான் சினம், இல்லை என்றால் அதன் பெயர் வெறி என்று பொருள், அல்லது சினம் கொண்டால் அது ஆறவேண்டும் என்றும் பொருள் கொள்ளலாம். இந்த சினம் என்னும் சேர்ந்தாரை கொல்லியின் முடிவையும் பார்க்கத்தானே போகிறோம் நண்பரே.

Anonymous said...

//இவ்வளவு விவாதகளில் நீங்களாவது பாசகா செய்தது தவறு என்று சொல்ல முடிந்ததா நண்பரே, இராசீவ் காந்தியை குறை கூறுகிறீர்கள். நீங்கள் செய்த கொலைகள் புனிதன் என்று நினைக்கிறீர்கள் போலும் இல்லை என்றால் தவறு தான் என்று ஒரு வார்த்தையாவது சொல்லி இருப்பீர்களே. பாசகாவில் தலைவர்களில் இருந்து அடி மட்ட தொண்டன் வரை இரத்ததில் தொவைந்து இருக்கிறது போலும் அந்த பிரிவினையும் அதன் பால் ஏற்பட்ட கொலை வெறியும். ஆறுவது சினம் என்று ஔவை சொன்னார். அதன் பொருள் ஆறினால் தான் சினம், இல்லை என்றால் அதன் பெயர் வெறி என்று பொருள், அல்லது சினம் கொண்டால் அது ஆறவேண்டும் என்றும் பொருள் கொள்ளலாம். இந்த சினம் என்னும் சேர்ந்தாரை கொல்லியின் முடிவையும் பார்க்கத்தானே போகிறோம் நண்பரே.
//

என்னடா இன்னும் usual technique வரவில்லையே என்று பார்த்தேன், வந்துவிட்டது. என்னுடய முதல் கமெண்ட்டிலேயே சொல்லிவிட்டேன் பிஜேபியின் பாசிச அனுகுமுறையைப்பற்றி.
என்னுடய அடிபடையான கருத்தான இதர கட்சிகளும் இதில் சளைத்தவர்கள் அல்ல என்பதயே இவ்வளவு நேரம் புரிந்து கொள்ளாதவருடன் விவாதம் செய்தது வேதனை அளிக்கிறது..

ஆறுவது சினம் ஒரு தலை பட்சமாக இல்லாமல் இருந்தால் நல்லது..

')) said...

பரத்.. சிம்பிள்..

எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டையாக இருக்கலாம்.. ஆனால் பாசக ஓவராவே ஊறிய மட்டை.. அவர்கள் நோக்கமே பிரிவினைவாதம்தான்.. மற்ற கட்சிகள் பல மடங்கு பெட்டர்

ஆமாம், பாசகவும் பாசிச கட்சிதான் என்று ஒத்துக்கொள்வது போல காட்டி, ஆனாலும் அதைப்பத்தி யாரும் எழுதினால், மத்த கட்சி செய்ததை சொல்லிக் காட்டி, பாசகவின் கொடுமைகளை குறைத்து காட்டும் "Usual Technique" தான் நீங்களும் செய்கிறீர்கள்.. :)))

இதற்கு வெளிப்படையாகவே, நீங்கள் பாசக அபிமானி என ஒத்துக் கொள்ளலாம்..

')) said...

இப்படி ஒரு பதிவு தோன்ற வேண்டிய அவசியத்தை இவ்வளவு தெளிவாக குறிப்பிட்ட பின்பும் நீங்கள் பேராய கட்சிமட்டும் என்ன ஒழுங்கா என்று விவாதம் துவங்கினீர். உங்களது கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக விவாதம் தொடர்ந்தது, இறுதியில் நீங்கள் கூறிய உதாரணங்களுக்கு எதிர் உதாரணங்கள் கொடுக்க அது பொதுவான் உத்தி என்று கேலி பேசுகிறீர்கள்.

நாட்டிலே பிரிவினை இவ்வளவு வேகமாக வளர்ந்து பிரிந்து அழியபோகிறதே என்று சொல்லும் போது, பேருந்து நிறுத்ததில் நிற்காமல் போகிறதே, காய்கறி கிடைக்கவில்லையே என்று அதற்கு எதிர்விவாதம் புரிவது போல் உள்ளது உங்களது கருத்துக்கள்.

முன்னே குறிப்பிட்டதை போல் பேராய கட்சி ஒரு முதுகொலும்பு இல்லாத கட்சி அதை போல் பாசக பிரிவினையை முதலாக கொண்ட கட்சி. எவ்வளவு அலங்காரமான வார்த்தைகளில் சொன்னாலும் பிரிவினை பிரிவினையே. இது இந்த பதிவில் சொன்ன கருத்து.

வருத்தம் தெரிவித்தமைக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள். உங்களின் நடு நிலையை பாராட்டுகிறேன் நண்பரே.

Anonymous said...

//ஆமாம், பாசகவும் பாசிச கட்சிதான் என்று ஒத்துக்கொள்வது போல காட்டி, ஆனாலும் அதைப்பத்தி யாரும் எழுதினால், மத்த கட்சி செய்ததை சொல்லிக் காட்டி, பாசகவின் கொடுமைகளை குறைத்து காட்டும் "Usual Technique" தான் நீங்களும் செய்கிறீர்கள்.. :)))

இதற்கு வெளிப்படையாகவே, நீங்கள் பாசக அபிமானி என ஒத்துக் கொள்ளலாம்..//

காங்/கம்யூ வின் அட்டகாசங்களை மட்டும் பதிவு செய்தால், அங்கே சென்று பிஜேபியின் அக்கிரம்மங்களை சொல்லுமளவுக்கு நேர்மையும் தெளிவும் என்னிடம் உண்டு.. இங்கே ஒருவர் மட்டும்தான் குற்றவாளி மற்றவர்கள் செய்த பாதகங்களுக்கு வலுவான காரணங்கள் உள்ளன என்பது போன்ற தோற்றத்தை உண்டு செய்வதைத்தான் சுட்டிக்காட்டினேன்.
என்னளவில் ஒரு ஆட்சி என்பது மதம்/இனம்/ஜாதி/மொழிக்கு அப்பாற்பட்டு இயங்க வேண்டும்.. அதனால் என்னால் குஜராத் கல்வரத்தயோ, கர்னாடக கலவரத்தையோ, நந்திகிராமத்தயோ, வடகிழக்கு மாநிலங்கள் பிரச்சினைகளயோ வேறுபடித்து பார்க்க இயலாது. என்னளவில் மோடி, புத்ததேவ், பங்காரப்பா, வசுந்தரா ராஜே மற்றும் ராஜீவ் தவறிழைத்தவர்களே.

//நாட்டிலே பிரிவினை இவ்வளவு வேகமாக வளர்ந்து பிரிந்து அழியபோகிறதே என்று சொல்லும் போது, பேருந்து நிறுத்ததில் நிற்காமல் போகிறதே, காய்கறி கிடைக்கவில்லையே என்று அதற்கு எதிர்விவாதம் புரிவது போல் உள்ளது உங்களது கருத்துக்கள்.//

இதைத்தான் தவறு என்கிறேன். நான் சுட்டிக்காட்டிய ஒவ்வொறு பிரச்சினையும் பிரிவினை மற்றும் ethnic cleansing சம்பந்தப்பட்டவயே.. ஒருவர் மதத்தின் பெயரால் செய்கிறார் மற்றவர்க்கு மொழி இன்னுமொறுவருக்கு அதிகாரம் அவ்வளவே.. இதில் எது காய்கறி கிடைக்கவில்லயே என்பது போல் இருக்கிறது என்று சொன்னால் நன்றாயிருக்கும்.

anyway my point is human rights is not selectively applicable. when it gets violated the quantum of violation makes no sense.. It has to be protected and that is what democracy is all about.

')) said...

உங்கள் கருத்தோடு முழுவதும் ஒத்துபோகிறேன் நண்பரே