Saturday, June 14, 2008

ஈழத்தில் என்ன தான் நடந்து கொண்டு இருக்கிறது.அனேகமாக ஈழத்தை கவனித்துவரும் அனைவரது மனதிலும் ஓடும் எண்ணம் இதுவாகத்தான் இருக்கும். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக ஒன்றுக்கு ஒன்று முரண்பாடான தகவல்களாக வந்துக்கொண்டிருகிறது.

இருப்பது போதாது என்று இப்போது புதிதாக ஒன்று இதனுடன் சேர்ந்துகொண்டுள்ளது. இன்னமும் 27 கிலோ மீட்டர் நீளம் தான் மீதம். அந்த தூரமும் சுற்றி வளைக்க ஏற்பாடுகள் நடந்துகொண்டு இருக்கிறது, விரைவில் பிரபாகரன் பிடிபடுவார். அவரை உயிருடன் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதே நோக்கம் என்று சிங்கள தளபதி நேர்காணல் விடுத்துள்ளார்.

ஈழ இதழ்களை படித்தால் அவர்களும் இதை மறுக்கவில்லை, வரட்டும் வந்து வளைத்து பார்க்கட்டும் என்று தான் நாங்களும் காத்துக்கொண்டு இருக்கிறோம் என்றும். அப்படி வரும் கால் அவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவோம் என்று சொல்கிறார்கள்.

குமுதம் இதழோ ஒரு படி மேலே போய், நடந்த வான் தாக்குதலில் பல முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் அதோடு புலிகளின் ஆயுதசாலை ஒன்று ஒரு பெருத்த சேதத்தை சந்தித்தாகவும் அறிவிக்கின்றது. இந்த தகவல் இதுவரையில் குமுதம் தவிற வேறு எந்த ஒரு இதழிலும் வரவில்லை என்றது ஒரு விசேட சேதி.

உலக அளவில் தனக்கு ஏற்பட்டுவந்த நல்லெண்ண நட்டத்தை சிங்களம் ஒரு தேர்தலை நடத்தி சரிசெய்ய நினைத்தது. ஆனாலும் ஐ நாவில் விழுந்த அடி மேலும் ஒரு நெருக்குதலை கொடுக்க அவசர அவசரமாக நடந்த இராணுவ முன்னேற்ற முடிவுகள் மண்ணை கவ்வி பின்னோக்கி ஓடியது தான் மிச்சம்.

இந்த அழகில் தினமணியின் வார இதழான தமிழன் எக்சுபிரசில் ஒருவர் கட்டுரை வரைகிறார் பிள்ளையானின் அரசியலின் வளர்ச்சியை பற்றி. பதவி ஏற்று இன்னமும் முழுதாக ஒரு மாதம் கூட ஆகவில்லை அதற்குள் அவர் அரசியலில் வளர்ச்சி பெற்றதாகவும். அவரைத்தான் தமிழ் மக்கள் இனி மேல் நம்பவேண்டும் என்றும், இனிமேல் இலங்கையில் ஒரு பக்கம் பாலாறும் மறுபக்கம் தேனறும் ஓடும் என்றும். தமிழ் மக்களின் அனைத்து பிரச்சனைகளும் இப்போதே களையபட்டுவிடும் என்றும் அந்த கட்டுரையில் அவர் ஆரூடம் கூற தயங்கவில்லை.

இவைகள் எல்லாம் பரவாயில்லை, இதற்கு ஒரு படி மேலே போய், புலிகளும் இது போல் நம்பிக்கைக்கு உகந்தார் போல் நடந்துகொண்டு சிங்களத்துடன் சமரசம் செய்துகொண்டு கிடைக்கும் பதவியை பெற்றுக்கொண்டு அரசுக்கு சாதகமாக அவர்களது அராசக நடவடிக்கைகளுக்கு துணை போகவேண்டும் என்றும் என்று சொல்கிறார்பாருங்கள்.????

அடே அப்பா ஈழத்தமிழர்களை பற்றி என்ன ஒரு கனிவு, பரிவு, பாசம். அடே வெட்க்கம் அற்றவனே, இதை போல் காலை வருடும் நாயாக இருக்கவேண்டும் என்று தமிழர்கள் முடிவு செய்திருந்தார்கள் என்றால் இப்படி ஒரு போராட்டமே அங்கு தோன்றியே இருக்காதே. ஒன்று பிரச்சனைகளை புரிந்துகொண்டு எழுதவேண்டும் இல்லை என்றால் பேசாமல் இருக்கவேண்டும். அதை விடுத்து இப்படி பிதற்ற கூடாது.

துவக்கம் முதல் சிங்களம் பிரச்சனையை தீர்க்க எண்ணவில்லை மாறாக மறைக்கமட்டுமே பார்க்கிறது. இன்றைக்கு இவ்வளவு தொலைவில் இந்த இனப்பிரச்சனை பேசப்படுவதும், பல நாடுகள் சேர்ந்து தீர்க்க நினைகவும் காரணமாக இருப்பது அந்த நிற்காக போராட்டமே. அந்த போராட்டத்தின் ஆணிவேராய் விளங்கும் தலைவர்களை அழித்துவிட்டால் காலை வருடும் நாய்களாக மக்களை எளிதில் மாற்றிவிடலாம் என்று 30 ஆண்டுகளாக கண்டு வந்த கனவுக்கு இறுதி வடிவம் கொடுக்க நினைகிறார் போலும் இந்த சிங்கள தளபதி.

தெரிந்தோ தெரியாமலோ தமிழர்களை இப்படி ஒரு போராட்டத்திற்கு தள்ளிய சிங்களம், அதை தாங்களாகவே சென்று ஒரு முடிவுக்கு கொண்டு வருவதே சரி. அதை விடுத்து ஒரு தனி அரசாங்கமாக எங்களோடு பேசும் எண்ணம் எல்லாம் வேண்டாம் என்று சிறுபிள்ளை தனமாக அடம்பிடிப்பது சரி இல்லை.

எங்களுக்கு 20 வெள்ளிகாசுக்காக ஏசுவை காட்டிக்கொடுத்தவர்களையும் தெரியும், தன்னலனுக்காக கட்டபொம்மனை காட்டிக்கொடுத்தவனையும் தெரியும். இந்த மாதிரியான துரோகிகளை உருவாக்குவதும் தோற்றுவிப்பதும் எளிது. ஆனால் என்ன ஆனாலும் சரி, இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்று கடைசிவரை உள்ள உறுதியோடும், கட்டுப்பாட்டோடும், அர்பணிப்போடும் போராடும் போராளிகளை உருவாக்குவது தான் கடினம். அப்படி உருவாகி இருக்கும் புலிபடைகளையே ஒன்றும் செய்யமுடியாத சிங்களம், பிரபாகரனை உயிருடன் பிடித்து சட்டத்தின் முன் நிற்க செய்வதாக சொல்வது, கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வழக்கிற்கு ஒத்த ஒன்று.

வாழ்க தமிழீழம், வளர்க அந்த தேசத்தின் மக்கள், வெல்லட்டும் அவர்களது விடுதலை போராட்டம்.

7 comments:

')) said...

நன்றிகள்

யதார்த்தத்தை எழுதியமைக்கு


எல்லாளன்
http://tamilthesiyam.blogspot.com/

')) said...

நன்றிகள்

யதார்த்தத்தை எழுதியமைக்கு


எல்லாளன்

')) said...

வாங்க எல்லாளன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

')) said...

புலியாய் இவர்
புறப்பட்டார்
எலியாய் சிலர்
எதிர்பட்டார்
ஒரு மிதியால்
அவர் புறமிட்டார்
என
உன் பிள்ளையும்
என் பிள்ளையும்
கைகோர்த்தொரு
பண்பாடிடும்
திருநாள் வரும்
ஒரு நாள் வரும்

')) said...

நன்றி சிபி அப்பா, வருகைக்கும் பாடலுக்கும் நன்றி.

Anonymous said...

பார்ப்பனப் பரதேசிகளும் அவர்களுடன் சேர்ந்து கும்மாளம் போடும் உப்புப் போட்டுச் சாப்பிடாத ஆனால் தமிழால் உஞ்ச விருத்தி செய்யுங்கும்பலும் இந்தியாவிற்கு எதிராகவே இது வரை நடந்து கொண்டு வந்துள்ள சிங்கள
இனவெறியற்களிடம் பிச்சை பெறுபவர்களும் சூரியனைப் பார்த்துக் குரைக்கும் நாய்கள்.நாயாவது நன்றியுடன் இருக்கும். இந்த ஜென்மங்கள் திண்பது தமிழர்கள் போடும் சோற்றையா அல்லது வேறு எதையாவதா?

தங்கள் உயிர்களை நாட்டு விடுதலைக்காக அளிக்கும் வீரப் பரம்பரையின் கால் தூசிக்குக் கூடச் சரியாகாத இந்தச் சுப்பன்களும்,இவர்களின் சிங்கள இன வெறியினரும் தலைவர் பிரபாகரனனின் ஒரு கருப்புக் கம்பியைக் கூடப் பிடுங்க முடியாதவர்கள்.

')) said...

வாங்க அனானி நண்பரே, கோபம் வார்த்தைகளை கொஞ்சம் கட்டுப்படுத்த கூடாதா. இந்தியாவிற்கு துரோகத்தை தவிர வேறு எதுவுமே செய்யாத பாக்கிட்தானையே ஆதரித்து பேசும் இந்த பதர்களை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை தான். விட்டு தள்ளுங்கள் இந்த பதர்களை.....