Saturday, June 21, 2008

இராமதாசு இனிமேல் என்ன செய்வார்இது வரையில் ஆதரவாகவும் ஒரு பெரிய இலக்கை நோக்கி அரவணைபோடு பயணித்து வந்த பாமக இப்போது ஆட்டம் கண்டு தான் இருக்கிறது. இல்லை என்றால் இந்த ஒரு நிகழ்வுக்காக தினமும் அறிக்கை விடுவார் ஏன், அதுவும் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று ஏன் இத்தனை அறிக்கைகள் விட வேண்டும்.


தினமணியில் சொல்வதை போல் அதிர்ச்சி கொடுத்தே பழக்கப்பட்டவருக்கு இப்போது இந்த அதிர்ச்சி வைதியம் கொஞ்சம் குழம்பிப்போய் தான் இருப்பார். இருந்தாலும், என்னவோ விடையை கண்டு பிடித்துவிட்டது போல் ஒரு மணிக்கு ஒரு அறிக்கையாக விடுகிறார் பாவம்.


அதுவும் காடுவெட்டி குரு சொன்னது ஒன்றும் தவறில்லை என்று சொல்லும் போதே தெரிகிறதே இராமதாசுக்கு கட்சிக்குள் என்ன மதிப்பு என்று. என்ன ஆனாலும் தனது மகனது பதவிக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது என்று எவ்வளவோ கவனமாக இருந்தும், இவரது பேச்சை காவெ குரு கேட்டகவில்லை போலும். சரி என்ன செய்வது என்று நடப்பதை பார்த்து வியந்து போய் நிற்கிறார் போலும்.


2011ல் பாமக ஆட்சி, அதுவும் ஊழலோ குழப்பமோ இல்லாத ஆட்சி என்றும். மக்களின் சேவைக்காக மட்டுமே இருக்கும் அந்த ஆட்சி என்றும். எண்ணற்ற வாக்குறுதிகளை அள்ளிவீசி, மனதிலும் அந்த எண்ணம் எப்படியும் நிறைவேறும் என்ற ஆசையிலும் திளைத்து இருந்த நேரத்தில் கூட்டணி இல்லை என்று சொன்னால் அவர் கொஞ்சம் ஆடித்தான் போய் இருப்பார்.


மக்கள் குடிப்பார்கள், குடிப்பது அவர்களது உரிமை. ஆனால் அவர்கள் குடிக்க யாரும் சாராயம் விற்கக்கூடாது, அதிலும் அரசாங்கமாக இருந்தால் கூடவே கூடாது என்ற சொன்னார். இதில் உங்களுக்கு ஏதாவது விளங்குகிறதா. எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. இப்படி ஒரு வாதம் அது தான் அவரது அரசியல் பாங்கு, இப்படி தான் அரசின் எல்லா செயல்களையும் தமிழன் எக்சுபிரசு அளவிற்கு உளரி கொட்டினார். அப்படி கொட்டும் போதெல்லாம் சும்மா இருந்துவிட்டு இப்போது திடீர் என்று வெளியே போகச்சொன்னால் பிறகு ஒரு மணிக்கு ஒரு அறிக்கை வராது.


இதே அணியில் பொதுவுடமையினர் இருக்கிறார்கள், அவர்களது விமர்சனம் எவ்வளவோ பரவாயில்லை. பொருப்புடனும் கருத்துக்களை எடுத்து வைப்பதிலும், விமர்சங்களை எதிர்கொள்வதையும் அவரிடம் நிறைய கற்றுக்கொள்ள இருக்கிறது இவருக்கு.


இனிமேல் என்ன தான் செய்வார் அவர், வேறு என்ன எந்த கூட்டணியில் அழைகிறார்களோ அவர்களது கூட்டணிக்கு செல்வது. அங்கே சென்ற கையோடு அதிகாரத்தில் இருப்பவர்களை பார்த்து 35, 45 இல்லை சுழி என்று மதிபெண் இட்டு தேர்ச்சி அறிக்கை சான்றிதழ்களை வழங்குவார். அதிலும் நேரிலே அவர்களிடம் சொன்னால் தனக்கு விளம்பரம் கிடைக்காது என்று ஒரு நிருபர் கூட்டத்தை கூட்டி அவர்களிடம் நையான்டி பேசுவார்.


அந்த கூட்டத்தில் இருக்கும் ஒருவர் கூட அவரை பார்த்து இவர்களுக்கு இவ்வளவு மதிப்பெண் என்று கொடுக்கிறீர்களே, இத்தணை ஆண்டுகள் அரசியலில் இருந்து வடக்கு கிழக்கு மேற்கு தெற்கு என்று கோட்டைகளாக அறிவித்துக்கொண்டு இருக்கிறீர்களே, இருந்தும் வெறும் 18 இடங்களை மட்டும் தான் உங்களால் பெற முடிந்ததா. எங்கே அந்த கோட்டைகள் எல்லாம் எங்கே ஐயா என்று ஒருவரும் கேட்க்க மாட்டார்களே. அப்படி கேட்டால், குருவின் பார்வையில் இருந்து தான் தப்பித்து வீடு செல்வார்களா.


இராமதாசு ஐயா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், அப்படியே அமெரிக்க புச்சு மற்றும் இதர அரசியல் தலைவர்களுக்கும் மதிப்பெண் கொடுத்து விட்டீர்கள் என்றால் நன்றாக இருக்கும். செய்வீர்களா......


9 comments:

Anonymous said...

ஏதிலார் குற்றம் போல் தன் குற்றம்
காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

Anonymous said...

ராமதாசு சவுண்ட் வுடரது, மார்க் போடரதெல்லாம் கருணாநிதி கிட்டதான். அம்மாவோட கூட்டணில இருந்தப்போ அடங்கி இருந்தாரு (அம்மா ”போடா”னு சொல்லி ”பொடா”ல தூக்கி போட்டிருவாங்களே, அந்த பயம்!)

')) said...

என்ன செயராமன் நலமா, எங்கே ஆளையே காணொம் என்று இருந்தேன். வயசுக்கு தகுந்தாற்போல கொஞ்சம் எழுதவும் கற்றுக்கொள்ளுங்கள்..........

')) said...

மக்கள் குடிப்பார்கள், குடிப்பது அவர்களது உரிமை. ஆனால் அவர்கள் குடிக்க யாரும் சாராயம் விற்கக்கூடாது, அதிலும் அரசாங்கமாக இருந்தால் கூடவே கூடாது என்ற சொன்னார். இதில் உங்களுக்கு ஏதாவது விளங்குகிறதா.//

ஒருவேளை இதை சொல்லும் போது அவர் மப்புல இருந்து இருப்பாரோ?

')) said...

வாங்க அப்துல்லா, அந்த வாசகத்து பொருள் இது தான், உண்மையில் மக்களின் நலன் மீது அக்கறை இருந்தால் மக்கள் குடிப்பதே தவறு என்றும். இனிமேல் மக்கள் யாரையும் குடிக்கவே விடமாட்டேம் அதன் பொருட்டு இன்மேல் எங்கேயும் கடைகள் இருக்க கூடாது. எல்லா கையையும் உடைபோம் என்றும் சொன்னால் கூட அவருக்கு அக்கறை இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் இவர் என்ன சொன்னார், அரசு சாராயம் விற்ககூடாது மட்டுமே. ஆனால் மற்றவர்கள் விற்கலாம். வாங்க முடியாதவர்கள் கள்ள சாரயமாவது குடித்து செத்தாலும், அவர்களுக்கு அரசு 1 இலட்ச ரூபாய் வரையில் சென்று பண உதவி கொடுக்கவேண்டும் என்று சொன்னவர். தெரியாது போல் நீங்களும் கேளுங்கள் நானும் சொல்கிறேன்.

')) said...

இவர் தொடர்ந்து ரெண்டு வாரம் கூட ஒரு விஷயத்துக்காக போராட மாட்டாரு, அதோட நாம ஒரு விஷயத்திற்காக போன வாரம் போரடுனோமே, விஷயம் என்னாச்சு, ஏதாவது முடிவு எட்டியதானு கொஞ்சமும் கவலையேப்படறதில்ல. வெக்கிற வாதங்களும் பெரும்பான்மையா விதண்டாவாதங்களாவே இருக்கும். அதனால விஷயத்தோட வீரியமும் கொறஞ்சிடுது.

')) said...

வாங்க இராப், சரியா சொன்னீங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Anonymous said...

பனிமலர்,

தி மு க வின் மேலும்,அதன் தலைவர் மேல் இருக்கும் கண்மூடித்தனமான ஒரு பிடிப்பால் தவறான கருத்தை சொல்லியிருக்கிறீர்கள்.கொள்கை உறுதியில்(மது விலக்கு,சினிமாவால் சீரழியும் கலாசாரம் போன்ற சமூகநல விஷயங்களில்),மருத்துவர் அய்யா,கொலைஞர் முன் இமயம் போல் உயர்ந்து காணப்படுவது உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லையா.குத்துப்பாட்டை ரசிப்பவராகவும்,கண்ட நிகழ்ச்சிகளுக்கெல்லாம் வேலையில்லாமல் இருப்பவர் போல் சென்று கேவலமாக நடந்து கொள்ளும் முதல்வரைப் போல் மருத்துவர் நடந்து கொள்கிறாரா?மனதை தொட்டு சொல்லுங்கள்.மக்கள் தொலை காட்சிக்கும்,சன் மற்றும் கொலைஞர் தொலை காட்சிக்கும் உள்ள தர வேற்றுபாடினை புரிந்து கொள்ளமுடியவில்லையா அல்லது புரியாத மாதிரி நடிக்கிறீர்களா?மனசாட்சிக்கு விரோதமாக எழுதாதீர்கள் பனிமலர்,உங்க குடும்பம் கொலைஞருக்கு கோவிந்தா போட்டு உயிர் வாழும் ஒன்றாக இருந்தால் கூட.

குமார்

')) said...

வாங்க குமார், உங்களுக்கு இராமதாசை மிகவும் பிடிக்கும் போலும். அது தான் எனக்கு கலைஞரை பிடிக்கும் என்றதோடு மட்டும் நில்லாது அவரது அடி பொடி என்றெல்லாம் கூட எழுதுகிறீர்கள். தவறான கருத்துக்கள் என்று எதை குறிப்பிடுகிறீர்கள் என்று சொல்லி இருக்கலாம். இருந்தாலும் உங்களது எழுத்தில் அவர் மேல் உங்களுக்கு உள்ள அபிமானத்தை காட்டுகிறது. அரசியலில் என்ன தான் சாதித்தார் இராமதாசு என்று கேட்டால் இது வரையில் இங்கே அங்கே என்று தாவியதை தவிர எதையும் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு இல்லை என்பதே உண்மை. அப்படி அவர் மக்களுக்கா ஏதாவது இது வரையில் செய்திருந்தால் தயவு செய்து தெரியபடுத்தவும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.