Friday, June 13, 2008

குங்கு பூ பான்டா - திரைவிமர்சனம்



புதிதாக வெளியாக ஒடிக்கொண்டிருக்கும் திரைபடம். சிறார்களை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்ட படம். சீனாவின் தயாரிப்பாகவோ அல்லது ஆங்காங்கின் தயாரிப்பாகவோ இருந்தாலோ உலக சந்தைக்கு வரும் போது பெரும்பாலும் குங்கு பூ படங்களாகவே அமைவது இயல்பு.

இது நாள்வரை குங்கு பூ படங்களில் மனிதர்கள் காட்டி வந்த சாகசங்களை அசைபடங்களாகவும் கொண்டுவர முடியும் என்று காண்பித்த தொழில் நுட்ப்பகலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். லார்டு ஆப்த்தி ரிங்கு படத்தில் பதித்த முதல் மைல்கல் மேலும் மெருகேறுகிறது.

கனவில் தொடங்கும் படம் மிகவும் நகைச்சுவையாக நகர்கிறது. படுக்கையில் இருந்து மல்லாக்க விழுந்து எழக்கூட முடியாத பான்டா தான் பிறகு உலகலாவிய காவலனாக தகுதி பெறுவதுதான் கதை.
கிழட்டு ஆமையும், பூனைமாக சேர்ந்து நடத்திவரும் குங்கு பூ பள்ளியில் பாம்பு, புலி, குரங்கு, கொக்கு மற்றும் விட்டில் பூச்சி அனைத்தும் தேர்ந்த மாணவர்கள்.
இந்த மாணவர்களில் ஒருவரை உலகலாவிய காவலனாக தகுதி பெறும் எண்ணதில் பூனையார் பயிற்சிகளை கொடுத்து பழக்கிவருகிறார்.

ஒரு நாள் வயதான ஆமையார் அங்கே பள்ளிக்கு பூனையாரை பார்க்க வருகிறார். அப்படி வருகையில், மற்றும் ஒரு உலக காவலனை தேர்ந்தெடுக்கும் நேரம் பிறந்துவிட்டது எனவும். அவனை தேர்ந்தெடுக்கும் பணியையும் உடனே துவக்கி அறிவிக்க செய்கிறது.
இதை வேடிக்கை பார்க்க வரும் மக்களுக்கு நூடுல்சு விற்க செல்கிறது பான்டா. வண்டியை இழுத்து கொண்டு செல்ல இயலாத பான்டா சென்றடைவதற்குள் கதவையே மூடிவிட்டு சாகசங்கள் துவங்குவதும். எப்படியும் உள்ளே சென்றுவிடுவது என்று பான்டா அடிக்கும் கூத்துகளில் சிறார்களுடன் பெரியவர்களும் வாய்விட்டு சிரிப்பதை பார்க்க முடிகிறது. அப்படி ஒருவழியாக வந்து சேரும் பான்டா தான் அந்த உலக காவலன் என்று அறிவிக்க படுவதை கேட்டு அந்த சிறப்பு மாணவர்கள் சோர்ந்து விடுவதாக காட்டும் காட்சிகளில் அசைபடம் என்ற எண்ணம் போய் அந்த பாத்திரத்தின் உணர்வுகள் விஞ்சி நிற்பதற்கு மீண்டும் ஒரு முறை தொழில் நுட்ப்பகலைஞர்களையும் இயக்குனரையும் பாராட்டவேண்டும்.

பிறகு ஆபத்தை அறிவிக்க சென்ற பறவையின் மூலமே அந்த சிறுத்தை தப்பிப்பதும் பிறகு அதை தாக்கி வீழ்த்துவதில் சென்று முடிகின்றது படம். இந்த முயற்சிகளில் பள்ளி மாணவர்களின் பங்கும், மற்றும் இறுதி சண்டையில் தத்துவம் விடுத்து அதன் பின் நடக்கும் உத்திகளும் அருமையோ அருமை.

தனக்கு மட்டும் தான் எல்லா கலைகளையும் பூனையார் கொடுத்து இருப்பார் மற்றவர்களுக்கு எப்படியும் சொல்லி கொடுத்து இருக்க மாட்டார் என்ற சிறுத்தையின் கூற்று சரியே என்று தெரிந்த பிறகு தாக்குதலில் தீவிரம் அதிகரிப்பதிலும். அந்த உத்திகள் எல்லாம் பான்டாவிடம் ஏன் பலிக்கவில்லை என்றும் மேலும் பூனையாரின் வித்தைகளை எப்படி சொல்லிக்கொடுக்காமலே பான்டா கற்றது என்றும் படத்தில் விளக்கம் இல்லாமல் இருப்பது ஏமாற்றமே.

மற்ற படி படம் அருமையாக வந்து இருக்கிறது. இது வரையில் ஏராளமான பொருள் செலவிலும் இன்னமும் என்ன விதங்களில் செலவுகளை கூட்டினால் பணக்காரதனமாக தெரியும் என்று பார்த்து பார்த்து செலவு செய்யும் இயக்குனர்களின் மத்தியில் அழகாக அசைபடமாக குறைந்த பொருள் செலவில் அதுவும் அது அசை படம் இல்லை என்று வரும்படியாக கதையும் நுட்பங்களையும் கொண்டு படம் கொடுத்த அந்த தொழில் நுட்ப்ப குழுவிற்கு பாராட்டுகள்.

இறுதியாக, படம் பார்த்த பிறகு பிவர்லிகில் நின்சா நினைவில் வருவதை தவிர்க்க முடியவில்லை. காரணம் அந்த குண்டு பான்டாவா அல்லது அது கொள்ளும் முட்டாள் தனமான முயற்சிகாளா தெரியவில்லை........

6 comments:

')) said...

yeah it was a very hilarious animation movie after a very long time.. made me laugh throughout the movie not just few scenes only..

>> பூனையாரின் வித்தைகளை எப்படி சொல்லிக்கொடுக்காமலே பான்டா கற்றது <<<

the cat master did train the panda showing him the food rite ?

')) said...

இறுதியில் ஆள்காட்டி விரலில் பான்டா செய்யும் உத்தியை உனக்கு பூனையார் கற்றுகொடுத்தாரா என்று சிறுத்தை கேட்டும் கேள்விக்கு நானே கற்றுக்கொண்டேன் என்று பான்டா சொல்வதை சொன்னேன் யாத்திரீகன்

')) said...

இதில் குறியீடுகள் ஏதேனும் உள்ளதா இல்லை எளிமையான, பொழுதுபோக்கை மட்டும் அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படமா?

அனுஜன்யா

Anonymous said...

அண்ணே, இது எந்தப் படத்தோட காப்பியும் இல்லியே?

')) said...

பெவர்லி ஹில்ஸ் நிஞ்சாவில் க்ரிஸ் பார்லி நன்றாக சிரிக்க வைப்பார்.

')) said...

:-)
நல்லாருக்குங்கோ