Saturday, May 31, 2008

வன்முறை ஒரு தொழிலாகுமா - 9குறுக்கு வழியில் பதவிக்கும் வரும் நபர்களை பற்றி கொஞ்சம் விவரமாக பார்ப்போம். ஒரு குடும்பத்தில் தலைமகன் அனைத்திலும் முதன்மைபடுத்த படுவது அவனது தியாகங்களுக்கு வீட்டார் கொடுக்கும் அங்கிகாரம். முன்னே சொன்னது போல் மூத்தவரால் தலை எடுக்காத சமயங்களில் இளையவர்கள் தலை தூக்கும்போது அனைவரும் அவருக்கு அதே மதிப்பினை வழங்கும் போது அதை யாரும் எதிர்ப்பது இல்லை.
ஆனால் ஒரு சில குடும்பங்களில் அதிகம் கானும் காட்சி இது. அண்ணன் இருப்பான் நன்றாக பொரூளீட்டுவார். குடும்பத்தின் அத்தனை தேவைகளையும் பார்த்து கவனித்து கொள்வார். தனக்கு என்று வந்தால் கூட குடும்பத்தின் நலன் கருதி தேவைகளை விட்டும் கொடுப்பார். இப்படி இவர் வளர்த்து எடுக்கும் தம்பிகளில் ஒரு சிலர், இவரது கவனிப்பிலும் பொருளிலும் வளர்ந்து தனக்கு என்ற ஒரு பெயரை பெற்ற பின் அவருக்கு கிடைக்கும் அதே நன்மதிப்பும் மரியாதையும் தனக்கும் வேண்டும் என்று ஆசை கொள்வார்கள்.
இதன் தொடக்கமாக அண்ணம் பொருள் கொடுக்கும் இடங்களில் யாரையும் கேட்க்காமல் தானே முன் வந்து முந்திக்கொண்டு பொருளை வழங்க துவங்குவார். இதை பின் நாளில் குடும்பத்தில் பெருமையாக குறிப்பிடுவார். அண்ணனோ ஏன்டா செலவு உனக்கு பொருளை சேர்த்து வைத்துகொள் என்று அறிவுருத்துவார்.
புகழும் மரியாதையையும் எதிர்பார்க்காத தம்பிகளோ, பொருளை அண்ணனிடம் கொடுத்து. தேவைபடும் போது வாங்கி கொள்கிறேன் என்று சொல்வார்கள். ஆனால் புகழையும் அதன் பொருட்டு கிடைக்கும் மரியாதையும் மட்டுமே எதிர்பார்த்து பொருளை செலவிடுபவன் கொடுத்த பொருள்க்கான பலனை உடனே வேண்டும் என்று எதிர்பார்ப்பான். அதை எதிர்பார்த்து ஒவ்வொரு நிமிடமும் காத்திருப்பான்.
அண்ணன் ஆண்டாண்டு காலமாக தன்னலமில்லா தனது தியகங்களால் பெற்ற மரியாதையை ஒரே ஒரு முறை ஒரே ஒரு சந்தர்பத்தில் கொடுத்த பொருளுக்கு கிடைக்கவேண்டும் என்று அவன் நினைப்பதில் எந்த விதமான நீதியும் இருக்க முடியாது. அது அவனுக்கும் தெரியும். இருப்பினும் அவனது அறிவையும் மீறி அவனுக்கு அந்த புகழ் மயக்கம் போதையாக மாற்றம் பெற துவங்கி இருக்கும்.
பின்னாட்களில் விரைவாக புகழ்ளீட்டும் விதமாக பொருளை இன்னமும் தாரளமாக அள்ளி வீசுவான். அதே வேளையில் அவனது புகழ்ளீட்டும் போதையின் அளவோ வகை தொகை இல்லாமல் வானலாவி வளர்ந்து கொண்டே வரும். மிகக்குறுகிய காலத்திலே அவனது பொறுமை அற்று போகும். பிறகு அவன் பொருளை கொட்டி நிரப்பி வந்த இடங்களில் எல்லாம் அறிவிப்பே இல்லாமல் வெற்றிடங்கள் தோன்றி பெருத்த அவமானங்களை குடும்பத்துகே தேடி கொடுக்க துவங்கும்.
இந்த வெற்றிட நிகழ்வுவரை அந்த தரம் கெட்ட தம்பியின் குணம் அனைவருக்கும் தெரியாததால், அண்ணனின் பொருளை வேறு தேவைகளுக்கு என்று மாற்றி ஒரு பெரிய திட்டத்தில் முனையம்மாக கொடுக்கப்பட்டோ அல்லது இன்னமும் ஏதோ ஒரு அத்தியாவசிய தேவைக்கு என்று செலவிடப்பட்டு இருக்கும். இவனை தவிர அனைவருக்கும் குறுக்கு புத்தியின் தாக்கம் இல்லாததால் இவன் இப்படி எல்லாம் பிறழ்வான் என்றறியாத அவர்கள், இந்த பொருள் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணரும் போது. இவன் அவர்களை பார்த்து ஒரு வெற்றி வெறிப்புன்னகை விட்டு மறைவான். அது தான் அவன் இவர்களது வலிகளையும் சேர்த்து உணரும் கடைசி தருணம்.
அன்றைய தொட்டு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இவன் அவர்களை சங்கடங்களுக்குள் உள்ளாக்குவது இவனது வாடிக்கையாக வந்து நிற்கும். பல மக்கள் இதை தனது மதிப்பையும் மாறாமல் வெளிப்படையாகவே செய்வார்கள். இவர்களை குடும்பங்கள் தூர நிறுத்தி உறவை முறித்து கொள்வார்கள். அனேகமாக முதல் சண்டைக்கு பிறகு இவர்கள் அடுத்த சண்டையை கொள்ளவில்லை என்றாலும். அந்த குடும்பங்கள் சந்திக்கும் இக்கட்டான நிகழ்வுகளில் கூட தன்னிடம் எவ்வளவு தான் பொருள் இருந்தாலும் கொடுத்துதவ மறுப்பர்கள். குடும்பத்தாரின் உயிர்களே பிரிந்தாலும் எதுவும் நடககாதது போல் இருப்பது மட்டும் அல்லாது, யாரேனும் இது பற்றி அவனிடம் கேட்டால், என்னிடம் யாரும் கேட்கவில்லை அதனால் தான் கொடுக்கவில்லை என்று கடமையே கிஞ்சித்தும் இல்லாதது போல் பேசும் கொடுமைகள் என்று தொடரும்.
இவர்களை கூட ஒரு அளவிற்கு பெற்றோர்கள் போல் உடன் பிறந்தோர்களும் மன்னித்து விடுவார்கள். ஆனால் இவனை போல் இல்லாமல் கூடவே இருந்து குழி பறிக்கும் ஒரு இரகத்தினர் இருக்கிறார்கள். இவர்கள் முன்னே சொன்னவர்களை விட மிகவும் மோசமானவர்கள்.
இவர்களது உத்திகளை கவனித்தால், இவ்வளவு கேவலமாக எல்லாம் மனிதனால் நடந்துகொள்ள முடியுமா என்ற கேள்விதான் மிஞ்சுமே தவிர இவர்கள் செயலுக்கு இவர்கள் கற்பிக்கும் எந்த ஒரு நீதியையும் மனம் ஏற்றுகொள்ளவே முடியாது.
உதாரணத்திற்கு தொழில் முனைவோரின் குடும்பங்களில் தொழில் இரகசியம் அவர்களது வெற்றிக்கும், அவர்களை அந்த இடத்திலே தக்கவைத்து கொள்ளும் ஒரு பிடிப்பு. இந்த மனிதர்கள் அந்த இரகசியங்களை தான் தான் என்று காட்டிக்கொள்ளாமலேயே எதிரிக்கு காட்டிக்கொடுப்பதும். அல்லது எதிரிக்கு மட்டுமே தெரியும் விதமாக காட்டிக்கொடுப்பதும் என்று துவங்கி அடுக்கிக்கொண்டே போகலாம்.
அந்த அசிங்கங்களுக்குல் நேரத்தை செலவழிப்பதை விட அவர்களது செயலின் பொருள் என்ன என்பதில் செலவிடுவோம்...........


தொடரும்............

0 comments: