அறிவித்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் அதற்கு காரணம், குறுக்கே இருப்பது இராமருக்காக குரங்களும், அணில்களும் சேர்ந்து கட்டிய பாலம். அது பூசைக்கு உரிய இடம் என்றும் மக்கள் அனைவரும் காலை முதல் இரவு வரை நொடிக்கு 100 தடவையாவது சென்று வணங்கிவரும் புண்ணிய இடம் என்றும் வழக்கை தொடுத்து. விசாரணையில் எப்படி எங்கு சென்று வழிபடுகிறீர்கள் என்று கேட்டதற்கு அந்த பாலம் இருக்கு இடம் தேடி படகிலே செல்வதாகவும். அப்படி அங்கே எங்கே இடம் என்று தெரிவதற்கு ஒரு அடையாள கல்லை வைத்துவிட்டு வந்ததாகவும். மறுபடியும் அங்கே செல்லும் போது சரியாக அந்த அடையாள கல்லை பார்த்து அங்கே சென்று வழிபடுவதாகம் நீதி மன்றத்தில் சுசா தெரிவித்தார்.
அப்படி அந்த அடையாள கல் நீரிலேயே மூழ்காமல் இருக்கிறதா என்று நீதியரசர்கள் கேட்ட கேள்விக்கு, குரங்குகளும் அணிலும் பாலம் அமைத்த போது பாலமே அடிவாரம் ஏதும் இல்லாமல் மிதந்து கொண்டு இருந்த இடம் அது. அப்படி பாலமே மிதந்தது என்று சொன்ன போது யாரும் எந்த கேள்வியும் கேட்க்கவில்லை, ஆனால் இன்றைக்கு நான் வைத்த அடையாள கல் மூழ்காதா என்று எப்படி கேட்க்கலாம் என்று கேட்டு நீதியரசர்களை திகைக்க வைத்துள்ளார் சுசா.
நீங்கள் ஒருவர் மட்டும் சென்று வழிபடுவதால் எல்லாம் அது புணிததளம் என்றோ, வழி பாட்டுக்குறிய இடம் என்றோ அறிவிக்கமுடியாது என்று நீதியரசர் சொல்ல முட்ப்பட, உடனே சுசா எழுந்து தினமும் கோடான கோடி மக்கள் அன்றாடம் அங்கே செல்வதாகவும். அதிலே பல மக்கள் நீரில் உள் நீஸ்சலில் உள்ளே சென்று அந்த பாலத்திற்கு பாலும் தேனும் சந்தனமும் ஊற்றி வந்து கொண்டு இருப்பதாலும் தான் செயற்கைகோள் படங்களில் அந்த பாலம் முழுவதும் அழகாக தெரிவதாக நாசா ஆராய்ச்சி நிறுவனமே ஒரு 10000 சான்றிதழ்கள் வழங்க்கியுள்ளதாகவும். மேலும் அந்த பாலம் இருப்பதால் தான் மீனவர்கள் யாவரும் வலையை தோலிலேயே தூக்கிகொண்டு சென்று முதலில் மீன் பிடித்தார்கள் என்றும். பிறகு அப்படி பிடித்த மீனை அவ்வளவு தூரம் தூக்கி வருவது கடினமாக இருப்பதால், தற்பொழுது எல்லாம் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் எல்லாம் தூண்டிலோடு தான் செல்கிறார்கள். அதனால் இந்திய பொருளாதாரமும், மீனவ மக்களும் மேலும் மேலும் செழிப்பு பொங்கி வழிந்து ஆறாக ஓடுவதாவும் தெரிவித்தார். ஆகையால் இனிமேல் நான் ஒருவன் மட்டும் என்று சொல்லாதீர்கள் என்று நீதியரசரின் தலையில் ஒரு போடு போட்டு சொன்னார்.
இந்த வழக்கோடு வழக்காக சுற்றுப்புற சூழழ் ஆர்வலர்கள் பலர் கூடி, நாட்டில் எல்லா இடங்களிலும் எங்குமே சுற்றுப்புற சூழழ் பாதிப்பே இல்லை என்றும். அப்படி தோன்ற வாய்ப்புள்ள எல்லா இடங்களிலும் திட்டங்களை திட்டமிடும் போதே சென்று அவர்கள் எழுதவும் வரையவும் வைத்துள்ள எழுது கோல்களை மறைத்து வைத்துவிட்டதால் அந்த மாதிரி எதுவுமே நாட்டில் இல்லை. அப்படி அங்கே இல்லாத ஒன்றை இங்கே இப்போது கடலில் நடப்பதாகவும். அந்த குழுவில் இருக்கும் அனைவரும் நீச்சல் தெரியாது என்றும் அதனால் அந்த கருவிகளை எடுத்து மறைத்து வைத்து வேலைகளை முடக்க முடியவில்லை என்றும். அதனால் நீங்கள் அவர்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று மன்றாடினார்கள்.
நீதியரசரோ உடனே சட்டென்று சுசாவை பார்த்து, நீங்கள் இந்த சுற்றுப்புற ஆர்வலர்களை நாளை அந்த பாலம் வழியே கூட்டிச்சென்று அந்த பாலம் அருகாமையில் இருக்கும் அடையாள கல்லில் உட்காரவைத்து விட்டு வாங்கள். அவர்களும் இரவோடு இரவாக கருவிகளை மறைத்து வைத்துவிட்டு காத்திருக்கட்டும். பிறகு காலையில் மறுபடியும் நீங்கள் அந்த பாலத்தில் சென்று அவர்களை கூட்டி வந்துவிடுங்கள் என்று கட்டளையிட்டார்கள்.
இந்த கட்டளையை கேட்ட ஆர்வலர்கள் யாவரும் அமெரிகாவுக்கும் ஆப்பிகாவிலும் மாநாட்டுக்கு செல்ல இருப்பதால் அடுத்த யுகத்தில் சென்று வேலையை கட்டாயம் முடித்து வருவதாக உறுதிகூறி கையொப்பம் மிட்டுள்ளார்கள். சுசாவோ, அப்படி பாலம் வழியே கூட்டி செல்லவேண்டும் என்றால் முதலில் நீதியரசர்கள் ஈழத்து தகராரை சரி செய்யவேண்டும் என்றும். பிறகு அந்த பாலத்திற்கு இனையாக இன்னும் 6 பாலங்களை நாட்டில் இருக்கும் குரங்குகளையும் அணில்களையும் அழைத்துக்கொண்டு தமிழக அரசு கட்டி தரவேண்டும் என்றும். அப்படி கட்டும் அனைத்து பாலம்களுக்கும் அடிவரம் ஏதும் இல்லாமல் மிதக்கும் வண்ணமாக கட்டி தரவேண்டியது தமிழக அரசின் கடமை என்றும். இப்படி நீங்கள் உத்தரவு இட மறுத்தால் என்ன ஆகும் என்று திருச்ச வேலுவை கேட்டுப்பார்க்கவு என்று மிரட்டல் விடுத்து வந்துள்ளார் சுசா.
சுசா சொன்ன செய்திகளால் என்ன செய்வது என்று தெரியாத நீதியரசர்கள், சும்மா தடைவிதிக்க சொன்னால் கூட பரவாயில்லை இன்னமும் 6 பாலங்கள் வேண்டும் என்றல்லவா உத்தரவிட்டு சென்றுள்ளார் என்று, வழக்கு கூடும்போதெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி வழக்கை தள்ளிவைத்துக்கொண்டே செல்லலாம் என்று முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் பரவுகின்ற இந்த சூழலில். ஒரு வேளை மொத்தமாக தடைவித்து மேலும் ஒரு 6 பாலங்கள் கட்டவேண்டும் என்று உத்தரவிட்டல் என்ன செய்வது என்றும் தமிழக அரசு ஆலோசனை நடத்துவதாகவும் செய்திகள் வருகின்ற நிலையில் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று மக்களும் குழம்பியுள்ளார்கள்.
இந்த முயற்சியை முறியடிக்கு முகமாக தமிழக அரசு இன்னமும் ஒரு வழக்கை தொடுக்க இருக்கிறது. அதிலே இராமர் இந்தியாவின் எந்த எந்த பகுதிகெல்லாம் சென்றார் என்றும். அப்படி அவர் சம்பந்தமாக எழுதப்பட்ட அத்தை நூல்களில் சொல்லி இருக்கும் அத்தனை இடங்களிலும் எந்த எந்த இடங்கள் பாதுகாக்க படவேண்டிய இடங்கள் எவைகள் என்று கண்டறிந்து நீதி மன்றம் சொல்லவேண்டும் என்றும். அப்படி அறிவிக்க படுகின்ற அத்தனை இடங்களையும் முறையாக வேலி இட்டு இனிமேல் யாரும் எந்த சேதமும் விளைவித்துவிடாமல் இருப்பதற்கு அமைச்சர் பாலுவின் தலைமையில் இரு குழுவமைத்து அமெரிக்கா, ருசியா, ஆத்ரேலியா போன்ற நாடுகளில் உள்ள அறிவாய்ந்த அனுபவம் மிக்க பெறியாளர்களை டன் கணக்கில் டாலர்களையும் பவுண்டுகளையும் கொட்டி எப்படி பட்டவேளிகளை அமைக்கவேண்டும் என்ற ஒரு திட்டத்தை தயாரிக்க வைக்கவேண்டும் என்றும். அந்த திட்டம் தயாரிப்பதற்குள் எங்களது ஆட்சி முடிந்துவிடும் என்றும் அதனால் இந்த திட்டங்களை முடிக்கும் வரையி கழக ஆட்சியை கால வரையின்றி நீடிக்கவேண்டும் என்றும் வழக்கில் அறிப்பத்தாக ஊள்ளார்கள். மேலும் இராமன் வென்ற பூமியான இலங்கையை அங்கே உள்ள மனிதர்களை எல்லாம் அகற்றிவிட்டு இனி எந்த ஒரு மனிதனும் அங்கே செல்லாமல் இருக்கம் படி உடனடியாக வேலிகள் அமைக்கவேண்டும் என்றும் அதற்கு அங்கே சேது கால்வாய்கால கொண்டு வந்த கருவிகளை பயன் படுத்த போவதாவும். அதற்கு உதவும் வித்தத்தில் இந்திய முப்படைகளையும் உடனே இலங்கை அனுப்பவேண்டும் என்று கேட்க்கவுள்ளார்கள் என்றும் தெரிகிறது. மேலும் இந்த வேலைகள் அனைத்தும் முடியும் வரையில் இந்தியாவில் எந்த ஒரு இடத்திலும் கட்டிடமோ ஏன் கழிப்பிடம் கூட கட்டகூடாது என்றும். அப்படி அனுமதித்தால் நீங்கள் தடைவித்தித்து அளித்த தீர்ப்பு பொருளில்லாமல் போகும் என்றும் தெரிவிதுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.
தமிழகம் எந்த காலத்திலும் தொழிலும், வளத்திலும் முன்னேறக்கூடாது என்று கல்கத்தா முதலாலிகளிம், இன்னமும் சுசா வடக்கில் சுயேட்சையாக வடக்கில் நின்று செயித்தகாலத்தி கடன் கொடுத்த பிடிக்கடை முதலாளிகள் வரை இப்படி ஒரு முன்னேறம் தமிழகம் பெறப்போவதை கண்டு சுசாவை கண்டுகொள்வதற்காக தேடுவதாகவும். சுசாவோ அண்டார்டிக்காவிலோ இன்னனும் எங்க்கு எல்லாம் மனிதர்கள் சென்று பார்க்கமுடியாத இடங்க்கள் இருக்கிறதோ அங்கு எல்லாம் சென்று பாடம் எடுப்பதாக சொல்லி ஓடிவிட்டார் என்று அறிந்த அந்த முதலாலிகள், பேசாமல் இப்படி ஒரு திட்டத்தை நாங்களே தயாரித்து நிறைவேற்றி இருந்தால் இராமனின் பெயரால் இன்னமும் ஒரு யுகத்திற்கு தொழில் நடத்தி இருக்கலாம் எல்லவற்றையும் கெடுத்தானே இந்த சுசா என்று கண்கானிக்க அவரவர் தரப்பில் ஆட்களை விட்டு சென்றுள்ளார்கள் என்றும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.
இப்படி கனவு கண்டு பயந்து எழுந்த சுசா, இராமா இராமா எதையும் தாங்கும் இதயத்தையும். உதையும் தாங்கும் உடலையும் கொடப்பா என்று வேண்டிக்கொண்டு வழக்கு பொதிகளை எடுத்துகொண்டு நீதிமன்ற வளாகம் சென்றார். வாங்கிய எலும்பு துண்டுக்கு குறைக்கவில்லை என்றால், எலும்பு போட்டவன் எலும்பை அல்லவா எடுத்துவிடுவான். வழக்கு என்ன முடிவுக்கு செல்கிறது என்று பார்ப்போம்.
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago
6 comments:
இந்த ஆண்டு அமெரிக்க ஹார்வேர்ட் பல்கலைக் கழகத்திலே சிறப்புப் பாடமாக 75 லட்சம் ஆண்டு பொய்யும் இந்திய அறிவாளி உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் என்று பாடம் எடுக்கப் படும்.
சி ஐ ஏ, மொசாட்,விடுதலைப் புலிகள் அனைவரிடமும் வாங்கிக் கொண்டு அவ்வப்போது அவர்களை எதிர்த்தும் தான் கவரும் பார்ட்டியும் கொடுக்கும் பத்திரிக்கை நிருபர்கள் மூலமாக அறிக்கைகள் விடுவதே முழு நேர வேலை.
ஒரு ஆதாரமும் இல்லாமல் அம்மணமாக இருக்கும் ராஜாவின் ஆடையைப் புகழும் இவருக்கு இப்போது மாண்புமிகு பாலு அவர்களின் அண்டர் வேர் கிடைத்து விட்டதாம்.அதில் என்ன கண்டு பிடித்தேன் என்பதை உச்ச நீதிமன்றத்திலே சொல்லப் போகிறாராம்.நீதிபதிகளை ஒழுங்காகக் கேட்டு அவர் பக்கமே தீர்ப்பு சொல்ல மிரட்டுகிறாராம்.இல்லாவிட்டால் அவர்கள் மீதே வழக்கு தொடரப் போகிறாராம்.அவர்கள் காது கேட்கிறதா என்று மருத்துவச் சான்றிதழ் வேண்டுமாம்.
வாங்க அணானி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. சரியாக சொல்லியுள்ளீர்கள்.
For those who still believe T.R.Baalu as a gentle man read the results of http://www.google.com/search?ie=UTF-8&oe=UTF-8&sourceid=navclient&gfns=1&q=PM+CBI+baalu
Sethu project is a flop, not because of hindutva groups, but because of the corrupted politicans and bureaucrats involved in the project. The whole project is launched not to benefit the poor tamilians but to benifit the Baalu family business and ruling party men. The project's design is so poor that the digging has to be done frequently in sedhu to maintain the depth. And no ships have aggreed yet that they would use the sethu path.
Read some quotes about how Baalu and his family have benefited from the project ,
According to a news report carried out by Tamil News Paper Dinamani, the issues to be probed by the CPI include using a firm based in Andhra Pradesh as benami, for dredging operations in Setusamudram project, have contracts been given to TR Balu's family members? Have any members of TR Baalu's family benefited from such benami contracts?
In Golden Quadrilateral Project, complaints have been made that low-level politicians are involved in illegalities in many states. What is the truth in these allegations?
To what extent have TR Baalu family-related concerns have benefited from ONGC? What special privileges and facilities and concessions have been provided by ONGC to these entities? Have there been any illegalities in these facilities provide by ONGC? Details should be gathered.
Large bank loans have been taken in the name of TR Baalu's sons' firms and have not been repaid; is this allegation based on fact? To prevent banks from initiating action to recover the dues, has any abuse of office occurred by TR Baalu's attempted interventions? Are there cases pending in Bank loan recovery tribunals?
Reliable sources inform that the Prime Minister's Office has asked for these details to be gathered by CBI at the earliest.
We are used to oppose whatever the Hindu groups are claiming, but failed to notice the flaws in the project and our tainted politicians.
வாங்க கார்த்திக், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எப்போது எல்லாம் இது போல் மிகை பொருள் மிக்க திட்ட பணிகள் வருகின்றதோ அப்போதெல்லாம் இப்படி ஒரு ஊழல் புகார் உதிப்பது ஒன்றும் புதிதல்ல. உதாரணமாக, இராசீவ்வு காந்தியின் ஆட்சியில் இராணுவத்தின் வாங்கப்பட்ட பீரங்கிகளை பற்றி உலகமே அறியும். சுமார் ஒரு 10 ஆண்டு காலம் இதை வைத்து லாவனி பாடி இருப்பார்கள் மக்கள். ஆனால் நடந்தது என்ன, கார்கில் போரின் போது இந்த வகை பீரங்கிகளை கொண்டு தான் விமான தாக்குதல்கள் தொடுக்க முடியாத இடங்களில் எதிரிகளை சிதைத்து அனுப்பினார்கள். இதை நமக்கு தெரிவித்தவர்கள் அந்த 10 ஆண்டுகள் இந்த பீரங்கியை வைத்து லாவனி பாடியவர்களே, அதுவும் பெருமையாக அல்லவா குறிப்பிட்டார்கள். தனது தம்பியால் சுடபட்டு இறந்த அந்த இளம் தலைவரிடம் அத்தனை கோடிகள் எப்படி வந்தது என்று ஒருவரும் கேள்வி கேட்கவில்லை. அது போல் நாடு முழுவதும் 4 தட பாதைகள் அமைத்தால் இந்தியாவின் பொருளாதாரமே முன்னேறம் கொள்ளும் என்று சொல்லி திட்டபணிகளை நிறைவேற்றும் போதெல்லாம் யாருக்கும் மனதில் கேள்வி எழவில்லை எப்படி, இது வரையில் பாதைகளே இல்லையா என்று அல்லது இருக்கும் பாதைகள் என்ன ஆனது என்று. வேண்டாத மனிதர்கள் மருமகள் கதையாக அல்லவா இருக்கிறது இந்த வாதம்.
எங்களது கவலை எல்லாம், பெரியார் பிறந்த மண்ணில், கடவுளின் பெயரால் இப்படி ஒரு அக்கிரமத்தை அரங்கேற்ற முடியும் என்று மீண்டும் ஒரு முறை நிகழ்த்தி காட்டி இருக்கிறார்கள் இந்த கயவர்கள்.
சிறப்பான பதிவு !!! மதுரையை சிங்கபூராக மாற்றியது போல், ராமனாதபுரமும் ராமர் பாலம் சுற்றி உள்ள ஊர்கள் எல்லாம் சிங்கபூராக மாறும் என்று உறுதி அளிக்க படுகிறது .
வாங்க களப்பிரர், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Post a Comment