Monday, May 19, 2008

ஷாம்பைன் தமிழ் பள்ளி ஆண்டு விழா - 2008


பனிமலருக்கா ஷாம்பைன் தமிழ் பள்ளி.

2008 ஆம் ஆண்டுக்கான ஷாம்பைன் தமிழ் பள்ளியின் ஆண்டு விழா மே மாதம் 18 ஆம் நாள் தமிழ் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.



விழாவை துவக்கி வைத்து பேசிய ஆசிரியர் திரு.கல்யாணசுப்பு அவர்கள், தமிழ் பிள்ளைகளின் தமிழ் படிக்க்க காட்டும் ஆர்வத்தை, பெற்றோர்களது ஊக்குவிப்பையும் பாராட்டி பேசினார்.


அடுத்ததாக பேசிய ஆசிரியர் திரு.மயிலரசு அவர்கள், இந்த ஆண்டு விடாமல் பள்ளிக்கு வந்து பயின்ற மாணவர்களின் ஆர்வத்தையும், அவர்களது தமிழ் தேர்ச்சியும் குறித்து பெருமையாக குறிப்பிட்டார்.


பிறகு இலகு வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி அறிக்கையும், அதை தொடர்ந்து அந்த வகுப்பு மாணவர்களுக்கு நினைவு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

அதை தொடர்ந்து இளைய வகுப்பின் மாணவர்களுக்கும் தேர்ச்சி அறிக்கையும், அதை தொடர்ந்து நினைவு பரிசுடன் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

பிறகு, தொடர் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி அறிக்கையும், பரிசும், சான்றிதழ்களையும் வழங்கி மாணவர்களை பள்ளி சிறப்பித்தது.


இதை தொடர்ந்து பெற்றோர்களின் சார்பில் பள்ளியின் ஆசிரியர்கள் திரு.கல்யாணசுப்பு சுந்திரவேல் அவர்களுக்கும், திரு.மயிலரசு சிவஞானம் அவர்களுக்கும், திருமதி.ரம்யா வெங்கட் அவர்களுக்கும் நினைவு பரிசும் பாராட்டு இதழ்களும் வழங்கப்பட்டது.



நிறைவுரை ஆற்றிய திரு.இரவி அவர்கள், பள்ளி ஆசியர்களின் அர்பணிப்புகளுக்கு புகழாரமும், பெற்றோர்களது விடா முயற்சியையும் பாராட்டி பேசினார். இந்தியாவை விட்டு இவ்வளது தொலைவு வந்து விட்டோமே, பிள்ளைகளுக்கு நமது கலாச்சாரத்தையும் மொழியையும் கற்றுக்கொடுக்க நினைத்தாலும், வாய்ப்பு வசதிகள் இல்லையே என்று இருந்த ஷாம்பைன் வாழ் தமிழ் மக்களின் கனவுகளை ஷாம்பைன் தமிழ் சங்கமும், தமிழ் பள்ளியும் நிறைவேற்றுகிறது என்று நன்றியோடு குறிப்பிட்டார்.









0 comments: