Saturday, March 22, 2008

நீதி, நேர்மை, நாட்டு பற்று என்று தனக்கு தானே சொல்லிக்கொள்ளும் சுப்பிரமணி சாமியின் சங்கதி என்ன??

குமுதம் இணைய இதழில் "இரகசியங்கள் தெரிந்த சுப்பிரமணி சாமி" என்ற தலைப்பில் திருச்சி வேலுசாமி பேட்டி கொடுத்து இருக்கிறார். அவருக்கு முன் சுப்பிரமணி சாமியின் பேட்டியும், திருமாவளவனின் பேட்டியும் கொடுத்து இருக்கிறார்கள். முதலில் திருமாவளவன் பேட்டியில் இராசீவ்காந்தியின் படுகொலையில் அமெரிக்க உளவு துறையின் செயலாக்கமாக தான் இருக்கும் என்றும். இந்தியாவில் அமெரிக்காவுக்காக உளவு பார்க்கும் வேலையில் சுப்பிரமணிய சாமியும், சந்திரா சாமியும் செவ்வனே பார்த்து வருவதும், இராசீவ்காந்தியின் படு கொலையை நடத்தி முடிக்க திட்டமிடுதலில் இருந்து திசை திருப்பும் வரை உள்ள அனைத்து வேலைகளையும் இவர்கள் இருவரும் சேர்ந்து முடித்திருக்கிறார்கள் என்று குற்றம் சுமத்தினார்.

http://www.kumudam.com/interviews.php?id=2&strid=2796

பிறகு பேட்டியளித்த சுப்பிரமணி சாமி, ஈழத்தவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு அரசியலும் கட்சியும் நடத்தும் அவர் சொல்வதற்கொல்லாம் என்னால் பதில் சொல்லமுடியாது என்றும். தான் ஏன் திராவிட கட்சிகளை எதிர்கிறேன் என்றால் அவர்களுக்கு தேசிய உணர்வு இல்லை என்றும், செயலலிதாவுக்கு தேசபற்று அதிக அளவில் இருப்பதாக இப்போது தெரிந்ததனால் இந்த முறை அவருடன் ( கவனிக்கவும் எப்போதும் செயலலிதாவை அவள் என்று விளிக்கும் சாமி, அவர்கள் சொன்னார்கள் என்று இந்த பேட்டியில் பயந்து கொண்டு விளிப்பதை பார்க்கமுடியும்) சேர்ந்து இருப்பதாகவும். மேலும் இவருக்கு தேசபற்று திடீர் என்று பெருகிவிட்டதால் நாட்டின் வளர்ச்சி திட்டங்களை மூட நம்பிக்கையின் பெயரால் தடுத்துவைப்பதாகவும். தன்னால் தமிழகத்துக்கு எள் அளவேனும் பயன் இல்லை என்றாலும். தமிழகத்துக்கு எதுவும் கிடைத்துவிடவோ கூடாது என்றும். மேலும் இவைகள் எல்லா பேச்சுக்களையும் மிஞ்சும் விதமாக, தமிழகத்தை முன்னேற்ற கல்கத்தாவிற்கும் தூத்துகுடிக்கும் இடையில் இரயில் பாதையும், அனைத்துலக விமான நிலையமும் நிறுவினால் போதும் தமிழகம் முன்னேறிவிடும். மற்றபடி துறைமுகங்கள் அமைப்பதோ, கப்பல் போக்குவரத்து நடத்துவதோ அதனால் வரப்போகும் வாணிப பொருளாதாரத்தையோ தமிழகம் பெற்றுவிடக்கூடாது என்றும். மாறாக கல்கத்தாவிற்கு இங்கிருந்து ஊழியம் தமிழகம் செய்யவேண்டும் என்று சொல்ல அவருக்கு எப்படி தான் மனது வருகிறது என்று தெரியவே இல்லை.

சேது கால்வய் திட்டத்தை நிறைவேற்றினால் முதலில் கல்கத்தா செல்லும் கப்பல்கள் குறைந்த செலவில் சென்று அடையும். பிறகு சென்னையோடு சரக்கை இறக்கிவிட்டு இனிமேல் இங்கிருந்து கொண்டு செல்லும் மற்றும் உற்பத்தி பொருளை சென்னையிலே கொண்டு வந்து உங்களது செலவிலே கொடுந்துவிடுங்கள். அந்த செலவை பொருளின் விலையில் எங்களால் கொடுக்கமுடியாது என்று அனைதுலகம் சொல்லுமேயானால். தொழில் நடத்தும் கல்கத்தாகாரர்கள், இலாப பங்கை பெருக்க பயணக்கூலியை மிச்சம் பிடிக்க பின்னாளில் தொழில்களை தமிழகத்துக்கோ அல்லது அருகில் உள்ள மாநிலங்களுக்கோ மாற்றவேண்டிய கட்டாயம் வந்துவிடுவது ஒரு புறம் என்றாலும். அது எப்படி தமிழகத்தில் பணம் புழங்குவது, வேலை கிடைப்பது என்றாகிவிட்டால் தமிழகம் முன்னேறிவிடாதா. மக்கள் பசியும் பட்டினியுமாக பரதேசிகளாக இருக்கும் வரையில் தான், தமிழகத்து உணவை உண்டுவிட்டு, தமிழ் படிக்காதீங்க பதிலுக்கு கிரேக்கமோ அல்லது வேறு ஏதாவது ஒரு மொழி தமிழ் அல்லாமல் படியுங்கள் என்றும். அமெரிக்கா வீசும் எலும்பு துண்டுக்கும், வட நாட்டு தொழிலதிபர்களுக்கு இப்படி அரசியல் மாமா வேலைகளையும் தான் பார்க்க முடியும்.

இதிலே பேச்சு வாக்கிலே தான் பொய்யே பேசமாட்டேன் என்று அனைவருக்கும் தெரியும் என்றும். வேண்டும் என்றால் அந்த ஆணையத்தின் தீர்ப்பை படித்து பாருங்கள் என்றும், இல்லை என்று பேட்டியாளர் சொன்னால் அப்போ இந்த ஆணையத்தின் பேட்டியை படித்து பாருங்கள் என்றும். ஆதாரம் எங்கே என்றால் அது எனது வேலை இல்லை என்றும், ஆனால் நான் சொல்லும் மற்ற செய்திகளை நீங்கள் யாவரும் கேள்வியே கேட்க்காமல் நம்பவேண்டும் என்றும் முன்னுக்கு பின் முரனாகவே பேட்டியை முடித்தார். அதுவும் ப்பிர மணி என்று அதிமுகா மகளீர் அணி கொடுத்த வரவேற்பை எல்லாம் மறந்துவிட்டீர்களா என்றால் சிரிப்பாரே பாருங்கள் ஒரு வெக்கம் கெட்ட சிரிப்பு. மனிதனுக்கு மானம் வெட்கம் சூடு சுரனை என்று எந்த வகையராவும் இல்லை என்று தெளிவாக சொல்வார். அதுவும் முதல்வர் கருணானிதியை அவன் என்று விளித்து போசும் அவர் செயலலிதாவை எங்கே மறந்தேனும் அவள் என்று விளித்துவிடுவேனோ என்று பிரசவ அவதிகொள்வதையும் பார்க்கமுடியும்.

http://www.kumudam.com/interviews.php?id=2&strid=2909

இதற்கு பிறகு பேட்டி கொடுக்கிறார் திருச்சி வேலுசாமி. ஒரு 30 நிமிடம் நிகழும் அந்த பேட்டியில் அதிர்ச்சிமேல் அதிர்ச்சி. பேச்சுக்கு பேச்சு தேசியம் என்று சொல்லும் சாமியின் வண்டவாளங்களை தண்டவாளங்களில் ஏற்றுகிறார். அவைகளை எழுதினால் பத்தாது நீங்களே பார்த்துகொள்ளுங்கள்.

http://www.kumudam.com/interviews.php?id=2&strid=2959#

அடிக்கடி ஆப்பிகாவுக்கும் அண்டார்டிக்கவுக்கும் போகிறேன் என்று சென்றுவரும் இந்த உளவாளியின் கோரமுகம் புரியும். இதெல்லாம் ஒரு பிழைப்பா சாமி, இதற்கும் பெண்ணை வைத்து தொழில் நடத்துபவனுக்கும் என்ன வித்தியாசம் சாமி. இதற்கு தான் இத்தனை படித்தேன் என்று சொல்கிறீர்கள். வெட்கம்.......

1 comments:

Anonymous said...

it is very well understood by tamil loving people that he is a croook we shoud never give any importance to him or his statements i dont from where he is getting funds why he is giving statmeent against tamil sentiment hee shoud discarded like insect