Tuesday, May 13, 2008

கல்லூரி - திரைவிமர்சனம் ( ஆங்கிலபடத்தின் தமிழாக்கமா )

திரைபடங்கள் என்றால் உல்லாச வாழ்க்கையும், பணக்காரர்களிம் பொழுதுகளும் வாழ்க்கை முறையும் தான் காட்டும் வகை என்று இருந்த காலகட்டதில். ஏழ்மை என்று ஒன்று இருக்கிறது, அவர்களது வாழ்க்கையும் வாழ்க்கைதான். அவர்களின் வாழ்க்கை வசதி படத்தவர்களின் வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை என்று காட்டிவரும் இயக்குனர்கள் வரிசையில் பாலாசிசக்திவேல் இணைந்துள்ளார் வாழ்த்துக்கள்.


படம் ஆரம்பம் முதல் இறுதிவரை ஏழ்மையை காட்சிகளில் தவழவிட்டு அவைகளின் நடுவே கதையை அருமையாக நகர்த்தியுள்ளார். அறிமுகத்தில் வரும் வில்லுப்பாட்டு இந்த கிராமிய படைப்புக்கு இன்னமும் மெருகு கூட்டுகிறது.


கதை என்ன என்று அனைவருமே ஆரம்பத்திலேயே கனித்துவிடும்படி வைத்துவிட்டு, அவர்களது கனிப்பு சரியா என்று கடைசிவரை காத்திருக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.


உன் பார்வையில் ஓராயிம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே பாடலை அருமையாக பயன் படுத்தியுள்ளார். 20 வருடங்களுக்கு பிறகும் அந்த பாடல் அதே இனிமையோடு திரையில் இசைக்கும் போது இளையராசாவின் படைப்பை வியக்காமல் இருக்க முடியவில்லை. பாடல் வரும் அந்த 2 இடங்களும் மனதை வருடும் விதமாக அமைந்திிருந்தது. அதிலும் இரண்டாவது முறை வரும் இடத்தில் அந்த பாடல் கதையின் தலைவனை முதலில் நெளியவைத்தும் பிறகு ஓட ஓட விரட்டும் வரை சுவையாக படமாக்கியுள்ளார் இயக்குனர்.


ஆண்டாண்டு காலங்கள் கடந்தாலும் இன்னமும் நீதி கிடைக்கவில்லை என்றதை வருத்தத்தோடு தெரிவித்தாலும், என்றைகாவது நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை தெரிவித்து இருப்பது இந்திய மக்களாட்சியில் இன்னமும் மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்று சொல்லாமல் சொல்கிறது.


சோகமான முடிவாக இருந்தாலும், அந்த காட்சிக்கு முந்தையக காட்சிவரையில் ஒரு எதிர்பார்ப்போடும் நல்ல முடிவை நோக்கி கதை பயணிப்பதாக கொண்டு சென்றது இயக்குனரின் திரைக்கதைக்கு கிடைத்த வெற்றி. கதையின் நாயகி அருமையான தேர்வு, நடிக்க வரவில்லை என்றாலும் சூழ் நிிலைகளுக்கு தகுந்தார் போல் ஒரு சோகமும் தவிப்பும் கூடிய முகம், தவிற கல்லூரி படிக்கும் வயதில் இருப்பதால் அருமையாக பாத்திரத்திற்கு பொருந்துகிறார். இவரை இனிமே வாய்ப்பு தரும் அனேக இயக்குனர்கள் அனேகமாக இதே போல் ஒரு தவிப்பும் பதட்டமு கூடிய ஒரு வெகுளிப்பெண் பாத்திரத்தையே கொடுக்கு நமக்கு வெறுப்பு வருவரை விடமாட்டார்கள்.


இது வரையில் கல்லூரியின் கதையை பற்றி மட்டுமே பார்த்தோம். ஆனால் மற்றவர்கள் கவனித்தார்களோ இல்லையோ என்னக்கு இப்படி தோன்றியது படத்தை பார்த்து முடித்ததும். எனது கனிப்பில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும்.


ஒன்பது ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலத்தில் டைடானிக்கு என்று ஒரு படம் வந்ததும் அந்த படத்தின் கதையையும் மக்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. பின்னாலே நடக்கவிருக்கும் ஒரு பெரிய விபத்தினை விளக்கும் படமாக அந்த படம் எடுக்கப்பட்டது. ஆனால் அந்த விபத்திற்கு முன்னே ஒரு காதல் கதையை களமாக கொண்டு கதை உருவாக்கப் பட்டிருந்தது. அந்த பொருந்தாத காதலை நிறைவேற்றும் முகமாக நாயகனும் நாயகியும் படும் பாட்டை பகட்டும் பணமும் கேலி செய்வதாக கதையை அமைத்து அந்த காதல் வெல்லப்போகும் கணத்தில் கப்பல் விபத்துள்ளாகி மூழ்கியதாகவும். அந்த சோக நிகழ்வை அந்த கதையின் நாயகி தனது தள்ளாத வயதில் நினைவு கூர்வதையும் இயக்குனர் அழகாக கதையமைத்து கூறியதை யாரும் மறந்திருக்க முடியாது.
இப்போது கல்லூரியின் கதைக்கு வருவோம். அங்கே முதல் காட்சியில் மூழ்கிய கப்பலை தேடும் காட்சியை காட்டுவார்கள், இங்கே இவர்கள் அந்த இடத்தை தூய்மை செய்யும் காட்சி. அங்கே கதா நாயகன் கப்பல் புறப்படும் போது ஓடோடி வந்து ஏறுவான். இங்கே நாயகன் ஓடும் வண்டியில் ஓடோடி வந்து தொற்றிக்கொள்வான். அங்கே ஆரம்ப காட்சியில் அனைவரும் மகிழ்ந்து இருக்கும் சிரித்துகொண்டிருக்கும் வேளையில் நாயகி மட்டும் மனதுக்குள் அழுது கடைசியில் தற்கொலைக்கு துணிவாள். இங்கே கல்லூரியின் அறிமுக வகுப்பில் அனைவரும் அகமகிழ்ந்து இருக்கும் வேளையிலே நாயகி எதையோ நினைத்து அழுத வண்ணமாகவே இருப்பாள்.
அங்கே ஏழையின் உலகை கண்ட நாயகி நாயகனின் உருவம் மற்றும் ஏழைகளுக்கே இருக்கும் பரிவையும் கண்டு அகமழிந்து அவனுடம் காதல் கொள்வாள். இங்கே இவளும் முதலில் ஏழைகளை பார்க்க பிடிக்காமல் இருந்தாலும் பிறகு அவர்களது பரிவில் மகிழ்ந்து டெல்லி சென்று படிக்கும் வாய்ப்பையும் கைவிடுவாள். அங்கே மாப்பிளை இவர்களது காதலை விரட்டி அடிக்க முயல்வான். இங்கே நட்பு என்ற வட்டமும் சூழ் நிலையும் இவர்களை விரட்டும். அங்கே கேட் வின்சுலேட்டை சுற்றியே கதை பின்ன பட்டிருக்கும், இங்கே நாயகியை சுற்றியே கதையும் பின்னி வரும்.
இப்படி ஒவ்வோரு காட்சிக்கும் ஒற்றுமையை விளக்கிகொண்டே போகலாம். ஒரே வாக்கியத்தில் சொல்வதென்றால், அங்க்கேயும் ஒரு பெரிய விபத்தை படமாக்கினார்கள். கடைசி 30 நிமிட காட்சிக்காக ஒரு அருமையான காதலை கதையாக கொண்டார்கள். இங்கேயும் அதே கடைசி 20 நிமிட காட்சிக்காக ஒரு கதை தேவைபட்டது. ஏன் வீன் சிறமம் என்று அதே கதையை அப்படியே தமிழில் ஆக்கிவிட்டார்கள் போலும். என்ன அங்கே விபத்தை வினாடிக்கு வினாடி எல்லா செய்திகளையும் விட்டுவிடாமல் அருமையாக சொல்ல முடிந்தது விபத்து உட்பட. ஆனால் இங்கே படுத்து உறங்கியதோ ஒரே பெண், பிறகு எப்படி மூவர் கைகோர்த்த வண்ணம் இரந்தார்கள் என்று படத்தில் விளக்கம் இல்லை. அவ்வளவும் விளக்கமாக எடுக்கப்பட்ட காட்சியாக இருந்து இருக்கும். அந்த காட்சிகளின் கோரமும், அதன் பால் ஏற்பட போகும் குழப்பங்களையும் மனதில் கொண்டு தனிக்கை குழு வெட்டி இருக்கும். இவ்வளவு பணம் கொடுத்ததே அதிகம் இனிமேல் எல்லாம் பணம் இல்லை என்று தயாரிப்பாளர் சொல்லி இருப்பார் போலும். வந்த வரையிலும் போது என்று விட்டு வைத்து விட்டார் போலும் இயக்குனர்.
நல்ல முயற்சி, இனிமேல் யாரும் டைடானிக்கு படம் தமிழில் வரவே இல்லை என்று புலம்பமுடியாது சென்சு அண்டு சென்சபலிட்டி போல.

3 comments:

')) said...

என்னங்க படத்தை இப்படி பிரிச்சு மேஞ்சு இருக்கீங்க. நல்ல விமர்சனம். நீங்க சொன்ன அந்த டைட்டானிக் கப்பல் கதை மாதிரி தான் இருக்கு. நீங்க சொன்ன பிறகு தான் நானே யோசித்தேன். நல்ல சிந்தனை. என்ன இருந்தாலும், கதைக்கும் கிளைக்மேக்ஸுக்கும் கொஞ்சம் சம்மந்தம் இல்லாத போலதான் இருந்தது கல்லூரி!!

')) said...

வாங்க தமிழ்மங்கை, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

')) said...

கல்லூரி குறித்து ஒர ஒப்பீட்ட ஆய்வுடன் வந்துள்ளீர்கள். சரிதான் நீங்கள் சொல்வதும். ஒப்பிட்டால் அப்படித்தான் உள்ளது. பதிவகிளில் இப்படத்தை பலவிதமாக பேசிவிட்டார்கள். நேரம் இருந்தால் எனது விமர்சனத்தையும் படித்துப் பாருங்கள்.

http://jamalantamil.blogspot.com/2007/12/blog-post.html

நன்றி