Thursday, October 18, 2007

ஸ்ரீவித்யா முதலாம் ஆண்டு நினைவு நாள்


உனது நினைவாய் நாங்கள்


உன்னை நோய்க்கும் தீய்க்கும் கொடுத்து
முடிந்தது ஓராண்டு

தனிமை போராட்டாம் நோயில் முடிந்து
பின் மரணத்தில்

இருந்த வரை உன்னை அழவைத்தது திரை
இப்போது நாங்கள்

கண்ணீரை பார்க்கவே பொருக்கவில்லை அன்று,
அதற்கும்கூட வழியில்லை

வாழ்கை போராட்டம் பொதுவாக, உனக்கோ
போராட்டமே வாழ்க்கை

இப்போதாவது சிரித்தாயே துன்பத்தை பார்த்து
அதுவே கடைசியாய்

இயற்கையயா விதியையா கடவுளையயா யாரை
நான் சபிக்க

அந்த ஒரு சிரிப்புக்காக அனைத்தையும்
மன்னித்து விடலாம்

இனி இருக்கும் காலத்துக்கும் என்ன
செய்யப்போகிறோம் நாங்கள்

என்னை போல் எத்தனை அனாதைகளை
விட்டு சென்றாயோ

தாயே தாங்கவில்லையே மனது, நின்றுவிடாதா
விதியின் பசி

நீயே இல்லை, இனி என்ன
நடந்தால் எனக்கென்ன.

10 comments:

')) said...

அதற்குள் ஸ்ரீவித்யா அவர்கள் மறைந்து ஓர் ஆண்டு ஆகிவிட்டதா ?

திரைக்குச் செல்லாவிட்டாலும் அவரது அம்மாவைப் போன்றே
நல்ல பாடகியாகவும் வந்திருக்க வேண்டியவர்.

:(

ஆழ்ந்த அனுதாபங்க !

')) said...

thanks for remembering her

')) said...

ஆறுதலுக்கு நன்றி கோவி கண்ணன் மற்றும் கானா பிரபா

')) said...

ஸ்ரீவித்யா மறைந்து ஒரு ஆண்டு ஆகி விட்டது என்பது நம்ப முடியவில்லை. காலச் சக்கரம் வெகு வேகமாக சுழல்கிறது. அருமையான நடிகை. கண்ணழகி. நினைவு கூர்ந்ததற்கு நன்றி.

')) said...

வருகைக்கும் ஆறுதலுக்கும் நன்றி சீனா.

')) said...

\\அந்த ஒரு சிரிப்புக்காக அனைத்தையும்
மன்னித்து விடலாம்\\

உண்மையான வரிகள்...
அந்த தாய்மை சிரிப்பின் அழகே அழகு தான்.

')) said...

வருகைக்கும் கருத்கும் நன்றி கோபிநாத். அந்த வரிகளில் சொன்னது அவரது நிம்மதியை.

')) said...

உங்கள் அனுதாபம், கருணையுள்ளம் பாராட்டிற்குரியது.

அனா உங்க தெருவில உணவு இல்லாம நாளை சாகப்போகின்றவர்களை பற்றி ஒரு தடவை யோசியுங்க. சினிமாக்காறனுக்கு காட்டுற பாசத்தில பாதியை மற்றவர்களிடமும் காட்டலாமே!!!

புள்ளிராஜா

')) said...

உங்கள் அனுதாபம், கருணையுள்ளம் பாராட்டிற்குரியது.

அனா உங்க தெருவில உணவு இல்லாம நாளை சாகப்போகின்றவர்களை பற்றி ஒரு தடவை யோசியுங்க. சினிமாக்காறனுக்கு காட்டுற பாசத்தில பாதியை மற்றவர்களிடமும் காட்டலாமே!!!

புள்ளிராஜா

')) said...

வாங்க புள்ளிராஜா கருத்துக்கு மிக்க நன்றி.