Friday, October 26, 2007

காணாமல் போன 6.6 பில்லியன் பணத்தை தேடி கண்டுபிடித்தது சிங்கள இராணுவம்.

அனுராதபுர தாக்குதலில் காணாமல் போன 6.6 பில்லியன் பணத்தை சிங்கள இராணுவம் கடமையாக தேட ஆரம்பித்தது. அங்க்கு வந்திருந்த 21 பேரில் யார் எடுத்து வைத்திருப்பார்கள் என்று அவர்களுக்கு தெரியவில்லை. அதனால் எல்லோரிடமும் சோதனை நடத்தவேண்டும் என்று முடிவு கட்டி ஒவ்வோருவராக எடுத்து வந்து தேட ஆரம்பித்தார்கள்.

முதலில் அவர்கள் கொண்டு வந்திருந்த துப்பாக்கி பைகளிலே மற்றும் இதர சுமைபைகளில் சோதனை நடத்தினார்கள். 6.6ல் ஒரு நயா பைசாவைக்கூட காண முடியவில்லை. பிறகு ஆங்காங்கே சிதறி கிடக்கும் வான் கலங்களில் ஏதும் இருக்குமோ என்று எரிந்து முடிந்திருந்த கலங்களில் சோதனை மேற்கொண்டனர்.

அங்கேயும் இங்கேயும் என்று தேடி எங்கேயும் அந்த 6.6 பில்லியன் பணம் இல்லை. பிறகு தனது கட்டளையகம் தொடர்பு கொண்டு தெரிவித்தனர். கட்டளையகமோ வந்தால் பணத்தோடு வாருங்கள் இல்லை என்றால் அப்படியே ஓடிவிடுங்கள் என்று கூறினார்கள் போலும்.

விரக்தியின் பிடியில் ஆட்பட்ட படையினர், எப்படியும் பணத்தை எடுத்துக்கொண்டு தான் போக வேண்டும் என்று விட்ட இடத்தில் இருந்து மறுபடியும் தேட ஆரம்பித்தனர். சுமாராக ஒரு 5 அல்லது 6 மணி நேரம் தேடியும் அந்த பணம் எங்க்கேயும் கிடைக்கவில்லை.

அப்போது தான் அவர்களுக்குள் இருந்த ஒரு அறிவாளி கூறினான், நாம் எவ்வளவு தேடினோம் எங்கே எங்கே தேடினோம் என்று அவர்களுக்கு தெரியாது மக்களுக்கும் தெரியாது. அதனால் நாம் கடினமாக தேடியதை அனைவருக்கும் சாட்சியோடு தெரிவிக்கவேண்டும் என்று.

அவன் சொன்னது அந்த தேடும் குழுவில் உள்ள அனைவருக்கும் சம்மதம் தெரிவிக்க, சாட்சிகளோடு புறப்பட்டார்கள் முகாம் நோக்கி. வழியிலே தோன்றியவர்கள் அனைவருக்கும் தாங்கள் எவ்வளவு கடினமாக தேடினோம் என்று விளக்கமாக விவரித்தபடி சென்றார்கள்.

வழியில் போவோரும் வருவோருக்கும் மட்டும் சமாதானம் சொன்னால் எப்படி என்று தெரிந்தவர்களுக்கும், அறிந்தவர்களுக்கும் பத்திரிக்கை மூலமும், மின்னஞ்சல் மூலம் தனது பக்கம் உள்ள நீதியை சிங்கள இராணுவம் எடுத்து சொல்லியுள்ளது.

ஆமாம் அந்த 6.6 பில்லியன் பணம் காணாமலேயே தான் போய்விட்டது. எங்கே போனது என்று யாருகுமே தெரியவில்லை. இதை படிக்கும் மக்களே உங்களது ஊர்களில் ஏதும் செத்த பாம்புகளை அகற்றவோ, காணாமல் போன பணத்தை தேடவோ வேண்டும் என்றால் சிங்கள இராணுவத்தை தொடர்புக்கொள்ளவும். அந்த ஒன்றும் அறியா அப்பாவி இராணுவத்தினர் வந்து தோடிக்கொடுத்து ஊழியம் புரிவார்கள். இவர்களது சேவையை பாராட்டி நொபேல் பரிசு கொடுத்தாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை, வெட்க்கம் கெட்ட உலகம் இது.

6 comments:

')) said...

அடக்கமாக மானம் கெட்டவனின் தோலை உரிக்கிறீர்கள்!
நன்றி

')) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, இந்த ஈன செயலை விளக்கி மேலும் ஒரும் அவமானத்தை அந்த வீரர்களுக்கும், போராளிகளுக்கும் தேடிக்கொடுக்கவேண்டாமே என்று அப்படி எழுதினேன். இதில் என்ன அடக்கமாக கண்டிக்க வேண்டி இருக்கிறது, வன்மையாக கண்டிக்கவேண்டிய செயல் இது. ஒரு வேளை ஐ நா விற்கும் மற்ற சர்வதேச சமூகத்திற்கும் இப்படிதான் அவர்கள் அவர்களது ஈன செயலை நீதி படுத்தி சொல்லி இருப்பார்கள் போலும். அதனால் தான் இன்னமும் எந்த நாடும் கண்டனம் தெரிவிக்கமல் இருக்கிறது இந்தியா உட்பட. அவர்கள் வெட்கம் அற்றவர்கள் கண்டிக்காதவர்களை என்ன என்று சொல்வதே தெரியவில்லை.

')) said...

super dear.......ellam thamil makkalum ondru serthaal thavira veru vazhi theriyavillai......

kevalamana sinhalavan.thuuuuuuuu

')) said...

வாங்க சிவானி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பதிவிலே குறிப்பிட்டது போல் இப்போது அந்த இராணுவ பிரிகேரியர் சப்பைக்கட்டு கட்டுகிறார். பாலிதீன் மூடிதான் எடுத்து வந்தார்களாம் யாரோ படத்தை மாற்றி வெளியிட்டுவிட்டாங்களாம் பாவம். இதோ அவர் கூறியதாக வலையில் வந்த தகவல்.
"தற்கொலை அங்கிகளுடன் இருந்த சடலங்களை முகாமிலிருந்து நகரத்தினூடாக வைத்தியசாலைக்கு எடுத்து செல்ல வேண்டியிருந்தமையினால் பொதுமக்கள்,போக்குவரத்து, வைத்தியசாலை மற்றும் நோயாளர்களின் நலனை கருத்தில் கொண்டு சடலங்களில் இருந்த தற்கொலை அங்கிகளை அகற்றி பொலித்தின் மூலம் போர்த்தியே எடுத்துசென்றோம் .

அவ்வாறு கொண்டு செல்லப்பட்டபோது சடலங்களை படம்பிடித்தவர்கள் பின்னர் படங்களை மாற்றியிருக்கின்றனர் இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், பொலிஸ் மா அதிபர் வடமத்திய மாகாண பிரதிபொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்"

')) said...

தமிழ்நாட்டு உறவுகள் எங்கள் உணர்வுகளை புரிந்து கொள்கிறார்கள் என்பதே எம்துன்பத்தின் பாதியை மறக்கடித்து விடுகிறது.
நன்றி உங்கள் பதிவுகள் எம்மில் காட்டும் அக்கறைகளுக்கு.
இதுவரைகாலமும் சிங்களதரப்பால் உலகுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்த அனைத்து செய்திகளின் உண்மையின் தரம் தோலுரித்துக் காட்ட போதுமான ஆதாரமாக இந்த நிர்வாண சம்பவம் விளங்குகிறது.
போரை தம்கண்களால் நேராக பார்க்க முடியாத சந்தர்ப்பத்தாலோ என்னவோ சிலர் இப்படி அரச தரப்புக்கள் விடும் அம்புலிமாமா தரத்து கதைகளை எல்லாம் நம்பித்தொலைக்கிறார்கள்.
IPKF இன் மக்கள் பயங்கரவாதமும் அவர்கள் அளந்த கதைகளின் உண்மைத்தன்மையும் எத்தனை தமிழ்நாட்டு உள்ளங்களின் அறிவை எட்டியிருக்கும்?

')) said...

தேவன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, போராட்டம் வெற்றி பெறவேண்டும். சமாதான முயற்சி பெயரால் இந்திய இராணுவம் செய்த பயங்கரவாத்திற்கு மன்னிக்க வேண்டுகிறோம். விரைவில் இந்த வெறியாட்டம் அழியும் என்று நம்புகிறோம். தமிழீழம் மலர வேண்டும் அதன் தோற்றம் உலகுக்கே எடுத்துக்காட்டாக விளங்கும்.