Wednesday, October 17, 2007

இராமன் சீதை



ஆண்டாண்டு காலமாய் சீதையை தேடிய இராமன், கடைசியாக அவள் இருக்கும் இடம் தெரிந்ததும் அவளிடம் நோக்கி புறபட்டான். உடன் உள்ளோர் அனைவரை அழைத்துக்கொண்டு செல்லும் எண்ணம் அவனுக்கு இருந்தது. இருப்பினும் சீதை இருப்பதாக இருக்கும் இடம் உறுதி படுத்தப்பட்டதும் மற்றவர்களை அழைத்துக்கொள்ளும் திட்டத்தை தெரிவித்துவிட்டு புறப்பட்டான்.

நீண்ட நெடிய பயணத்திற்கு பிறகு அங்கு வந்தடைந்த அவர்கள் சற்றே இளப்பாரிவிட்டு மீண்டும் பயணிகலானார்கள். அப்படி இப்படி என்று ஒரு வழியாக வந்து செர்ந்த பிறகு. மற்றவர்களுக்கும் இந்த இடத்தை பற்றியும், வந்து சேரவேண்டிய நேரம் இடம் குறித்து தெரிவித்த இராமன் நாளைக்கு காலையிருந்து செய்ய வேண்டியவைகளை பட்டியலிட்டு உடன் வந்திருந்தவர்களிடம் வேலைகளை பிரித்து ஒப்படைத்துவிட்டு சற்று அயர்ந்தான்.

வேலைகளை பெற்றுகொண்டவர்கள், செயல் திட்டங்களை எப்படி நிறைவேற்றுவது என்று அவர்களுக்குள் பேசி உறுதி படுத்திக்கொண்டார்கள். நாளையை நினைத்து அனைவரும் உறக்கம் இல்லை தான். இருந்தாலும் அனைவரும் கண்களை மூடியவண்ணம் ஒரு தவமாக படுத்து இருந்தார்கள்.

நாடு விட்டு நாடு போகவேண்டிய தயாரிபானதால், பயண ஏற்பாட்டில் வரும் சிக்கள்களை களைந்தெரியவும். அங்கே அத்தனை மக்களையும் அழைத்து போக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அனைவரும் சேர்ந்து முடித்து அனைவரும் கிளம்பி வந்துக்கொண்டு இருந்தார்கள்.

அதிகாலையிலே அனைவரும் தயாரானார்கள். இராமனது தலைமையில் அவர்கள் அனைவரும் புறப்பட்டார்கள். இராமனது சார்பில் மறைந்திருந்து செய்திகளை சேகரிக்க சென்றவனிடம் இருந்து சேதி வந்தது. இவர்கள் அந்த மறைவிடன் நோக்கி பயனிகலானார்கள். மிகவும் அருகாமையில் இருக்கும் இடமாக இருந்தாலும் தகுந்த பாதுகாப்புடனும், எந்த சல சலப்புக்கும் இடமில்லாமல் அவர்கள் முன்னேருவது கடினமாத்தான் இருந்தது.

ஒருவழியாக மறைவிடத்திற்கு வந்தவர்கள், அங்கே இருந்தவனும் இவர்களை அழைத்து சென்று சீதை இருக்கும் இடத்தினை காண்பித்தான். பார்வைக்கு தெளிவாக தெரியவில்லை என்றாலும் சீதையை அவர்களுக்கு அடையாளம் தெரிந்தது.

இத்தனை ஆண்டுக்கு பிறகு பார்க்கும் இராமனுக்கோ உருகுலைந்து, தோற்றமே மாறிபோய் இருக்கும் சீதையை பார்த்ததும் அவன் பட்ட துன்பம் சொல்லிமாளாதது. இராமனை அப்படியே இருக்கவிட்டு விட்டு ஆகவேண்டிய காரியத்துக்காக தயாரானார்கள் அனைவரும். அங்கே அமர்ந்த வண்ணம் இராமன், சீதை இருந்த இடத்தையே பார்த்தவனாக இருந்தான்.

மனதுக்குள் சீதையின் இனிய நினைவுகள், பாலைவனமாகி போன இதியத்தில் புதிய உணர்வுப்புணல். இத்தனை ஆண்டு காலம் மனதிலே தேக்கி வைத்திருந்த ஆசை, கேள்வி, இன்ன பிற எல்லாம் தானாகவே ஒரு ஓட்டமாக ஓட ஆரம்பித்தது இராமனுக்குள். நகரும் ஒரு ஒரு நிமிடமும் அவனுக்கு உகம் உகமாக சென்றுக்கொண்டு இருந்தது. இங்கு வர புறப்பட்டவர்கள் எல்லாம் நாளைய காலையில் தான் இங்கு வந்தடைவார்கள், அது வரை இவர்களால் எந்த நடவடிக்கையுிம் மேற்கொள்ள முடியாது. பொருமை காத்தான் இராமன்.

மறைவிடத்தில் இருந்து தங்குமிடத்திற்கு திறும்பினார்கள் அனைவரும் அமைதியாக. இப்படி ஒரு குழு அங்கு வந்து போனதையோ, கண்கானிப்பில் ஈடு படுவத்தையோ சீதையோ, அங்கு இருப்பவர்களும் அறியமாட்டார்கள். இன்னமும் ஒரு பொழுது கழிந்துவிட்டால் காலையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள போகிறார்கள், ஆனால் இராமனை போலவே அனைவருக்கும் ஒரு பதட்டம்.

இராமனுக்காக சீதையின் தரப்பில் இருந்து வந்து உதவும் விதமாக வந்திருந்தவர்கள் காலையில் அனைவரையும் அழைத்துக்கொண்டு சீதையின் இடம் நோக்கி சென்றடைந்தார்கள். இடத்தையும் அவர்களையும் தூரத்தில் இருந்து காண்பித்துவிட்டு அவர்கள் சென்று மறைந்தார்கள்.

திடீர்ரென தோன்றிய அனைவரையும் பார்த்த சீதை கல்லாக உறைந்தாள், இராமனை ஏறேடுத்துப்பார்க்கவும் அவளுக்கு சக்தி இல்லைதான். சீதையும் இராமனையும் விட்டு விட்டு அனைவரும் விலகி சென்றார்கள். ஆண்டாண்டு காலமாய் அழுது அழுது இனி அழுகையே எப்பவுமே வாரா என்று இருந்த விழிகளில் நீரோடுவதையும் கவனிக்க முடியாமல் பூமியை மட்டுமே பார்த்துகொண்டு இருந்தாள்.

அமைதியை கலைக்கும் விதமாக இராமன் கேட்டான் ஏன் சீதா இப்படி செய்தாய், நான் இல்லாத நேரத்தில் ஊர்கலவரத்தில் உனக்கு அப்படி நேர்ந்ததால் உன்னை விட்டு ஓடி விடுவேன் என்று நினைதாயா என்றான் மேலும். அது வரையில் அமைதிகாத்தவளால் அதற்கு மேலும் முடியவில்லை. அவனது கைகளை பிடித்துக்கொண்டு அழுதுதீர்த்தாள் வாய்விட்டு.

அழுகைக்கு அப்பால் எவ்வளவோ பேசினார்கள் இராமனும் சீதையும், கடைசியாக சீதை சொன்னாள் என்னால் ஊரில் வந்து உங்களோடு வாழ முடியாது. அதுவும் ஊர் என்னை பற்றி என்ன பேசினாலும் பரவாயில்லை உங்களை பேசுவதை எனது காதால் கேட்க்கமுடியாது என்று உறுதியாக முடித்தாள்.

பதிலுக்கு இராமனும், அப்படி என்றால் ஊரை அங்கேயே விட்டு விட்டு இங்கேயே வாழ்ந்துவிட்டால் போகிறது என்றான். பதிலுக்கு எவ்வளவு தான் வாதாடினாலும் கடைசியில் வாதத்தில் தோற்று போனாள் சீதை. சீதையும் இராமனையும் மறுபடியும் ஒரு புது குடித்தனம் அமைத்துவிட்டு சென்றார்கள் இராமனது நண்பர்களும், சீதையது நண்பர்களும் மன நிறைவாக அமெரிகாவில் இருந்து இந்தியாவை நோக்கி.

2 comments:

')) said...

It was nice. Initially I thought it was about “Purana” Raman/Seethai and it got motivated lot to read further because of current “Ramar Bridge” issue. But the writer took a pleasant surprise turn and finished with happiness. It is kind of new approach. I appreciate it.

')) said...

செங்குகண்ணா வருக்கைகும் கருத்துக்கும் நன்றி.