Sunday, October 14, 2007

சோ இராமசாமியால் மட்டும் எப்படி இப்படி பேச முடிகிறது

குமுதம் இனைய இதழில் சோ அவர்களி பேட்டியை வைத்துள்ளார்கள். கேள்வி பதில் நிகழ்சியான அதில் 2 கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் அவர் இப்படி பதில் தருகிறார்.

1) தமிழை எல்லா கல்வி நிலையங்களிலும் 1 முதல் அனைத்து வகுப்பிற்கும் கட்டாயா மொழிப்பாடமாக வலியுருத்தும் சட்டம் வடிவமைக்கபட்டு செயல்படுத்தவுளது இதை பற்றி என்ன சொல்லுகிறீர்கள் கேள்விக்கு அவர், குழந்தைகளுக்கு இது அதிக சுமை, அவர்களுக்கு ஏற்கனவே அதிகம் படிக்க வேண்டிய கட்டாயம் இதில் இந்த மொழிபாடத்தை வேறு படிக்கவேண்டுமா இது அவரது பதில்.

2) இந்தி மொழியை பற்றி குறிப்பிடும் போது, அந்த மொழியை படிக்கமுடியாமல் செய்துவிட்டது அரசு. தமிழகம் தவிர அத்துனை மா நிலமும் படிக்கிறது இங்கே படிக்கமுடியாமல் செய்து விட்டார்கள், தவறான மொழிக்கொள்கை என்று குறிப்பிட்டார் அடுத்த 2 நிமிடங்களில்.

தமிழ் குழந்தைகளுக்கு அதிக சுமையாக அமையும் போது அதும் வீட்டிலும், வெளியிலும் எங்கும் பேசும் மொழியை, ஒரு மொழிப்பாடமாக படிக்கும் போது சுமையாக தெரியும் என்று சென்னவர், இந்தி மொழியை பள்ளியில் படிக்கமுடியாமல் செய்துவிட்டார்கள் என்றும், இன்னமும் அதிக கடிதங்கள் இதை பற்றி அவரது அலுவலகத்துக்கு வருவதாகவும் சொல்கிறார்.

எனக்கு அவர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை, உங்களில் யாருக்காவது புரிந்தால் சொல்லவும்.

43 comments:

')) said...

Well said, sariyaaana nethiyadi

')) said...

வருகைக்கும் பின்னூட்டதிற்கும் நன்றி, அவர் என்ன சொல்கிறார் உங்களுக்கு ஏதாவது புரிந்திருந்தால் தெரிவிக்கவும்........

')) said...

தமிழ் பேசும் பிராமணர்கள் தமிழை இழித்து இந்தியை ஆதரிப்பது அவர்களது இன கடமை. சோ'மாறி அதைத்தான் செய்கிறார்.

----------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

')) said...

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி தறுதலை

இத்தனை நாட்கள் பத்திரிக்கை நடத்தி, அரசியல் விமர்சகராகவும் பணியாற்றிய முதியவரி வரிகள் அவைகள். கலைஞரை ஓய்வெடுக்க சொல்லுவதை போல் இவரையும் ஓய்வெடுக்க யாராவது சொல்லுங்களேன். தெரிளிவாக பேசுவதாக நினைத்து உளரிகொட்டுகிறார் மனிதன். அது எப்படி தமிழ் என்றால் மட்டும் இவருக்கு இப்படி எட்டிகாயாய் இருக்கிறது. பேசாமல் துக்ளக்கை இந்தியில் எழுதி தமிழகத்திலே விற்கவேண்டியது தானே ஏன் தமிழில் எழுதவேண்டும். இது காசுக்கு அது பேருக்கு, இதில் அனைவரையும் நக்கல் வேறு.....தாங்கமுடியலை.

')) said...

முதல் கேள்விக்கு,-- 'தமிழ்நாட்டில் தமிழ்மொழி கட்டாயாயப்பாடமாகப் படிக்கவேண்டுமா?'என்கிற அவலநிலைக்கு வருந்தி, ஆட்சியாளர்களைக் கிண்டலடித்து, 'இந்த மொழி' (ஏதோ இவர்கள்் வேற்றுமொழியை கட்டாயப்பாடமாக்குவது போல)

வேறு படிக்கச்சொல்கிறார்களே
என்று நகைச்சுவையாகக் கூறியிருக்கிறார்.

இரண்டாவது பதில் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். நமது அமைச்சர்களின் பேரக்குழ்ந்தைகளெல்லாம் படித்துத் தேர்ந்திருக்கும் மொழியை, வெகுஜன மக்களுக்கும் விரிவுபடுத்தச் சொல்லியிருக்கிறார்.

')) said...

ஜீவி வரவுக்கும் கருத்துக்கும் நன்றி,

தமிழகத்தில் அரசு சார்ந்த நிறுவனதில் தமிழ்ப்பாடம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. சட்டம் தமிழகத்திலே தமிழர்கள் படிக்கும் பிற கல்வி நிருவனங்களாக ஆங்கிலவழி கல்விக்கூடங்களையும் மத்திய பாடத்திட்டதில் வரும் கல்வி நிறுவனங்களை குறிப்பிடுகிறார்கள். தமிழகத்திலே தமிழர்கள் பயிலும் கல்விக்கூடங்களில் இப்படி ஒரு நிலைமை வந்திருப்பதை அப்படியே விட்டுவிட சொல்லி அல்லவா இருக்கிறார்........இதில ஏதும் நகைசுவை இருப்பதாக எனக்கு தெரியவிலை

இன்றைக்கு அரபி நாடுக்கும் மலையே நாட்டுக்கும் அதிக மத்திய தட்டு மற்றும் கீழ்த்தட்டு மக்களும் செல்கிறார்கள். அதனால் இனிமேல் அரபியும், மலாய் மொழியையும் தமிழத்தில் எல்லோருக்கும் சொல்லித்தர வேண்டும் என்று கோரிக்கைவைப்போமா. அல்லது அங்கு வேலைக்கு போகும் மக்கள் எல்லாம் தமிழகத்தில் எங்கோ ஒரு பள்ளியில் இந்த மொழிகள் எல்லாம் கற்றுக்கொண்டு சென்றார்கள் என்று பொருளா. சோ இராமசாமியின் குழப்பத்தைவிட அதிகமாக இருக்கிறதே இது. விளக்குவீர்களா காத்திருக்கிறேன் ஆவலாக

')) said...

ஜீவி வரவுக்கும் கருத்துக்கும் நன்றி,

தமிழகத்தில் அரசு சார்ந்த நிறுவனதில் தமிழ்ப்பாடம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. சட்டம் தமிழகத்திலே தமிழர்கள் படிக்கும் பிற கல்வி நிருவனங்களாக ஆங்கிலவழி கல்விக்கூடங்களையும் மத்திய பாடத்திட்டதில் வரும் கல்வி நிறுவனங்களை குறிப்பிடுகிறார்கள். தமிழகத்திலே தமிழர்கள் பயிலும் கல்விக்கூடங்களில் இப்படி ஒரு நிலைமை வந்திருப்பதை அப்படியே விட்டுவிட சொல்லி அல்லவா இருக்கிறார்........இதில ஏதும் நகைசுவை இருப்பதாக எனக்கு தெரியவிலை

இன்றைக்கு அரபி நாடுக்கும் மலையே நாட்டுக்கும் அதிக மத்திய தட்டு மற்றும் கீழ்த்தட்டு மக்களும் செல்கிறார்கள். அதனால் இனிமேல் அரபியும், மலாய் மொழியையும் தமிழத்தில் எல்லோருக்கும் சொல்லித்தர வேண்டும் என்று கோரிக்கைவைப்போமா. அல்லது அங்கு வேலைக்கு போகும் மக்கள் எல்லாம் தமிழகத்தில் எங்கோ ஒரு பள்ளியில் இந்த மொழிகள் எல்லாம் கற்றுக்கொண்டு சென்றார்கள் என்று பொருளா. சோ இராமசாமியின் குழப்பத்தைவிட அதிகமாக இருக்கிறதே இது. விளக்குவீர்களா காத்திருக்கிறேன் ஆவலாக

')) said...

சரியான கேள்வி பனிமலர் மேடம் (சார்?). தங்கள் ஒருவரி செய்தி கொண்டு ஒரு பதிவு போட்டிருக்கிறேன் உங்களுக்கு நன்றியுடன். http://rathnesh.blogspot.com
// கலைஞரை ஓய்வெடுக்க சொல்லுவதை போல் இவரையும் ஓய்வெடுக்க யாராவது சொல்லுங்களேன்//
என்கிற தங்களின் பின்னூட்ட வரிகளை அதன் பிறகுதான் பார்த்தேன். தங்கள் சிந்தனையுடன் ஒத்துப் போயிருப்பது குறித்த சந்தோஷத்துடன், தங்கள் எத்ரிபார்ப்பையும் நிறைவேற்றி இருக்கிறேன் என்கிற திருப்தி.

RATHNESH

')) said...

வாங்க இரத்தனேசு, பின்னூட்டமும் இடுக்கையும் மிகவும் அருமையாக அசத்தி இருக்கிறீர்கள், நன்றி வாழ்த்துகள்.

')) said...

//தமிழ் பேசும் பிராமணர்கள் தமிழை இழித்து இந்தியை ஆதரிப்பது அவர்களது இன கடமை. சோ'மாறி அதைத்தான் செய்கிறார்.//


பெரியார் "தமிழ் காட்டிமிராண்டி மொழி, உங்க வீட்டு வேலைகாரியுடனும் இங்கிலீஷ் பேசுங்க"ன்னு சொன்னா இனிக்குது ஆனா சோ என்ற பிராமணர் சொன்ன கசக்குதோ??

')) said...

வாங்க நந்தவனத்து ஆண்டி,
இதிலே சாதியத்தை பிடித்து பேசுவதில் எனக்கும் உடன்பாடில்லை. சோ சொன்னது சரியா இல்லையா, எனக்கு தெரிந்தவரை அவர் சொல்லும் இந்த இரட்ட பதில் எப்படி இருக்கிறது தெரியுமா. 5 கிலோ இரும்பு, 5 கிலோ பஞ்சு இதில் எது அதிக எடையாக இருக்கும் என்று குழந்தைகளிடம் சொல்லி மகிழ்வார்கள் அது போல் இருக்கிறது இவரது பேச்சு. அது எப்படிங்க தமிழ்மட்டும் படிக்கும் போது சுமையாக இருக்கும் இந்தி சுமையே இல்லாம இருக்கும். நீங்களாவது விளக்குங்கள்.

')) said...

அரசியல் சாணக்கியர் சோவை குற்றம் சொல்ல உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது ?

சோவின் கருத்துக்கள் இந்தியாவில் மட்டுமன்றி ஆப்ரிக்கா ஐரோப்பா அவுஸ்திரேலியா என்று எல்லா இடங்களிலும் புகழப்படும்போது உங்களுக்கு அதன் நுண் அரசியல்கள் புரியாமல் இப்படி ஒரு பதிவு...

முதலில் ஒரு துக்ளக் வாங்கி மேலிருந்து கீழாக படிக்கவும்...

')) said...

பனிமலர்
இதுல்ல புரிவதற்கு ஒன்றுமே இல்லை. சொ தன்னை ஒரு அரசியல் கோமாளியாத்தான் பிம்பப்படுத்தி வந்துள்ளார். மேலதிக விளக்கத்திற்கு இச்சுட்டி வழி புரிந்துகொள்ளுங்கள்..

http://jamalantamil.blogspot.com/2007/10/blog-post_14.html#links

')) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செந்தழல் இரவி. இப்படி எல்லாம் பேச அவருக்கு எப்படி தான் தைரியம் வருகிறதோ. இருப்பது தமிழகத்தில், உணவு முதல் அத்தனையும் தமிழகத்தில் இருந்து பெற்றுக்கொண்டு, ஆங்கிலத்துக்கும், அதைவிட மேலாக இந்தியையும், அதற்கும் மேலாக ஒரு மொழியையும் போற்ற வேண்டிய அவசியம் என்ன வந்தது இவருக்கும். இன்னமும் துக்ளக் மக்கள் வாங்கி படிக்கிறார்களா ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இப்படி இனையத்தில் படிப்பதே அதிகம் இதில் காசு கொடுத்து துக்ளக் வாங்கி படிக்கவா.........

')) said...

//"சோ இராமசாமியால் மட்டும் எப்படி இப்படி பேச முடிகிறது"//

ஏங்க சோ அவர்களுக்கு மண்டையிலெ முடியோட சேத்து உள்ள இருக்குறதையும் மழிச்சிட்டாங்க போல இருக்கு அதுதான் வேற என்ன காறன்ம் இருக்கமுடியும்?

')) said...

ஜமாலன் என்னது இது இப்படி ஒரு வாங்கு வாங்குறீக, இவ்வளவு அறிவு இருந்து அவ்வளவு விரயமாவதை கண்டு மனது பொருக்கவில்லை. இந்த அறிவு தமிழகத்துக்கு சொந்தமானது இருந்தும் தமிழையும் தமிழகத்தையும் இகழும் போது என்ன என்று சொல்ல..............

')) said...

கார்த்திக்ராமாசு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, சோ முடியை இழந்தது ஒரு காய்ச்சலில்.

')) said...

தமிழ்நாட்டுல, தமிழ்ல பத்திரிக்கை நடத்தி,அத தமிழன்கிட்டயே வித்து லாபம் பாத்து, அந்த தமிழையே கேவலப்படுத்தும் இந்த இழிபிறவிய
இன்னும் உயிரோட நடமாட விட்டதனால அது இந்தப்பேச்சு பேசுது.

கலைஞர் சிலசமயங்களில் தமிழர்களை
சோற்றாலடித்தபிண்டங்களே, முண்டங்களேன்னு திட்டும்போது வேதனையா இருக்கும்.

ஆனா சோ மாதிரி இழிபிறவிகளை பார்க்கும்போது தலைவர் எவ்வளவு வேதனையோடு அந்த வார்த்தைகளை
வெளிப்படுத்தி இருப்பார் என்பதை யூகிக்க முடிகிறது.

')) said...

இதை படித்தபின் நானும் சோவின் குமுதம் இண்ட்ர்வியூ பார்த்தேன். எனக்கு புரிந்தவரை சோ சொன்னது என்னவென்றால்:

1. தமிழை கட்டாயம் படித்தே ஆகவேண்டும் என்று சொல்கிறார்கள்.
2. ஹிந்தி கட்டாயம் படிக்ககூடாது என்றும் சொல்கிறார்கள்.

இதனால் தமிழ்நாட்டுக்கு வெளியே வேலை செய்வது கடினமாகிறது. இது நானும் அனுபவத்தில் உணர்ந்த உண்மை.

இப்படி ஊருக்கு ஓசி உபதேசம் செய்துவிட்டு, தங்கள் குழந்தைகள் கான்வெண்டில் ஆங்கிலமும் ஹிந்தியும் கற்று தில்லிவரை கோலோச்சுவதை யாரும் கேட்கக்கூடாது ;) இது நல்ல விளையாட்டு!

')) said...

பெரியாரும் சோவும் இந்தக் கருத்தில் ஓரளவுக்கு ஒத்துப் போகிறார்கள். வயதான பிறகுதான் சோ இப்படி சொல்கிறார் என்பது தவறு. அவர் மொழிக் கல்வி தொடர்பாக இதையே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆங்கில, இந்தி மொழிகளின் அறிவு நம்மை உலக மற்றும் இந்திய அரங்குகளில் முன்னிறுத்தும் என்பதே இக்கருத்துகளின் அடிப்படை என்பது என் புரிதல். பெரியாரும் இதே அடிப்படையில்தான் சொல்லியிருக்கிறார் என்பது என் புரிதல். இந்தி தெரிந்திருப்பது திரு கலாநிதிமாறன் அமைச்சாரதற்கு ஒரு காரணமாகச் சொல்லப்பட்து நினைவிருக்கலாம்.

முதல் கருத்தில் பெரியார் மற்றும் சோ அவர்களுடன் நான் மாறுபடுகிறேன். அடிப்படைக் கல்வி தாய்மொழியில்தான் அளிக்கப்படவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

இரண்டாவது கருத்தில் சோ அவர்களுடன் மாறு படுகிறேன். இந்தியை கட்டாயமாகுவது ஏற்புடையதல்ல. பெரியார் கூறியதுபோல தேவைக்கு ஏற்ப அம்மொழியைக் கற்றுக் கொள்வதே நமக்கு அனுகூலமான செயல்.

')) said...

கின்னா வருகைக்கும் கருத்திற்கும் நன்றி,

இன்றைகு சென்னையில் சங்கர நேத்ராலயம் என்று ஒரு கண் ஆராய்ச்சி மையம் இருக்கிறது. அங்கே கண் சிகிச்சைக்காக வரும் எந்த வட நாட்டவரும் தமிழோ ஆங்கிலமோ பேசுவது இல்லை. அழகாக இந்தியிலே பேசி சிகிச்சை பெற்று செல்கிறார்கள். அங்கே கடை நிலை ஊழியனில் இருந்து மருத்துவர் வரை அனேகரும் தமிழரே. அவர்கள் இந்தி பயிலும் போது புத்தகத்தை யாரும் பிடுங்கி வைக்கவில்லையே. அல்லது அவர்கள் அனைவரும் வட மாநிலத்தவரா, இல்லை கான்வென்டில் படித்துவிட்டு கடை நிலை ஊழியம் புரிகிறார்களா. கணக்கு எங்கோ உதைகிறதே......

மேலும் சென்னையில் பன்னாட்டு நிறுவனங்கள் பல, பல நாட்டுக்களில் இருந்து வருகிறது. சென்னையில் வேலைக்கு போகவேண்டி இருக்கும் என்று அவர்களது நாட்டில் தமிழை மொழிப்பாடமாக பயின்றுவர அறிவுறுத்துவோமா.

காலம் காலமாக தமிழகத்தில் இருந்தாலும், கொசு கடிக்கிறாங்கோ, உன் அப்பா ஊர் மேலே போய் இருக்கானு வடக்கத்தியர் பேசுவது போல் பேசிவிட்டால் போது, அதுக்காக அவர்கள் மொழி படித்து, சப்பாத்தி உண்டு, குர்தா பைசாமா அணிந்து, சேலையின் தலைப்பை மாற்றி கட்டி ஒரே நகைப்பாக இருக்கிறது உங்களின் வாதம்.

அனா ஆவனா தெரிந்தால் பிராதமிக்கு, அப்பா அம்மா, உழவன் கதை தெரிந்தால் மத்தியமா. கடிதம் எழுத தெரிந்தால் இராட்டர பாட்ச்சா. எல்லோரும் படிக்கிறார்கள் அவரவர் தேவைக்கு ஏற்ப.

எங்கே மராட்டியத்திலோ, இன்ன பிற மாநிலங்களிலோ தமிழகம் வேலைக்கு போகவேண்டி வரும் தமிழை உங்கள் பாடத்திட்டதில் சேர்த்து இனிமேல் எல்லோரும் தமிழையே படிக்கவேண்டும் என்று சொல்லித்தான் பாருங்கள். உயிரோடு முழுதாக வருகிறீரா என்று பார்ப்போம்.

')) said...

பூச்சாண்டி, ஓகை வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தனது சொந்த மொழியை படிக்கவேண்டாம் என்று தமிழர்களை தவிற வேறு எங்காவது கேட்டதுண்டா....அப்படி என்ன இவருக்கு தமிழ் மேல் கோபம்.

')) said...

சங்கர நேத்ராலயாவில் கடைநிலை ஊழியர் வரை இந்தி பேசுகிறார் என்ற செய்திக்கு நன்றி மற்றும் மிக்க மகிழ்ச்சி. தமிழன் முன்னேற்றத்துக்கு இந்த மொழி ஒரு தடையாகிவிடக்கூடாது என்பதே என் கருத்து.

ஆனால், அவர்கள் எப்படி இந்தி படித்தார்கள், புத்தகத்தை யாரி பிடிங்கினார்கள் என்றால் - தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு இல்லை என்று நீங்கள் சொன்னால் உங்களிடம் என்னால் வாதாட முடியாது :)

மராட்டியத்தில் இனிமேல் தமிழையே படிக்கவேண்டும் என்று யார் சொல்ல சொன்னார்கள்? மராட்டியத்தில் மராட்டி மட்டும் தான் படிக்கவேண்டும், தமிழ் படித்தால் தார் பூசுவோம், வீட்டை கொளுத்துவோம் என்று சொல்லிவிட்டு பால் தாக்கரே குடும்பம் மட்டும் தமிழ் படித்து சென்னையில் அரசியல் செய்தார்களா?

சென்னையில் பன்னாட்டு கம்பெனிகள் பெருகி வேலைவாய்ப்பு அதிகமாவதும் மிக்க மகிழ்ச்சி. நாளை இது வேறு மாநிலத்துக்கு மாறலாம். நான் சொல்வதெல்லாம் - மக்களுக்கு மொழிக்கல்வியை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை கொடுங்காள். அவர்கள் தேவைக்கு அவர்கள் நல்ல வழி தேடிக்கொள்வார்கள். சங்கர நேத்ராலயா ஒரு நல்ல உதாரணம்.
இந்த மொழி கட்டாயம் படிக்கவேண்டும், இந்த மொழி கட்டாயம் படிக்ககூடாது என்று சர்வாதிகாரம் எதற்கு?

')) said...

கின்னா உங்களது வாதம் ஏற்கும் படியாக இல்லையே, அன்றாடம் பேசும் மொழியை மொழிப்பாடமாக படிக்கவேண்டாம். அதை தவிர்த்து வேறு மொழிதான் படிப்பேன் என்று சொல்லுவது ஏற்புடையதாக இல்லை.

எனக்கு தெரிந்தவரை இந்தி தினிப்புக்தான் எதிர்ப்பு தெரிவித்தார்களே தவிர, இந்தி மொழியையே யாரும் தூற்றினதாக தெரியவில்லை. மற்ற மா நிலங்களில் இந்தி பேசும் தமிழர்களை சர்வ சாதாரணமாக காண முடிகிறது. தேவைக்கு ஏற்ப கற்றுக்கொண்டு தான் இருக்கிறார்கள்.....

மேலும் அரசியலில் இருப்பவர்களது தில்லு முல்லு அனைவரும் அறிந்ததே.

')) said...

இந்தி படித்துவிட்டால் வட மானிலங்களில் கூப்பிட்டு வேலை தருவதாக ஒரு எண்ணத்தை மக்களிடம் உருவாக்குகிறார் சோ.பெரும்பாலான வடமாநிலங்களை விட தமிழகம் கல்வியிலும்,பொருளாதாரத்திலும் சிறந்து விளங்குகிறது.

மொழித்திணிப்பு போன்றதே தான் மதத்திணிப்பும்,அது திணிப்பு என்று உணர முடியாத அளவிற்கு அதை நாம் ஏற்றுக்கொண்டோம்.இப்போது மொழியை திணிக்க போராடுகிறார்கள்.கிரிக்கெட் என்ற விளையாட்டு கூட ஒரு திணிப்பு தான்.

சனநாயக நாட்டில் அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.அதை நாம் அறவழியில் தான் சந்திக்க வேண்டும்.

')) said...

சோவை, தனது துக்ளக்கினை,, இந்திப் பதிப்பாக வெளியிட்டு ஆயிரம் பிரதிகள் விற்றுக் காட்டச் சொல்லுங்கள்; அவரது தமிழ்நூல்களை இந்தியில் மொழி பெயர்த்து அவற்றையும் ஒரு பதிப்பாவது விற்றுக் காட்டச் சொல்லுங்கள். வெறும் தமிழ் மட்டும் வைத்துக் கொண்டு நம்மவர்கள் வாழ்வில் முன்னேற முடியாமல் கஷ்டப்படுகிறார்கள் என்கிற பம்மாத்தினை ஆதாரத்துடன் நிரூபித்த மாதிரியாவது இருக்கும். வடநாடு முழுவதும் ஏராளமான வேலை வாய்ப்புகள் இந்தி தெரிந்தவர்கள் கிடைக்காததால் காலியாக இருப்பது போல் இந்தி மீது ஏனிந்த போலிக் கரிசனம்?

')) said...

நானும் ஜாதியை சோவின் கருத்தோடு தொடர்புபடுத்துவதைத்தான் எதிர்த்தேன். பாரதியார், பழந்தமிழ் நூல்களைத் தேடி சேர்த்த வ. வே.சா போன்றவரின் சேவையை மறக்க முடியுமா? அதிலும் வ. வே.சா வின் பங்களிப்பு ஈடு இணையற்றது.

சோவின் கருத்து தமிழ் கட்டாயம் என்பதை எதிர்க்கிறது. இந்தி ஆகட்டும் அல்லது தமிழ் ஆகட்டும், மொழி என்பது மனிதரின் தேவை பொறுத்தது. இதுதான் சோவின் கருத்து மட்டுமல்ல பெரியாரின் கருத்தும்.இங்கு ஜாதி ஏன் வருகிறது???

')) said...

வாங்க ஜாலிஜம்பர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. என்னை பொருத்தவரை அனைத்து மா நிலமும், அதன்னதன் மொழியை சிறப்பாகவும் செவ்வனேவும் படிக்கின்றது வளர்கிறது. இன்னமும், அந்தன் மொழி தவிர்த்து வேறு என்ன மொழி வேண்டும் என்றாலும் தனியாக படித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லுகிறது. அதையேத்தான் தமிழகமும் சொல்கிறது.

ஆனால் சோ இராமசாமி என்ன சொல்கிறார் என்றால், தமிழ் படிப்பது குழந்தைகளுக்கு மிகவும் சுமையா இருக்கும் அதனால் தமிழ் அவர்களுக்கு தேவை இல்லாத ஒரு சுமை என்று சொல்லிவிட்டு, உடனேயே இந்தியை தமிழகம் படிக்கமுடியாமல் செய்துவிட்டது என்று புகார் கூறுகிறார். அதுவும் எப்படி தெரியுமா தமிழை படிக்காமல் இந்தியையும் ஆங்கிலத்தையும் படிக்க வைக்க வேண்டும் என்று. அப்படி என்ன இந்தி இவருக்கு செய்தது இப்படி இந்தியை பரப்ப வேண்டிய அவசியம் அவருக்கு என்ன. ஒன்றும் விளங்கவில்லை போங்க. இங்கே பின்னூட்டத்தில் சோவின் வாதத்தை சரி என்று சொல்லுபவர்களும் சரியானதொரு காரணத்தை சொல்லுவதை விட்டு, கடைத்தெருவில் பருப்பு வாங்கவும், கறிகாய் வாங்கவும் வசதியாக இருக்கும் என்று மட்டுமே சொல்லுவதை பார்க்கும் போது அவர்கள் ஓடி ஒளிந்து கொள்வது தெரிகிறது. ஏன் யாருமே சரியான காரணத்தை சொல்ல மறுக்கிறார்கள். மர்மமாக இருக்கிறது......

')) said...

//இங்கே பின்னூட்டத்தில் சோவின் வாதத்தை சரி என்று சொல்லுபவர்களும் சரியானதொரு காரணத்தை சொல்லுவதை விட்டு, கடைத்தெருவில் பருப்பு வாங்கவும், கறிகாய் வாங்கவும் வசதியாக இருக்கும் என்று மட்டுமே சொல்லுவதை பார்க்கும் போது அவர்கள் ஓடி ஒளிந்து கொள்வது தெரிகிறது//

என் பின்னூட்டம் இப்படிப் பட்டதல்ல. எனக்கு சரியான மறுமொழி சொல்லாமல் அவதூறு மட்டும் செய்கிறீர்கள். நன்றி.

')) said...

ஓகை உங்களது கருத்துக்கு நன்றி தெரிவித்தேனே, அவதூறு எங்கே செய்தேன். எதிர் வாதம் செய்வோருக்கு கேள்வியும் விளக்கமும் அவசியம். ஒத்த கருத்து கொண்டோருக்கு அது தேவை இல்லை என்று நன்றியோடு விட்டு விட்டேன்.

இரத்தனேசு, சோ இந்தியில் எழுதினால் அவர்களை அனேகமாக தமிழ் தான் படிக்கவேண்டும் என்று வலியுருதுவார்.

நந்தவனத்து ஆண்டி எனது கேள்வியே தமிழை ஏன் எதிர்கவேண்டும் எதற்காக மேலும் இந்தியை ஏன் படிக்கவேண்டும் தமிழை படிக்காமல்...மேலும் நீங்கள் கூறியது போல் ஒன்று இரண்டு அல்ல ஏறாளமானோர் இருக்கிறார்கள் தமிழகத்தின் இன்றைக்கும்....

மற்ற மொழியை தெரிந்து கொள்ளவும் பயிலவும் நினைப்போரை யாரும் தடுப்பதும் இல்லை, தூற்றுவதும் இல்லை. சென்னையில் இருக்கும் ஆந்திர மயில சபா, இந்தி பிரச்சார சபாக்கள் எல்லாம் அப்படியே தான் இருக்கிறது செயல் பட்டுக்கொண்டு தான் இருக்கின்றது. கின்னா சொல்லுவதை போல் எல்லாம் வீட்டை எரிப்பது எல்லாம் எங்கும் நடப்பதாக தெரியவில்லை. அப்படி அது உண்மையாக இருப்பின், இன்னமும் பிரன்சு, இந்தி, சங்கதம் கற்றுக்கொடுக்கும் பள்ளிகள் சென்னையிலே ஏறாளம் செயல்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றது. அவர் எதைவைத்து அப்படி ஒரு செய்தியை தருகிறார் என்று புரியவில்லை. கின்னாவே விளக்கினால் நன்றாக இருக்கும்.

')) said...

இந்தி எதிர்ப்பு காலம் என்பது இந்தி கட்டாயப் பாடம்,மும்மொழித்திட்டம் என்ற நிலையிலும் மேடைத் தமிழ் பொதுக்கூட்டங்களில் கோலோச்சிய காலங்களில் தோன்றியது.சோ அவர்களும் அந்தக்காலம் தொட்டு புலம்பிக் கொண்டுதான் உள்ளார்.மாறுதல்கள் வருவதற்கான் அறிகுறிகள் தெரியவில்லை.தமிழோடு ஆங்கிலத்தின் துணையும் சேரும்போது பெரிதாக பிரச்சினை ஒன்றும் இல்லை.தமிழை மட்டும் பேச்சில் வைத்துக்கொண்டு எல்லைகளைத்தாண்டும் போது துவக்கத்தில் சிரமம்.ஆனால் நம்மவர்கள் சூழல்களின் நிர்ப்பந்தங்களால் மற்ற பேச்சு மொழியைக் கற்றுக் கொள்கிறார்கள்.எழுத்து இந்தி அறிவால் மற்ற மாநிலங்களில் வேலை வாய்ப்பு அதிகம் என்பது சரியான பார்வையாக இருக்க முடியாது.நான் கூட அந்தப் பார்வையில் பிரஞ்சு மொழி தொட்டுப் பார்த்தேன்.தற்போதைய நிலையில் தமிழ் மனதுக்கும் ஆங்கிலம் பொருளீட்டவும் உதவும்.ஆனால் ஆங்கிலப் புலமை காட்டும் தமிழோடு கலந்துரையாடும் போக்குத்தான் கவலைக்குரியது.(பி.கு.இந்தி கற்றுக்கொள்ள ஆசைப்பட்டால் ஆங்கிலம் சரியா வராது.ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டால் இந்தி சரியா வராது.ஹி..ஹி...எது வேண்டும்?)

')) said...

//நானும் ஜாதியை சோவின் கருத்தோடு தொடர்புபடுத்துவதைத்தான் எதிர்த்தேன். பாரதியார், பழந்தமிழ் நூல்களைத் தேடி சேர்த்த வ. வே.சா போன்றவரின் சேவையை மறக்க முடியுமா? அதிலும் வ. வே.சா வின் பங்களிப்பு ஈடு இணையற்றது//

நெடிய வரலாற்றில் நாலைந்து தமிழ் பேசும் பிராமனர்களின் பங்களிப்பை சொல்லிவிட்டு ஒட்டு மொத்த பிராமணர்களும் தமிழுக்கு எதிரி அல்ல என்பது போன்ற வாதத்தை வைக்கிறீர்கள்.

உண்மை நிலவரம் என்னவென்றால் 90 விழுக்காடு தமிழ் பேசும் பிராமணர்கள் தமிழை இழித்து இந்தியை ஆதரிப்பவர்களே. உங்களை சுற்றி உள்ள 10 தமிழ் பேசும் பிராமணர்களை கவனியுங்கள், உண்மை புரியும்.

தமிழை இழித்து இந்திக்கு ஆதரவு தருபவர்களில் பெரும்பாலானோர் தமிழ் பேசும் பிராமனர்களே. வேறு எந்த முறையிலும் தமிழை இழித்து இந்திக்கு ஆதரவு தருபவர்களில் பெரும்பாலோரை அடையாளப்படுத்த முடியாது.

--------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

')) said...

நட்டு வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. 21 வயது வரை எங்கேயும் எப்போதும் பேசும் ஒரு மொழியை படிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்ள தேவை இல்லை. ஆனால் கடைகளிலும் வரும் வழிகளிலும் எப்போதாவது பேசும் ஒரு மொழியை 1 முதல் 12 வரையும் இலக்கண இலக்கியங்களோடு படிக்க வேண்டிய அவசியம் என்ன. அலுவலகத்திலும், கல்விக்கூடங்களிலும் ஆங்கிலத்தில் பயின்று எழுதும் போது இந்த இந்தி புலமையின் அவசியம் என்ன....விளக்குவார்களா. வேண்டாம் என்றாலும் வேண்டும் என்றாலும் சரியானதொரு காரணத்தை செப்பவேண்டும்.

வாங்க தறுதலை எல்லோரும் தமிழை வெறுத்தார்கள் என்று சொல்லுவதற்கு இல்லை. அப்படி எதிர்ப்பவர்கள், எதிர்ப்புகுண்டான காரணத்தை இது வரையில் சொல்லாமல் தான் இருக்கிறார்கள். என்ன காரணமோ அவர்களுக்கே வெளிச்சம்.

')) said...

//பாரதியார், பழந்தமிழ் நூல்களைத் தேடி சேர்த்த *வ. வே.சா*போன்றவரின் சேவையை மறக்க முடியுமா?//

தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே.சா.-வைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

')) said...

வாங்க வற்றாயிருப்பு, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தமிழ் தாத்தாவைதான் அவர் குறிப்பிடுகிறார். வற்றாயிருபு என்றால் விருதுநகர் சிவகாசி வற்றாயிருப்பா சுந்தர்.

')) said...

//1) தமிழை எல்லா கல்வி நிலையங்களிலும் 1 முதல் அனைத்து வகுப்பிற்கும் கட்டாயா மொழிப்பாடமாக வலியுருத்தும் சட்டம் வடிவமைக்கபட்டு செயல்படுத்தவுளது இதை பற்றி என்ன சொல்லுகிறீர்கள் கேள்விக்கு அவர்,//சோவிடம் கேட்கப்பட்ட இந்தக்கேள்வியில், எந்த இடத்திலாவது, 'ஆங்கில மீடியம் கொண்ட பள்ளிகள'் எந்த சொற்றொடர் இருக்கிறதா என்று பாருங்கள்."எல்லா கல்வி நிலையங்களிலும்" என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனால் தான் அவர, தனது பதிலை தனது வழக்கம் போல் நையாண்டி செய்திருக்கிறார். அது என்ன நையாண்டி என்பது எனது ஆரம்பபபதிவில் இருககிறது. இப்பொழுது புதிதாக நீங்களாக சேர்த்துக்கொண்ட வார்த்தை ஆங்கிலம் மூல்மாக்ப் பயிற்றுவிக்கும் பள்ளிகள் என்பது.

சோவின் பாணி, காலஞ்சென்ற பழம்பெரும் தமிழ் எழுத்தாளர், "கல்கி" அவர்களின் பாணி. ்தர்க்கவியலைத் தமிழில் புகுத்திய சிறந்த எழுத்தாள்ர்் சோ அவர்கள். விழுந்து கிடந்த நகைச்சுவை நாடகஉல்கில் புரட்சி செய்தவர் சோ. மத்திய மேலவை உறுப்பின்ர என்கிற காரணத்தினால், தன்க்கு ஒதுக்கப்பட்ட நலத்திட்ட உதவித்தொகை முழுதையும் தமிழ்கக்கல்விக்கூடங்களுக்குச் செல்விட்டவ்ர்.

அதற்கு ஒழுங்காக கணக்குக்கொடுத்து தனது பத்திரிகையில் புகைப்பட ஆதரங்களோடு்்் பிரசுரம் செய்தவர். அதனால் அவர் விமரிசந்த்திற்கு அப்பாற்பட்டவர்் எனறு நான் சொல்லவில்லை. விமரிசனம் எனில் அது நேர்மையாக இருக்க்வேண்டும். நம்க்கு வேண்டிய்வாறு வளைத்து எழுதக்கூடாது.


இன்னொரு தடவை சோவிடம் கேட்கப்பட்டக் கேள்வியையும், அதற்கான அவரது பதிலையும் படித்துப் பாருங்கள். உங்களுக்குப் புரியும்.
நீங்கள் எழுதியிருப்பது தான் அவரிடம் கேட்கப்பட்டக் கேள்வி எனில், கேள்வி கேட்கத்தெரியாத அவரையும் சேர்த்து சோ

கிண்டலடித்திருக்கிறார் என்று தெரிகிறது.')) said...

//வற்றாயிருபு என்றால் விருதுநகர் சிவகாசி வற்றாயிருப்பா சுந்தர்.
//

ஆமா. விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், வற்றாயிருப்பேதான்!

')) said...

சுமதியை சொல்கிறீர்கள், தமிழ்நாடு பாடதிட்டத்தின் கீழ் வரும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழ் கட்டாயப்பாடன். இது அனைவருக்குமே தெரியும். பிறகு இப்படி தமிழை கற்றுக்கொடு என்று சொல்லவேண்டிய அவசியம் என்ன. தமிழகத்திலே தமிழர்களுக்கு கல்வி அளிக்கப்படும் கல்வி நிலையமாக இருந்து கொண்டு தமிழை படிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. தமிழில் பகுதி 1 பகுதி 2 என்றெல்லாம் படக்கவேண்டிய அவசியம் இல்லை அதற்கு பதில் 12ஆம் வகுப்பில் கூட தமிழ அல்லா மொழியில் ஆனா ஆவன்னா படித்தும் எழுதியும் காட்டினால் போதும் என்று நடந்துகொண்டு இருக்கும் கல்வி நிலையங்களை தமிழ் சொல்லி கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்த வந்த சட்ட முன்வடிவை பற்றித்தான் சுமதி கேட்டார். கேள்வி சரியாகத்தான் கேட்டுள்ளார். இதிலே கிண்டலுக்கோ கேளிக்கோ இடமே இல்லை.

இந்த கேள்விக்குத்தான், இந்த கல்வி நிலையங்களில் படிக்கும் கல்வி நிலையளில் பயிலும் மாணவ மணிகளுக்கு தமிழ் மிகவும் சுமையாக இருக்கும் என்றும். தமிழ்நாடு பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களை இந்தி படிக்க முடியாமல் தவிக்க வைத்துவிட்டது தமிழகம் என்றும் சொன்னார். அதனால் தான் கேட்டேன் கணக்கு எங்கோ உதைகிறதே என்று.

சோ ஒரு சிறந்த நாடகக் கலைஞர், பத்திரிக்கையாளர், அரசியல் விமர்சகர். அவரா இப்படி அபத்தமாக பேசுவது. அது தான் என் கோபம். பராசக்தி படம் பார்த்து இருகிறீர்களா, அதிலே வசனத்துகு வசனம் தர்க்கம் தெரிப்பதை பார்த்து இருபீர்கள் என்று நினைகின்றேன்.

தகவலுக்கும் வருகைக்கும் நன்றி ஜீவி.

')) said...

Please take part in testing Tamil Domain

http://உதாரணம்.பரிட்சை/முதற்_பக்கம்/
http://உதாரணம்.பரிட்சை/தமிழ்

')) said...

மழைக்காலங்களில் கரிசல் மண் நிலத்தில் எல்லாம் சூரியகாந்தி பச்சையும் மஞ்சளும்மாக பார்க்கவே மிகவும் கண்கவர் காட்சியாக இருக்குமே அந்த வற்றாயிருப்பு என்று சொல்லுங்கள். உங்கள ஊரின் படங்கள் இருந்தால் இனையத்தில் வெளியிடவும்.

')) said...

கோபி வருகைக்கும் தகவலுக்கும் நன்றி, இதில் பங்கேற்கும் அளவிற்கெல்லாம் தமிழறியேன் மன்னிக்கவும். தகவலுக்கு மிக்க நன்றி.

')) said...

mudhalil thamizhargal anaivarum tamizh asiriyargalaiyum,thamizh ezhuththalargalaiyum madhikkattum.appuram paarungal yaar unmaiyana thamizhan enru theriyum
T.V.Radhakrishnan

')) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இராதாகிருட்னன். எனக்கு தெரிந்தவரை தமிழாசியர்களை பிடிக்காத மாணவர்கள் இருக்கவே முடியாது. என்ன பள்ளி கல்லூரிகள் விட்டு வந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக விலகுவோம். மற்றபடி மதிக்காமல் எல்லாம் இல்லை. திரைபடங்களில் அவ்வப்போது தமிழாசிரியகளை வைத்து நையாண்டி செய்வது அதிகரித்துகொண்டு இருக்கிறது உண்மை.