Tuesday, October 30, 2007

21 கரும்புலிகளை பலிகொடுத்தது சரியா, அதனால் புலிகள் அப்படி என்ன தான் சாதித்தார்கள்???????

ஒவ்வொரு முறையும் புலிகளின் தாக்குதல் நடக்கும் போதும் அனேகமாக காணும் விடயங்கள் 2 விதப்பாக கொள்ளலாம். முதலாவது புலிகளின் செயல்களை சரி என்று கருதி அவர்களுக்கு ஆதரவாக வரும் பதிவுகள், விமர்சனங்கள். மற்றொன்று அவர்ளுக்கு எதிர்ப்பாக ஒலிக்கும் குரல். ஆதரவாக ஒலிக்கும் குரலில் தமிழர்களை சம்மாக நடத்தவேண்டும் என்று நினைப்பவர்களும், பாதிக்கப்பட்டவர்களும் அடங்கும். இதில் பாதிக்கப்பட்டோரது குரல் நாள் போக்கில் அடங்கி வருவது வருத்ததிற்கு உரிய செயல் என்றாலும், இவ்வளவு நீண்டகாலம் அவர்களது தனிப்பட்ட வலியும், இழப்பும் ஆராமல் அப்படியே இருப்பது கடினம். காலம் அனைத்தையும் ஆற்றும் வல்லமை படைத்தது அதனால் தான் எதையும் தள்ளி போடாதே என்று பெரியோர்கள் உரைப்பர்.

புலிகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களில் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டோரது உணர்வுகளை எளிதாக புரிந்துகொள்ள முடியும். என்ன தான் தேசம் என்று இருந்தாலும் தன வீட்டில் ஒரு இழப்பு என்றால் அது யாராலும் தாங்க முடியாத ஒன்று தான். அந்த உயிரழப்பை எதைக்காட்டியும் நீதி படுத்த முடியவே முடியாது. saving private Ryan என்ற ஆங்கில படத்தின் கரு இந்த ஒரு விடயமே, படத்தை பார்த்தோருக்கு தெரியும். இப்படி பாதிக்க பட்டோரது பின்னூடங்களை காணும் போது, அந்த கோப வார்த்தைகளை படிக்கும் போது, வருத்தம் நம்மையும் தாண்டி வெளியே தெரிவதை உணர்ந்து இருப்போம். அவர்களது உணர்வுகளை மதித்து அவர்களுக்கு எதிராக வார்த்தைகளை வைக்காமல் இருக்கும் நல்ல உள்ளங்களை பாராட்டுவதோடு, விமர்சனம் வைப்பவர்களுக்கு ஒரு வேண்டு கோளையும் விடுக்கிறேன். தயவு செய்து நொந்துவர்களை மேலும் நோக அடிக்காதீர்கள், அவர்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுங்கள். என்ன பேசினாலும் அவர்களது இழப்பை எது கொண்டும் யாராலும் ஈடு கட்டவே முடியாது. ஆகவே உங்களது வார்த்தையும் சொல்லாடல்களை மட்டுப்படுத்துங்கள் என்று தாழ்மையோடு வேண்டி விழைகின்றேன்.

இவர்கள் அல்லாது எதிர்ப்பவர்களை தான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. உயிரின் விலையை பற்றியும், பொது மக்கள் பற்றியும், வாழ போன நாடு என்றும், தமிழனின் கொழுப்பு என்றும் கூட தகாத வார்த்தைகளில், அரசியலாக, பத்திரிக்கையாக, தலையங்கமாக, என்று ஏகபட்ட சார்புகளாக எதிர்ப்பவர்களை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

முதலில் அங்கே நடக்கும் போராட்டம் ஒரு இன அழிப்புக்கு எதிராக நடக்கும் ஒரு போராட்டம். இன அழிப்பு இல்லவே இல்லை என்று யாராலும் ஆதார பூர்வமாக மறுக்கவோ மறைக்கவோ முடியாது. எதிர்த்து கேள்வி கேட்டார்கள் என்ற ஒரே காரணத்தை கொண்டு, என்னென்ன விதயமாம தாக்குதல் தொடுக்க முடியுமோ அத்தனை விதமாக தாக்குதல் தொடுத்து, இதற்கு கொன்று போட்டாலும் பரவாயில்லை என்ற அளவிற்கு ஆளாக்கி எள்ளி நகையாடும் மன நோயாளி நாடாக திகழும் நாட்டின் போக்கை பற்றிய விமர்சனம் இல்லாமல் புலிகள் 21 உயிர்களை பலியிட்டு விட்டார்கள் என்று ஒப்பாரி வைப்பதை பார்க்கும் போது ஆடு நனையுதேன்னு என்ற பழமொழி நினைவில் வர தவறுவதில்லை.

இவர்களின் நோக்கம் என்னவாக இருக்கும், புலிகள் இறக்கிறார்கள் என்ற கவலையா, அல்லது என்ன தான் போராட்டம் என்றாலும் உயிரை குடிக்கும் போராட்டமாக இருக்க கூடாது என்ற கொல்லாமையா, அல்லது இதற்கு அரசியல் தீர்வு காண்பது தான் அவசியமே தவிர ஆயுதப்போரட்டம் கூடாது என்றா, அல்லது என்ன தான் அடி வாங்கினாலும் என்னென்ன இன்னல்கள்(விளக்க விரும்பவில்லை) வந்தாலும் அனைத்தையும் விதி என்று மட்டுமே இருக்கவேண்டுமே தவிர எதிர்க்கவே கூடாது என்றா........ என்ன என்று எனக்கு புரியவே.

புலிகளின் நடவடிக்கைகளை எதிர்ப்பதின் பொருள் என்னவாக இருக்கும், இன அழிப்பை வரவேற்கிறோம் என்று மட்டுமே பொருளா இருக்க முடியுமே தவிற வேறு என்னவாக இருக்க முடியும். நமது வீட்டில் இப்படி ஒரு நிலைமை இருந்தால் நாம் என்ன செய்வோம், அடிங்கப்பா அடிங்க நல்லா அடிங்க என்று ஒருவராலும் சொல்ல முடியாது, இது தான் உண்மை.

இப்படி இருக்க எதிர்க காரணம் என்னவாகத்தான் இருக்கும், புலிகளின் நடவடிக்கைகள் மக்களாட்சி முறைக்கு எதிரானது அதனால் எதிர்கிறோம் என்று சொல்லலாம். உங்களது வாதம் சரி என்று கொண்டாலும், இன அழிப்பு நடவடிக்கை மட்டும் எப்படி ஒரு மக்களாட்சி முறையாகும். புலிகளின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு பதில், ஐ நா விற்கோ அல்லது சர்வதேச சமூகத்திற்கோ முறையீடோ அனுப்பலாமே.

தனி மனிதனின் குரல் இவைகளிடம் எடுபடுவது சாத்தியம் இல்லைதான், ஆனால் பத்திரிக்கையாலும், அரசாலும் முடியும். பத்திரிக்கைகள் புலிகளுக்கு ஆதரவாக எழுதவேண்டும் என்று கூட இல்லை, புலிகளின் நடவடிக்கைகளை அவர்களது உயிர் தியாகங்களை குறைத்து எழுதாமல் இருக்கலாமே. புலிகளுக்கு 21 உயிர் எவ்வளவு பெரிய இழப்பு என்று இராணுவத்தினரை கேளுங்கள் தெரியும். ஒரு படையில் இருக்கும் அங்கத்தினர் எவ்வளவு முக்கியம் என்று அவர்களால் மட்டுமே சரியா அவதானிக்க முடியும்...

இந்த ஒரு தாக்குதலால் என்ன மாற்றம் விளைந்துவிட போகிறது என்று கேட்பது காதில் விழுகிறது. இங்கே கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும், தன்னிடம் மிகையொலு வான் கலங்கள் இருக்கிறது. தரமான ஒரு வான் படை இருக்கிறது என்ற ஒரு காரணத்தை கொண்டு நினைத்த இடங்கள் எல்லாம் மானாவாரியாக குண்டுகள் கொண்டு அழித்து வந்தார்களே எண்ணிகை இல்லாமல். உதாரணமாக சென்சோலை மருத்துவமனை தாக்குதல் எடுத்துக்கொள்வோம். தொடர்ச்சியாக எத்தனை தாக்குதல்கள், இராணுவம் உள்ளே செல்ல பயப்படுகிறது என்றால் உடனே கிபீர் பாயும் அங்கே.

ஒவ்வோரு முறை வான் தாக்குதல் நடக்கும் போதும் மனதில் தோன்றுவது இது ஒன்று தான், இவ்வளவு நடக்கிறதே புலிகள் ஏன் எதுவும் செய்வதில்லை. புலிகளுக்கு மட்டும் இவர்களுக்கு இருக்கும் அதே அளவில் ஆட்கள் எண்ணிக்கை இருந்தால் உடனுக்கு உடன் பதில் கிடைத்து இருக்கும். ஆனால் அவர்களிடம் இருக்கும் ஆயுதமோ, ஆட்களோ பார்த்து பார்த்து செய்ய வேண்டிய நிலைமையில் இருக்கிறார்கள். இத்தனை வான் தாக்குதலுக்கும் அப்பால் எந்த ஒரு சர்வதேசமும் அழுத்தங்களை கொடுக்காமல் சிங்கள படைக்கு ஆயுதங்களையும், நவீன இரக வேவு உபகரணங்களையும் வழங்கு வதையும் தான் மும்முரமாக செய்கிறதே அன்றி பேஸ்சிக்கு அழை என்று சொல்லும் இடத்தில் எந்த நாடும் இல்லை இந்தியா உட்பட.

இந்த நிலைமையில், சிங்கள இராணுவத்தின் நடவடிக்கைகளை புலிகள் எப்படி கட்டுகுள் கொண்டுவர முடியும். சமர் ஒரு முனையில், மற்றும் ஒரு முனையில் கிழக்கு வந்தாச்சு இனி வடக்கு மட்டும் தான் அதுவும் ஒரு மாதத்தில் வந்துவிடும். மனித உரிமை மீரல் எங்கேயும் இல்லை, அகதிகளாக வருபருக்கு பாலும் தேனும் ஆராக ஓடும் இடத்தில் தங்க வைத்து மூவேளையும் உணவு வழங்குவதே தொழில் என்று நாள் தோரும் உலகில் எத்தனை ஊடகங்கள் உண்டோ அத்தனையிலும் எழுதி தீர்கிறார்கள்.

ஐ நாவிலோ அல்லது எந்த ஒரு சர்வ தேச சமூக அமர்வாக இருந்தாலும் புலிகளின் சார்பில் கலந்துகொள்ளவோ எடுத்துரைக்கவோ எந்த ஒரு வாய்ப்பும் இல்லாத ஒருதலை பட்சமாக சிங்கள அரசு அரசியல் நகர்வுகளை எதிர்கொள்வதும். இப்படி புளுகுகிறார்களே என்று புலிகளின் இணையமும், வானொலியும், தொலைகாட்சியும் கோபம் கலந்த நகைப்பாக சொன்னாலும், அவர்களது நிலையை விளக்க அவர்களுக்கு வாய்ப்பு மறுப்பதேன்.

எங்கு எல்லாம் இராணுவ மோதல்கள் நடக்கிறதோ அங்கே எல்லாம் ஐ நா வின் இராணுவ குழு கண்கானிப்பது இருக்கும். இங்கே இலங்கையில் இருக்கும் குழுவுக்கு கள நிலைமைகள் புரியாமல் இருப்பது ஏனோ....அல்லது அப்படி அவர்கள் அனுப்பும் அறிக்கைகள் எங்கே மாற்றபடுகிறது. யார் இதுக்கொல்லாம் பொம்மலாட்ட கலைஞர்......

அடிக்கிறான் காப்பாத்து என்று சொன்னால் முடிந்தால் உதவி செய்ய வேண்டும். முடியவில்லையா அனுதாபமாது பட வேண்டும். அதை விடுத்து தானும் சேர்ந்து கொண்டு அடிப்பது, தூற்றுவது, இன்னமும் இந்த வைகையராக்களை செய்வது அடிபடுகிறவனை கோபம் அடைதான் செய்யுமே ஒழிய அவனுக்கு செய்யும் நன்மை ஆகவே ஆகாது.

உயிரை பற்றியும், மக்களாட்சி முறையை பற்றியும் பேசும் அனைவரையும் ஒன்று கேட்கிறேன். மக்களாட்சி உள்ள எந்த நாட்டில் இராணுவம் இல்லை. அப்படி இராணுவத்தில் உள்ளவர்கள் நடவடிக்கைகளில் கொல்லப்படுவது இல்லையா. அப்படி கொல்லப்படும் இராணுவத்தினர்களுக்கு சொந்த பந்தங்களும் ஆசா பாசம் இல்லையா. அல்லது இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் அரசு கொன்றால் அந்த கொலை கொலை இல்லையா. கார்கில் போரிலும், பங்களா தேசத்து எல்லை, அசாமிலும், காசுமீரத்திலும் நாளுக்கு நாள் எத்தனை வீரர்கள் கொல்ல படுகிறார்கள்......

நீதியின் பெயரால் நீதி கேட்க்கும் அந்த பத்திரிக்கைகளும், பதிவர்களும் இதை சார்ந்து வாய்திரப்பாது இருப்பது ஏன் விளக்க முடியுமா. அனைத்து உயிர்களும் ஒன்றே, அது போராளியாக இருந்தாலும் சரி, இராணுவமாக இருந்தாலும் சரி, பொது மக்களாக இருந்தாலும் சரி. புலிகளின் தாக்குதல் எப்பவுமே இராணுவ முகாமாகத்தான் இருக்கிறது. ஆனால் சிங்கள இராணுவம் தான் பொது மக்களாக பார்த்து பார்த்து தாக்கி கொண்டு இருக்கிறது. நேர்மையும், நீதியும் கொண்டவர்களே பதில் சொல்லுங்கள்.

8 comments:

')) said...

Good Article ......Continue like this ...........Sinhala arsaangathin kai koolikal maathiram thaan ipadi ketpaarhal

')) said...

சிங்கள இராணுவத்தால் கொல்லப்படுவதை இலங்கை அரசு வெற்றிகரமாக மூடிமறைக்கின்றது. இந்து பத்திரிகை ஒன்றே போதும். திருப்பித்தாக்குவதைத் தவிர வேறு வழியில்லை.

ஒரு ஈழத் தமிழன்

')) said...

நன்றாக எழுதியிருக்கீர்கள்

')) said...

ஒரு அருமையான அலசல். அனைத்து ராணுவங்களுமே கொலை செய்யஏற்பட்டவைதான். சரித்திர மன்னர்கள் அனைவரும் அனேகமாக கொலைகாரர்கள் தான். ஆனால் இவை அனைத்துமே மனித குல போராட்டத்தின் ஒரு வடிவம். நான்எழுத நினைத்ததை நீங்கள்எழுதிமுடித்துவிட்டீர்கள்!

')) said...

சி.மது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, என்ன தான் கைகூலி கொடுத்தாலும் இப்படி மனசாட்சியே இல்லாமல் எப்படி அவர்களால் நடந்து காட்டமுடிகிறது, வியப்பாக இருக்கிறது.

')) said...

ஒரு ஈழத்தமிழன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, அரசியல் தாக்குதல்(கருத்து தாக்குதல்) மிகவும் அவசியம். புலிகளின் அரசியல் நடவடிக்கைகள் நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்து வருகின்றது. விரைவில் ஒரு நல்ல முடிவுக்கு வரும். இந்து பத்திரிக்கை மேல் மக்கள் நம்பிக்கை இழந்து பல ஆண்டுகள் சென்றாகிவிட்டது. அது ஒருசார்பு பத்திரிக்கை, தமிழ் பத்திரிக்கை உலகம் எவ்வளவோ மேல்.....

')) said...

தமிழ் பித்தன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

')) said...

வாங்க ஓசை, சரியாக சொன்னீர்கள். இராணுவத்தின் இழப்பை மட்டும் புனிதபடுத்தி புலிகளை இழிவு படுத்தும் கயமை ஓய வேண்டும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....