Saturday, October 13, 2007

ஏ ஆர் ரகுமானின் இசை ஆலிவுட்டில் திருட்டு


லார்டு ஆப் தி வார் என்று ஒரு ஆங்கிலப்படம், உலக தீவிரவாதிகளுக்கு ஆயுதம் வாங்கித்தரும் ஒரு தரகனின் கதையை படமாக கொண்ட படம் அது.

இதிலே கதையின் நாயகன், ஒரு ரூசிய சரக்கு விமானம் முழுவதும் ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு ஆப்ரிக நாட்டிற்கு போகும் வேளையில் இன்டர்போல் அலுவலர்கள் அதை மோப்பம் பிடித்து அவனை கையும் களவுமாக பிடிப்பதற்கு ஆப்ரிகா பறந்து வருவார். அப்போது போர்விமானத்தின் உதவியுடன் இவனது விமானம் தரையிறங்க வைப்பார்கள்.
அப்படி இறங்கிய விமானத்தில் இருக்கும் ஆயுதங்களை வழிப்போக்கர்களிடன் எல்லாம் கொடுத்து எடுத்துப்போங்கள் என்று இன்டர்போல் வரும் முன் கொடுத்து அனுப்பிவிட்டு உனக்கும் பெப்பே உங்க அப்பனுக்கும் பெப்பே காட்டிவிட்டு சிரிப்பான். பதிலுக்கு அவர்கள் மாட்டுவடீ இன்னைக்கு இல்லனா என்ன வேற என்றக்காவது மாட்டாமலா போவாய் என்று கேட்டுவிட்டு போவார்கள்.
இந்த இடத்தில் தான் ரகுமானது இசையை பின்னனி இசையை அங்கு பின்னனியில் சேர்த்து இருப்பார்கள், அதுவும் எந்த இசை தெரியுமா, பம்பாயில் கலவரங்கள் வந்து ஓயும் போது ஒரு கருத்திசை வந்து வந்து போகும் அனேகமாக படம் முழுவதும். அந்த இசையைத்தான் இங்கே ரகுமானின் பெயரை அந்த படத்தின் தளத்திலே வேறு எங்கேயுமே கானும். கண்டிப்பாக இது ஒரு இசை திருட்டேதான். படம் வந்தது 2005இல் இன்னமும் இது பற்றி எங்கேயும் பேசாமலும் கண்டிகாமலும் இருப்பது வியப்பாக இருக்கிறது. இனிமேல் யாரும் ரகுமானின் படல் அங்கே கேட்டமாதிரி என்றெல்லாம் இனிபேசி அலய வேண்டாம்.

18 comments:

')) said...

பனிமலர்,

படத்தின் முடிவில் ஏ ஆர் ரஹுமான் பெயரையும் , பாம்பே படத்தின் தீம் இசை என்பதையும் குறிப்பிட்டிருந்தார்கள். அதை பார்க்க 15 நிமிடம் மெனக்கெட்டோம் :)

Inside man க்கும் பெயரைப் போட்டிருப்பார்கள்.

நம் அளவிற்கு மோசமல்ல என நினைக்கிறேன்..

ஒரு வினாடி வினா உங்களுக்கு ..ஆய்த எழுத்து எந்த படத்தின் சாயல் என்று தெரியுமா :) ?

சுகா

')) said...

http://news.bbc.co.uk/2/hi/entertainment/3211258.stm

')) said...

தகவலுக்கு நன்றி சுகா, அந்த இசையை கேட்டதும் இனையதில் தேடிப்பார்த்தேன் ஒரு இடத்தில் கூட ரகுமானின் பெயர் இல்லாமல் போக கோபம் வந்தது. அது தான் பதிவிட்டேன். சொன்னால் திட்டக்கூடாது ஆய்த எழுத்து இன்னமும் பார்க்கவில்லை, பார்த்துவிட்டு சொல்கிறேன். இப்படி ஒரு கேள்வியை கேட்ட உங்களுக்கு ஒரு கேள்வி, போக்கிரி எந்த படித்தின் தமிழ் பதிப்பு என்று தெரியுமா. போகிரியில் கடைசியில் வரும் பின்னி ஆலையை எதேட்சையாக்தான் தேர்ந்தெடுதாக நினைத்தேன். ஆனால் ஆங்கில பதிவை பார்த்ததும் வடிவேலை தவிர்த்து அத்தனை கதாப்பாத்திரங்களும் அப்படியே கையான்டு இருப்பதை பாத்து ஆடிதான் போனேன்.

')) said...

ஜெய் வருகைக்கும் பின்னூட்டதிற்கும் நன்றி.

')) said...

இதற்காகவே இந்தப்படத்தை பார்க்கனுமே!

தகவலுக்கு நன்றி, பனிமலர்!

பி.கு: உங்க profile பார்த்தீங்களா?
accounting/afghanistan னு இருக்கு?

')) said...

சுட்டி காட்டியதற்கு நன்றி தென்றல், அது அவகர்களாகவே போட்டுக்கொண்டது. மாற்றி விட்டேன், வருகைக்கும் தகவலுக்கும் நன்றி. எந்த படத்தை கட்டாயம் பார்க்கவேண்டும் என்று குறிப்பிட்டீர்கள், லார்டு ஆப் தி வாரையா அல்லது போக்கிரியின் அசலையா..

')) said...

ARR ஒன்னும் ரொம்பவும் சுத்தமும் இல்லீங்க. அவரும் சில மேல் நாட்டு இசைகளை திருடி இருக்காரு. இதைப்பத்தி தமிழ்மணத்திலேயே ஒரு பதிவு வந்தது. ஆனா, இப்ப எங்கிட்ட அதற்கு இணைப்பு சுட்டி இல்லீங்க.

')) said...

மாசிலா வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி, இப்படி அத்தனை இசை அமைப்பாளர்கள் மீதும் புகார் இருந்துக்கொண்டேத்தான் இருக்கிறது. உதாரணத்திற்கு என்று ஒரு நீண்ட பட்டியலே போட்டுக்கொண்டு போகலாம்.

ஆனால் அவருடைய இசையை ஆலிவுட் படத்தில் பார்த்ததும் முதலில் அது அவரது படமாக இருக்குமோ என்ற ஆவலாய் தான் இருந்தேன் பிறகு இல்லை என்றதும் தான் கோபம்.

இதற்கு முன் ஐசு வைடு சட் (Eyes Wide Shut) என்று ஒரு ஆங்கிலப்படத்தில், ஒரு மாதிரியான ஏடாகூடமான இடத்தில் பின்னனியில் தமிழ் பாடலே வரும், இது என்ன வேதனையா என்று ஒரு பாடல். அப்பவும் அது ரகுமானாக இருக்குமோ என்று ஏமாந்தேன் இதே போல்.

')) said...

which is original pokiri?

')) said...

வாங்க சதுக்க பூதம், சுகா சொல்லுவார் என்று நின்னைத்தேன். சரி அந்த படம் இது தான் The Departed, பார்த்துவிட்டு சொல்லவும்.

')) said...

அந்தப் படத்தின் கதையைத் தவறாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்,

Iterpol அதிகாரிகள் விமானநிலையதில் தரையிறக்குமாறு கேட்டதற்கு மாறாக
விமானத்தை அவர்கள் வீதியிலேயே தரையிறக்கினார்கள் .

ஆயுதங்களைக்கிராம வாசிகள் கொண்டுசென்றபின் பிந்திவந்துசேர்ந்த அதிகாரிகளினால்
விமானதிற்கு அருகில் Nicholos Cage 24 மணிநேரம்
கைவிலங்கிடப்பட்டுத் தனிமையில் விடப்படும்போது தான் விமானம் துண்டுகளாக்கப் பட்டு களவாடப்படுகிறது

இந்தச்சந்தர்ப்பத்திற்தான் அந்தப்பின்னணி இசை ஒலிக்கின்றது

இந்தச்சம்பவம் சுமார் 6 மாதங்களிற்கு முன்னரே தமிழ்மணத்தில் அலசப்பட்டது

உண்மையை நேசிப்போம் தமிழையும் நேசிப்போம் (ஆங்கிலத்தை மட்டுமல்ல)

')) said...

கூல், கருத்துக்கு நன்றி, கதையை சரியாக்தான் குறிப்பிட்டு இருக்கிறேன், என்ன அவர்கள் போர் விமானத்தில் வந்து விமான நிலையத்துக்கு திருப்ப சொல்லும் போது அங்கேயே வீதியில் தரையிறகி குழந்தையை இடிக்கபோகும் வேளையில் நிற்கும், பிறகு ஆயுதங்களை வினியோகித்து அவர்களுக்கு பெப்பே சொல்லிய வேளையில் விட்டு போவார்கள். என்ன கதையின் அத்தனையும் சொல்லவில்லையே தவிற தவறாக ஏதும் சொல்லவில்லையே. தமிழ்மணத்தில் படங்களின் தமிழாக்கம் சம்பந்தமாக அதிகம் காண கிடைப்பதில்லை, இது சம்பந்தமாக ஏதும் இல்லையோ என்று தான் நினைத்தேன். இனி தேடி பார்த்துவிட்டு பதிவிடுகிறேன். தகவலுக்கு மிகவும் நன்றி கூல்.

')) said...

இந்த படத்தை எங்கே டவுன்லோடு செய்யலாம் - கொஞ்சம் சொல்றீங்களா ?

')) said...

படத்தை குறுந்தகடில் பார்த்தேன், தரவிறகம் இருக்கா தெரியவில்லை மன்னிகவும்.

')) said...

இந்திய இசையமைப்பாளர்களின் காப்பிக்கு இங்கு செல்லவும்.
www.itwofs.com

தமிழ் போக்கிரியின் மூலம் தெலுங்கில் மஹேஷ்பாபு, இலீயனா நடித்த போக்கிரி. அந்தப்படம் april 2006-ல் வெளியானது.

The departed படம் வெளியானது october 2006-ல்.

')) said...

பனிமலர்,

நான் போக்கிரி பார்க்கவில்லை.. அதுக்கும் இதுக்கும் சரி.. :)

ஆய்த எழுத்து .. amores perros என்ற ஸ்பேனிஷ் படத்தின் 'தாக்கம்' .. கொஞ்ச நேரம் இந்த படத்தைப் பார்த்தவுடன் டான் என 'மணி' அடித்தது :)

http://jackofall.blogspot.com/2004/09/city-of-god-amores-perros.html

சுகா

')) said...

ஒரு வேளை மார்ட்டின் ஸ்கார்ஸீஸி போக்கிரிய சுட்டுட்டாரோ :)))

')) said...

வருகைக்கும் தகவலுக்கும் நன்றி பெத்த ராயுடு, இதே போல் தான் ரோஜாவும் புரூப் ஆப் லைப்பும் அமைந்தது. ரோஜா முன்னே புரூப் ஆப் லைப் பின்னே. ரோஜாவின் தாக்கம் அந்த படத்தில் அப்படியே இருக்கும்.

சுகா, தகவலுக்கு நன்றி. படம் பார்த்தால் தெரிவிக்கின்றேன்.