Monday, May 9, 2016

தமிழக தேர்தல் களம் இந்தியாவிற்கும் உலகுக்கும் சொல்வது என்ன

சட்டமன்றம், பாராளுமன்றம் என்று எந்த வகை தேர்தல்கள் வந்தாலும் அடுத்தது இந்த கட்சியோ இயக்கமோ தான் வரும் என்று முன் கூட்டியே தீர்மானிக்க கூடிய தேர்தல்களை தான் உலகம் கண்டுள்ளது.

2016 தமிழக சட்டமன்ற தேர்தலை பொருத்த வரை இது தான் நிலைமை என்று ஊடகங்கள் ஊதாத சங்கு இல்லை. இருப்பினும் உண்மை நிலை தான் என்ன....... அலசுவோம்

அதிமுக, திமுக, பாமக, பாசக, மநகூ என்று 5 முனை போட்டியாக இந்த முறை.

இதில் யார் யாருக்கு என்ன வாய்ப்பு என்று தனது கருத்துகளை அந்த அந்த கட்சி சார்ந்த ஊடகங்கள் கடைவிரித்து விற்றுக்கொண்டு இருக்கிறது.

இவைகளில் தனிப்பட்ட நபராக வலையேற்றினால் பதிவுக்கு ரூ300 என்று சொல்லி திமுக மேல் சேற்றை வாரி இறைத்தார்கள் ஒரு சாரார்.

தனக்கு பிடிக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக அந்த கட்சியையும்/இயக்கத்தையும் கொஞ்சம் கூட ஞாய தர்மம் இலாமல் வானலாகி புகழ்வதும்/வறுத்து எடுப்பதும் என்று சளைக்காமல் செய்து வருகின்றது ஊடகங்கள். வலைஞர்களையும் சேர்த்து தான்.

2016 சட்டமன்ற தேர்தலில் விவாதிக்கப்படும் மிகவும் முக்கியமான செய்திகள் என்ன என்று பார்ப்போம்.

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது..... ஏன் என்று கேட்டால், அம்மையார் மிகவும் அகங்காரம் பிடித்தவர், சாலைகளில் இறங்கி கூட ஓட்டு கேட்க்கமாட்டார், எல்லா ஆண்களையும் பொது மக்கள் பார்வையில் தனது காலில் விழ வைத்து இரசிக்கும் ஒரு கொடூர இரசிகை,  என்று அரசியல் அல்லாத பண்புகளை சொல்லி விவாதிப்பார்கள்.

சரி அந்த அம்மாவின் தனிப்பட்ட குணாதிசியங்களை பற்றி நமக்கு என்ன, திட்டங்களை தீட்டுவதும் அவைகளை செயல்படுத்துவதும் தான் அவருடைய மிதிப்பீடு இருக்க வேண்டுமே தவிர மற்றவைகளை பற்றி நமக்கு என்ன என்று கேட்டால், வரிசையாக அவர் மீது சுமத்த பட்டு இருக்கும் ஊழல் வழக்குகளை சொல்லி இப்படி தமிழ் நாட்டை கொள்ளையடிதவர்களை இனியும் பதவில் வைத்து இருக்க கூடாது என்று விவாதிப்பார்கள்.

அப்போ அதிமுகவை பொருத்த அளவில் மக்கள் அவரிடம் எதிர்ப்பார்ப்பது இந்த இரண்டு வகை குற்றங்களும் இல்லை என்றால் திமுகவுக்கு கூட அதிமுக ஆட்சி செய்வதில் ஆட்சோபம் இருக்காது போலும்.

திமுக தப்பி தவறிக்கூட ஆட்சிக்கு வந்துவிட கூடாது ஏன் என்று விவாதிப்போர் சொல்லும் காரணங்கள். குடும்ப அரசியல், ஊழல், தமிழின துரோகம்.

அப்போ திமுக தலைமை குடும்பத்தில் இருந்து அடுத்த முதல்வர் மட்டும் இல்லை திமுகவிற்கு தலைவராக கூட வரக்கூடாது  என்பார்கள் பொதுவாக அனைத்து மக்களும்.

ஊழல், எதற்கு எடுத்தாலும் ஊழல் எல்லாவற்றிலும் ஊழல் மிகவும் முக்கியமாக 1,75000 கோடி ஊழல். இதற்கு முன்பு சர்காரியா கமிசன் ஊழல் என்று ஊதுவார்கள் இப்போது 2சி ஊழல் என்று ஊதுகிறார்கள்.

ஈழத்து இறுதி போரின் போது மௌனம் காத்து துரோகம் இழைத்துவிட்டார் என்று சொல்வார்கள்.

அது என்ன அதிமுக என்றால் தனிபட்ட குணங்களை மட்டும் விவாதிப்பது மற்றவைகளை அப்படியே தவிர்கிறீர்களே என்றால், விபரம் அறிந்தவர்கள் விலகிவிடுவார்கள். ஏன் என்றால் அது வரை கௌரவமாக் சென்ற விவாதம் அதிமுகவின் செயல்பாடுகளை பற்றி பேசப்போனால் தங்களது மானம் போய்விடும் என்று ஓடிவிடுவார்கள்.

சரி திமுக அடிவாங்கும் ஊழல், துரோகம், குடும்பம் தவிர திமுகாவின் செயல்பாடுகளை ஏன் விமர்சிக்க மாட்டேன் என்கிறீர்கள் என்று கேட்டால், திமுக தலைமைக்கு மனைவி மற்றும் துணைவி என்று கேலி பேசி சிரிப்பார்கள். அதோடு மட்டும் இல்லை திமுகவின் அமைச்சர்களும் அப்படி தான் என்று பட்டியல் போடுவார்கள்.

சரி திமுகவை இப்படி சொல்கிறீர்கள் அதிமுக என்றால் மூச்சு பேச்சு இருக்காது. அப்படியே பேசினால் முன்னால் தலைவர் இரமச்சந்திரனை(MGR) சொல்லி அந்த இராமனை போல என்று சொல்லி சிலாய்ப்பார்கள். முன்னால் முதல்வர் இராமச்சந்திரன் தனது வீட்டிலே இரண்டு மனைவிகளுடன் தான் வாழ்ந்தார் என்றது உங்களுக்கு தெரியுமா என்றால் பொய்சொல்லாதே என்பார்கள்.

அந்த இரண்டு பெண்களையும் தொடைக்கு ஒன்று என்று உட்கார்த்தி எடுத்த படத்தை காண்பித்தால் இது எல்லாம் சித்துவேலை என்று சினுங்குவார்கள்.

சரி முன்னால் தலைமை தான் அப்படி இனாள் தலைமை எப்படி என்றால் அவர் சொல்வி என்று சொல்லும் போதே உங்களுக்கு அவரை பற்றி தெரியாதா. அவருக்கு என்று யாரும் இல்லை குறை சொல்லனும்னு சொல்லாதே என்று சொல்வார்கள். சோபன் பாபு மற்றும் இலண்டனில் இருப்பதாக சொல்லும் மகள் என்றால் அதோடு ஓடி போனவர்கள் எந்த நாளும் நம்மை சந்திப்பதை விரும்பமாட்டார்கள்.

அப்போ திமுகவின் மேல் வைக்கும் குடும்பம், ஊழல் இவைகள் இரண்டும் அதிகமாக அதிமுகவிடம் தான் இருக்கிறது என்று மக்கள் அனைவரும் ஒத்துகொண்ட ஒன்று.

ஈழ துரோகம் செய்துவிட்டார் திமுக அதனால் பதவியில் வந்து அமரக்கூடாது. சரி அப்படி விவாதிக்கும் மக்கள் சொல்வது சரியே. கொல்லப்பட்டது சிங்கள மக்களாகவே கூட இருந்தாலும் அவைகளை ஆதரிப்பதும் மௌனம் காப்பதும் மனித செயலாகவே சொல்ல முடியாது விலங்கு செயல்தான் மாற்று கருத்தே இல்லை.

சரி அன்றைக்கு திமுக செய்யவில்லை, இன்றைக்கு இதை விவாதிக்கும் மக்களிடம் கேட்ப்போம் அப்போ யார் யார் எல்லாம் துரோகம் செய்யாமல் காப்பாற்ற முயற்சித்தது. அதிமுக இறுதி போர்வரையில் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து என்றும் அவர்கள் தீவிரவாதிகள் என்றும். அரசியல் பாதையில்லாமல் ஆயுத பாதையில் சென்ற கொடூரகாரர்கள் என்றும் அல்லவா பேசி வந்தது.

அப்போ அதிமுக ஈழ துரோகம் ஆரம்பத்தில் இருந்தே கொள்கையாக கொண்டு இருந்ததே என்றால் மலுங்க மலுங்க பார்ப்பார்கள் அந்த விவாதகாரர்கள். இதில் தமிழறுவி மணியனும் அடக்கம்.

ஈழப்போரை வென்று எடுக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரசு அதனால் அவர்களை இந்த விவாத்தில் கொண்டு வருவது தவறு. சரி விட்டு விடுவோம் ஆனால் பாசக என்ன செய்துக்கொண்டு இருந்தது. காங்கிரசு இப்படி எல்லாம் செய்கிறது, தடுத்து நிறுத்துங்கள் என்றா சொன்னது. மாறாக தனக்கும் வேறு ஏதோ வேலை இருக்கிறது என்றும் போர் முடியும் வரை தங்களை யாரும் தொடர்புகொள்ள வேண்டாம் என்றும் அறிவிக்காத குறையாக அல்லவா நடந்து கொண்டது.

ஆக தேசிய அளவில் இருக்கும் எந்த ஒரு கட்சியும் ஈழ மக்களை காப்பாற்ற ஒரு துரும்ப்பை கூட கிள்ளி போடவில்லை. மாறாக நடக்கட்டும் என்று மௌனம் காத்து வழிவிட்டு காத்து நின்றது.

சரி திமுகவும் அதிமுகவும் ஈழ துரோகம் செய்தார்கள், தேசியகட்சிகளும் துரோகம் செய்தது என்று விளக்கிவிட்டோம். இவைகள் எல்லாவற்றையும் தொகுத்து பேசும் நாம் தமிழர் இயக்கமும், பாமகவும், மநகூவும் என்ன என்ன செய்தார்கள் என்று பட்டியல் இட்டு பார்ப்போம்.

மநகூ அப்போதைய திமுக அரசின் அங்கமாக இருந்தால், அவர்களால் தனியாக எதையும் செய்யவோ பேசவோ எழுதவோ இயலவில்லை. மாறாக கண்டனங்களை மட்டும் பதிவு செய்தார்கள்.

மிஞ்சு இருப்பது பாமகவும் நாம் தமிழர் இயக்கமும். பாமகவின் ஈழ பற்று பற்றி புதிதாக ஒன்றும் சொல்வதற்கு இல்லை. என்றைக்கு ஈழத்தில் வன்னியர்கள் அதிகம் இல்லை என்று தெரிந்ததோ அன்றையிலிருந்து ஈழம் தங்களுக்கு ஒரு பொருட்டு அல்ல என்று இருந்துவிட்டார்கள். ஆகவே பாமகவும் மற்ற கட்சிகளுடன் இந்த ஈழ பிரச்சனையில் கடலில் கரைந்த பெருங்காயமாகிறது.

மிச்சம் இருப்பது நாம் தமிழர் இயக்கம் மட்டும் தான், அவர்கள் என்ன என்ன செய்தார்கள் செய்யாமல் போனார்கள் என்று பார்ப்போம்.

ஈழப்போர் அமைதிவழியில் நடந்துகொண்டு இருந்த வரையில் வெளியில் தெரியாமல் இருந்தது உண்மை. அப்படி போராட்டமாக வெடித்த உடனேயே தடுத்து நிறுத்தி இருந்தால் இப்படி ஒரு நிலைமை அந்த மக்களுக்கு வந்து இருக்காது. மாறாக எரிகின்ற தீயில் எல்லோரும் எண்ணையை ஊற்றினார்களே அன்றி அணைக்க ஒருவருக்கும் தயாராக இல்லை. நாம் தமிழ் இயக்கம் உட்பட.

திமுக அரசு என்ன என்ன எல்லாம் செய்து இருக்க வேண்டும் என்று நாம் தமிழர் இயக்கம் சொல்கின்றனவோ அவைகளில் ஏதாவது ஒன்றாவது நாம் தமிழர் இயக்கம் செய்துள்ளதா. உதாரணமாக ஒன்றை சொல்வோம், சீமான் ஒரு திரைகலைஞர். வருடம் ஒரு படம் ஈழத்தில் என்ன நடந்தது எப்படி நடத்தப்பட்டது ஏன் நடத்தப்பட்டது என்று இது வரையில் ஒரே ஒரு படமாவது எடுத்து இருப்பாரா.

யூதர்களை எப்படி எல்லாம் துன்புறுத்தி கொன்றார்கள்,சித்திரவதை செய்தார்கள் என்று இன்றைக்கும் ஆண்டுக்கு 2 படமாவது ஆசுகர்க்கு வருவது உண்டு. ஓகோ என்று ஓடவில்லை என்றாலும் நட்டம் இல்லாமல் படமும் விருதும் வரும்.

ஆனால் இத்தனை ஆண்டுகளில் ஆணிவேர் தவிர இதுவரையில் என்ன நடந்தது, நடக்கிறது, எதற்காக என்று ஏதாவது சீமானோ அல்லது அவரது கட்சியில் இருப்பவர்களோ ஒரு படம், நாடகம், கதை, சிறு கதை என்று எதையாவது செய்ததுண்டா......இல்லை இல்லவே இல்லை.

கேட்டால் நாங்களா அதிகாரத்தில் இருந்தோம் என்று ஒற்றை சொல்லில் வாயை அடைப்பார் சீமான் மற்றும் அவரது கட்சியினர்கள்.

தமிழகத்தில் ஆட்சியில் இருந்துக்கொண்டா ஏறுதழுவுதலுக்கு தடைவாங்கினார்கள் விலங்கு காவலர்கள். இன்றைக்கு மாநில ஆட்சி இல்லை மைய ஆட்சியாலே ஒன்றும் செய்ய முடியாத அளவிற்கு அடுத்த ஒரு நாட்டில் தங்களால் தடைகளை பெறமுடியும் என்று நிறுபித்து இருக்கிறது அரசு சாரா அமைப்பினர்களின் இயக்கங்கள்.

ஏன் அந்த மாதிரி ஒரு அரசு சாரா இயக்கங்களை ஒருங்கினைத்து போராட்டங்களை நடத்தி சிங்கள அரசின் அனுமதி கிடைக்கவில்லை என்றால் ஐ நா மன்றத்தில் அனுமதி பெற்று போராடி இருக்கலாம் செய்தார்களா நாம் தமிழர் இயக்கம்.

இது ஒரு சின்ன உதாரணம் மட்டுமே, இது போல் இன்னமும் ஆயிரம் வழிகள் உண்டு உதவ வேண்டும் என்று நினைத்து இருந்தால் எத்தனையோ வழிகளில் உதவி இருக்கலாம். அப்போது எல்லாம் வெறும் பதிவர்கள் கொடுக்கும் ஆதரவை போல் சின்ன சின்ன பொது கூட்டங்களில் முழங்குவது மட்டுமோடு நிறுத்திக்கொண்டு விட்டு இப்போது என்னமோ இவர்கள் எல்லாம் போர்களம் சென்று துப்பாக்கி பிடித்து, தான் தான் தமிழர்களை காப்பாற்றியவர்கள் போல அல்லவா பாவணை செய்கிறார்கள். ஆக நாம் தமிழர் இயக்கம் உட்பட எவருமே ஈழத்துமக்களுக்கு ஆதரவு தர முன்வரவில்லை என்றது தான் உண்மை.

இவை எல்லாவற்றிற்கும் காரணம் ஆயுத போராட்டம். அதை அறிந்த புலிகள் தங்களது போராட்ட வடிவை மக்களாட்சி முறைக்கும் திருப்பும் முயற்சியில் தான் அழிக்கப்பட்டார்கள். ஒருவேளை அந்த முயற்சிகள் வெற்றிபெற்று இருந்தால் இரண்டு நாடாக ஈழமும் சிங்களமும் வாந்துக்கொண்டு இருக்கவேண்டுமே என்று அவசர அவசரமாக முடித்தார்கள் அரசியல் சதிகார்கர்கள் என்றது தான் உண்மை.

இந்த திரைமறைவு காரியங்களில் என்றைக்குமே பகிரங்கமாக அறிவிக்க முடியாத காரியங்களை இந்தியா முதல் அமெரிக்க அரசு வரை செய்தது. எப்போது கேட்டாலும் நாங்களா அப்படியா என்று தான் கேட்பார்களே அன்றி உண்மையை ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

ஆக மாற்றம் முன்னேற்றம், வளர்ச்சி என்று மைய அரசை பிடித்த அதே வழியில் தமிழகத்து அரசியலுக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்க ஊடகங்கள் மூலமாகவும், சின்ன கட்சிகளின் மூலமாகவும் தமிழக விரோத சக்திகள் செயல்பட்டுக்கொண்டு வருகின்றது.

யார் யார் எல்லாம் அந்த சக்திகள், சோ ராமசாமி, இவர் உலகுகே மோடிதான் பிரதமராக வரவேண்டும் என்று சொல்வார். என்ன காரணம் என்றால் நிர்வாக திறன் தான் காரணம் என்று சொல்வார். அப்போ முதல்வராக இருந்த சமயத்தில் 5 நாட்கள் மாநிலம் முழுதும் தீவிட்டு எரிந்த கலவரத்தை அடக்கமுடியவில்லையே என்று கேட்டால் நீ எல்லாம் திவிரவாதிக்கு ஆதரவு கொடுக்கும் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போலும் என்றும் நம் மடியிலே கையை வைப்பார்.

இந்து ராம், இவருக்கு தமிழர்கள் என்றாலும் ஆகாது தமிழகம் என்றாலும் ஆகாது ஏன் தமிழ் என்றாலே அகாது. காரணம் அவர் தமிழகத்தில் பிறந்து தமிழ் பேசவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டவர். ஆனால் அவர்களது தாய் மொழி சங்கதம்(சமசுகிரிதம்). ஆனால் அவரால் அவரது வீட்டில் கூட இம்மொழியில் பேச முடியாத நிலை.

வேற்று மொழியில் தான் பேசுவது என்று ஆகிவிட்டது பிறகு ஏன் தமிழில் பேசுவானேன் ஆங்கிலத்திலேயே பேசுவோம் என்று ஒரு கூட்டம் இருக்கிறது. அந்த கூட்டம் தான் இந்த திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு ஒரு முடிவு கட்டுவோம் என்று கூவுகிறது.

சுப்பிரமணி சாமி அடுத்த ஆள், இவரும் முன்னே சொன்ன எல்லாம் செய்வார், இவர்கள் எல்லாம் பேசாமல் எங்கே ஆதரிக்கிறார்களோ அங்கேயே போய் பிழைக்கலாம். ஆனால் என்ன செய்வார்கள் நம்மிடையே தங்கி நம்மையே சுரண்டி, நம்மையே கேலி பேசி வாழ்வார்கள்.

திராவிட இயக்கங்களை இவர்கள் ஏன் இப்படி மூர்க்கமாக எதிர்க்க வேண்டும் கடவுளை காரணமாக காட்டி தலைமுறை தலைமுறையாக சமூகத்தை பிரித்து பகத்துவீட்டுகாரனை நமக்கு பகைமையாக்கி, பக்கத்து தெருகாரனை பகையாக்கி, பக்கத்து ஊர்காரனை பகையாக்கி பக்கத்து மாநிலக்காரனை பகையாக்கி, பக்கத்து நாட்டுகாரனை பகையாக்கி அதிலே குளிர் காய்வது இவர்களது வளர்ச்சியும் முன்னேற்றமும்.

இந்த சூச்சிக்களுக்கு எல்லாம் இரையாகாமல் தமிழகம் தனித்து நிற்பதற்கு காரணம் திகவும் அதன் அரசியல் வடிவங்களாகிய திமுகவும் அதிமுகவும் தான்.

எப்படியோ கொஞ்சம் கொஞ்சமாக முயன்று அதிமுகவை கரையான் அரிப்பது போல் அரித்து திக கொள்கைகளில் இருந்து உளுத்து போக வைத்துவிட்டார்கள். இப்போது அதே சதிவேலையில் திமுகவையும் உளுத்துபோக வைக்க அல்லாடிக்கொண்டு இருக்கிறது அந்த காவிக்கூட்டம்.

வடக்கில் மதத்தின் பெயரால் நடைபெறும் வன்முறைகளை தென்னகத்தில் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில் தீர்க்கமாக சமூக வலைதளம் முதல் ஊடகம் வரை அந்த சதியாளர்களின் கைகள் நீண்டு உள்ளது.

இவர்களது பேச்சை கேட்டால் பின் நாளில் என்ன நடக்கும் தெரியுமா, வடக்கில் பாண்டேக்கள் சாத்திரிகளுடன் பேச மாட்டார்கள், சர்மாக்கள் திக்சித்துகளுடன் நல்ல இருக்கிறியா என்று கூட கேட்க்கமாட்டார்கள். இது 1 வகுப்பு முதல் இறக்கும் காலம் வரை தொடரும் பழக்கம்.

பிறகு எங்கே நாம் அப்துல் கலாமுடன் பேசுவது அல்லது பீட்டருடன் பேசுவது. இப்படி எல்லோரும் இன் நாட்டு மக்கள் என்று வாழும் தென்னகத்தை சாதி தீ ஊற்றி எரியவிட்டு குளிர் காய நினைக்கும் கூட்டம் தான் இந்த மாற்றம் முன்னேற்றம், போதும் திராவிட கட்சிகள் என்பவர்கள்.

தமிழகத்தை ஆள அமித்து சாவும் மோடியும் எதற்கு, அவர்கள் அவர்களது ஊர்களை ஆளட்டும். தமிழகத்தில் இது வரை வாழ்ந்து வந்த நாமே ஆட்சிக்கு வருவோம். அது யாராக இருந்தாலும் சரி.

மாற்றம் முன்னேற்றம் வளர்ச்சி என்று சொல்லி ஆட்சிக்கு வந்தது முதல் பிஏ எம் ஏ பட்டம் வரை மோடியின் வரலாறு கிழிந்து தொங்குகின்றது. காவிக்கூட்டத்தின் சதியில் மாட்டி அழிந்துவிட்டாதீர்கள் மக்களே சொல்லி புட்டோம் பிறகு கையை பிசைந்து பலன் இல்லை சிந்திக்கவும் பிறகு வாக்களிக்கவும்.

3 comments:

')) said...

அம்மா தான் அடுத்த முதல் அமைச்சர் என்று மெத்த படித்தவர்கள் கூறுகிறார்கள்! உங்க வோட்டு யாருக்கு?

')) said...

ஆனா சுப்பிரமணி சாமி சசிக்கலா தான் அடுத்த முதல்வர் என்று சொல்கிறாரே அவர் மெத்த படிக்கவில்லையோ ஒரு வேளை

')) said...

Brother I heard NGO supported by corporate and governments so that they got stay against jallikattu easily.DMK had strong ideology even before they come to power.Naam tamilar party has no strong ideology instead they say comes to power change everything change what?I agree you post thanks.