Wednesday, May 11, 2016

பாமகவும் அன்புமணியும் - சொல்வார்களா செய்வார்களா - அன்புமணியின் முதல் கையெழுத்து இதுக்கு தான்

மூச்சுக்கு மூச்சு மாற்றம் முன்னேற்றம் வளர்ச்சி என்று பேசும் பாமகவும் அதன் அடுத்த வாரிசு அன்புமணியும் என்ன மாற்றம் முன்னேற்றம் வளர்ச்சியை பற்றி அறிவித்தால் ஆட்சியை பிடிக்கமுடியும் என்று தெரியாமல் தவிக்கிறார்களா இல்லை நடிக்கிறார்களா....

உதாரணத்திற்காக  சொல்வோமானால் ஒவ்வொரு நாடும் ஒரு கப்பல் போன்றது அதில் பயணிக்கும் மக்கள் எல்லோடும் நாட்டில் வாழும் மக்கள் என்று வைத்துக்கொள்வோம்.

கப்பல் ஒரு புயல் நோக்கி சென்றுக்கொண்டு இருப்பது அறிந்து கப்பல் தலைவர் பயணிகள் தங்களையும் கப்பலையும் காத்துக்கொள்ள என்ன என்ன செய்யவேண்டும் என்று வரிசையாக அறிவித்து ஒரு ஒத்திகையும் நடத்துகிறார்.

அந்த ஒத்திக்கையில் ஆங்காங்கே தலைவனின் கட்டளைகளை உள்வாங்க முடியாமல் தவிக்கும் பயணிகளுக்கு புரியும் வண்ணம் செய்துக்காட்டியும் வழி நடத்தியவர்களை அந்த கப்பல் தலைவன் அவர்களை அந்த புயலின் போது மக்களை இப்படியே வழி நடத்தும் படி பணிகிறார்.

நேரம் செல்ல செல்ல புயலின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக கப்பலை ஆட்டம் காண வைக்கிறது.

அந்த குட்டி குட்டி தலைகள் அங்கேயும் இங்கேயும் அலைந்து திரிந்து மக்களை பாதுகாப்பாக செயல்படவும் பாதுகாப்பதுமாக சுறுசுறுப்பாக இருந்தார்கள்.

அந்த நேரத்தில் பாமக கட்சியினர் போல் சிந்தாந்தம் கொண்ட சில குட்டி தலைகள், அந்த கப்பலில் தன்னை சார்ந்தவர்களின் பாதுகாப்பை உறுதி முதலில் செய்வது என தங்களுக்குள் பேசிக்கொண்டு தீவிரமாக செயல்பட துவங்கினார்கள்.

புயலின் கடுமை அதிகமாக அதிகமாக கப்பல் தலைமை எல்லோருக்கும் மிதவை உடைகளை கொடுத்து போட்டுக்கொள்ள செய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார். உடனே இந்த குட்டி தலைகள் தங்களது மக்கள் எல்லோருக்கும் கொடுத்துவிட்டு தான் மற்றவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்று இரகசியமாக பேசிக்கொண்டு செயல்படுகிறார்கள்.

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக கப்பலை முழுமையாக இருள் சூழ்கின்றது. இனியும் கப்பல் நகர்ந்தால் திசைமாறி போகும் என்று நடுக்கடலில் நங்கூராம் இட்டு நிறுத்தி வைக்கப்படுகின்றது.

இப்படி நங்கூரமிட்டு நிற்கும் போதெல்லாம் எத்தனை நாள் ஆகும் என்று தெளிவாக அறிவிக்கவோ அறியவோ முடியாத நிலைக்கு தள்ளப்படுவதால் கப்பல் பயணிகளுக்கு கொடுக்கும் உணவை அளந்து அளந்து தான் செலவிடும் என்ற விதி. அனைவரும் நிலைமையை சீர்த்தூக்கி ஏற்று கொள்ள வேண்டிய ஒன்று தான்.

தனது பிள்ளைக்கு கிடைக்கவில்லை என்றால் தனது உணவை அவர்களுக்கு கொடுத்துவிட்டு தண்ணி குடித்துவிட்டு இருப்போர் பெற்றோர்கள். என்ன 2 , 3 நாட்களில் நிலைமை சரியாகிவிடும் என்று இருப்பார்கள்.

இந்த நிலையில் உணவும் தண்ணீரும் கிடைக்கவில்லை என்று சில குட்டி தலைகள் தலைமையிடம் உண்மை நிலையை தெரிவித்து அதிகமாக பெற்று செல்வதை இந்த சுயனல குட்டி தலைகள் பார்க்கிறார்கள். அதையே சொல்லி இவர்கள் பங்கிற்கும் அதிகமாக பெற்று அபரிவிதமாக கொண்டு வந்து கொட்டுகிறார்கள். உண்டது போக மிகை அதிகமாக மீதம் இருக்கிறது. அந்த உணவையும் தண்ணீரையும் பதுக்குகிறார்கள்.

அப்போது இதை கவனித்த பக்கதில் இருக்கும் குழு உங்களிடம் அதிகமாக இருக்கும் உணவை எங்களுக்கு கொடுங்கள் எங்களில் பாதி பேர்க்கு கூட கிடைக்கவில்லை என்று கேட்கிறார்கள். அப்போது ஒன்றும் சொல்லாமல் கொடுக்கிறார்கள்.

மீண்டும் ஒரு முறை உணவு வழங்கல்  வரும் போது இந்த செய்கை தலைமையிடம் தெரிவிக்கப்படுகின்றது. அந்த கப்பல் தலைவன் இந்த சுயனல தலைகளுக்கு கணக்கு பார்த்து கொடுக்கவும் என்று உத்தரவு பிறக்கிறது. அதுவும் இவர்களது பதுக்கலை அம்பலபடுத்தியரிடமே அந்த பொறுப்பு கொடுக்கப்படுகின்றது.

மறுபடியும் இந்த சுயனல குட்டி தலைகள் தங்களுக்குள் திட்டம் தீட்டுகிறார்கள், மற்றவர்கள் எப்படி போனாலும் பரவாயில்லை நமக்கு எப்போதும் எந்த குறையும் வந்துவிடக்கூடாது. ஆகவே கொடுக்கிறார்களா என்று பார்ப்போம் அப்படி இல்லை என்றால் அடித்து பிடுங்குவோம் என்று திட்டம் தீட்டுகிறார்கள்.

பிறகு துவக்கதில் அடுத்தவர் அறியாத விதமாக தாக்குதல் நடத்தி பிடிங்கி உண்கிறார்கள். ஒரு நேரத்தில் அடுத்தவர் பார்க்கும் படியாகவே அடித்து பிடுங்கி உண்ண துவங்குகிறார்கள்.

இந்த செய்கையை பார்க்கும் மற்ற மக்கள் அனைவரும் கப்பலில் இப்படி ஒரு அவசர நிலை இந்த நிலையில் பகுத்து உண்டு அனைவரையும் காத்து கப்பல் நாடு போய் போகவேண்டும் என்று எல்லோரும் இருக்கையில் இப்படி நடந்து கொள்கிறார்களே என்று முகம் சுளிக்கிறார்கள்.

இந்த நிலையில் தாங்கள் மட்டும் இப்படி அடித்து பிடித்து உண்பதால் தானே தங்களை தவறாக பேசுகிறார்கள் என்று சபலபட்ட மற்ற குட்டி குட்டி தலைகளை கூட்டி வந்து இந்த திட்டத்தை சொல்லி இவர் இவர்களை எல்லாம் அடித்தால் யாரும் கேட்க்க கூட மாட்டார்கள் ஆகையால் நமக்கு கிடைக்க வேண்டியவைகள் எல்லாம் இவர்களுக்கு கொடுப்பதை அடித்து பிடுங்கினால் போதும் என்று சதி ஓதுகிறார்கள்.

நாள் கணக்கில் நடுக்கடலில் தவிக்கும் அந்த குட்டி குட்டி தலைவர்களுக்கு தங்களை சேர்ந்தவர்களை காக்க இந்த தியாகத்தை/துரோகத்தை செய்தால் என்ன என்று இதே செய்கையில் இறங்குகிறார்கள்.

அதுவரையில் அமைதியாக இருந்த கப்பல் போர்களமாகவும் போர்கலமாகவும் மாறுகிறது.

பின்னாளில் கப்பல் மீண்டும் பயணிக்க துவங்கும் போது புதிதாக கொண்டு வரப்பட்ட உணவு தண்ணீரை மீண்டும் கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்கள்.

கப்பல் பயணிக்க துவங்கி உடன் கப்பல் தலைமைக்கு வேறு ஒரு ஆள் தேவை படுகின்றது, இப்படி நடுக்கடலில் இருந்த நாட்களில் அடுத்தவர்களுக்கு கிடைக்கவேண்டிய வைகளை  அஞியாயமாக பிடுங்கி தின்றுவிட்டது மட்டும் இல்லாமல் தங்களை எதிர்ப்பவர்களுக்கு எதுவுமே கிடைக்காமல் தவிக்கவும் சாகவும் செய்த இவர்களுக்கு அந்த தலைமையை அடைந்தால் நமக்கு என்ன எல்லாம் வேண்டுமோ அவைகளை தங்கு தடையின்றி எடுத்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தலைமை மேல் ஆசை பிறக்கின்றது.

எப்படி யாரை தேர்ந்து எடுப்பது என்று விவாதம் வருகின்றது, அப்போது இந்த சுயனல தலைகள் இப்படி பேசுகிறார்கள். இது வரையில் இந்த மாதிரியான தலைகள் வந்ததில் என்ன கண்டீர்கள். மாறி மாறி கப்பலில் இருக்கும் உணவுகளை காலி செய்தது தான் இவர்கள் செய்தது இவைகளுக்கு எல்லாம் ஒரு மாற்றமும் அதன் மூலம் முன்னேற்றமும் பின் வளர்ச்சியும் வரவேண்டும்.

இவைகள் எல்லாம் எங்களால் தான் கொண்டு வரமுடியும் என்றும் எப்படி என்று கேட்டதற்கு அவசர காலத்தில் உங்களில் நிறைய பேருக்கு உணவும் தண்ணீரும் கிடைக்காமல் தவித்தீர்கள் தானே, இந்த மாதிரி தலைவர்கள் தலைமையை தொடரும் வரையில் இந்த நிலைமை தான் இருக்கும். எங்களை கொண்டு வாருங்கள் மாற்றம் முன்னேற்றம் வளர்ச்சி வரும் என்று சொன்னார்கள்.

பாதிக்கப்பட்ட மக்கள் அந்த உணவு பற்றாகுறை உங்களால் தான் வந்தது என்று சொல்ல மக்கள் அறியாத வண்ணம் அந்த எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை தாக்கினார்கள் இந்த சுயனல தலைகள். அங்கேயும் இங்கேயும் என்று நடந்தது பிறகு அனைவருக்கும் தெரியும் விதமாகவே நடக்க துவங்கியது.

பிற்காலத்தில் மக்கள் முன் நல்லவனாக பேசுவதும் நடிப்பதும் என்றும், திரைக்கு மறைவில் எதிர்க்க சத்தி இல்லாத மக்களை எல்லாம் அழித்தால் அவர்களுக்கு கொடுக்க வேண்டியதை எல்லாம் நாம் எடுத்து கொள்லலாம் என்று செயல்படுகிறார்கள்.

கப்பல் கறை சேருமா மக்கள் தப்புவார்களா என்று கவலையுடன் பயணம் தொடருகிறது.

ஆக நாட்டின் அடிப்படை தேவை சமூக முன்னேற்றம், மற்ற எல்லா முன்னேற்றத்திற்கும் அடிப்படை இது தான்.

சமூக ஏற்ற தாழ்வுகளை சமன் படுத்தும் வரை இந்திய அமெரிக்காவோ அல்லது வல்லரசோ இல்லை நல்ல நாடாகக்கூட ஆக முடியாது.

இன்றைக்கு சொல்லட்டும் பாமக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாதிகளை ஒழிப்போம் என்று இந்த தேர்தலில் பாமக தான் ஆட்சிக்கு வரும். சொல்வார்களா செய்வார்களா...... பார்ப்போம்.

2 comments:

Anonymous said...

PMK must give seat to non-vanniyars in winnable (Vanniyar Dominant) constituencies. Then only people will accept its declaration.

Anonymous said...

PMK must give seat to non-vanniyars in winnable (Vanniyar Dominant) constituencies. Then only people will accept its declaration.