Saturday, September 5, 2015

எச்சு ராசா அவிழ்த்துவிடும் புளுகு மூட்டை - உலக தமிழர்கள் இணக்கமாக வாழ முடியாது

இந்தியாவை விட்டு வெளியே வந்தாகிவிட்டது என்றால் வேண்டி கேட்க்காமலே இந்தி பேசும் மக்கள் ஆங்கிலத்தில் தான் உரையாடுகிறார்கள்.

இந்தி போசும் இந்தியர்களில் இரண்டு இரகம் உண்டு. ஒன்று இந்தி உனக்கு தெரியாதா, நீ இந்தியனா, இந்தியாவின் தேசிய மொழி அது தெரியாத நீ எல்லாம் ஒரு இந்தியன் என்று சொல்லுபவர்.

இரண்டாம் இரகம் வெள்ளைகாரன் பேசுவதை விட அழகாகவும் ஆழமாகவும் பேசுவதில் நாமே வல்லவர் என்று காட்டுபவர்களும் உண்டு.

இதிலே அழகாக ஆங்கிலம் பேசிக்காட்டுபவர்கள் தான் அதிகம். வெள்ளைகார உடை, நடை, அதே பார், பீர் மற்றும் ஆங்கிலம் என்று அதிகாலை வரை அசத்தும் இந்தி பேசும் இந்தியர்களை எச்சு ராசா பார்த்தது தான் உண்டா.

இந்தி பேசும் மக்களின் பழக்க வழக்கம் வேறு தமிழர்களின் பழக்க வழக்கங்கள் வேறு. என்ன தான் வாடா போடா என்று பழகினாலும், அவர்களிடம் புழக்கம் அவ்வளவு தான். தமிழர்களாக கூடுவதும், தமிழ்ச்சங்களில் சந்திபதும், தங்களுக்கு என்று ஒரு நெருங்கிய வட்டம் அமைத்து அவர்களுக்குள் பழகுவதே போதும் போதும் என்று ஆகிவிடுகின்றது.

தமிழருவி மணியன் ஒரு முறை மேடைகளில் சொன்னார், வெள்ளை காரனை போல் எவ்வளவு தான் அழகு ஆங்கிலம் பேசினாலும், அவர்கள் பயன்படுத்தும் உடை நறுமணம் போல் எல்லாவற்றையும் பயன்படுத்தினாலும் அவன் உங்களை அவர்களாக பார்ப்பதும் இல்லை சேர்த்துகொள்ளுவதும் இல்லை.

இது அப்பட்டமான உண்மை, அது இந்தி பேசும் இந்தியர்களுக்கும் பொருந்தும், இந்தி பேசுபவர் இந்தி பேசுபவர்கள் தான் தமிழர்கள் தமிழர்கள் தான்.

உண்மை இப்படி இருக்க.புரியாத இந்தியில் தான் உலகத்தாரோடு பேசுவேன் என்றும், அட எங்களுக்கு புரியல்லயா என்றால் 'திருநெல்வேலி மாணவி கிட்ட கூட ஆசிரியர் தினத்தன்று பேசிய மோடி இந்தியில தான் பேசினாரு, அந்த மாணவியோ அல்லது அதை எழுதிய பத்திரிக்கையோ புரியாத மொழியில் ஏன் பேசினார் என்று கேட்கவே இல்லையே' என்று அல்லவா சொல்கிறார்.

இத்தனைக்கும் அந்த மாணவிக்கு இந்தி தெரியாது, இருந்தும் இவர்களுக்கு சொல்லி புரியபோவது ஒன்றும் இல்லை என்று இருந்துவிட்டார் போலும் அந்த மாணவி.

5 comments:

')) said...

முதுகெலும்பு உள்ள ஊடகங்கள் இல்லை என்பதே..சான்று...

')) said...

அந்த மாணவியோ அல்லது அதை எழுதிய பத்திரிக்கையோ புரியாத மொழியில் ஏன் பேசினார் என்று கேட்கவே இல்லையே' அவைகள் ...முதுகெலும்பு இல்லா ஊடகங்கள்...

')) said...

//தமிழருவி மணியன் ஒரு முறை மேடைகளில் சொன்னார், வெள்ளை காரனை போல் எவ்வளவு தான் அழகு ஆங்கிலம் பேசினாலும், அவர்கள் பயன்படுத்தும் உடை நறுமணம் போல் எல்லாவற்றையும் பயன்படுத்தினாலும் அவன் உங்களை அவர்களாக பார்ப்பதும் இல்லை சேர்த்துகொள்ளுவதும் இல்லை.// 100 விழுக்காடு உண்மையான கணிப்பு.

மோடிக்கு ஆங்கிலத்தை விட இந்தி தான் அவர் உள்ளக்கிடக்கையை வெளிவிட இலகுவான மொழியாக உள்ளதோ?
எல்லாவிடத்திலும் இந்தி பேச முற்படுவது,இது மோடி வியாதி- பல தமிழ்நாட்டு பிரபலங்களின் வியாதி - தமிழ் பேசுபவர்களுடனும் ஆங்கிலம் பேசுவது.
பல வருடங்களுக்கு முன் ரி.எம்.கிருஸ்ணாவின் கச்சேரி பாரிஸ் மாநகரசபை ஒழுங்கு செய்திருந்தது. அதற்கு இங்கு பல்கலைக்கழகத்தில் தம்மிடம் தமிழ் கற்கும் மாணவர்களைக் அழைத்து வந்திருந்தார், தமிழ்ப்பேராசிரியர் மெய்யப்பன்.கச்சேரி முடிந்து ஒரு மாணவன் அவர் கையைக் குலுக்கி "மிக இனிமையாகப் பாடினீர்கள்- மிக்க நன்றி" எனத் தமிழில் கூற - கிருஸ்ணா - மறுமொழி சொன்னாரே- மாணவன் அதிர்ந்து - ஆசிரியர் மூஞ்சியைப் பார்த்தான்.
அவர் சொன்னது " தாங் யூ- ஓ யூ என்யோட், தாங் யூ போ கமிங்".
மாணவன் கேட்டான் , ஆங்கிலத்தில் - உங்களுக்கு தமிழ் தெரியாதா? என் ஆசிரியர் நீங்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழர் என்றார், அதனால் தமிழ் பேசினேன். உங்களுக்குத் தெரியாத புரியாத மொழியில் உங்களுடன் பேசியதற்கு மன்னியுங்கள்.
இது எப்படி இருக்கிறது.
இன்னுமொரு பாடகர் அபிஷேக் ரகுராம்- அவரிடம் ஒரு பிரஞ்சு ரசிகர் கேட்கிறார். "தமிழராகிய நீங்கள் ஏன் தெலுங்கில் பாடிகுறீர்கள்? அவர் பதில் "பாட இலகுவான மொழி- தெலுங்கு" எனோ அவர் தியாகையருக்கு -தமிழ் தெரியாது, அவர் தமிழில் உருப்படிகளை இயற்றவில்லை என உண்மையைக் கூறாமல், தனக்கு தாய்மொழி தமிழை விட தெலுங்கு பாட இலகுவாக உள்ளது என பிரஞ்சு ரசிகனுக்கு , விடுகை விட்டார். அவர் இவரைக் கேட்டார். "தெலுங்கு உங்கள் தாய் மொழி அல்ல தானே".

இப்படி, நம் தொலைக்காட்சி, வானொலி, சில பிரபலங்களே தமிழைக் கேவலப்படுத்துவோர்.
மோடி பேசுமிடமெங்கும் , நல்ல மொழிபெயர்பாளரை ஏற்பாடு செய்தால் போதும்.

')) said...

வலிபோக்கன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

')) said...

யோகன், ராசாவுக்கும் உண்மை என்ன என்று தெரியும் ஆனாலும் கயிறு திரிக்கின்றார், என்னை பொருத்த வரை தென்னகம் என்றால் அது வடக்குக்கு சேவை புரியும் மக்கள் என்று வடக்கத்தியர்கள் இன்னமும் நம்புகிறார்கள். அந்த மனட்பான்மை தான் அவர்களது உலக தமிழர்களிடம் காட்டும் வித்தியாசமும் வெறுப்பும் ஆகும்.

அது மட்டும் இல்லை வடகத்தியர்கள் சாதி வித்தியாசம் காட்டுவதில் வல்லவர்கள், வேற்று சாதியினருடன் புழங்க மறுப்பவர்கள்.

வெள்ளைகாரனாக இருந்துவிட்டால் அவன் செய்வது எல்லாமே சரி என்ற மனட்பான்மையும் கானமுடியும். எல்லாம் பகுத்தரிவு இல்லாததன் விளைவு வேறு என்ன சொல்ல. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.