Friday, September 4, 2015

ஐ நாவில் இந்தி ஆங்கிலமா - மோடி இனி வெளி நாடுகளில் இந்தியில் தான் பேச போகிறார் எப்பொழுதும்

ஐ நாவில் பேசுவது அங்கு இருக்கும் மக்களுக்கு புரிவதற்காக பேச வேண்டியது. அங்கே வரும் பல நாட்டு மக்களுக்கு புரிகின்ற வகையில் பேசவேண்டிய கோரிக்கைகளை எதற்காக இந்தியில் பேச வேண்டும். என்ன அதாணியும் அம்பாணியுமா கேட்டு குறை தீர்க்க போகிறார்கள். இதற்கு ஆகும் செலவை இந்தியாவே செலவு செய்யும் என்ற உறுதிமொழி வேறு.

 நாமும் தெரியாமல் தான் கேட்போம், ஐ நாவில் பேச போகின்ற நபருக்கு ஆங்கிலம் தெரியாதா இல்லை அங்கே கேட்க வரும் மக்களுக்கு இந்தி தெரியுமா, பின் ஏன் இந்த வீண் வேலை.

தென்னவர்களுக்கு தெரியாத இந்தியில் இந்தியாவில் மத்திய அரசு ஆட்சியில் இருப்பவர்கள் பேசுவதே புரிந்து கொள்ள பெரு நகரங்களை விட்டால் மற்ற இடங்களில் தடுமாற்றமே. அப்படி இருக்க இந்தியா சொல்வது உலகுக்கு புரியவே கூடாது என்ற எண்ணம் போலும்.

உங்களுக்கும் வேண்டாம் எங்களுக்கும் வேண்டாம் ஐ நாவில் ஆங்கிலத்தில் பேச வேண்டாம் என்றால் தமிழில் பேசுங்கள் உலகில் அதிக நாடுகளில் உள்ள மக்களுக்கு புரியும். தென்னகத்து மொழிகள் கூடாது என்ற காழ்ப்பு இருந்தால் இனி பிரன்சு மொழியில் ஐ நாவில் உரையாற்றுங்கள் நாங்களும் பிரன்சு படிக்கின்றோம் நீங்களும் படிப்பீர்கள்.

சந்தையை உலகமயம் ஆக்கியது போல் மொழியையும் உலகமயம் ஆக்கிவிட்டோம் என்று சொல்லிக்கொள்ளலாம்.

இல்லை நீங்கள் தமிழ் படித்து தமிழிலே ஐ நாவில் உரையாற்றினாலும் எங்களுக்கு மகிழ்ச்சி தான்.

அப்படி இந்திய மொழியில் தான் பேச வேண்டும் என்று சொன்னால் சங்கதத்தில் பேசுங்களேன் உலகின் முதல் மொழி இந்திய மொழிக்கு எல்லாம் தாய்.... அதை விடுத்து ஐ நாவில் போய் ஏன் இந்த வீண் வம்பு.

3 comments:

')) said...

ஐநாவில் , இந்த மொழியில் தான் பேச வேண்டுமெனும் கட்டுப்பாடு இல்லையென நினைக்கிறேன். அங்கு மொழிபெயர்ப்பு வசதி உண்டென்பதால், பல பிரபல மொழிகளில் உடன் மொழிபெயர்ப்பு செய்கிறார்கள். எனினும் ஆசிய நாட்டுத் தலைவர்கள் ஆங்கிலத்திலேயே பேசுவதுமுண்டு. முன்னாள் இலங்கை அதிபர் சிங்களத்துடன், தமிழிலும் பேசியதாக ஞாபகம்.
பிரெஞ்சுத் தலைவர்கள் எங்கு சென்றாலும் ஆங்கிலம் தெரிந்த போதும் பிரஞ்சில் பேசுவதையே வழமையாகக் கொண்டுள்ளார்கள்.
அதனால் மோடி அவர்கள் இந்தியில் பேசியது தவறல்ல! தவிர்த்திருக்கலாம்.
பல வளர் முக நாட்டுத் தலைவர்களுக்கு தன்னால், தன் மொழி ஐநாவில் ஒலித்தது எனும் பெருமையை தங்கவைத்துக் கொள்ளும் உந்துதல் உண்டு. இதை மன்னிக்கலாம்.

ஐ நாவில் இந்தியில் பேசுவதற்கு வழி செய்வது இருக்கட்டும், நாடாளுமன்றத்தில் இனி தமிழகத்தை சேர்ந்தவர்கள் தமிழில் தான் பேசுவார்கள் என்ற ஏற்பாட்டை முதலில் செய்யட்டும் பிறகு ஐ நாவில் பார்க்கலாம் என்றது எனது கருத்து. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யோகன்.