Tuesday, September 22, 2015

காதலும் திருமணத்திற்கு முன்பு சேர்ந்து வாழ்வதும் - தேனம்மை அம்மா செல்வது எல்லாம் உண்மை தானா

டேட்டிங், லிவிங் டுகெதர், கம்பானியன்ஷிப் – ஆன்மநேயக் காதலா.

இந்த தலைப்பை தொடும் போது எல்லோரும் அமெரிக்காவையும் இன்னமும் சில வெளி நாடுகளை உதாரணம் காட்டி பேசுவது வாடிக்கையாகிவிட்டது.

அப்படி உதாரணமாக காட்டுகிறேன் என்று தவறான தகவல்களையும் கொடுப்பதையும் வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள்.

மற்ற நாடுகளில் எப்படி என்று தெரியாது, ஆனால் அமெரிக்காவில் எப்படி என்று தெரியும் ஆகையாக தவறான தவறுகளை சுட்டுவோம்.

முதலில் சட்டம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

திருமணம் ஆனாலும் ஆகாவிட்டாலும் பிறந்த குழந்தைக்கு இவன் தான் தகப்பன் என்று மரபணு சோதனை மூலம் எளிதாக காட்டிவிடலாம்.

திருமணம் செய்துகொண்டு அப்பாவாக இருக்க முடியாது என்று ஆண் சொல்லும் பட்சத்தில் குழந்தைக்கான உதவி தொகையை அவன் குழந்தையின் 18 வயது வரை கட்டாயம் கொடுத்துக்கொண்டு இருக்க வேண்டும்.

அப்படி அவன் கொடுக்க முடியாது என்ற நிலைவரும் போது அவன் வேலை செய்யும் இடத்தில் இருந்து நேரடியாக பிடித்தம் பிடித்து அனுப நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும். அமெரிக்காவில் எந்த மூலையில் சென்று ஒளிந்துகொண்டு வேலை செய்தாலும் தேடி கண்டுபிடித்து பணத்தை பிடுங்கி அனுப்பிவிடுவார்கள் அரசாங்கத்தினர்கள். எந்த விதிவிலக்கும் கிடையவே கிடையாது.

ஆகையால் காதலிக்கும் ஆணும் சரி பெண்ணும் சரி இந்த காரியத்தில் தெளிவாக இருப்பார்கள்.

பெண்ணின் விருப்பம் இல்லாமல் கட்டிய கணவனே ஆனாலும் தொடமுடியாது, அப்படி ஏதும் நடந்தால் நேராக கம்பி எண்ண வேண்டியது தான். அதற்கு பிறகு இருண்ட வாழ்க்கையில் விரக்தி அடைந்து தத்துவம் பேசிக்கொண்டு திரிய வேண்டியது தான்.

இவ்வளவு பாதுகாப்புகள் இருந்தும் இந்த அமெரிக்கர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது. 18 வயது ஆனதும் அவர்கள் வீட்டை விட்டு போகிறார்களோ இல்லையோ பெற்றோர்கள் விரட்டி அடித்துவிடுவார்கள், அம்மாவும் சேர்ந்து தான்.

இல்லை இதே ஊரில் தான் கல்லூரி இருக்கிறதே என்று சொன்னாலும் இல்லை தனியா வீடு பார்த்துகொள் என்று தண்ணி தெளித்து விட்டுவிடுவார்கள்.

கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் முதல் போதும் என்று ஆகும் வரை குடித்துவிட்டு கும்மாளம் அடிக்கும் ஒரு கூட்டம். அதில் நன்றாக படிப்பவர்களும் உண்டு.

 நன்றாக படித்தவர்கள் நல்ல வேலைகளாக பெற்றுக்கொண்டு ஊர் இடம் மாற்றம் என்று மாறி செல்வார்கள். காதல் குடி சோம்பல் என்று இருக்கும் கூட்டம் பாதியில் படிப்பை முறித்துக்கொண்டு வேலைக்கு செல்லும். படிக்கின்றேன் என்று சொல்லி வாங்கிய கடனை கட்டும் வரை ஒன்றுக்கு இரண்டு என்று வேலை பார்த்து அடைப்பார்கள். அப்படி அடைத்து முடித்ததும் திரும்பவும் எந்த இடத்தில் படிப்பை விட்டார்களோ அந்த இடத்திலே விட்டதில் இருந்து தொடங்குவார்கள், கொஞ்சம் இடைவெளி விட்டாலும் இவர்களுக்கு பட்டம் கிடைக்கும் பிறகு நல்ல சம்பளத்தில் வேலையும் கிடைக்கும்.

இந்த இடைப்பட்ட காலத்தில் குழந்தை குடும்பம் என்று ஆகி கடைசியில் இந்த வசதியில் தமது கனவு வாழ்கை பலிக்க போவது இல்லை ஆகையால் இந்த திருமணம் வேண்டாம் என்று உதரித்தள்ளும் மக்களும் அதிகம். திருமணத்தை உதரலாம் ஆனால் குழந்தையை என்ன செய்வது. அந்த பிள்ளைகளை வளர்க்க முடியாமல் அவர்களது வாழ்க்கையை வீணடிப்பார்கள்.

தேனம்மை அம்மா சொன்னது போல் டார்மில் மருத்துவமனை போல் வரிசையாக படுக்கை ஒரே அறையில் இல்லை. தனி தனி அறைகள் இருக்கும் ஆனால் ஓர் அறையில் இருவர் தங்கி இருப்பது டார்ம்.

1000 டாலர்கள் இருந்தால் தாராளமாக குடுத்தனம் நடத்தலாம், இந்த காசு அவர்களுக்கு சொர்கத்தை காட்டும் அந்த காதலில், பிறகு குழந்தை பிறந்ததும் ஆகின்ற செலவுக்கு அரசை அனுகி பணம் வேண்டும் என்று கேட்கும் போது பல் இளிக்கும் இவர்களது பொருளாதாரம்.

இந்த மாதிரியான ஏராளமான முன் உதாரணங்களை பார்த்தவர்கள் இவர்கள், ஆகையால் ஒன்றாக தங்குவது காதலிப்பது பிறகு திருமணம் செய்துகொள்வது என்ற காரியங்களில் இவர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள்.

ஒரு பெண்ணின் திருமணத்திற்கும் அவளது முன்னாள் காதலுக்கும்(இன்னும் மற்ற பிர) எந்த சம்பந்தமும் இல்லை என்றது பெரும்பாலான அமெரிக்கர்களின் கோட்பாடு. ஆனால் திருமணத்திற்கு பிறகு அவளுடன் வாழவேண்டும் என்று மட்டுமே தெளிவாக இருக்கிறார்கள்.

எந்த வயதில் ஒத்துவரவில்லை என்று நினைக்கிறார்களோ அந்த நிமிடத்தில் இருந்து அவளுக்கு விடுதலை அந்த திருமண பந்ததில் இருந்து.

70, 80 ஆகியும் இன்னமும் முதல் திருமண பந்தத்துடன் இருக்கும் மக்களையும் பார்த்து இருக்கின்றேன், 6 மாத கைகுழைத்தயுடன் நீதிமன்ற வாசலை நாடும் பெண்களையும் பார்த்து இருக்கின்றேன்.

இந்த வாழ்கை முறையில் ஏதாவது ஒன்றாவது சாத்தியமா இந்தியாவில் பிறகு ஏன் இவர்களை பார்த்து இந்தியர்கள் பின்பற்றுகிறார்கள்.

முன்னாள் காதலன் தனது காதலியை பார்த்து நலமா என்று இன்னாள் கணவன் முன் கேட்டாலே போதும் அடி உதை என்ற கொடுமை கொலைவரையில் செல்கிறது பிறகு எதற்கு இந்த அரைகுறை பின்பற்றுதல். விட்டு விட்டு வேலையை பார்க்க வேண்டியது தானே.........

2 comments:

Anonymous said...

குழந்தையின் அம்மாவிற்கு வேலையில்லை என்றால், அம்மாவிற்கும் பணம் கொடுக்கணும். தாய்-சேய்க்கு மருத்துவ காப்பீடு செய்யவேணும்-குழந்தை பதினெட்டு வயது வரும் வரை. இங்குள்ள பிரபலமான ஸ்லோகன் பெண்ணிடம் நீங்கள் விளையாடுமுன் இவைகளை நினைவில் கொள்ளுங்க்ள!

')) said...

மறந்தே போனேன், குறிப்பிட்டமைக்கு நன்றி....