Tuesday, December 21, 2010

யார் இந்த விருதகிரி - ஆங்கிலபடம் TAKENஇன் தமிழாக்கம்படத்தில் கதை இயக்கம் என்று விச்சையகாந்தின் பெயரை காண்பிக்கிறார்கள். முதல் தயாரிப்பு அதுவும் நடப்பு செய்திகளை கொண்டு படமாகப்பட்டது என்ற புகழுரைகள் வேறு. இந்த முடியாத வயதிலும் தலைக்கு வண்ணமாக வண்ணங்களை மாற்றிக்கொண்டும், அயலக காவல் துறைகளோடு மோதுவதும். என்னமோ அவர்களுக்கு எல்லாம் அறிவே இல்லை என்றது போலும் ஆரம்ப காட்சிகள் அரங்கேற்றம்.இந்த படம் ஆங்கிலபடம் இன் ஈ அடிச்சான் பிரதி. எந்த அளவிற்கு என்று கேட்டால் ஆங்கிலத்தில் அந்த கடத்தல் கும்பல் ஒரு கல் உடைக்கும் இடத்தில் வைத்து அந்த விபச்சார தொழில் நடத்துவார்கள். அந்த கல்லுடைக்கும் இடத்தில் இருந்து நாயகன் தப்பி ஒரு பெண்ணை தூக்கிக்கொண்டு வண்டியில் தப்பிக்கும் போது அந்த வண்டி விரட்டல் அந்த கற்களின் குவியல்களுக்கு நடுவில் நடப்பதாக எடுத்து இருப்பார்கள் அந்த அளவிற்கு ஈ அடிச்சான் பிரதி இது.

மற்றபடி அந்த இரண்டு பெண்கள் ஆசுத்ரேலியா வந்து இறங்கி பின் கடைசியில் தப்பிக்கும் வரை அனைத்தும் காட்சிக்கு காட்சி வசனத்திற்கு வசனம் ஆங்கிலப்படமே.

இந்த இலட்சணத்தில் ஆசுத்ரேலிய அரசும் நாடும் இந்தியர்கள் வந்து அவர்களது நாட்டின் பொருளையும் செல்வங்களையும் கொள்ளயடிக்க வந்த கும்பலை நடத்துவது போலவும் காட்டியுள்ளார் இந்த படத்தில். உண்மையில் அங்கு படிக்க செல்லும் நம் மாணவமணிகள், கூட்டம் கூட்டமாக ஆட்களை அழைத்துக்கொண்டு தீபாவளி பொங்களுக்கு ஊர்வலம் நடத்திக்காட்டுவதும். 200, 300 வண்டிகளில் அணிவகுத்து ஊர்வலம் வருவதும், உள்ளூர் மக்களை பார்த்து நையாண்டி அடிப்பது தான் அந்த அடி தடிகளுக்கு உண்மையான காரணம்.

இவைகளுக்கு எல்லாம் மேலாக கிரிகெட்டு ஆட்டம் நடந்தால் அங்கே சென்று உட்கார்ந்து கொண்டு அவர்கள் ஆட்கள் வெளியேறும் போது தாரைதம்பட்டை என்று வாசித்துகாட்டினால் எப்படி இருக்கும். என்ன தான் எழுத்துரிமை பேச்சுரிமை என்று இருந்தாலும் எங்கே நம்ம ஆட்களை பெங்களூரூவில் சென்று அப்படி செய்ய சொல்லுங்கள் பார்க்கலாம். அடுத்த நாள் கையும் காலும் இல்லாமல் வந்து சேர்வார்கள். நமது நாட்டிலே நிலை இப்படி என்றால் அடுத்த நாட்டில் சென்று படிக்கும் மாணவர்களுக்கு ஏன் இந்த வீண்விளையாட்டுகள்.

இப்படி ஒரு நொண்டி சாக்கு இந்த படத்திற்கு தேவைபடுகிறது இல்லை என்றால் மூலப்படம் அப்படியே அல்லவா இருக்கிறது என்று சொல்வார்கள் என்று யோசனை கூறி இருப்பார்கள் போலும்.

விச்சைகாந்திற்கு இனி கவலையே இல்லை, என்ன என்ன காவலர்கள் படம் எல்லாம் ஆங்கிலத்தில் இருக்கிறதோ அவைகள் அனைத்தையும் இனி இப்படி ஒரு தமிழக அம்மா அப்பா, நண்பரின் மகள் என்று தலையையும் காலையும் மட்டும் மாட்டிவிட்டு படம் எடுப்பார் போலும்.

இந்த திருட்டு சரக்கை வைத்துக்கொண்டு படம் முழுக்க அடுத்தவர்களை இவர் பகிடி போசும் வசங்கள் இருக்கிறது பாருங்கள் செயா தொலைக்காட்சி செய்திகள் போல் ஒரே அருவருப்பு.

ஒருவேளை இவரது கட்சி எல்லா இடங்களிலும் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும்கால், படமே எடுக்கமுடியாமல் திணரும் இவர் எப்படி சொந்த ஆட்சியை கொடுப்பார். இன்னும் ஒரு மண்ணார்குடி கும்பலைபோல் வேலூரோ அல்லது ஆந்திரா கும்பலோ கதை வசனம் எழுதிகொடுக்க இவர் சட்டசபையில் நின்றுக்கொண்டு இவன் திருடன், அவன் அயோக்கியன், நான் மட்டும் தான் நல்லவன் என்று வசனம் சொல்வார் போலும்.

முதலில் அடுத்தவர் உழைப்பை திருடும் செயலை நிறுத்துங்கள், பிறகு நீதி செல்ல வாருங்கள். அடுத்த படமாவது திரைபட கல்லூரி மாணவர்களிடம் ஆலோசித்து இது தானா எழுதின கதையா அல்லது மண்டபத்தில எழுதி அதை தன் கதை என்று கொண்டு வந்து கொடுத்துள்ளார்களா என்று சரி பார்த்துகொள்ளவும்.

இன்னமும் கொஞ்சம் விட்டா இந்த படம் ஒரு தமிழன் எடுத்து இருக்கான் என்று தான் ஆசுகர் விருது கொடுக்கவில்லை இதுவே ஒரு வட நாட்டுகாரனாக இருந்து இருந்தா ஆசுகர் விருதுகள் கிடைத்து இருக்கும் என்று அவரது அடிபொடிகள் அவரை உசுப்பேத்தி விடாமல் இருத்தால் சரி.

0 comments: