படம் நன்றாக வந்து இருக்கிறது, என்ன இவ்வளவு மெதுவாக படம் நகர்ந்தால் தமிழ் இரசிகர்களுக்கு பிக்காது, இயக்குனருக்கு தெரியாதா என்ன.
நமக்கு எல்லாம் சப்பான் என்றால் பாயும் இரயிலும், மின்ணணு சாதணங்களாக மட்டும் தெரியும் நாட்டிலும் வாழ்பவர்கள் எல்லாம் மக்கள் தான். அவர்களிடமும் பாசம், ஏமாற்றம், அறிவின்மை என்றெல்லாம் உண்டு என்று சொல்வதோடு மட்டும் அல்லாது. சப்பானிய கிராமங்களை வழி நெடுக்க காட்டுவார்கள் சப்பான் படத்தில்.
ஏற்கனவே பல விமர்சனங்களில் சொன்னது போல் கதை அப்படியே அச்சு பிரதி எடுத்தால் கூட பரவாயில்லை என்று விட்டு விடலாம். ஆனால் மிகவும் கடினமான உழைபிலே ஒரு வெற்றி திரைகதையை உருவாக்கி வெற்றியும் கண்ட படத்தின் திரைகதையை அப்படியே இந்திய மை பெட்டியிலே நனைத்து கொடுப்பது தான் மிகவும் வருத்தமான செயல்.
அழுத்தமான கதையும், அதை அழகாக நடத்தி செல்லும் கம்பீரமான திரைகதையும் அமைந்துவிட்டால் வெற்றி நிச்சயம். நம்மவர்களுக்கு கதை எழுத வருகிறது, ஆனால் படமாக ஆக்க திரைகதையாக மாற்றும் போது தான் கோட்டை விட்டு விடுகிறார்கள்.
நந்தலாலாவில் எனக்கு எழுந்த கேள்விகள்.
1) ஏன் எல்லா கதா பாத்திரங்களும் தலைகுனிந்தே நடக்கிறார்கள். அதுவும் அப்படி தலைகுனிந்து நிற்கும் காட்சிகளை ஏன் மேல் இருந்தோ அல்லது கீழ் இருந்தோ அல்லது பின்னால் மட்டும் காட்ட வேண்டும். எல்லா படங்களிலும் காட்டுவது போல் பாத்திரங்களை நேரில் காண்பது போல் காட்டினால் என்ன. சப்பானிய படத்தில் இப்படிதான் காட்டுவார்களே அதனாலா அல்லது அவைகளுக்கு வேறு எதுவும் பொருள் உண்டா.
2) எந்த ஒரு காட்சிக்கும் ஒரு முன்னமைப்பை காட்டிவிட்டு தான் காட்சியை காட்டுவார்கள், அதாவது இது தான் களம் இனிமேல் என்ன நடக்கிறது என்று பாருங்கள் என்று காட்டுவார்கள். மன நல காப்பகத்தில் மட்டும் அப்படி ஒரு காட்சி அமைப்பு இருந்தது, பிறகு எந்த காட்சிகளிலும் இல்லை, தாய்வாசல் காட்சியில் மட்டும் மற்றும் ஒரு முறை களத்தை காட்டியுள்ளார். சப்பானிய படத்தில் அனேகமாக எல்லா காட்சியிலும் இந்த அமைப்பு அருமையாக வந்துள்ளது. அதனால் தான் என்னவோ எந்த காட்சியும் மனதில் ஒட்டவில்லை அந்த கடைசி காட்சியை தவிர.
3) ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை சாலையை தவிர. முதலில் நடக்கும் காட்சிகளை காட்டிவிட்டு நேரே தாய்வாசலை காட்டினால் கூட யாராலும் காட்சிகள் கானாமல் போனதை கண்டுபிடிக்க முடியாது.
4) புதுமண தம்பதிகள் மேல் சாராயத்தை தெளித்த ஆட்களை அடித்து கேட்க்கும் இவர்களை எதற்காக இறக்கிவிட்டு விட்டு அவர்கள் ஓட வேண்டும்.
5) ஒன்றுமே புரியாத செய்ய தெரியா ஆள் அம்மாவை மன நலகாப்பகத்தில் சேர்க்கும் போது இவனை ஒருவரும் கண்டுக்கொள்ளாமல் விட்டது எப்படி.
6) இன்னமும் எத்தனை காலங்களுக்கு தான் பெண்களை இழிவுபடுத்தியே படமாக எடுப்பீர்கள். நான் கடவுள் படத்தில் பிச்சைகாரியாக வருபவள் கூட தனக்கு விருப்பம் இல்லா ஆணுடன் வலுக்கட்டாயமாக அனுப்புவதை பொருக்காமல் சாவதற்கும் துனிவதாக கதை அமைத்திருப்பார் பாலா அது போல் ஏதாவது ஒரு பாத்திரமாக படைத்து இருக்கலாம் அந்த விலைமாது பாத்திரத்தை.
இப்படி பல குறைகள் படத்தில் இருந்தாலும் படம் நன்றாக அமைந்துள்ளது.
இளையராசா வழக்கம் போல் படம் முழுவதும் ஆளுகிறார், எல்லா காட்சியிலும் அவரும் உடன் வருகிறார். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அதே கம்பீரம் அவரின் குரலில். இரண்டு பாடல்கள் அருமை. தொலைகாட்சிகளில் உணர்ச்சிகளை அள்ளி கொட்டி மக்களின் மனதை மறுத்து போகும் அளவிற்கு செய்துவைத்திருக்கும் இந்த காலத்திலும், மனதை உலுக்கும் காட்சிகளாக அந்த கடைசிகாட்சிகள் அமைந்து இருப்பது அருமை.
சப்பானிய படத்திற்கும் இதற்கு ஆயிரம் ஒற்றுமைகள் இருந்தாலும் இந்த படம் வேறு அந்த படம் வேறாகத்தான் தெரிகிறது. என்ன உருசிய நாவலை தமிழில் படிக்கும் போது ஏற்படும் சங்கடங்கள் தானே தவிர தரமாக அமைந்து இருக்கிறது.
இதே போல் சப்பானிய படமான ஆடிசனையும் எடுத்தார் என்றால் இன்னமும் நன்றாக ஒரு திகில் படம் தமிழுக்கு கிடைக்கும். முயற்சிக்கிறாரா என்று பார்ப்போம்.
வாழ்த்துக்கள் மிசுகின்.
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago
0 comments:
Post a Comment