Thursday, December 16, 2010

சித்திக்கின் ப்ரண்சு Friends படமும் - சைமன் பிரிக்கும் Simon Birch (1998)


விச்சையின் இந்த படம் பார்க்கும் போது ஆகா என்ன ஆழமாக கதையாக எழுதி இருக்கிறார்கள் என்று வியந்தேன். அருமையான கதைகளம் அதிலே நகைபாக வர வேண்டும் என்று அதிக கவனமாக சூர்யாவையும் விச்சையையும் கையாண்டு இருப்பார்கள் படத்தில்.

அந்த படத்தின் கதையில் இது தான் அடிப்படை, தண்ணீரில் விழுந்த தனது தங்கையை காப்பாற்றுவான் ஒருவன் யாரும் இல்லாத அனாதையாக இருக்கும் அவனுக்கும் அவனது தம்பிக்கும் இவன் நண்பனாக ஆவான்.

நன்றாக சென்றுக்கொண்டு இருக்கும் அவர்களது நாட்களில் எதிர்பாராத விதமாக சூர்யாவின் தம்பி இறப்பான். இந்த சிறுவன் காதுகேளா மற்றும் பேச்சற்றவனாக கதையில் சொன்னாலும் அதிக இடங்களில் இந்த பாத்திரத்தை மூடி மறைத்தே கதை நகரும்.

அந்த இறப்பிற்கு பிறகு இவர்களின் நட்பில் ஒரு பெரிய நெருக்கம் வரும் அந்த நட்பு ஏன் என்று பிறகு தனது மனைவியின் சந்தேகத்தை போக்க சொல்லும் வரையில் இது இரகசியமாக காக்கப்பட்டிருக்கும்.

விச்சையும் சூரியாவும் கல்லூரி காளையாக தனது நண்பர்களுடன் இல்தக்க சையா என அடுக்கும் லூட்டியும் மற்ற விடலை செய்கைகளும் இரசிக்கும் படியாக இருக்கும்.

சித்திக் லால் இருவரின் கைவண்ணங்களில் வந்த படங்களை பார்த்தவர்களுக்கு தெரியும் அந்த குழுவின் படைப்புகள் முழு நீள நகைப்பு படமாக அமையும் வெற்றியும் காணும்.

இந்த படத்தை பார்க்கும் போது கதையையும் அரட்டைகளும் தமிழில் வருவது இல்லையே என்று வருந்தவும் செய்தேன்.

சைமன் ப்ரிக்கை பார்க்கும் வரையில் இந்த பிரமிப்பு இருந்தது. சைமன் ப்ரிக்கின் கதை இந்த இரண்டு இளைஞர்களை எடுத்து விட்டு இரண்டு 12 வயது சிறுவர்களாக மாற்றி எடுத்தால் எப்படி இருக்கும் அது தான் படம்.

கண்ணுக்கு அழகான பெண்ணாக தாயாக ஆசுலி சூடை காட்டி இருப்பார்கள், ப்ரண்டுசு படத்தில் இதே போல் தோற்றம் உடைகளுடன் தேவியாணி நடித்து இருப்பார்.

சைமன் ஒரு உடல் வளர்ச்சி குன்றிய பிள்ளை பாத்திரம், 12 வயதிலும் குழந்தை ஏசுவாகத்தான் நடிக்க வேண்டும் என்று வேண்டும் ஒரு உருவம் இந்த பாத்திரம்.

அவனது நண்பன் ஆசுலியின் மகன் தந்தை யார் என்று அம்மாவுக்கே தெரியாது என்று கதையில் சொல்வார்கள். சைமனோ குறையுன் பிறந்தால் பெற்றோர்களாலும் மற்ற அனைவருக்கும் எள்ளி நகையாடும் வகையில் அவனது வாழ்க்கை அமைந்தாலும். நண்பன் தான் அவனுக்கு எல்லாம், அவனது நட்பும் விளையாட்டும் என்று இருக்கும் இவன் வீட்டில் இருப்பதை விட நண்பனின் வீட்டில் தான் அதிக காலம் செலவிடுவான் என்று கதை நகரும்.

எதிர்பாராதவிதமாக சைமனின் பந்து விளையாட்டில் வாழ்க்கையிலே முதல் முதலாக அடிக்கும் பந்து ஆசுலி இறப்பதும் கதையில் ஒரு சோகம் தொற்றிக்கொள்ளும். அந்த நிகழ்விற்கு பிறகு தனியாக சென்று அந்த சிறுவன் அழுவதை பார்க்கும் போது மனது பிசைந்து எடுக்கும். அந்த நிகழ்வுக்கு பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் தவிர்த்து வருவார்கள். பிறகு ஒரு நான் ஆசுலியின் சமாதியில் சைமன் உருகி அழுவதை பார்த்த நண்பனுக்கு சைமனை மன்னித்து நட்பை தொடர்வார்கள்.

அனாதையாக ஆக்கப்பட்ட சைமனின் நண்பன் வாழ்க்கையில் இனி தான் என்ன செய்ய போகிறோம் என்று யோசிக்க தனது தந்தை யார் என்று கண்டுபிடித்தால் என்ன என்ற முயற்சியில் இறங்க கடைசியில் சைமன் நண்பனின் தந்தை யார் என்று கண்டுபிடித்து விடுகிறான்.

நண்பனின் தந்தை யார் என்று கண்டுபிடித்ததை நண்பனிடன் சொல்லிவிட்டு திரும்பி வரும் வழியில் பள்ளி பிள்ளைகளை ஏற்றி கொண்டு வந்த வண்டி அந்த பனிகாலத்தில் நீண்ட நெடிய மலைசரிவில் சரிந்து ஆற்றில் விழுகிறது.

அந்த வண்டி 13 பிள்ளைகளோடு வேகமாக ஓடும் அந்த ஆற்றில் விழுந்ததும் ஓட்டுனர் அனைவரையும் விட்டு விட்டு தப்புவதும். அழைத்து வந்த ஏசு போதகர் தலையில் அடிபட்டு மயங்கிய நிலையில் திரையில் குழந்தைகளின் கூச்சல் ஒரு 20 வினாடிகள்.

ஐயோ என்ன நடக்குமோ என்று நாம் மர்மத்தில் ஆழும் போது சைமன் மூழ்கிக்கொண்டு இருக்கும் வண்டியின் முன்புரம் வந்து அனைவருக்கும் ஆனையிடுவதும், அனைவரையும் காப்பாற்றுவதும் மிகவும் அழகாக படமாக பட்டிருக்கும் இந்த படத்தில்.

படத்தில் சைமன் அடிக்கடி தான் ஒரு காரியத்திற்காக கடவுள் அதிசிய பிறவியாக படத்துள்ளார் என்று சொல்லிக்கொண்டே வருவான். அந்த கடைசிகாட்சியில் அப்படி ஒரு சின்ன உருவம் இல்லாமல் இருந்து இருந்தால் அந்த விபத்தில் இருந்து 13 குழந்தைகளை காப்பாற்றி இருக்கமுடியாது என்று அந்த வார்த்தைகளுக்கு வலு சேர்க்கும் விதமாக கதை முடியும்.

கதையின் ஓட்டம் அந்த நண்பன் சைமனை பற்றி சொல்ல சொல்ல கதை நகர்வது போல் எடுத்து இருப்பார்கள். தனது மகனுக்கு சைமன் என்று பெயரிட்டு இருப்பான் அந்த நண்பன்.

கதை அடிப்படையில் ஒன்றாக இருந்தாலும், சித்திகின் கற்பனை அலாதியாக வந்துள்ளது தமிழில். அனைத்து சிறுவர்கள் சம்பவங்களுக்கும் பெரியவர்களை வைத்து கதையை அருமையாக அமைத்து இருப்பார் தமிழில். உதாரணத்திற்கு வடிவேலின் கேளிகைகள் எல்லாம் ஆங்கிலத்தில் சர்சில் இவர்கள் இருவரும் அடிக்கும் அரட்டையை அழகாக தமிழில் எழுதி இருப்பார் சித்திக்கு.

மலையாளிகள் படைபில் ஒரு தனித்துவமும் உயிரோட்டமும் இருக்கும். பாசில், சித்திக்கின் தமிழ்படங்களில் இவைகளை நாம் பார்க்கலாம். ஆனால் அவர்களும் ஆலிவுட்டின் படங்களை அடிப்படியாக கொண்டு தான் படம் எடுக்கிறார் என்று பார்க்கும் போது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது.

பாசிலின் ஒரு நாள் ஒரு கனவு How to lose a guy in 10 daysசின் தமிழ் பிரதி.

பார்க்கலாம் இன்ன எத்தனை கரடி வெளியே வருகிறது என்று.

0 comments: