படம் துவங்கும் போதே நெர்டு படத்தின் பிரதிதான் என்று அழகாக தெரிகிறது. பார்க்க தோற்றம் சற்று வித்தியாசமாக இருந்தாலும் திறமையில் சளைக்காதவர்கள் என்று காட்டும் படம் தான் அந்த ஆங்கிலப்படம். கிட்டத்தட்ட நமது இராசேந்தர் படம் போல தான் இருக்கும், என்ன கொள்ளையாக பணத்தை கொட்டி அரங்குகள் அமைத்து பாடல்கள் மட்டும் இல்லை என்று இருக்கும் ஆங்கிலத்தில்.
ஆங்கிலத்தில் ஒரு முட்டாள் முரட்டு குண்டு ஆள் ஒருவர் மாணவனாக வருவார், அவர் உட்பட அனைத்து கதா பாத்திரங்களும் அப்படியே தமிழில் எழுதி எடுத்து இருக்கிறார்கள்.
என்ன திறமையை காட்ட அவர்களுக்குள் பாட்டுப்போடு நடத்துவார்கள் இவர்கள் கிரிகட் ஆட்டம் நடத்தி காட்டியுள்ளார்கள் அவ்வளவு தான் வித்தியாசம்.
அது என்ன மதுமிதா என்ற பெயர் வந்தால் உடனே இச்சீன்சு படத்தின் மகரிச இசையை அதுவும் அதே பியானோ இசையை கொண்டு தான் கொடுக்கனுமோ. இரகுமானின் பின்னணி அப்படியே ஆங்காங்கே வருகிறது.
நம்ம ஊர் கல்லூரி தானா என்று கேட்க்கும் அளவிற்கு கட்டமைபுகள் எல்லாம் அருமையாக இருக்கிறது அந்த கல்லூரியில்.
நல்ல காதல் கதையாக படமாக்கி இருக்கிறார்கள் அழகாக, நல்ல காதல் மோதல்கள். அதுவும் அந்த அப்பு பெண்மணி புடவையில் வருவது குச்சு குச்சு கோத்தாகை படத்தில் காசோல் நாகரீக உடையணிந்து வரும் காட்சியை கண்களுக்கு முன் கொண்டு வருகிறது.
நாயகி நல்ல தேர்வு, சின்ன பெண்ணாக இருக்கிறார். இல்லை என்றால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இவர் தான் எல்லோருக்கும் நாயகி. என்ன சற்று குள்ளம் எடுபடுகிறாரா என்று பார்ப்போம்.
எங்கே மருந்தடிக்கும்/குடிக்கும் முன்னவர்களுக்கு பின்னவர்கள் சேவை செய்யுபடி காட்சிகள் வந்துவிடுமோ என்று பயந்தேன் நல்லவேளை காப்பாற்றிவிட்டார்கள்.
உடைசன் பாத்திரம் அருமை, எங்கே அவரது கூந்தலையும் வெட்டிவிடுவார்களோ என்று இருந்தது அப்படி எதுவும் நடக்கவில்லை.
படத்தில் திடீர் என்று ஏப்ரல் மாதத்தில் படத்தி வாசனை அப்படியே.
அடுத்த படத்தின் பாதிப்பை தனது படைபில் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டியது இயக்குனரின் கடன். நிறையவே கோட்டைவிட்டுள்ளார்.
படம் கடைசிவரை ஒரு கொலை, தற்கொலை, கத்தி குத்து என்று இல்லாமலும், தேர்தல் அடிதடி பின் குத்து பாட்டு என்று இல்லாமல் ஆங்கிலத்தில் உள்ளது போலவே தைரியமாக எடுத்துள்ளமைக்கு பாராட்டுகள்.
ஈ அடிச்சான் பிரதியாக இருந்தாலும் நிறைவான பிரதி, வாழ்த்துக்கள்.
0 comments:
Post a Comment