Tuesday, April 27, 2010

வேலைநிறுத்தப் போராட்டம்: மக்களுக்கு ஜெயலலிதா நன்றி -- ஆடு நனையுதேன்னு ஒரு ஓனாய் தேம்பி தேம்பி அழுததாம்.....

http://www.dinamani.com/edition/story.aspx?Title=வேலைநிறுத்தப்+போராட்டம்:+மக்களுக்கு+ஜெயலலிதா+நன்றி&artid=233618&SectionID=178&MainSectionID=178&SEO=&SectionName=Tamils

ஒரு முறை திமுக விட்ட வேலை நிறுத்த அழைப்பை முறியடிக்க உச்ச நீதிமன்றம் வரையில் சென்று அதுவும் இரவோடு இரவாக ஞாயிற்று கிழமையில் நீதிபதியின் வீட்டிற்கே சென்று வாங்கி வந்து பெருமை பேசியவர் தான் இன்றைக்கு மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

அந்த போராட்டம் எதற்கு என்ன என்ற விபரங்களுக்குள் எல்லாம் செல்வது தேவை இல்லாதது.

அந்த போராட்டம் நிறுத்துவதற்கு சொன்ன காரணங்கள் என்ன என்ன

1) வயதான நோயாளிகள் மருத்துவம் பெற முடியாமல் தவிக்கிறார்கள்.
2) தின கூலிகள் சம்பாத்தியம் பாதிக்கப்படுகிறது.
3) பள்ளி மாணவ மாணவியரின் படிப்பு பாத்திப்புக்கு உள்ளாகிறது.
4) அத்தியா அவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடுகிறார்கள்.

இப்படி என்ன பிற காரணங்கள் எல்லாம் சொல்லலாமோ அத்தனையையும் கண்ணீரும் கம்பலையுமாக அன்று சொல்லிவிட்டு. இன்றைக்கு வெற்றி வெற்றி என்று அறிக்கை விடுகிறாரே இந்த போராட்டத்தில் இந்த அவதிகள் எல்லாம் இல்லாமல் நடந்ததா அம்மையாரே சொல்லுங்கள்.

எப்படி இந்த அவதிகள் எல்லாம் இல்லாமல் இந்த அறப்போராட்டத்தை நடத்தினீர்கள் என்று சொன்னால் நாளை அறப்போராட்டம் நடத்தும் அனைவரும் அந்த முறையை கையாள வசதியாக இருக்கும். நீங்களும் தேவை இல்லாமல் நீதிபதிகளின் வீடு தேடி தெல்லிக்கும் ஐதராபாத்துக்கும் அலைய வேண்டாம் பாருங்கள். அதுவும் சனி ஞாயிறுகளில்.

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள், ஆடு நனையுதேன்னு ஒரு ஓனாய் தேம்பித்தேம்பி அழுததாம். என்ன கருணை உள்ளம் அந்த ஓனாய் என்று பார்த்தவர்கள் சொன்னார்களாம்.........

நடத்துங்க நடத்துங்க மக்களுக்கு மறதி இருக்கிற வரையில் யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் செய்யலாம் பேசலாம்..................அனேகமா அந்த முதியவர் இந்த தன்னலம் அற்ற தீயாக காரியத்திற்கு பாராட்டு தெரிவித்து உலகத்தில எவன் எவனோ போராட்டம் நடத்துறான் இந்த மாதிரி எல்லாம் ஞாயமா தர்மமா நீதியா அறபோராட்டம் நடத்தமுடியுமான்னு பதிவர் பட்டிமன்றம் நடத்துவார்............

0 comments: