ஈழத்து பெண்மணி பார்வதி அம்மாளுக்கு இந்தியா வருவத்தற்கு அனுமதி இல்லை. அது தான் சரி என்று உண்மை தமிழர்களும் உண்மை இந்தியர்களும் வாதிடுகிறார்கள்.
என்ன காரணம் அவர் புலி தலைவரின் தாயார், வந்தால் கண்ணீர் பேட்டி எல்லாம் கொடுப்பார். நல்ல வேளை புலி தலைவரின் உடல் கிடைக்கவில்லை, இல்லை என்றால் மணிமண்டபம் எல்லாம் கட்டுவார்கள் என்றும் எல்லார் எழுதுகிறார்கள்.
இவர்களது இந்த கருத்து உண்மையாக இருந்தால், இது வரை 3 சமர்களில் எத்தனை ஆயிரம் இந்தியர்களை கொன்று குவித்து இருக்கிறது பாக்கிட்த்தானம்.
அதோடு நின்றதா, இந்திய நாடாளுமன்றத்தில் புகுந்து ஆட்சியாளர்களை கூண்டோடு கைலாசம் அனுப்ப அல்லவா பார்த்தது.
எந்த நீதியின் அடிப்படையில் பாக்கிட்த்தானியர்கள் இந்தியாவிற்கு வருகிறார்கள்.
எந்த நீதியின் அடிப்படையில் இந்தியா இன்னமும் பாக்கிட்த்தானத்திடம் கொஞ்சு குலாவுகிறது.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று எல்லோரும் தன்னை அழைக்கவேண்டும் என்று நினைக்கும் அத்துவானி எந்த நடத்தையின் அடிப்படையில் பாக்கிட்த்தானம் சென்று முகமது அலி சின்னா நல்லவரு வல்லவரு என்று பேசி வந்தார்.
எந்த அடிப்படையில் இந்தியா இன்னமும் பாக்கிட்த்தானத்தோடு கிரிகெட்டு விளையாடுகிறது.
எந்த அடிப்படையில் இந்தியா மும்பை குண்டு வெடிப்பில் மாட்டிக்கொண்டவர்களை பற்றிய தகவல் வேண்டும் என்று பாக்கிட்த்தானத்திடம் கெஞ்சி நிற்கின்றது.
இந்தியாவின் உண்மை தமிழர்களும் உண்மை இந்தியர்களும் எந்த அடிப்படையில் இந்த செயல்களை எல்லாம் கேள்வி கேட்க்காமலும் விமர்சனம் செய்யாமலும் இருக்கிறார்கள்.
அப்போ உண்மை தமிழர்களும் உண்மை இந்தியர்களும் சொல்வது என்ன நாடு நாசமாக போனாலும் எங்களுக்கு கவலை இல்லை, ஆனால் தமிழர்கள் மரியாதையாகவோ பெருமையாகவோ இருந்துவிடக்கூடாது என்று சொல்கிறார்களா.
நாட்டில் மடிந்த இத்தனை ஆயிரம் மக்களின் மேல் வராத இறக்கம் அதுவும் காங்கிரசு தலைவரின் மேல் (பசக தான் உயிர், மோடி ஒருவர் தான் தலைவன்.......) வருகிறது என்றால் என்ன பொருள். தமிழர்களுக்கு எதிரி வேறு எங்கும் இல்லை, இன்றைக்கு தமிழகத்தில் வாழும் அரசியல்வாதிகளும் உண்மை தமிழர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இந்த உண்மை தமிழ்ர்களும் தான்.
இது எல்லாம் ஒரு நாடு அதில் வாழ்பவர்கள் எல்லாம் மக்கள். என்ன கொடுமை சரவணா......
நயவஞ்சகம் என்ற வார்த்தைக்கு மொத்த பொருளும் இந்த உண்மை தமிழர்கள் தான் போலும். எப்படி எல்லாம் வசதிக்கு தகுந்தார்போல் அவர்களுக்கு நாக்கு பிறழ்கிறது பாருங்கள். நேரத்திற்கு ஒரு பேச்சு, நிமிடத்திற்கு ஒரு கொள்கை.
காந்தி, புத்தர் பிறந்த நாட்டின் நிலைமை இது. இதிலே உலகத்தை பார்த்து நீங்கள் எல்லாம் எப்படி வாழ வேண்டும் தெரியுமா என்று மொட்டை அடித்துக்கொண்டு அமெரிக்கா ஆப்ரிக்கா என்று சென்று கண்ணா கோபாலா, குருவாயுருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதை பாருங்கள் என்று பாடியும் ஆடியும் பாடம் நடத்துகிறார்கள்.
நாங்கள் எல்லாம் இந்தியர்கள் என்று இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெருமையாக இந்தியர்கள் வெளி நாடுகளில் வசிக்க போகிறார்கள். நாங்கள் எல்லாம் இந்தியர்கள் எங்கள் ஊரில் நாங்கள் எல்லாம் இப்படி அப்படி என்று எல்லாம் இனி எப்படி பேச போகிறார்கள் என்று பார்ப்போம்.
ஆயிரமாயிரம் இந்தியார்களை கொன்று குவித்த மக்களையும் நாட்டையும் மன்னிக்கும் எண்ணம் கொண்ட நாட்டிற்கு இந்த மூதாட்டியினர் மீது கருணை பிறக்கவில்லை என்றால் அந்த நாட்டில் வேறு என்ன நம்பிக்கை தான் மக்கள் கொள்ளமுடியும்..................
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago
8 comments:
தமிழர்களின் எதிரி நாடான இந்தியாவிற்கு ஒரு முக்கிய தமிழப்பெண்ணை அனுப்பியது அனுப்பியவர்களின் தவறு. தன் சொந்த நாட்டு மக்களை கடலில் சுட்டுக் கொல்ல உதவும் ஒரு கேவலமான நாட்டிடம் இருந்து இதைத் தவிர வேறு எதை எதிர்பார்க்கிறீர்கள்
உண்மை இந்தியர்கள் என்றால் தமிழர்கள் நாசமாக போவது என்று எண்ணுபவர்கள். பாக்கிகள் தமிழர்கள் அல்லவே. எனவே அவர்கள் தாராளமாக வரலாம்.
வயதான ஆள நடுநசியில் சிறையில் தூக்கி போட்டப்ப வருத்தப்பட்டோம். வயசான ஆள போய் இப்படி பண்ணலாமா என்று. இப்ப அதே வயதான ஆளு தான் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட வயதான அம்மாள் வரக்கூடாது என்கிறார்.
தனக்கு என்று வந்தா உலகமே தனக்காக வரனும், ஆனால் அதுவே அவருக்கு பிடிக்காதவர்கள் என்றால் உலகமே வந்தாலும் நான் செய்வதை தான் செய்வேன் என்று இப்படி செய்த்து இருக்கிறார் குறும்பன் இவர். பார்க்கலாம் இவருக்கு என்ன கதி ஏற்படுகிறது என்று பார்ப்போம்.
வேல் தர்மா, இவர்களின் செயல்களை விட அவர்கள் கொடுக்கும் விளக்கம் இருக்கு பாருங்கள் தாங்க முடியல.
நன்றாக எழுதியிருக்கறீர்கள்..... வாழத்துக்கள்.....
இன்னும் நிறைய எழுதுங்க...
நன்றி சங்கவி.
மனித நேயமே இல்லாத முட்டாள்களா,
எனது மக்கள் இருப்பதை பற்றி வேதனைப்படுகிறேன்...
டோண்டுவை போன்ற தேசியம் பேசுபவர்களை துவைத்து காயபோட்டுள்ளார் பதிவர் சரன்.அவரது பதிவிற்கு http://sathurangkam.blogspot.com எனும் முகவரிக்கு செல்லவும்
Post a Comment