இப்படி சொல்லி இருப்பது வேறு யாரும் அல்ல, செயலலிதா பாட்டி தான். இன்னமும் வேறு என்ன என்ன எல்லாம் அரசியல் அமைப்புக்கு எதிரானது பாட்டி. நல்ல வேளை யாரும் அரசு நிலத்தை அடிமாட்டு விலைக்கு இவர்களை போல் வாங்கவில்லை. ஒரு வேளை அப்படி வாங்கி இருந்தால், அப்படி வாங்குவது எல்லாம் குற்றம் என்று அறிக்கை விட்டாலும் விடுவார் போலும்.
டான்சி நில வழக்கில் சாட்சியாக இருந்த ஆவணங்களை எல்லாம் இவரது கைகூலிகளை வைத்து அழிக்க செய்துவிட்டு, திரைமறைவில் எத்தணை காரியங்களை எல்லாம் செய்யமுடியுமோ அத்தனையும் செய்துவிட்டு மாலை தீர்ப்பு வந்தது ஆள் காட்டி விரலை வானுக்கு காட்டி 'தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் பின் தர்மம் வெல்லு' என்று நமக்கு எல்லாம் தர்மத்திற்கு பாடம் எடுத்த பாட்டி ஆயிற்றே இவர். இவர் இதுவும் சொல்வார் இன்னமும் சொல்வார்.
கொஞ்சம் விட்டால் 1 இலட்சம் பேரை ஒரே நாளில் வேலையை விட்டு துரத்தியது கூட அராசகம் என்றும் கூட அறிக்கைவிடுவார் போலும், கழக கண்மணிகளே கவனம்.......
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago
0 comments:
Post a Comment