ஒரு நாளை போல தினமும் 2 , 3 என்று தான் நாட்கள் கடந்து கொண்டு இருந்தது. ஒன்று சொந்த வேலை இல்லை அலுவல் என்று தினமும் இப்படி அதிகாலையில் படுக்கையில் புதைவதும் பிறகு அலைபேசியின் அழைப்புக்கு அழுந்து ஓடுவதும் தான் பிழைப்பா என்ற கோபம். என்றைக்கு நிம்மதியாக நாட்கள் நகரும் என்ற ஏக்கம்.
எப்போது தூங்கினான் என்று தெரியாது ஆனால் எழுந்துகொள்ள நேரம் வந்தது அறிவித்துக்கொண்டு இருந்தது அவனது நேரங்காட்டிகள். அவசர அவசரமாக எழுந்து பார்த்தவன், அமைதிபடுத்திவிட்டு மீண்டு ஆழ்ந்தான் உறகத்தில்.
காலையில் எழுந்து தூங்கினால் அப்படி ஒரு தூக்கம் வரும், அந்த தூக்கத்தில் நேரத்தை தவறவிடும் அளவிற்கு ஆழ்ந்த உறக்கம். ஆனால் அன்றைகு என்னவோ அப்படி ஒரு தூக்கம் மறுபடியும் வரவில்லை. என்னவோ தவறவிடுவதாக ஆழ்மனது சொல்ல. என்னவாக இருக்கும் என்று நோட்டம் விட்டபடி விட்டத்தை பார்த்தவாறு படுத்து இருந்தான்.
பிறகு என்னவோ சிந்தையாக அலைபேசியை எடுத்தவன், வீட்டு நினைவுவர. அவசர அவசரமாக அழைப்பைவ்டுத்தான்.
மறுமுனையில் பேசிய அம்மா, என்னப்பா தூங்கினியா. காலையில ஏதாவது சாப்பிடப்பா, வெறும் வயிரா இருக்காத நல்லது இல்லை என்ற முன்னுரைகளுடன் தொடங்கினார்கள். பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு அம்மா சொன்ன விபரங்கள் அவனுக்கு மனதில் பயத்தையும் ஒரு பெரிய சிந்தனையையும் கொடுத்து இருக்க வேண்டும்.
பிறகு கேட்ட எல்லா கேள்விகளுக்கும், ஒற்றை வார்த்தைகளில் பதில்கள். அதுவும் அழுத்தி கேட்டால் மட்டும் தன் பதிலாக வரவே, அம்மா சரி பிறகு பேசுப்பா என்று சொல்லி தொடர்பை துண்டித்தார். இந்த காலை அவனுக்கு பெரிய காலையாக அமைந்தது. இங்க உள்ளவைகளை பார்ப்பதா அல்லது அம்மா சொன்னவைகளை பார்ப்பதா ஒன்றும் தெரியவில்லை. அளவிற்கு அதிகமாக நேரம் ஆனதில் வேறு பதட்டம்.
காலை பரபரப்பில் இன்னமும் அதிகம் தொற்றிக்கொள்ள, ஒரு வெறுமை முகத்துடன் கிளம்பினான். வழியில் பார்க்கும் அனைவரும் என்ன என்ன என்று கேட்கும் அளவிற்கு அவனது முகம் அவனது பதட்டத்தை தெளிவாக காட்டியது.
கடைசியாக குழு ஆலோசனை கூட்டதிற்கு வந்தவன் அங்கேயும் கேட்கும் கேள்விகளுக்கு ஒற்றை வார்த்தைகளில் பதிலுரைக்க. குழுதலையோ என்னப்பா என்ன ஆனது என்றும் கேட்டார். ஒன்றும் இல்லை மற்றும் ஒரு புன்முறுவல் அவ்வளவுதான் அவனது பதிலுரை.........
தொடரும்.....
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago
0 comments:
Post a Comment