Sunday, November 29, 2009

பழசி இராசா - திரைவிமர்சனம்

ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய இன்னும் ஒரு மன்னனின் போராட்ட வரலாறு இதிலே பதிவு செய்யப்பட்டுள்ளது. கதையிலும், காட்சியிலும் எந்தவிதமான ஒரு இட்டுக்கட்டுதலும் இல்லாமல் தயாரிக்கப்பட்டம் இது.

அதிலும் காட்சிகளில் களரியில் உயர குதித்து தாக்கும் காட்சிகளில் மட்டும் சிறிது உயரம் கூட்டி இருக்கிறார்கள். அதும் கவனித்து பார்த்தால் தான் தெரியும், இல்லை என்றால் சண்டைக்காட்சிகளில் கூட மிகையாக சொல்லாத படம் என்று செல்லிவிடலாம்.

உலகத்தின் அத்தணை வீரர்களையும் வென்ற ஒரே வீரன் துரோகம் தான் போலும். வரலாற்றில் ஏசு முதல் அனைத்து மன்னர்களையும் வீழ்த்தியது இந்த துரோகம் ஒன்றே தான்.

அதிலும் இந்த கதையில் பார்த்து பார்த்து வளர்த்தவனே முன்னில் நின்று அனைவரையும் கொல்ல துணை போகும் காட்சிகளுக்கு கடைசியில் சாகும் போது சரத்துகுமார் சொல்லும் வசனங்கள் நல்ல பதிலடி.

படம் முழுவதும் வசனம் மிகவும் அருமையாக வருகிறது, குறிப்பாக "மக்கள் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்றால் நம்மை தானே சொல்வார்கள்" அருமை.

பதுங்கி தாக்குதலின் அவசியத்தை மிகவும் அருமையாக விளக்கியுள்ளார்கள் படத்தில்.

பழசியை பிடிக்கும் முன், அவனது படைகளில் உள்ள ஒரு ஒருவரையும் விலைக்கு வாங்கும் காட்சிகளில் மனம் பதறத்தான் செய்கின்றது.

வில்லெடுத்து விளையாடும் பெண்ணாய் பத்மபிரியா, அவரது ஒப்பணையும் முக அசைவுகளும் கிங்கு ஆர்த்தரில் வரும் அந்த பெண்ணை நினைவுக்கு கொண்டு வருவதை தவிர்க்கமுடியவில்லை. அதிலே அவள் அரசகுமாரி, இதிலோ இவள் ஆதிவாசி பெண்.

முகபூச்சி கொஞ்சமும் இல்லாமல் கொள்ளை அழகாக கனிகா, கணவனை பிரியும் தருணங்களிலும் சரி மற்ற காட்சிகளிலும் சரி. வெறும் முக அசைவுகளிலே நடிப்பை காட்சியுள்ளார். நாட்டின் அரசி இவ்வளவு தான் அழமுடியும் போலும். அந்த மௌன அழுகைகள்................அபாரம் அவரது நடிப்பு.

படத்தின் சிறப்பு ஒலி அமைப்பு பூக்குட்டி என்று ஏகப்பட்ட விளம்பரம்..............அதிலும் வலைஞர்களின் விமர்சனங்களில் அப்படி இப்படி என்று ஏகப்பட்ட விமர்சனங்களை படித்த பிறகு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் பார்த்தேன். நிறைய இடங்களில் காட்சிகளில் தெரியும் அசைவுகளுக்கு கூட ஒலி இல்லை.

குறிப்பாக கோவிலில் குறிகேட்க்கவந்தவர்களை தூக்கில் போடும் காட்சியை பார்த்துவிட்டு அந்த வெள்ளைகாரரின் காதலி விட்டு ஓடும் பொழுது, அந்த வெள்ளைகாரர் வீட்டிற்கு குதிரையில் போய் இறங்கும் காட்சியில் கிட்டத்தட்ட 3 அல்லது 4 ஆட்கள் தரையில் கால்களை அடித்து வணக்கம் சொல்வார்கள். அந்த காட்சிகளில் வெள்ளைகாரனின் காலனி ஓசையை தவிர வேறு ஒன்றும் கேட்க்காது. ஒரு உதாரணத்திற்கு சொன்னேன், இது போல் பல இடங்களில் மனித கோட்டை விட்டுள்ளார்.

கட்டபொம்முவை ஒரு 10 போர் மட்டும் கொண்டு பிடித்து சங்கிலியால் கட்டி இழுத்து வருவதாக நமக்கு காட்டியது போல், பழசியையும் அவரது படையையும் வெறும் ஒரு 50 பேர் கொண்டு பிடித்தாக கடைசியில் காட்டுவது ஏமாற்றமாக இருக்கிறது.

டிராய் என்று ஒரு ஆங்கில படம் உண்டு, அதிலே பேரரசன் தனது மகனின் உடலை வாங்க எதிரியிடம் வந்து பேசுவான் அந்த காட்சிகளில் வரும் வசனங்கள் எதிரிக்கு எதிரி பேசிக்கொள்ளும் வசனங்களாக இருக்காது. ஒரு பொறுப்பு மிக்க தந்தையின் வசனமாகவும், பொறுப்பு மிக்க படை தளபதியின் வசனமாக இருக்கும். அந்த கம்பீரம் இந்த படத்தின் அனைத்து காட்சிகளிலும் வருகிறது, அரிகரனின் அசத்தும் இயக்கம்.

படம் துவங்கி குன்னத்தே பாடல் வரும் வரையில் படத்திற்கு இசை என்ற ஒன்று இருப்பதாக கூட தெரியவில்லை. அப்படி ஒரு அமைப்பு இந்த படத்திற்கு, அந்த பாடல் வந்த பிறகு தான் படத்தில் இசையும் இருக்கிறது என்று தெரிய துவங்குகிறது. காட்சிகளோடு அப்படி ஒன்றி இருக்கிறது இசை.

அம்பும் கொம்பும் பாடல் படத்தில் இல்லாமல் இருப்பது நெருடலாக இருக்கிறது. அந்த பாடல் மட்டும் இருந்து இருந்தால் அனேகமாக அடுத்து இளைஞர்களுக்கு தெருவெங்கும் இந்த பாடலாகத்தான் இருந்து இருக்கும்.

பாடல்கள் மலையாளத்தில் கேட்டது போல் இல்லை என்று சொல்லாம், அதற்கு வாலியை மட்டும் பலியாக்க முடியாது. மலையாளத்தில் வரும் வார்த்தைகளுக்கு தமிழ் வார்த்தைகளை போட்டதால் மனிதன் வம்பில் மாட்டிக்கொள்கிறார். மலையாளம் போல் சங்கத வார்த்தைகளை அப்படியே போட்டிருந்தான் மெட்டுக்குள் இன்னமும் அருமையாக பொருந்தி இருக்கும் போலும்.

படம் மற்றபடி நல்ல வரலாற்று பதிவு.

மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, எனக்கு என்னவோ படத்தை பார்க்கும் போது காட்சிக்கு காட்சி இலங்கையில் நடந்தது தான் நினைவில் வந்து வந்து சென்றது. ஒப்பந்தம் போடுவதும், பிறகு காற்றில் பறக்கவிடுவது. ஒவ்வொறுவராக பிடித்து பொன்னும் பெண்ணும் பொருளும் கொடுத்து காட்டிக்கொடுக்க வைப்பதும் என்றும் வரும் காட்சிகளில் அந்த இரத்த களரிகள் கண்முன் தெரியாமல் இல்லை.........................மனதளவில் பெரிய தாக்கத்தையே உண்டு செய்தது........................................

3 comments:

')) said...

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில ராஜா பேசியதை கேட்டீர்கள? இலங்கை விஷயத்தை சொல்லாமல் சொல்லி இருப்பார்.

')) said...

இது ஒரு இரகசிய பேச்சு என்றே நினைக்க தோன்றுகிறது, கார்ணம் அப்படி ஒரு அப்படமான பேச்சு என்னில் எல்லோருக்க்ம் தெரியாமலா போகும் என்று நினைக்குறீர்களா நண்பர்களே.........................

mani said...

ராஜா ஈழத்தை மனதில் வைத்தே( ஆதி முதல் )பாடலுக்கு இசை அமைத்ததாக மறைமுகமாய் குறிபிட்டுள்ளார்; ராஜா பேசியது இங்கே // http://www.nakkheeran.in/users/frmMoreWebTv.aspx?WTV=390