Saturday, May 30, 2009

மரணத்தில் கூடவா பாகுபாடுகள், இந்து நாட்டின் நீதி இது தான் போலும்

பழிக்கு பழி, விழிக்கு விழி எனற பழி வாங்கும் கொள்கைகள் எல்லாம் முடிவில்லா துன்பத்தின் துவக்கம் என்றும். அப்படி பழி வாங்கும் எண்ணம் எல்லாம் விலங்கின் குணம் என்றும் உலகுக்கும் மனித குலத்திற்கும் அமெரிக்கா முதல் அனைத்து முன்னேறிய நாடுகளுக்கு விமானம் ஏறி சென்று விளக்கம் கொடுத்த நாடு தான் இந்த இந்தியா என்ற இந்து நாடு.

இன்றைக்கும் காவி உடைகளையும் கட்டுரை கட்டுகளையும் அள்ளிக்கொண்டும் விமான நிலையம் முதல் பல்கலைகழங்களில் இந்திய கண்மணிகள் விளக்கங்கள் கொடுக்கும் அழகையும் பண்பையும் பார்க்கும் போது, இந்தியாவின் பால் உலகமக்களுக்கு பிறக்கும் கரிசனத்தை அளவிட்டு சொலமுடியாதது தான்.

காந்திய சிந்தனைகள், விவேகாணதரின் சிந்தனைகள், அரவிந்தரின் சிந்தனைகள், கீதையின் சிந்தனை, கண்ணனின் சிந்தனைகள், இராமனின் சிந்தனைகள் என்று பலரின் சிந்தனை வழிகளை வளர்ப்பதற்காக பல ஊர்களில் பல மொழிகளில் இயக்கங்கள் இருப்பதை பார்த்துக்கொண்டு இருக்கின்றோம்.

இந்த இயக்கங்களின் அறிமுகக்கூட்டங்களில் கலந்துகொண்டோர்களுக்கு நன்றாக தெரியும், இந்த இயக்கங்கள் எப்படி எப்படி எல்லாம் தலைப்பின் சொன்ன சகோதரத்துவம் பாராட்டப்படவேண்டும் என்று வழிமுறைகளையும், அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி சொல்கிறார்கள் என்று.

கோப வார்த்தைகளில் சொல்வது என்றால் நெய்யொழுக தேனொழுக சொன்னார்கள் என்றும் சொல்லலாம். இந்த பொருப்புமிக்க வாக்கியங்களை பரப்பிய நாடுதான் இன்றைக்கு இரு தனிமனிதனின் இழப்பிற்காக ஒரு இலட்ச்சம் மக்களை கொன்றதோடு நில்லாமல் அதன் கூட்டுக்களவானியான இலங்கையை சீனத் துணை கொண்டு உலக நாடுகளிட இருந்து காப்பாற்றியதோடு மட்டும் நில்லாது. இன்னமும் எத்தணை கொலைகளை செய்தாலும் உங்களை ஒன்றும் ஆகாமல் காப்பதுமட்டும் இல்லை, இன்னமும் எத்தணை பொறுக்கிதனங்கள் முடியுமோ அதை அனைத்தையும் செய்யுங்கள் என்று தைரியம் கொடுத்து நிற்கிறது.

பொதுவாக சொல்வதுபோல் ஊருக்கு தான் உபதேசம் எல்லாம், தனக்கு என்று வரும் போது தனது வயிற்றுக்கும் வாயிக்கும் தான் முக்கியத்துவம் மற்றவைகள் எல்லாம் தூசி தான் என்று இந்து மதம் கூறும் கடை மனிதாகத்தான் இந்த இந்து நாடு நடந்து காட்டி இருக்கிறது.

இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு அந்த அமைப்புகள் எல்லாம் மற்ற நாடுகளுக்கு அறிவுரைகளை வழங்க போகின்றது. அப்படி அவர்கள் சொல்லும் அத்தணை வார்த்தைகளுக்கு வார்த்தை உலக தமிழர்கள் அந்த கூட்டங்களில் கேள்விகளை கேட்க்கப்போகிறார்கள் என்ன பதில்களை வைத்துக்கொண்டு இருக்கப்போகிறார்கள் இந்த இந்து நாட்டார்கள்............

எல்லா கேள்விகளுக்கும் அந்த கட்சிதான் செய்தது இந்தியா இல்லை என்று சொன்னால், நீங்கள் எல்லாம் கூட அதே நாட்டில் தானே இருந்தீர்கள் ஏன் அவர்களது செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட ஒரு அறிக்கையை கூட வெளியிடவில்லை என்ற கேள்விக்கு இந்த இந்து மதத்தார்கள் என்ன பதிலை கூற போகிறார்கள்..............

இன்றைக்கு பதிவுலகிலும் சரி, தமிழக இதழ்களும் சரி, அவர்கள் சொல்லும் முதல் வாசகம் ஈழத்து பிரச்சனைகள் இந்திய தேர்தலில் பிரதிபலிக்கவில்லை என்ற வாசகம்.

அப்படி எழுதும் போது உங்களுக்கு கூசவில்லை, மனது வலிக்கவில்லை. யாரை ஏமாற்றுவதான எண்ணம் உங்களுக்கு. நாளைக்கு உங்களது பிள்ளைகளையும் பெண்களையும் இந்த மாதிரியான நிலைக்கு ஆளாக்கினால் இதே போல் தான் எழுதுவீர்களோ....

இரண்டே இரண்டு மாதம் தான் நேரம் இருந்தது, அந்த கால கட்டத்திலேயே 40ல் 12 இடங்கள் மட்டும் காலி இல்லை. கலைஞரின் மேல் இருந்த ஒரு அனுதாபம் மக்களின் மனதில் இருந்து காலியானதையும் பார்க்கவும் அவர்களே வேதனையாகவும் கூறுவதை கேட்கவும் முடிகின்றது.

நேற்றையவரை தமிழர்கள் என்றால் பிடிக்காது, அதுவும் ஏழைகள் என்றால் அறவே ஆகாது என்று இறுமாப்புடன் இருந்த செயலலிதா திடீர் என்று ஈழம் என்றும் நாட்டின் தலைமை அமைச்சர் சொல்லவல்ல இராணுவத்தை அனுப்புவேன் என்ற வாசகங்களை மக்கள் நம்பவும் இல்லை. அவரது நேய் ஒழுகும் பேச்சின் பால் ஒரு ஈர்ப்பும் பிறக்கவில்லை என்றது தான் உண்மை.

இவ்வளவு இருந்தும், தங்களது கோபத்தை காட்டும் விதமாக அந்த கூட்டணிக்கு 12 இடங்களை வழங்கியுள்ளதையும், 78% ஓட்டுகளை குவித்து ப.சிதம்பரத்தை படாத பாடு படுத்தியதையும் பார்த்த பிறகும் இப்படி எழுத உங்களுக்கு அலாதியான தைரியம் வேண்டும் தான்.

ஈழத்து கொள்கை மாற்றத்திற்காக மட்டுமே கூடி புலிகளின் தீவிர ஆதரவாளர்களான சீனாம் போன்றோர்கள் ஆதரித்து போசியதையும் கவனத்தில் கொண்டு பார்க்கவில்லையா நீங்கள். நீங்கள் எல்லாம் தமிழர்களாக கூட ஈழத்திற்கு ஆதரவு தெரிவிக்கவேண்டாம் குறைந்தது மனிதனாகவாது அவர்கள் சாவின் விளிம்பில் அவர்களை எதிர்காமல் இருந்திருக்கலாம்.

அதை விடுத்து இப்படி உங்களின் முகத்தில் இப்படி வண்டி வண்டியாக இப்படி கரியை அள்ளிகொட்டி கரித்துண்டமாகவே ஆகியும் இப்படி எழுத உங்களுக்கு எல்லாம் எப்படி இன்னமும் கைகள் வருகின்றது. அந்த இரகசியங்களை எங்களுக்கும் சொல்லி கொடுங்கள். அந்த மாபாதகத்தின் இரகசியத்தை அறிந்துகொள்ள அல்ல, அந்த பக்கம் ஏதும் தவறியும் வந்துவிடாமல் இருக்க கேட்கின்றோம் இந்து நாடே, இந்து மக்களே தெரியபடுத்துங்கள்.

1 comments:

')) said...

எனக்குத் தெரிந்த வரை, இந்த தேர்தலில் காங்கிரஸின் தயவால்தான் தி.மு.க வென்றது என்பேன்.

மக்களைப் பொறுத்த வரை பணம் தான் எல்லாம் என்றாகி விட்டது.
500, 1000 என்று பணத்தை வாங்கிக் கொண்டு வாக்களித்த மக்களுக்கு தங்கள் அழிவைத் தாங்களே தேடிக் கொள்கிறோம் என்பது தெரியாமல் போய்விட்டதுதான் வேதனைக்குறிய விஷயம்.

இவ்வளவு பணம் கொடுத்து வெல்பவர்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் என்று தெரியாமலா கொடுத்திருப்பார்கள்?

பணத்தின் முன் இலங்கைப் பிரச்சனை பிசாத்து.

கணித அறிவு இல்லாமல் பாரதீய ஜனதாவும், அ.தி.மு.க வும் தனித்தனியே போட்டியிட்டு ஒருவர் தலையில் இன்னொருவர் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டதுவும் வேதனையான விஷயம்.

கம்யூனிஸ்ட்டுகள் இன்றைய அரசியலில் ஒரு தேவையற்ற அம்சம். அவர்கள் வாய்ச்சொல்லில் வீரர்கள்.


என்ன செய்வது? இன்னும் 5 வருஷத்துக்கு வயத்தில் துண்டைப் போட்டுக் கொண்டு உட்கார வேண்டியது தான்.