Wednesday, May 27, 2009

செயல்படாத ஐ நா மன்றம் எதற்கு, தமிழர்கள் எதற்கு தங்கள் பணத்தை அதற்கு அள்ளி கொட்டுக்கனும்.

ஈழத்தை பொருத்த வரையில் 30 ஆண்டு காலமாக மௌனியாக இருந்த ஐ நா மன்றம். 100,000 மக்களை கொன்று குவித்து, மிச்சம் மீதி இருப்பவர்களை தடுப்பு காவலில் வைத்து கொல்லுவதற்கு காரணமும் நேரமும் பார்த்துகொண்டு இருக்கிறது சிங்களம்.

போராட்டத்தில் எவ்வளவு கேட்டும் போரை நிறுத்தவும் தடுக்கவும் வராத ஐ நா மன்றம். புலிகளை பலியெடுத்த பிறகு அந்த தடுப்பு முகாம்களை பார்வையிடவும், அடித்து நொறுக்கப்பட்ட வீடுகளையும் வாழ்விடங்களையும் பார்வையிட்டு வந்த ஐ நா நாயகம், சிரித்த முகத்துடன் அழிந்து கொண்டு இருக்கும் மக்களுக்கு மத்தியில் இருந்து படத்திற்கு தன் முகத்தை காட்டுகிறாரே என்ன தைரியம் இருக்கவேண்டும் அந்த மனிதனுக்கு.

அந்த நிலையில் இருக்கும் நமது உறவுகளை படங்களில் பார்க்கவே நெஞ்சு பதறுகிறது. அந்த கொடுமையின் மத்தியில் உட்கார்ந்து கொண்டு சிரித்துக்கொண்டு படத்திற்கு முகத்தை காட்ட அசாத்திய தைரியம் வேண்டும் மனதில். இந்த நிலைமையிலும் சிரிக்க கூட முடிகின்ற மனிதன், கனரக ஆயுத பயன் பாட்டிற்கான அடையாளங்களை காணொம் என்று சொல்வதில் வியப்பு ஒன்றும் இல்லை.

இங்கே நம் முன்னே எழுகின்ற கேள்வி ஒன்று தான், ஏன் இரண்டு என்று கூட வைத்துக்கொள்ளலாம். 1) கனரக ஆயுதங்களால் இவைகள் அழிக்கப்படவில்லை என்றால் எந்த வகை ஆயுதங்களால் இந்த அழிவுகள் மேற்கொள்ளப்பட்டது என்று ஐ நா நாயகம் விளக்க வேண்டும். 2) இவர் மட்டும் தான் வந்ததாக செய்திகள் வெளியாகின, அப்படி இருக்கயில், ஐ நா நாயகம் என்ன போரியல் வல்லுனராக இதற்கு முன் பணியாற்றினாரா. அவருக்கு இருக்கும் எந்த தகுதியின் அடிப்படையில் இப்படி ஒரு வாசகத்தை வெளியிட்டார்?

சிங்களத்தின் விருந்துக்கு செல்லும் முன் அனைவரும் வீர வசனம் பேசுவதை செய்தியாக பார்கின்றோம். அப்படி என்ன தான் விருந்து வைத்தார்களோ சிங்களம். ஐ நா உட்பட அனிவரும் சிங்களத்தின் கால்களை .................. மாற்றம் பெற்றுவிட்டதே என்ன கொடுமை.................

1 comments:

Anonymous said...

ஐ.நா வைக் குறை கூறுவதற்கு முன்
சிங்கள இன்வாத அரசின் படுகொலைக்கு முழு உதவியளித்து,
இப்போதும் தனது பலத்தால் ஐ நா விலே அங்கே அவர்களை வெற்றி பெற வைத்திருக்கும் இந்திய தமிழின எதிர்ப்பு அரசை மானபங்கப் படுத்த வேண்டும்.
மகாதமா காந்தியின் நாடு இப்போது ஒரு லட்சம் தமிழர்களைக்,குழந்தைகளை,ஊன
முற்றோரை நரபலி கேட்கும் காந்தி
நாடாகி மானங்கெட்டுக் கிடக்கிறது.உயிருடன் பதுங்குக் குழிகளில் இருந்தவர்கள் மேல் புல் டோசர் மண்ணை மூடிய வீரம் நடந்திருக்கிறது.

இதை எதிர்த்து உயிரைக் கொடுத்த
பல உணர்வுள்ள தமிழர்களுக்குத் தமிழினத் தலைவர்கள் கொடுப்பது
தங்கள் தலையிலுள்ள ந்ரைத்ததையும்,அதுவும் இல்லாதவர்கள் வாயில் உமிறும் எச்சியையுந்தான் என்பது மானக்கேடு.