இப்படி ஒரு தலைப்பில் குமுதம் ரிப்போர்டர் இதழில் ஒரு செய்தி வந்துள்ளது. அதிலே அந்த அம்மா அங்கு இருந்து கிளம்ப காரணமாக அமைந்த கட்சி மாறாட்டம் என்றும் எழுதியுள்ளார்கள். அதிலே அதிமுக தரப்பில் சொல்கிறார்கள், திமுக உறுப்பினர்கள் தாமாகவே அவர்களது அறிவில் உதித்து அதிமுக மக்களை சென்று நேரில் பார்த்து எங்களுக்கு அதிமுகவில் சேர்ந்தே ஆக வேண்டும் என்றும். அப்படி இல்லை என்றால் எங்களது உயிர் உடலில் தங்காது என்றும் சொன்னதால். வேறு வழியே இல்லாமல் பாவம் அந்த அதிமுக மக்கள் அவர்களை கட்சி பேதம் பார்க்காமல், அவர்களை அதிமுகாவில் இணைக்க அழைத்து சென்றதுன் இல்லாமல். உடனேயே மாலையிலேயே அந்த செய்திகளை மாலை இதழ்களில் வெளியாகவும் ஏற்பாட்டுகளையும் செய்தார்கள் பாவம் வழியற்றவர்கள்.
இப்படி சொன்னவர்கள் இதோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை. அவர்கள் மேலும் சொல்கிறார்கள், இந்த 2 உறுப்பினர்கள் அதிமுகவில் சேர்ந்ததை பொறுக்க முடியாத கலைஞர் அதிமுகவின் 3 உறுப்பினர்களை விலைக்கு அந்த பகுதியில் இருக்கும் சந்தை பத்து தரகர்களை பிடித்து கையின் மேல் துண்டு போட்டு விரல் பிடித்து விலை பேசி தரகு கொடுத்து வாங்கியதாக சொல்லி இருக்கிறார்களே பாருங்கள் அது தான் அவர்களது நாகரீகத்தின் உச்சம்.
என்ன ஒரு கண்டு பிடிப்பு பாருங்கள். அந்த அம்மா அங்கே இருக்கிறார்கள் என்று அவர்களை குளிரூட்ட ஏதாவது ஒன்று செய்யவேண்டுமே என்று தத்தகா பித்தகா என்று இப்படி ஒரு மூக்கருப்புக்கு ஏற்படு செய்தார்கள் போலும்.
ஒரு கட்சியின் தலைவி, தமிழகத்தின் நிறந்தர முதல்வர் என்று அவரது கட்சி மக்களால் போற்றப்பெற்றவர், இனிமேல் மா நில அரசியலில் எல்லாம் அவரது தகுதிக்கு குறைவு அதனால் இனிமேல் இந்தியாவின் தலை எழுத்தை இனி இவரால் தான் எழுதமுடியும் என்று அவரது கட்சியினரால் பாராட்டப்படும் செயலலிதா. தான் தங்கி இருக்கும் இடத்தில் 2 ஊராட்சி மன்ற உறுப்பினர்களது கட்சி மாறாட்டத்தை செய்து முடிக்க தெரியவில்லை. கட்சி மக்கள் சொன்னால் அந்த செயல்களின் முடிவுகள் எப்படி வரும் என்று கூட சரியாக கணிக்க முடியாத இந்த அம்மையாரை போய் தினமலர் சொல்கிறது அரசியலில் புயல் அடிக்குமா என்று. ஒரு வேளை "புழுதி புயல்" என்று சொல்ல நினைத்து இருப்பார்களோ !!!!!!!!!
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago
0 comments:
Post a Comment