Thursday, August 14, 2008

குசேலன் -- திரைவிமர்சனம்

வெயில் என்று ஒரு படம் பசுபதி நடத்தது. அந்த படத்தில் மிகவும் இயல்பான நடிப்பும் கதையும் இருக்கும். தொலைத்து விட்ட அன்பும் குடும்ப பாசமும் தேடியும் கிடைக்காத நாயகனாக பசுபதியின் வேடம் அந்த படம். கிட்டத்தட அதே மாதிரியான ஒரு கதையமைப்பு இந்த படத்தில். படம் துவங்கியது முதல் இறுதி வரை தனக்கு என்று ஒரு கொள்கைகளுடன் வாழும் ஒரு நாயகனாக பசுபதி. நிகழும் அத்தனை பஞ்சத்தின் நடுவிலும் தனது நெருங்கிய நண்பனான கிருட்ணனிடம் உதவி என்று கேட்க்காத குசேலனின் குணத்தில் பசுபதி. அந்த கதையில் கிருட்ணன் குசேலனின் பஞ்சத்தை தீர்க்கும் கதை தான் இந்த குசேலனின் கதை.

அசோக் குமார் என்ற நடிகனி பூகழ் பாடவே படத்தின் அனைத்து பாத்திரங்களும் எழுதப்பட்டு இருப்பதாகவே வெளிப்படையாக தெரியும் அளவிற்கு வாசு இயக்கி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல், அசோக் குமார் வரும் இடங்கள் தவிற அத்தனை இடங்களிலும் அவரை பற்றி மற்றவர்கள் பேசுவதாக வரும் படி இருப்பதை குறைத்திருந்தால் படம் கொஞ்சமாவது தப்பி இருக்கும். ஆனால் பாவம் வாசுவிற்கு புதிதாக திரைக்கதை அமைப்பதில் செலுத்தியதை விட இரசினையை புகழத்தான் அதிக சிறமம் எடுத்துக்கொண்டுள்ளார்.

இந்த படத்தை பார்க்கும் போது ஏனோ அன்புள்ள இரசினிகாந்து படம் மனதில் வந்து போவதை தவிற்க முடியவில்லை. அந்த படமும், பாடலும் மனதில் நிற்பதை போல் இந்த படத்தில் வரும் நகைச்சுவைகள் கூட மனதில் நிற்கவில்லை.

இரசினியி பெயரை சொல்லி ஒரு படம், அதும் இவ்வளவு மோசமான படம்.......... ஒன்றும் சொல்வதற்கு இல்லை இந்த படத்தில்........

0 comments: