Tuesday, August 5, 2008

தசாவதாரம் ஆங்கில படம் CHILL FACTOR படத்தின் மொழி பெயர்ப்பு

இந்த படம் வந்ததில் இருந்து பலதரபட்ட விமர்சனங்கள் வந்துவிட்டதால் விளக்கமாக ஒரு விமர்சனங்களை வைக்கப்போவது இல்லை.

ஆங்கிலப்படத்தின் கதை இது தான், படம் துவங்கும்போது கடலில் இருந்து ஊருக்குள் காட்சி பாயும் தசாவதாரத்தில் துவங்குவது போல. அது ஒரு தனித்தீவு அங்கே இராணுவத்தின் தேவைக்காக நவீன ஆயுதங்களை பரிசோதிக்கும் களம். அங்கே புதிதாக தயாரிக்கப்பட்ட வைரசு குண்டை வெடித்து சேதாரமும் வீரியமும் எவ்வளவு என்று பார்க்கும் பயிற்சியை மேற்கொள்ளுகிறது ஒரு இராணுவ படையணி ஆய்வாளர்களுடன் இணைத்து.


அந்த ஆய்வை துவக்கிய பிறகு தான் குண்டின் வீரியம் இவர்கள் எதிர் பார்த்ததைவிட மிகவும் அதிகமான அளவில் இருக்கும் என்று கணித்து, சோதனையை நிறுத்தும் தருனத்தில் எல்லம் முடிந்து விடுகின்றது. அங்கே இருந்த இராணுவ படையணி முழுவதும் இறக்கின்றார்கள். அந்த படையின் தளபதியை இதற்காக 10 ஆண்டுகள் இராணுவ சிறையில் அடைக்கிறது அரசு.

10 ஆண்டு சிறை வாசத்திற்கு பிறகு வெளிவந்த அந்த தளபதி, ஆய்வாளர்களின் கணிப்பு பிழைக்கு எனக்கு 10 அண்டு சிறையா என்று அரசை பழிவாங்கும் செயலாக, தனது பழைய சாக்களோடு சென்று அந்த வைரசு குண்டை கைபற்றி தீவிரவாத நாடுகளுக்கு விற்று பழிதீர்த்துகொள்ள் செல்கிறார். அப்படி செய்யப்போவதாக முன்கூட்டியே அந்த ஆராச்சியாளரைசந்தித்து சூளுரைத்தும் அவர் அரசாங்கத்திற்கு சொல்லாமல் விட்டது ஏனோ என்று அந்த ஆங்கில படத்தில் விளக்கம் இல்லை.

பின்பு வைரசு குண்டு கொள்ளையில் குண்டடி பட்ட ஆராச்சியாளர் தன்னுடன் வழக்கமாக மீன் பிடிக்கும் இளைஞனிடம் சென்று அந்த வைரசு உள்ள பெட்டகத்தை கொடுத்துவிட்டு அடுத்த மானிலத்தில் உள்ள இராணுவ ஆராச்சியக்கத்தில் சேர்த்துவிடவும் என்று சொல்லி இறக்கிறார். குறுப்பாக இந்த பெட்டகம் 50 பாரன் வெப்பத்து வந்துவிட்டல் இறுகிய நிலையில் இருக்கும் வைரசுகள் வெளியேறி எல்லோரையும் கொன்றுவிடும். ஆகவே கவனமாக கையாளவும் என்று அறிவுறுத்தி சொல்வார்.


இதைத்தான் தசாவதாரத்தில் கமலகாசன் மூச்சிக்கு முன்ணூறு தடவை அந்த வைலை திறக்க கூடாது, அது வெப்பமாக கூடாது என்று படம் முழுக்க சொல்லிக்கொண்டே வருவார். ஒரு கட்டத்தில் இந்த ஆங்கில படத்தில் வெப்பமானியை கொண்டு வெப்பம் பார்த்து இன்னமும் கொஞ்சம் பனிக்கட்டிகள் வேண்டும் என்று சொல்வதை அப்படியே ஆற்று மணலில் புதைத்துவிட்டு கடைக்கு சென்று பனிகட்டிகளை வாங்கிவருவதாக படமாக்கி இருப்பார்கள் தமிழில்.


பிறகு இந்த வைரசு பெட்டகத்தை எடுத்துக்கொண்டு அந்த இளைஞன் கிளம்பும் தருவாயில், அந்த தளபதியும் அவனது சகாக்களும் அந்த கடைவரையில் வந்து சோதனையிட்டு செல்லும் போது அங்கே ஒரு ஐசு கிரீம் விற்கும் வண்டி வருகிறது. அந்த வண்டியை ஓட்டிவரும் கருப்பர் இனத்தை சேர்ந்த ஒருவர் அந்த வண்டியை கடத்தி வந்து இருப்பார். அவரும் இந்த மீன் பிடியாளரும் சேர்ந்து வைரசு பெட்டகத்துடன் அந்த வண்டியில் சத்தம் இல்லாமல் தப்பிப்பார்கள்.


இவர்கள் தப்பிப்பதை தெரிந்துகொண்ட தளபதி அந்த ஓட்ட வண்டியை 4 நவீன இரக வண்டிகள் கொண்டும் சென்று பிடிக்க முடியாமல் பின்னாலே துரத்திகொண்டு ஓடுவார். அந்த தளபதியுடன் மல்லிகா சராவத்து போல் ஒருவரும் வருவார், தசாவதாரத்தில் தேவையே இல்லாமல் மல்லிகா இடம் பெறுவது இப்படிதான்.


தசவாதாரத்தில் கமலும் அசினும் சேர்ந்து தப்பித்து ஓடும் காட்சிகள் அனைத்தும் இந்த காட்சிகளில் பார்க்கலாம். படத்தில் அசின் எதற்கு வருகிறார் ஏன் பெருமாலே பெருமாலே என்று மட்டுமே சொல்லி கமலோடே அலைகிறார் என்று காரணம் கேட்போருக்கு இது தான் விடை. அந்த படத்தில் இருவர் தப்பி ஓடுவார்கள் தமிழில் அப்படி இருவர் வேண்டும் என்றால் மறுபடியும் அர்சுனை குருதிபுனலில் சேர்த்துகொண்டதை போல் செய்ய வேண்டும் அதற்கு பதில் அசினை போட்டுவிட்டால் வேலை மிச்சம். நல்ல திரைக்கதை நுட்பம் இல்லையா.


இப்படி தப்பி ஓடும் வழியில் ஒருவரின் வண்டியும் மோதி வண்டி கவிழும், இது தான் தசாவதாரத்தில் அந்த நெட்டை கமல் தோன்றும் காட்சி. பிறகு அவரிடம் இருந்து படகை பறித்துகொண்டு மிகவும் ஆழத்தில் ஓடும் ஆற்றில் குதிப்பார்கள் இருவரும். தசாவாதாரத்தில் இரயில் வண்டியில் இருந்து ஏன் ஆற்றில் குதிகிறார்கள் என்று இதை பார்த்தால் புரியும்.


இப்படி ஒருவழியாக அந்த தளபதி அந்த பெட்டகத்தை இவர்கள் இருவருடனும் கைபற்றுவான். பிறகு அவர்களை கொண்டே தீவிரவாத நாடுகளுக்கு அந்த வைரசை ஏவி வித்தை காட்ட முற்பட அந்த மீன் பிடியாளனின் முன்யோசனையால் அது தவிர்கபட. பிறகு அந்த பெட்டகத்துடன் ஒரு குகைவழி பாதையில் பிடிபடுகிறார்கள் இருவரும்.


அங்கேயும் அந்த தளபதி வந்து அந்த வைரசை அமெரிக்க மக்கள் மீது ஏவியாவது தனது வெறியை தீர்த்துகொள்ள நினைக்க, அங்கே அந்த குகைவழி பாதையோடு அந்த வைசரை புதைகிறது அமெரிக்க இராணுவம். அங்கே கடைசி காட்சியில் ஒரு இராணுவ உலங்கு தாக்குதல் வண்டியில் வந்து தாக்கி குகை பாதையை தகர்ப்பார்கள் இங்கேயும் தம்மிழில் தேவையே இல்லாமல் ஒரு உலங்கு வண்டியில் வந்து அந்த வண்டியின் சத்தத்தில் உள்ளே இருப்பவர்கள்ளுள் நடக்கும் உரையாடல்கள் கூட கேட்க்கது என்று அவர்களுக்கு பேசிக்கொள்ள கருவிகள் உண்டு. ஆனால் அங்கே இருந்து கமல் அந்த வைசரை ஒப்படைக்கும் படி சொல்லி சுனாமியோடும் கதை முடியும்.
10 கமல் வேடங்களை இப்படி தான் பிடித்து இருகிறார்கள்.


1) அந்த மீன் பிடி இளைஞன்


2) அந்த கருப்பர் இன இளைஞன், இவர் ஆங்கிலத்தில் பேசும் வசனங்களை பூவராகவனான கமல் பேசும் வசனங்களாக வரும்.


3) அந்த இராணுவ தளபதி வில்லன்


4) அந்த ஆராசியாளனாக ( தமிழில் ஆராச்சியாளனே மீன் பிடியானின் பாத்திரத்தையும் செய்தி இருப்பார்)


மேலே சொன்ன பாத்திரங்கள் நம்மை பாதிகாமல் போனதற்கு காரணம் அவர்கள் அப்படியே ஆங்கிலத்தில் இருந்து எடுத்து கையாணடதால், பூவராகவனை தவிர, அந்த அராச்சியாளனாக வரும் இளைஞாக வரும் கமல் உட்பட.


மற்ற பாத்திரங்கள் இவர்களால் படைக்கப்பட்டதால், நாயுடு கமல் முதல் அந்த வயதான பாட்டியின் வேடம் வரை மனதில் நிற்கிறது. இந்த பூச்சுகள் தெரியாமல் இருக்கவும், பாத்திரங்களை 10ஆக மாற்றவும் அந்த 12ஆம் நூற்றாண்டு காட்சிகள். ஒரு வகையில் விளம்பரத்திற்காக கூட இருக்கலாம்.


கதை இப்படி இருக்க பாவம் பாரதிராசா அவர் பாடுக்கு என்ன என்னவோ உளரிக்கொண்டே இருக்கிறார் இன்னமும் பாவம்.


27 comments:

Anonymous said...

34 மில்லியன் செலவு செய்து 11 மில்லியன் சம்பாதித்த ஆங்கில படம் அது.
தசாவதாரத்தின் வெற்றி உங்களுக்கு தெரியாதா பனி மலர் ?
தேவர் இன புகழ் பாடும் படங்களை எடுக்கும் பாரதிராஜாவுக்கு என்ன தெரியும்?

')) said...

வாங்க அனானி, விவரங்களுக்கு நன்றி. என்ன அருமையாக திரைகதை அமைத்து இருக்கிறார்கள் தமிழில். ஆங்கில படத்தின் மொழி பெயர்ப்பு என்றாலும் அதன் வாடை இது வரையில் யாரும் சொல்லாத வண்ணம் எடுத்தமைக்கு பாராட்டுக்களை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

எனக்கு பாரதிராசாவை மிகவும் பிடிக்கும் ( நிழல்கள் படத்தில் வரும் இது ஒரு பொன்மாலை பொழுது இது வரை யாரும் அப்படி ஒரு பாடலை மடமாக்கவில்லை) , ஆனால் அவர் சமீப காலமாக பேசும் பேச்சுக்களை காதுகொடுத்து கேட்க்க முடிவதில்லை.

')) said...

adakkanraaviye! ithuvum DVD paarthu ezhuthina kathaiyaa! Tamil Cinema vukku Oscar kudukkattiyum alvaa kudukkaama irunthaale pothum intha malivu kalappada pada viyaapaarikal matrum kathaasiriyarkal.

')) said...

வாங்க ஓசை செல்லா, கமலகாசன் மொழியில் சொன்னால் எழுதிவைக்கப்பட்ட விதி.... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

')) said...

நிறைய ஆங்கிலப்படம் பார்க்கிறீர்கள், நீங்கள் பேசமல் தமிழ்சினிமாவுக்கு கதை எழுதப் போகலாம் ! பார்த்தது வீன் ஆகாமல் இருக்கும். :)

')) said...

அடக்கடவுளே !!! தசாவதாரமும் ஆங்கிலத்தின் அவதாரமா ??

தழுவல் தவறில்லை, ஆனால் தழுவலைத் தழுவல் என சொல்லாதது தான் தவறு..

ம்ம்... எப்படியோ, தசாவதாரத்தில் நான் மிகவும் ரசித்தது வசனங்கள் :)

சுங்கம் தவிர்த்த சோழனிடம் கர்வம் தவிர்க்கச் சொல் !!! என்னும் கம்பீரத்துக்காகவே ரசிக்கலாம் ;)

')) said...

//// IMDB :
This video is not available in your country. ////

:((((

=====
இதுக்கு எல்லா பதிவர்களும் சேர்ந்து ஒரு பதிவு துவக்கி தினம் ஒருவர்னு நமக்கு தெரிஞ்சதயும் நாம எதிர்பார்க்கறதயும் பதிவா போடலாம். (PIT Blog மாதிரி )
தமிழ்மணத்தின் கருவிப்பட்டையில் பிடிஎப் ஆக மாற்றி இலவசமாகவே இவங்களுக்கு குடுக்கலாம்.
அப்பவாவது பதிவர்களின் கலாய்த்தலில்லாமல் ஒரு படம் வருதானு பாக்கலாம். ஆக்ஷன்னலிருந்து பிட்டு படம்வரைக்கும் நம்மாளுங்கதா டைரக்டர விட ஆஆஆஆழமா போய் யோசிக்குறானுக. ம்ம்ம்ம் அறிவாளிப்பயபுள்ளைங்க.

///////
கோவி.கண்ணன் said...

நிறைய ஆங்கிலப்படம் பார்க்கிறீர்கள், நீங்கள் பேசமல் தமிழ்சினிமாவுக்கு கதை எழுதப் போகலாம் ! பார்த்தது வீன் ஆகாமல் இருக்கும். :)
/////////

சரியாத்தா சொல்லிருக்கீங்க கண்ணன்.
---------

நல்ல சுவாரசியமா சொல்லிருக்கீங்க பனிமலர்.


சுபாஷ்
hisubash.wordpress.com

Anonymous said...

பனிமலர்,
நானும் தசாவதாரம் பார்த்ததில் இருந்து கமலகாசன் கட்டாயம் ஒரு ஆங்கிலபடத்தை கட்டாயம் காப்பி அடித்திருப்பார் என்ன படம் உன்று யோசித்து கொண்டிருந்தேன் தகவலுக்கு மிகவும் நன்றி.

')) said...

பனிமலர் - நான் சில் ஃபாக்டர் பார்த்திருக்கிறேன், ஆனாலும் தசாவதாரம் பார்க்கும் போது காப்பிப்போல தோன்றவில்லை. Cuba Gooding ஐ வேஸ்ட் செய்த படம் என்பதால் மனதில் நிற்காமல் போய்யிருக்கலாம். கமல் அப்படியே காப்பி அடித்திருந்தாலும் தசாவதாரம் திரைக்கதை சில் ஃபாக்டரைவிட பல மடங்கு விறுவிறுப்பாக இருந்தது உண்மை!

')) said...

//பெருமாலே பெருமாலே //

தமிழை முழுதாய் அழகாய் கற்றுக்கொண்ட பின் ஆங்கிலப்படமோ, அதனோடு மற்ற படங்களை ஒப்பிடலாமே!

அட அந்த சிறையில் அடைக்க பட்ட காட்சியை தான "புன்னகை மன்னன்"லில் காட்டினார்கள்.

செம்மையா காமெடி பண்ணி இருக்கீங்க. எல்லாத்தையும் அது இது தான் இது அது தான்னு சொல்லிட்டீங்க. முதல்ல தமிழ் படத்தை முழுசா பாத்து அதன் ஆழத்தை புரிஞ்சிக்கோங்க. ஐஸ் விக்குறவன் கருப்பாம் அவன் தான் பூவராகவனாம். ஹா ஹா ஹா ஹா.

No offence meant.

')) said...

ஸ்ரீ

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, எனக்கு தெரிந்து அசினுடைய உச்சரிப்பு பெருமாலே பெருமாலே என்று தான் வருகிறது படத்தில். ஒரு வேளை அப்படி உச்சரிப்பது தான் இப்போதைய நவீனமோ என்னமோ. சில்லு பேக்கரு படம் நீங்கள் பார்க்கவில்லை போலும் பார்த்திருந்தால் எனது விமர்சனங்கள் புரிந்திருக்கும்.

ஒரு படத்தை தழுவி எடுப்பதில் தவறு இல்லை, ஆனால், கதை திரைக்கதை வசனம் என்று கமலகாசனின் பெயரை போடுவது தான் அசிங்கம். இனிமேல் எங்கே போய் சொல்வார் இது எனது படைப்பு என்று. இதிலே சாக்கிசனை கூப்பிட்டு ஆட்டம் பாட்டம் வேறு, அதுல ஊடக உலகம் வேறு மல்லிகா இதை காண்பித்தார் அதை காண்பித்தார் என்று 10 நாளைக்கு செய்தி வேறு.........

கமல் நடித்தார் என்றதுக்கு எல்லாம் ஈ அடிச்சான் பிரதி இல்லை என்று சொல்ல முடியாது, நீங்கள் வேண்டும் என்றால் மற்றவர்கள் சொல்வதை போல் 10 அவதாரங்களாக படம் கொண்டு தினமும் பூசை செய்யுங்களேன் நண்பரே...

')) said...

செல்லா அண்ணனின் அடுத்த அவதாரத்தை வரவேற்கிறேன் :-)

')) said...

லக்குலுக்,

என்ன சொல்கிறீர் ஒன்றும் புரியவில்லை.....

Anonymous said...

/லக்குலுக்,

என்ன சொல்கிறீர் ஒன்றும் புரியவில்லை.....//
வாலண்டினா தமிழரசியை வரவேற்கிறதாக சொல்கிறார்

')) said...

லக்கிலுக்கை கேட்டால் இது யாருப்பா இடையில.......

')) said...

என்னுடைய பின்னூட்டம் எங்கே?

கண்டுபிடிச்சிட்டேன் இல்லே? போனாவது பண்ணலாமே? :-)

Anonymous said...

கமலின் வெற்றி பெற்ற பெரும்பாலான படங்களுக்கு பின்னால் ஒரு ஆங்கிலப் படம் இருக்கும்

ரஜனியின் வெற்றி பெற்ற பெரும்பாலான படங்களுக்கு பின்னால் ஒரு அமிதாபின் படம் இருக்கும்.

இப்பொழுதெல்லாம் ரஜனியின் படங்களுக்குப் பின்னால் இருப்பது ரஜனியின் படங்களே! அது உங்களுக்கு தெரியும்தானே? அதனையும் ஒரு பதிவாக வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

')) said...

சுத்த பேத்தல் ஒப்பீடு.!

')) said...

என் பின்னூட்டம் திடீருன்னு காணாம போகுது, திடீருன்னு வருது. என்னண்ணே அர்த்தம்? :-)))

டாக்டர் ப்ரூனோவின் பின்னூட்டம் எங்கே காணோம்? :-(

')) said...

செல்லா அண்ணாவின் இந்த புதிய அவதாரம் அருமை

')) said...

இது வரையில் கடந்த 2 நாட்க்களில் 4 பின்னூட்டங்களை வெளியிட்டேன். ஆனால் ஏனோ அவைகள் எனது தளத்தில் தெரியவில்லை. ஆனால், பின்னூட்டம் இட்டவுடன் தமிழ்மணத்தில் பின்னூட்ட பகுதியில் தலைப்பு மட்டும் வருகிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை, உதவவும்.....

')) said...

சேவியர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

')) said...

சுபாஷ் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

')) said...

யூ எசு தமிழன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

')) said...

தாமிரா,

சில் பேக்டர் படம் பார்க்கவில்லை என்று சொல்லுங்கள், அதற்காக பெரிய வார்த்தைகள் எல்லாம் ஏன். பதிவெடுத்த அவர்களுக்கு வராத கோபம் உங்களுக்கு ஏனோ நண்பரே. எனக்கு கமலகாசனை மிகவும் பிடிக்கும். தமிழ் படங்களில் அவர் இல்லை என்றால் கிட்டத்தட்ட பெங்காலி படங்களை போல் தான் தமிழ் படங்கள் இன்றைக்கும் எடுக்கப்பட்டு இருக்கும். தொழில் நுட்ப்பங்களிலும் சரி, புதிய நுட்ப்பங்களையும் சரி, கதை களங்களும் சரி கமலின் படங்கள் போல் மற்றவர்கள் படம் வருவதும் இல்லை. வரப்போவதும் இல்லை.....

')) said...

ஆதிசா,

உங்கள் துப்பரியும் வேலை இந்த முறை சரி இல்லை. என்னக்கு செல்லாவை தெரியும் பதிகளிலும் பின்னூட்டங்களிலும் மூலம் மட்டுமே. உங்கள் வலையில் இந்த முறையும் மீன் மாட்டவில்லை என்று தான் நினைக்கிறேன்.

Anonymous said...

O Brother,Where art thou? படம் மாதிரியும் தான் இருக்கு . இதல்லாம் சினிமால சகஜமப்பா .