தமிழக நிதி நிலை அறிக்கையை இப்படி விமர்சனம் செய்கிறார் அம்மையார். சென்ற முறை முதல்வராக இருந்த செயல்படாத முதல்வர் இந்த அம்மையார், 4 ஆண்டுகளாக பணம் இல்லை, பொருள் இல்லை, கசப்பு மருந்து.....
இப்படி ஏகவசனமாக மட்டுமே பேசிக்கொண்டு விட்டு, அலுவலகத்துக்கு வருதே சாதனையாக பேசிக்கொண்டு இருந்த அம்மையார் இன்று இப்படி நக்கல் தெரிக்க பேசுகிறார். அதுவும் தப்பி தவறி அலுவலகம் ஏதும் வருவதாக இருந்தால் ஒரு பேரிய ஊர்வலமாக நீண்ட வாகன அணியாக வருபவருக்காக பொதுமக்கள் யாவரும் எங்கேயும் போகமுடியாதது போல் சாலைகள் எல்லாம் மூடிவிட்டு. பொதுமக்களை வருத்தெடுத்தவர் தான் இன்று மக்கள் நலனை பற்றி வரிந்து கட்டிக்க்கொண்டு அறிக்கைவிடுகிறார் இந்த அம்மையார்.
விலைவாசி ஏறிப்போச்சாமே சொல்கிறார் அம்மையார், அரசு ஊழியர்களின் பணிக்கொடைகளை களவாண்டவர் சொல்கிறார், சாதாரண மக்களால் எதுவுமே வாங்க முடியாமல் ஆகிவிட்டது என்று. நீங்கள் அவர்களின் பணத்தை சுருட்டிக்கொண்டு மேடைகளுக்கும் சுவரோட்டிகளுக்கும் பச்சை வண்ணம் தீட்டி பார்த்த போது அவர்களால் எல்லாம் வாங்க முடிந்தது போலும்.
விமர்சனம் செய்வதற்கெல்லாம் ஒரு தகுதி வேண்டும். அது உங்களுக்கு கட்டாயம் இல்லை, வழக்கம் போல் ஓவ்வெடுக்க கொடைக்கோ, அல்லது ஐதராபாத்துகோ போங்கள். இல்லை என்றால் கொள்ளை அடித்த பணத்தில் தங்கத்தாரகை, வெள்ளித்தாரகை, பித்தளை தாரகை என்று விதமாக பட்டங்களை வாங்கிக்குவியுங்கள். இருக்கிற விலைவாசியில் ஒன்று வாங்கினால் இன்னொறு இலவசம் என்று கொடுத்தாலும் கொடுப்பார்கள்.
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago
0 comments:
Post a Comment