Monday, March 17, 2008

இளையராசாவின் இந்த கட்சேரிக்கு தான் வேட்டி கட்டி உருமா எல்லாம் கட்டினார்களா வலைஞர்கள்.

அவருடைய எல்லா கட்சேரிகளை போல் தான் இதுவும் இருக்கிறது. என்ன இவருடை குழுவில் கங்கை அமரன் வந்து கலக்குவார் ஆனால் இதிலே அவர் இல்லை. செயராமனும், குட்புவும் வந்து கதைகிறார்கள். ஆனால் கங்கை அமரன் கதைப்பதை போல் இல்லை.

பெண் பாடகர்களில் தமிழ் தெரியாதவர்கள் திரித்து சொன்ன வார்தைகளை திரும்பவும் சொல்கிறார், நன்றாக பாடிய மஞ்சரி பாட்டை விட்டதில் அவருக்கு கோபம் திரும்பவும் பாட சொல்கிறர் அவரது பாடல் பதிவுகளில் நடப்பது போல்.

http://www.tubetamil.com/view_video.php?viewkey=54fb0148b017647355b7

தனது பாடல்களை தவறாக பாடும் பாடகர்களை திருத்துவது கூட குற்றம் என்று ஆகிவிட்டது போலும் இப்போது. இவர்கள் கூறும் குற்றம் எப்படி தெரியுமா இருக்கிறது. பள்ளிகாலங்களிலும், கல்லூரி காலங்களிலும் வண்டியிலே மக்களோடு பயணிக்கும் போது இவர்கள் படியில் அடைத்துக்கொண்டு நிற்பார்கள். உள்ளே வருபவர்களை இவர்கள் ஒதுக்கி போகும் படி முறைப்பார்கள். இதுவே இவர்கள் ஏறும் போது யாராவது வழியில் அதுவும் திருப்பி எதுவும் செய்யவோ சொல்லவோ மாட்டார்கள் என்று உறுதியாக தெரிந்தால் உள்ளே போ என்று அதிகாரமாக சொல்லி வழியில் இவர்கள் நிற்பார்கள். அது போல இருக்கிறது இவர்களது விமர்சனம்.

மனதுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவரது தும்மலில் கூட குற்றம் கண்டுபிடிப்பார்கள் மக்கள். இதிலே இரகுமானின் வசூலில் கால் பாகம் கூட இவருக்கு இல்லை என்று நக்கல் வேறு. அவரது காலம் என்ன இவரது காலம் என்ன. இந்த காலங்களிலும் மக்களை அதே கம்பீரத்தோடும் உட்சாகத்தோடும் மேடையேறி பாடவும், பாடலரங்குகளை நடத்தி காட்டவும் வரும் அவரை வரவேற்க கூட வேண்டாம் இந்த மாதிரியான விமர்சனங்களை தவிற்கலாம்.

இளையராசா வந்ததால் விசுவநாதனின் பாடல் களையோ இன்னமும் அதற்கு முன்னால் இசையமைத்தவர்களின் பாடல்களையோ யாரும் இனிமேல் கேட்க்க மாட்டோம் என்று நிறுத்திவிட வில்லை. இன்றைக்கும் வானோலியிலும் சரி காணொலியிலும் சரி அவர்களது ஏறாளமான பாடல்கள் வழிந்து வருவதை பார்க்க முடியும். ஆரோக்கியமான விமர்சனங்கள் வரவேற்க படவேண்டியவையே. அதே நேரத்தில் அங்கே காழ்ப்புக்கு இடமில்லை, இது எனது தாழ்மையான கருத்து.

4 comments:

')) said...

உங்கள் மூலம் கிடைத்த சுட்டி மூலம் சுமார் 1.5 மணி நேரம் கச்சேரியை பார்க்கமுடிந்தது.
மிக்க நன்றி.

')) said...

//மனதுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவரது தும்மலில் கூட குற்றம் கண்டுபிடிப்பார்கள் மக்கள்.//உண்மையோ உண்மை. நான் இந்த நிகழ்ச்சியில் எந்தக் குறையையுமே காணவில்லை.

Anonymous said...

பனிமலர் அம்மா,
என்னது,இளையராசாவின் கச்சேரிக்கு,வேட்டி கட்டிப் போக வெண்டும் என்று உங்களுக்கு ஆசையாக இருக்கிறதா?வேண்டாங்க,லுங்கி கட்டிப் போங்க;அது தான் தமிழ்ப் பண்பாடு.

')) said...

வாங்க சுரேசு,
சரியாக சொன்னீங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.